*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, March 10, 2010

உலகப் பொருளாதார நெருக்கடியும் அதற்கான உண்மைக்காரணங்களும்


ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!’ (அல் குர்ஆன் 2:155)
இன்று ஒட்டுமொத்த உலக மக்களும் தங்களது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ‘பொருளாதார நெருக்கடி’ எனும் அரக்கனின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். (இஸ்லாமிய)தீவிரவாதம் என்பது உலக மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்களுல் முதன்மையானது எனப் பிரச்சாரம் செய்யப்பட்ட காலம் மலையேறி, ‘வேலை வாய்ப்பின்மை, வேலைக்கேற்ற ஊதியமின்மை, விலைவாசி உயர்வு மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு’ என பொருளாதார நெருக்கடியின் பல்வேறு கோணங்கள் உலக மாந்தரை அச்சுறுத்துகின்றன என்ற செய்தி தற்போது எல்லா ஊடகங்களிலும் மக்கள் மன்றங்களிலும் பரவலாக பேசப்படுகின்றது.
மேற்படி பிரச்சனைகளின் விபரீத விளைவுகளை இலங்கையில் நாளுக்கு நாள் அனுபவித்து வரும் நாம் உலக பொருளாதார கேந்திர நிலையங்களாக கருதப்படும் நாடுகள் சிலவற்றின் நிலைமைகளை அறிந்திருப்பது அவசியமாகும்.
ஐக்கிய அமெரிக்கா:உலக பொருளாதாரத்தின் மத்தியஸ்தலம் என வர்ணிக்கப்படும் ஐக்கிய அமெரிக்கா படுமோசமான பொரு ளாதார கெடுபிடிக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் மாத்திரம் சுமார் ஏழு இலட்சம் மக்கள் தங்களது தொழிலை இழந்துள்ளனர். குறிப்பாக வாகன உற்பத்தித் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டதன் காரணமாக அமெரிக்க பொருளாதார பிரதான சந்தையான ‘வோல் ஸ்ட்ரீட்’ வீழ்ச்சி அடைந்தது. மேற்படி சந்தையை தூக்கி நிமிர்த்த அமெரிக்க அரசினால் முன்னெடுக்கப்பட்ட ‘700 பில்லியன் வீட்டுத்திட்டமும்’ எதிர்பார்த்த பலன்களைத் தரவி;ல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஐரோப்பா:இதேவேளை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் வரலாற்றின் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது. இதனால் வங்கிகள் வங்குரோத்து நிலைமைக்கு சென்று வரும் அதேவேளை மக்கள் வங்கிகளில் பணவைப்பு செய்வதற்கு அச்சங் கொண்டுள்ளதுடன் ஏற்கனவே வைப்பபுச் செய்திருந்த பணத்தையும் அவசர அவசரமாக மீளப்பெற்று வருகின்றனர். தங்களது பங்குகளையும் ‘அடிமட்ட விலைக்கு’ விற்று விடுகின்றனர்.
அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து:உலகப்பொருளாதார நெருக்கடி அவுஸ்திரேலியாவி லும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதாலும் 1992ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக தனது வங்கிகளில் வட்டிவிகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளது. நியூஸிலாந்து நாட்டிலும் இந்நெருக்கடியின் தாக்கங்கள் உணரப்படத் தொடங்கிவிட்டதாகவும் நிலைமையை சமாளிப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசாங்க அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா, சீனா, மற்றும் ஆசிய நாடுகள்:
உலக பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளில் சமாளிக்க முடியாத அளவுக்கு பாரியதாக இல்லை என்றும் அதற்கான காரணம் இந்தியா சீனா பெற்று இருக்கும் மனித, உற்பத்தி வளங்கள்தான் என்றும் பொருளியல் வல்லுணர்கள் கருத்து தெரிவிக் கின்றனர். எனினும் சீனர்களுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான இந்தியர்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரிவதன் காரணமாக ஒப்பீட்டளவில் இந்தியா சற்று அதிக பாதிப்புக்குள்ளாகும் என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
முஸ்லீம்களாகிய நாம் அறிந்தும் தெரிந்தும் இருக்க வேண்டிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணம் ‘வட்டி முறையிலான பொருளாதார அமைப்பாகும்.’ அழ்ழாஹு வாலும் அவனது தூதராலும் சபிக்கப்பட்ட வட்டி முறையிலான பொருளாதார அமைப்பில் அமெரிக்கர்கள் ஒரே சொத்துக்கு பல வங்கிகளிலிருந்து பெறப்பட்ட வட்டி அடிப்படையிலான கடன்களை பெற்றவர்கள் அதைத் திரும்பச் செலுத்தத்தவறியதால் சில வங்கிகள் நஷ்டமடைய, அவ்வங்கிகளின் நஷ்டத்தால் பெரும் வங்கிகள் நஷ்டமடைய அதனால் மத்திய வங்கி; நஷ்டமடைய அதன் காரணமாக இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தது.
அர‌பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்:
எகிப்து, சூடான், லெபனான் போன்ற அறபு நாடுகளுடன் ஒப்பிடும்போது சவூதி அரேபியா, ஐக்கிய அறபு ராஜ்ஜியம், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் மேற்குலகின் பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஏழு கூட்டு ராஜ்ஜியங்களில் ஒன்றான அபுதாபியின் பொருளாதார வீழ்ச்சிக்கு கைகொடுத்து உதவ முடியவில்லை என டுபாய் நாட்டு அமீரின் கவலை வெளியிடப்படுகின்றது.
முப்பது மெற்றிக் டொன்னாக இருந்த ‘திரவ வாயு’ ஏற்றுமதியை எழுபது மெற்றிக் டொன்னாக கட்டார் நாடு அதிகரித்து பொருளாதார வீழ்ச்சிக்கு முட்டுக்கொடுக்க செய்த முயற்சியிலும், சவூதி அரேபியாவில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை தேடுவதற்கோ அல்லது சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்வதற்கோ அனுமதி வழங்கப்டுவதும் வளைகுடா நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தக்க சான்றுகளாகும்.
மேற்படி வளைகுடா நாடுகளின் பொருளாதார சரிவுக்குக் காரணம் தங்களின் பொருளாதார முன்மாதிரியாக மேற்கு நாடுகளையே கொண்டிருந்ததால் இந் நாடுகளின் தொழில் அதிபர்கள் தங்கள் முதலீடுகளை முழுக்க முழுக்க அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செய்திருந்தமையே என பொருளியல் நிபுணர்கள் காரணம் காட்டுகின்றனர்.
உலகப் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்:
மேற்படி உலகெங்கும் வியாபித்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னெவென பல்வேறுபட்ட பொருளியல் நிபுணர்களும் பல விதமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
1. உயிரியல் எரிபொருள் (Bio Fuels) உற்பத்தி:
வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை நிறைவு செய்யவேண்டி உணவாகப்பயன்படும் பெருமளவிலான தானியங்களை பயன்படுத்தி உயிரியல் எரிபொருள்(எதனோல்) உற்பத்தியில் ஈடுபடுவதே இன்றைய விலைவாசி அதிகரிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
2. சனத்தொகைப் பெருக்கம்:
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒன்பது பில்லியனை தாண்டவிருக்கும் தாறுமாறான உலக சனத்தொகைப் பெருக்கம் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக பலராலும் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி காரணம் இஸ்லாத்தின் ‘சனத்தொகைக் கொள்கை’க்கு முற்றிலும் முரணானது என்பதுடன் சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ற உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளதுடன் மனித வளமிக்க இந்தியா, சீனா போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
3. எதிர்பாராத காலநிலை மாற்றங்கள்:
உலகில் முக்கிய உற்பத்தி நாடுகளில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சி, சூறாவளி, வெள்ளம், மாறுபட்ட மழைவீழ்ச்சி போன்ற பாதகமான கால நிலை மாற்றங்கள் உலக பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் என பொருளியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன.
4. அரசியல் ஸ்திரமற்ற தன்மை:
உற்பத்தி நாடுகளின் அரசியல், பொருளியல் ஸ்திரமற்ற நிலைமை உலகப் பொருளாதார நெருக் கடிக்கான காரணங்களுள் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்வாறு பலராலும் பல விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அவர்களால் கூறப்பட்ட ‘இந்திய மத்திய தர வர்க்கத்தினர் அதிகளவு உணவு உட்கொள்வது தான் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்’ எனும் கூற்று அதிக விமர்சனத்திற்கும் விசனத்திற்கும் உட்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
5. சபிக்கப்பட்ட வட்டி:
முஸ்லீம்களாகிய நாம் அறிந்தும் தெரிந்தும் இருக்க வேண்டிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணம் வட்டி முறையிலான பொருளாதார அமைப்பாகும். அழ்ழாஹுவாலும் அவன் தூதராலும் சபிக்கப்பட்ட வட்டி முறையிலான பொருளாதார அமைப்பில் அமெரிக்கர்கள் ஒரே சொத்துக்கு பல வங்கிகளிலிருந்து பெறப்பட்ட வட்டி அடிப்படையிலான கடன்களை பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் சில வங்கிகள் நஷ்டமடைய, அவ்வங்கிகளின் நஷ்டத்தால் பெரும் வங்கிகள் நஷ்டமடைய அதனால் மத்திய வங்கி நஷ்டமடைய அதன் காரணமாக இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தது.
இன்றைய பொருளாதார நெருக்கடி சாதாரணம். இதைவிட மோசான நிலை இனிமேல்தான் வரப்போகிறது.’ஒலிவர் பிலன்சாட் பொருளாதார நிபுணர் சர்வதேச நாணய நிதியம்.





No comments:

Post a Comment