*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 3, 2010

வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் : தமிழ் இளைஞர் ஒன்றியம் – திருகோணமலை


தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய நமது அரசியல் அடிப்படைகளை தமிழர்கள் எவருக்காகவும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது. என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள்வோம்! இவ்வாறு திருமலை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய திருமலையின் தமிழ் மக்களே!
நமது எதிர்காலம் ஒரு நெருக்கடிமிகு சந்தியில் தரித்து நிற்கிறது. சந்தியின் நாலாபுறமும் நமது சுயமரியாதை, பாரம்பரியம், அரசியல் அடையாளம் எல்லாவற்றையும் சிதைத்தழிக்கும் நோக்கில் பல்வேறு வகையான சுலோகங்களுடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.
எவ்வாறு எல்லோரது சுலோகங்களும் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்னும் ஒரு புள்ளியில் சங்கமிக்கின்றன? இதன் திட்டமிடப்பட்ட உள் நோக்கம் (Ulterior Motive) என்ன? அவர்கள் அனைவரது நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடித்து நமது அரசியல் பலத்தை சிதைப்பதும் அதன் மூலம் தமிழ் மக்களை வலுவானதொரு அரசியல் தலைமையற்ற சமூகமாக உருமாற்றுவதுமாகும்.
நாம் இதற்கு இடமளிக்கப் போகின்றோமா? அவர்களது சதிவலையில் சிக்குண்டு அழியப் போகின்றோமா ?
கடந்த முறை நாம் ஒன்றுபட்டு இரு பிரதிநிதித்துவங்களை பாதுகாத்தது போன்று இம்முறையும் ஒன்றுபட்டு நமது ஒற்றுமையின் பலத்தை நிரூபிப்போம்.
தமிழ் மக்களை தமது பணபலத்தின் முன்னால் விலைபேச முடியமென்று நம்பும் தீய சக்திகள் இனி ஒருபோதுமே அவ்வாறு நினைக்க முடியாதளவிற்கான பாடத்தை புகட்டவேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும். தமிழ் மக்களாகிய நாம் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய நமது அரசியல் அடிப்படைகளை எவருக்காகவும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது. காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள்வோம் நமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதற்கான மாபெரும் பொதுக் கூட்டம்

இடம் : திருகோணமலை கடற்கரை வளாகம் (Beach Area)

காலம் : 04 - 04 - 2010 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 4.00 மணிக்கு

''கறைபடிந்து போன பாடங்களின் முடிவிலிருந்து மக்கள் எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்''

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தமிழ் இளைஞர் ஒன்றியம் – திருகோணமலை




அமெரிக்க இராசாங்கச் செயலகம் வெளியிட்ட 2009ஆம் ஆண்டிற்கான மனித உரிமை மீறல் அறிக்கை பற்றிய ஆய்வுரை - அரசியல் ஆய்வாளர் க. வீமன்

தனது ஒற்றை வல்லரசு ஆதிக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடன் அமெரிக்க இராசாங்கச் செயலகம் வருடாவருடம் வெளியிடும் உலக மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை மார்ச் 2010 இல் வெளிவந்திருக்கிறது கண்டிப்பதும் தட்டிக் கொடுப்பதும் தனது ஏகபோக உரிமை என்று அமெரிக்கா எண்ணுகிறது. மேற்கு நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் புரியும் அடிப்படை மனித உரிமை மீறல்களைப் பற்றி ஒப்புக்குத் தன்னும் இந்த அறிக்கை கூறாமல் விட்டுள்ளதையே ஒரு பாரிய உரிமை மறுப்பாகச் சுட்டிக் காட்டலாம் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் தமது தவறுகளுக்கு விதி விலக்கு அளிப்பது உலக வழமை.
கடந்த காலத்தில் வெளிவந்த அறிக்கைகளில் சிறிலங்கா அரசைக் கண்டிக்கும் போதெல்லாம் அறிக்கையின் ஆசிரியர்கள் ஈழத் தமிழர்களின் பாதுகாவலர்களான விடுதலைப் புலிகளையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளனர் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு முன்னோடி நடவடிக்கையாக மத்தியட்சர் நோர்வே ஊடாக ஒரு சமாதானப் பொறியை உருவாக்கிய அமெரிக்கா இன்னும் ஓயவில்லை இந்த அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வரும் தறுவாயில் தெற்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தப் புலிகள் தீர்மானித்தனர் என்ற ஆதாரமற்ற தகவல் காணப்படுகிறது மேலும் இந்தத் தாக்குதல்கள் அரசியல் வாதிகள் சொத்துக்கள் பொதுமக்கள் மீது நடத்தப்பட இருந்தன என்றும் அது கூறுகிறது இதுகும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகும். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கு நாடுகளைத் தூண்டி விடும் நோக்குடன் மேற்கூறிய கற்பனைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது இடம் பெயர்ந்த மக்கள் முறையாகக் குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என்றும் நெருக்கடியான சூழலில் அவர்கள் வாழ்கின்றனர் என்ற தகவலும் இந்த அறிக்கையில் காணப்படுகிறது வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை ஒரு குற்றமாகக் காட்டும் முயற்சியாகவும் அறிக்கையின் கற்பனை வாதத்தைக் கருதமுடியும் மேற்கு நாடுகளில் ஈழத் தமிழ் மனித நேயப் பணியாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகளுக்கு இந்த அறிக்கையும் முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவின் தோழமை நாடான இங்கிலாந்தின் ஈழத்தமிழர்கள் சிலர் பாரிய அச்சுறுத்தல்களைச் நாளாந்திரம் சந்திக்கின்றனர் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் நீதி மன்றங்களில் நிறுத்தப்படுகின்றனர் இங்கிலாந்தின் நெடிய நீதி மன்ற வரலாற்றில் மிகச் சிறிய குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை விதிக்கும் ஜட்ஜ் ஜெப்றிஸ் என்பவரைச் சந்திக்கிறோம் இந்தப் பாரம்பரியம் இன்றும் நிலவுகிறது இதற்கு உதாரணமாக ஈழத் தமிழர்களும் பிரிட்டிஸ் பிரசையுமான ஏ. சி. சாந்தன் அனுபவிக்கும் இன்னல்களை எடுத்துக் கூறலாம் பிரபல பிரிட்டிஸ் பொறியியலாளரான சாந்தன் காவல்துறையால் பிடிக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார் நீதி மன்றம் அவருக்கு இரு வருட சிறைத் தண்டனை விதித்தது பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்ட இவர் செய்த ஒரேயொரு குற்றம் சிறிலங்கா விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற போது புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் அங்கு சென்றதாகும.;
சாந்தனுக்கு விடுதலை செய்யப்படும் முன் நீதி மன்றம் விதித்த நிபந்தனைகள் மிகக் கொடியவை அவை மனித உரிமை மறுப்பின் உச்சத்தைத் தொடுகின்றன அவர் ஒவ்வொரு நாளும் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடவேண்டும் தனது வீட்டிலிருந்து தூர இடத்திற்குப் பயணம் செய்ய முடியாது பிறருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளக் கூடாது எவரேனும் அவருக்கு அன்பளிப்புப் செய்தால் அது பற்றிப் பொலிசில் பதிவு செய்ய வேண்டும் சாந்தனின் வீட்டுக்கு வருவோர் போவோர் பற்றிய விவரங்களையும் அவ்வாறு பதிவு செய்ய வேண்டும் புலிகளோடு தொடர்பு வைக்கக் கூடாது ஈழத் தமிழ் அகதிகளுக்குத் தான் நற்பணிகளில் ஈடுபடக் கூடாது ஜோசப் ஸ்ராலின் காலத்தில் சைபீரியாவுக்கு அனுப்பப் படுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை போல் இருக்கிறதல்லவா? இது அமெரிக்க இராசாங்கச் செயலகத்தின் கண்ணில் படாதது தான் மிகவும் வியப்பான செய்தி.
சிறிலங்காவில் மனித உரிமை நிலவரம் படு மோசமாக உள்ளது தாண்டிக்குளம் வவுனியா பரந்த வெளி முகாமில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுடைய வாழ்க்கை கவலை அளிப்பதாக உள்ளது ஐ.நா தொடர்ந்து பாரா முகம் காட்டி வருகிறது தமிழர் வாழும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது தொண்டு நிறுவனப் பணியாளர்கள் புலிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்ற குற்றச் சாட்டுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தக் கொலைகள் பற்றிய நீதி விசாரணை நடப்பதில்லை.
சிறிலங்காவில் நடப்பது போல் மேற்கு நாடுகளிலும் தமது இன மக்களுக்காக மனித நேயப் பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் பாரதூரமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர் படு கொலைகள் நடைபெறா விட்டாலும் கைதுகளும் சிறை வைத்தலும் பரவலாக நடைபெறுகின்றன சிறிலங்காவின் அத்துமீறல்களை கண்டிக்கும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் அதே வகை அத்துமீறல்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்கின்றன இதில் வியப்பு என்னவென்றால் சிறிலங்காவிக்கு வெளியே மிகக் கூடுதலான ஈழத் தமிழர்கள் வாழும் நாடான கனடாவின் சிறிலங்கா தொடர்பான நடவடிக்கைகள் தான்.
சிறிலங்காவின் போர் குற்றங்கள் பற்றி மௌனம் சாதித்த கனடா இன்று ஈழத் தமிழர்கள் பற்றிக் கரிசனை காட்டும் தமிழர்களின் பணிகளை முடக்கி நிறுத்தியுள்ளது அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் நடப்பதை இராசாங்கச் செயலகம் அசட்டை செய்வது கவலைக் குரியதாகும். சிறிலங்கா அரசு தனது நாட்டில் வாழும் தமிழர்களுக்குத் தொண்டாற்றும் மனித நேய அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது. மேலும் இந்த நடவடிக்கையோடு நிறுத்திக் கொள்ளமல் தனது தூதரகங்கள் ஊடாக மேற்கு நாடுகளில் செயற்படும் தமிழ் மனித நேயப் பணியாளர்களை முடக்கும் பிரச்சரங்களை மேற்கொள்கின்றது.
சிறிலங்காவின் இந்த வகை இராசதந்திர நடவடிக்கையின் பிரதிபலிப்பு மேற்கு நாடுகளில் மிக தீவிரமாக இன்று காணக் கூடியதாக இருக்கின்றது தமிழ் மனித நேய பணியாளர்கள் சாதரண குற்றவாளிகள் போல் வேட்டையாடப் படுகின்றனர். இதனால் பாரிய மனித உரிமை மீறல் நடை பெற்ற வண்ணம் உள்ளது. சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் இத்தாலியில் இத்தாலிப் பொலிசார் பக்கச் சார்பான முறையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் சிறிலங்காவின் இத்தாலிக்கான தூதர் இதன் பின்னணியில் இருப்பதைத் இத்தாலி வாழ் தமிழர்கள் நன்கு அறிவார்கள் சில காலத்திற்கு முன்பு இத்தாலிப் பொலிசார் மனித நேயப் பணியாளர்கள் வாழ்விடங்கள் மீது அதிகாலையில் ஒரு பாச்சலை நடத்தியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது இந்த தமிழ் பணியாளர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். குற்றச் செயல் புரியாத இந்த அப்பாவித் தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் மனித நேயப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனை அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார மேம்பாற்டிற்கு ஈழத் தமிழர்கள் மிகவும் சிறந்த அர்ப்பணிப்பைச் செய்கின்றனர் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்றனர் சில வருடங்களுக்கு முன் ஆபிரிக்க வம்சா வழி இளைஞர்கள் பாரிஸ் நகரில் தொடர்ச்சியாகப் பல நாள் நீடித்த வன்முறைகளில் ஈடுபட்டனர் ஊர்திகளும் விடுதிகளும் தீயிடப்பட்டன ஊடகங்கள் இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன இப்படியான வன்முறைகளில் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உட்பட எந்தவொரு நாட்டின் வரலாற்றில் காணமுடியாது தமிழர்கள் தெருவில்; பேரணி நடத்தினால் மிகவும் கட்டுப்பாட்டுடன் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் நடத்துகின்றனர் இதைப் பொறுப்பு வாய்ந்த காவல்துறையினர் நன்கு அறிவர் இவர்களையா பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்கள்?
பிரான்சில் 17 மனித நேயப் பணியாளர்களின் குடியிருப்புக்கள் மீது பொலிசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கைதுகளை நடத்தினர் கைது நடந்த பல மாதங்கள் சென்ற பின்னர் 14 கைதிகள் விடுவிக்கப் பட்டனர் ஆனால் அவர்கள் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன தொலைதூரம் பயணம் செய்யக் கூடாது வெளி ஆட்களுடன் சந்திப்புக்களைச் செய்யக் கூடாது மனித நேயப் பணிகளில் ஈடுபடக் கூடாது போன்ற நிபந்தனைகள் இதிலடங்கும் மிகுதியான 3 பேரக்கும் தலா 7ஆண்டுச் சிறைச் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருக்கின்றர்கள்.
ஈழத் தமிழர்களின் அர்ப்பணிப்பையும் சட்ட ஒழுங்கை மதித்து நடக்கும் பண்பையும் நன்கு உணர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனி முதலிடம் வகிக்கிறது தலைநகர் பேர்ளினில் ஈழத் தமிழர்கள் தமது உரிமைகள் தொடர்பாக ஒரு அமைதிப் பேரணி நடத்திய போது அங்கு வந்த ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதர் இவர்கள் பயங்கர வாதிகள் பேரணியை நிறுத்துங்கள் என்று கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசாரைக் கேட்டார் எமக்கு வேலை இல்லாமல் மிகவும் அமைதியாகப் பேரணி நடத்தும் இவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் வெளியேறும் படி தூதுவரைப் பொலிசார் பணித்தனர் இப்படியான ஜேர்மனியில் 6 மனித நேயப் பணியாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களில் சிலருக்காவது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கூறியவற்றைப் பார்க்கும் போது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கு இருண்ட காலம் தொடங்கி விட்டதை உணர முடிகிறது மேற்குலக நாடுகள் பேச்சில் நீதியையும் செயலில் அநீதியையும் செய்கின்றன ஈழத் தமிழர்களின் மீள் குடியேற்றம் அவர்களுடைய மனித உரிமைகள் பற்றி மேற்கு நாட்டு அரசியல் வாதிகள் பேசுவதைக் காணோம் தமது இனத்திற்காகப் பாடு படுவோரைத் தடுப்பதில் அமெரிக்கா கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பாவின் இத்தாலி பிரான்சு ஜேர்மனி ஆகிய நாடுகளும் தீவிரமாக ஈடுபடுகின்றன.
மேற்கு நாட்டுத் தலைவர்களும் இராசதந்திரிகளும் முன் பின் முரணாகப் பேசுவதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள் அவர்கள் உண்மைக்காக் குரல் கொடுப்பதில்லை தங்கள் தேசிய நலன் அடுத்த தேர்தல் வெற்றி போன்ற வற்றிற்காக ஈழத் தமிழர்கள் பற்றிக் கவலைப்படாமல் செயற்படுகின்றனர் நீங்கள் மாத்திரம் உறுதியான நிலைப் பாட்டை எடுத்து அதற்கு அமைவாக நடக்கத் தீர்மானிப்பீர்கள் என்றால் ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்கள் காரணமான உயிரிழப்புக்களை தடுக்கலாம். ஆனால் மேற்கு நாட்டு தலைவர்கள் செய்வது என்னவென்றால் அவர்கள் அல்லற் படும் ஈழத் தமிழருக்கு உதவும் மாட்டர்கள். தமிழர்கள் தமக்கு தாமே உதவுவதற்கும் விடமாட்டார்கள் சுவீடன் நாட்டுக் கர்மயோகி டாக் ஹாமர்யோல்ற் வகித்த ஐ.நா செயலாளர் நாயக பதவியில் அமர்ந்திருக்கும் தென் கோரியரான பான் கீ மூன் திடசித்தி அற்றவராகவும் பதவிக்குரிய வினைத் திறன் இல்லாதவராகவும் இருப்பதால் ஈழத் தமிழர் வாழ்வு நரகமாகியுள்ளது செட்டிக்குளம் தடுப்பு முகாம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றில் வதைபடும் தமிழர்கள் பற்றிய கரிசனை இவரிடம் அறவே கிடையாது. சனவரி 2010த்துடன் செட்டிக்குளம் முகாங்கள் அனைத்தும் முடப்படும் என்ற சிறிலங்கா அரசின் உறுதி மொழியை நிறைவேற்றப்படவில்லை இதற்கான அழுத்தத்தை பான் கீ முன் கொடுக்க தவறியுள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அப்பாவி இளைஞர்கள் பலர் தெற்கில் உள்ள பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஐ.நா அமைப்பின் சரிவும் வீழ்ச்சியும் பான் கீ மூன் காலத்தடன் தொடங்கியதாக வரலாறு கூறும் என்பது உறுதி.
அமெரிக்க இராசாங்கச் செயலகம் விடுக்கும் அறிக்கை அமெரிக்கக் கண்ணோட்டத்தை மாத்திரம் பிரதி பலிக்கின்றது. மேற்கு நாடுகள் தமது எல்லைக்குள் வாழும் தமிழர்களுக்கு எதிராக புரியும் மனித உரிமை மீறல்களையும் சட்டத்தின் ஊடாக புரியும் அத்து மீறல்களையும் நீதி பரிபாலனக் குறைபாடுகளையும் கண்டிப்பதற்கு இந்த அறிக்கை தவறியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழருக்க இது கடும் வேதனை அளிக்கின்றது. எதிர் வரும் காலத்தில் அமெரிக்க இராசாங்க செயலக அறிக்கை தமிழ் மனித நேய பணியாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறையை மேற்கு நாடுகளை நிறுத்தும் படி கூற வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வளர்களின் கருத்தாகும்.




ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது உணருமா உலகத்தமிழினம்......?

“ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்டுரையைப் படித்தேன். ஆக்கத்தின் மூலம் எங்கிருந்தோ தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில குறிப்புக்கள். ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கு உரிமையுண்டு. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை எழுத வேண்டும். அத்தோடு, எது சரி, எது பிழை என்பதைக் கண்டறியக்கூடிய திறமையும் இருத்தல் அவசியம். பக்கப்பாடு இருக்கலாகாது.
அன்றய காலகட்டத்த்கில் புலிகள் உருவாகி போராட்டத்தில் இறங்கிய பொழுது தாயகத்தின் அரசியல்வாதிகள் திரு அமிர்தலிங்கம் உட்பட, தங்களுக்கென்று இயக்கங்களை உருவாக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு, புலிகளைத்தவிர எனய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குளுக்களாக மாறினார்கள். ஒரு சில இந்தியாவின் தோள் ஒட்டுக்குழுவாக இயங்கிவருகின்றது. இவர்களைப்பற்றி யாராவது விவாதிக்கின்றார்களா? இல்லையே.
ஆனால், இன்றோ அதே தமிழினம் தேசியக் கூட்டமைப்புக்கு மாறாகச் செயல்படத்தொடங்கியுள்ளது. புலம் பெயர்ந்த மக்கள் தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் அமைப்பினை ஆழமாக் பிளவு படுத்தி ஆனந்தம் காண அவா? காரணம் என்ன......? தமிழ் மக்கள் அன்றய காலத்திலிருந்து ஒற்றுமை எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாதவர்களா?
எமக்கு போட்டி, பொறாமை, அடக்குமுறை என்பன பிறப்பிலேயே வேரூண்டிவிட்டது. ஒற்றுமையின் ஆரம்பம் குடும்பம் வசிக்கும் மனை. அதாவது குடும்பத்தினில் ஒற்றுமை நிலவ வேண்டும். குடும்ப ஒற்றுமையின் பலம், கிராம ஒற்றுமைக்கு விஸ்தரிக்கப்படும். கிராம ஒற்றுமையின் எடுத்துக் காட்டு, நகரத்திற்கும், நகர ஒற்றுமையின் எடுத்துக்காட்டு நாட்டின் ஒற்றுமையையும் விஸ்தரிக்கும்.
ஒற்றுமை, இதன் விளக்கம்:பெயர்ச்சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். ஒற்றுமைக்கு ஆங்கிலக்கருத்து ஒன்றும் உண்டு. உருவ ஒற்றுமை. பல்கலைக்கழக அகரமுதலியில் ஒற்றுமைக்கு, பல அர்த்தங்களுண்டு. இயக்க நிலை ஒற்றுமை, நீரியல் ஒற்றுமை, சாயல் தோற்ற ஒற்றுமை, கருத்து இணக்கம், கருத்து ஒருமிப்பு, கருத்து ஒருமைப்பாடு, பொதுவான இசைவு, கருத்தொன்றிப்பு, இப்படி பல, பல அர்த்தங்கள்.
ஒருமைப்பாடு, இதன் விளக்கம்:
பெயர்ச் சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். மற்றய விளக்கம்- கூட்டு ஒருமைப்பாடு, கூட்டுப் பொறுப்புணர்வு, பல்லின ஒருமைப்பாடு, கலப்பின திருமணம், congruent;- முழுதொத்த, முழு ஒற்றுமையுள்ள, முற்றிசைவான, பொருத்தம், முழுதும் பொருத்தமான, ஒத்திருக்கின்ற, consensus;- கருத்து ஒருமைப்பாடு. சமுதாய தளத்தைப் பார்த்தால், தமிழ்ச் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அழிப்பதற்குத்தான் முயற்சிக்கின்றார்கள். காலத்துக்கேற்றவாறு, சிந்தனையுடனும், சாணக்கியத்துடனும், அரசியல் தந்திரத்துடனும் செயல் படுகின்றார்கள். இன்று தனித்தமிழீழம் என்று போராடின இளைஞர்கள் எல்லோரும் சிறையில் துன்புறுத்தப்படுகின்றார்கள். வீறு கொண்ட அரசியல் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். புலிகளின் அரசியல் அங்கத்தவர்களும், உடகவியலாளர்களும் சிறையில். ஒரு சிலர் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், யோகி போன்றவர்கள் தேர்தலில் நிற்பதற்கு ஆயத்தம் செய்தார்கள், தேர்தல் ஆணையரால் மறுக்கப்பட்டது. இன்றய காலகட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்றால், அவர்கள்: TNA பாராளுமன்ற அங்கத்தவர்கள்தான். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அல்ல. காலத்துக்கேற்றவாறு உறுதியான, ஆக்கபூர்வமான, ஆக்க வளம்கொண்ட, கொள்கைகளை கடைப் பிடிக்கின்றார்கள். நடக்கும் தேர்தலில் நூறு விழுக்காடு த.தே.கூ வெற்றி பெறச் செய்வது, ஈழ மக்களின் மாத்திரமல்ல, புலம் பெயர்ந்த மக்களின் கடமையும் கூட .
பல கட்சிகளின் அங்கத்தவர்களை பாராளுமன்றத்திர்கு அனுப்புவதன் பலம் என்ன?உண்மை என்னவெனில் சில துயரச் சம்பவங்கள் சுழலும் சக்கரம் போல எமது வாழ்க்கையில் காணக்கூடியதாக இருக்கின்றது. “ நடந்தது நடந்துபோச்சு”! அப்படியல்ல, இனிமேலாவது நடக்காமல் இருக்கவேண்டுமல்லவா?
நடக்கப் போவதை நிர்ணயிப்பது எப்படி?நடந்தவைகள், நடந்துகொண்டிருப்பவை, இவைகளில் நடந்த பிழைகள், சறுக்குகள், குட்டிக் கரணங்கள், துரோகத்தனங்கள், மோசடிகள், ராணுவ புதைகுழிகள், இவையெல்லாவற்றையும் அடையாளங்கண்டு, ஆராய்ந்து, முன்னெடுக்கப்போகும், நடக்கப் போகும் நிகழ்வுகளில் இப்படிப்பட்ட வரலாற்றுப்பிழைகள், சுழலும் சக்கரம் போல, தமிழ் மக்களைச் சுற்றி வந்து ஏப்பம் போடாமல் எமது அரசியல் பிரமுகர்கள் இருக்கவேண்டுமென்பது எமது ஆதங்கம். இக்குறிக்கோளோடு த.தே.கூ செயல் படுகிறார்களென்பது எமது அபிப்பிராயம்.
பத்து லட்சம் மலயகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்திற்கு வாக்களித்தவர்தான் எமது திரு G.G.Ponnampalam. அவர் வழியில் உதித்தவர்தான் திரு கஜெந்திரன் பொன்னம்பலம். தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கென்று சில தமிழ்த் துரோகிகள் உதிப்பார்கள். இன்றய காலகட்டத்தினில், திரு சிவாஜிலிங்கம், கஜெந்திரன் பொன்னம்பலம், செல்வரஜா கஜெந்திரன், பத்மினி சிதம்பரனாதன், TNA ல் இருந்து பிரிந்து சென்று போட்டி இடுவது, 21ம் நூற்றாண்டினில் தமிழர் இடும் மாபெரும் துரோகத்தனம். பத்மினி சிதம்பரநாதன் அரசியலுக்கு வந்து எதனைச் சாதிக்கவிருக்கின்றார்.
தமிழ் மக்கள் அன்று இட்ட தவறுகள்:
முதலாவது தவறு: 1833ம் ஆண்டு யாழை இலங்கையோடு இணைத்தபோது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
இரண்டாவது தவறு: 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தபொழுது, யாழின் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
மூன்றாவது தவறு: பத்து லட்சம் மலயக மக்களின் குடியுரிமையை இலங்கை பறித்தபொழுது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
நான்காவது தவறு: 1956ம் ஆண்டு சிங்கள மசோதாவிற்கு கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
ஐந்தாவது தவறு: 1972ம் ஆண்டு குடியரசாக்கிய பொழுது கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
இதன் பிற்பாடு எமது அரசியல்வாதிகள் சுழலும் சக்கரம் போல செய்த தவறுகள் பல பல- எண்ணுக் கணக்கற்றவை.
ஆனால் திரு கோடீஸ்வரன் 1969 ஆண்டு சிங்களத்திற்கு எதிராக Privy Councilலில் வாதாடி வழக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் பிரதி பலிப்பு 1972ம் ஆண்டின் குடியரசும், கொடிய அரசியல் அமைப்பும்.
மேலே கூறியவை ஒரு சில உதாரணங்கள். இன்று வட கிழக்கில் எத்தனை மக்கள் வாழ்கின்றார்கள்?
நாட்டுப் பற்றுடையவர்கள் இன்றும் நாட்டில். மற்றயவர்கள் புலம் பெயர்ந்த மண்ணில். ஈழ மக்களையும், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிகத் தங்குமிடத்திலும் வதியும் மக்களையும் காரணம் காட்டி, புலம் பெயர்ந்த மக்கள் களியாட்டமும், பணச்சேகரிப்பும், இன்று புலம் பெயர் தமிழ் மக்களின் கலாச்சாரமாகிவிட்டது. முள்ளிவாய்க்காலில் 50,000 மக்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகவில்லை, ஆனால், புலம் பெயர்ந்த மக்களோ, மனோரமா என்ன, ஆட்டமென்ன, பாட்டென்ன, ஐயகோ, என்செய்வேன் பராபரமே. எல்லாமே நடப்பது கனவா? நாடக மேடையா? குழப்பமாக இருக்கின்றது.
ஆகவே, த.தே.கூ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கவில்லை,
ஈழம் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் தான் களத்தில் நிற்கின்றார்கள். தேர்தலில் நிற்கும் த.தே.கூ அங்கத்தவர்கள் மிகவும் துணிச்சல் படைத்தவர்கள். சாணக்கியமும், சாளுக்கியமும், அரசியல் தந்திரத்துடனும், விவேகத்துடனும், துணிச்சலுடனும் தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு . புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் ஆதரவினை அளிப்பது தான் மிகவும் சாலச் சிறந்ததும், தார்மீகக் கடமையும் கூட .....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
சிந்தனை அற்ற செயல் முட்டாள்தனம் செயலற்ற சிந்தனை சோம்பேறித்தனம்.”





Friday, April 2, 2010

எதித்திரியாவில் காயங்களுடன் தலைவர் - தேடி ஓடும் உள‌வு அமைப்புக்க‌ள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் எதித்திரிய மற்றும் எதியோப்பியாவிட்குள் நுழைந்திருப்பதாகவும் அங்கிருந்தே புலிகளின் முக்கிய சிறப்பு தளபதிகளின் வழிகாட்டலில் சர்வேதச புலிகளின் வலை அமைப்பு இயங்கிவருகின்றது .அங்கு உள்ள தலைவர் காயங்களுடன் உள்ளதாகவும் இதை அறிந்த இந்திய இலங்கை மற்றும் சர்வேதேச உளவு நிறுவனங்கள் அங்கு தமது தேடுதலை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .பொட்டம்மான் உயிரோடு உள்ளதாக் வந்த தகவலை அடுத்து தற்போது இந்த தலைவர் கதையும் பெரும் பரப்பகாக பேசப்படுகின்றது .இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் அவர்கள் தமது குரல் வழி காணொளி ஊடாக மக்கள் மத்தியில் முக்கிய வரலாற்று சிறப்பு மிகு உரை ஆற்றுவார் என தெரிவிக்க பட்டுள்ளது .இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகள் என சொல்லாபட்டவ்ர்கால் இந்த தகவல் கசிந்துள்ளது .எம் தலைவர் மீண்டும் வர வேண்டும் சிங்களவனின் செருக்கு உடைக்க வேண்டும் தலைவரின் உரை வருமாகின் புலம் பெயரில் பாரிய புரட்சி வெடிக்கும் என்பது திண்ணம் .எதிரியாவில் நிறுத்தி வைக்க பட்டிருந்த புலிகளின் பத்து விமானம்களும் மாயமாக மறைந்ததும் அதன் பின் புலத்தில் இவர்களது செயல் பாடு உள்ளதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது தலைவரின் குடும்ப உறவுகளும் நலமாகவே உள்ளனர் .துவராக இறந்து விட்டதாக சொல்ல பட்டது குறிப்பிடத்தக்கது .சாள்ஸ் அந்தோணி வீரசாவடைந்தார் ,அதையடுத்து அனைவரும் நலமாகவே உள்ளனர் என அந்த தகவல் கசிவு தெரிவித்துள்ளது..

எனினும் இத்தக‌வ‌லை எம‌து இணைய‌த்த‌ள‌த்தால் உறுதிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை என்ப‌த‌னை எம‌து த‌மிழ் விடுத‌லை வாச‌க‌ர்க‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்துகின்றோம்...





இலக்கு நிர்ணயிக்கப்பட்டு "இலட்சியத்தை வெல்லும் பணி" சரியான திசையில் பயணிக்குமானால் அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே....

இலக்கு நோக்கிய பயணம்.........?ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறி லங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும்; இருந்து வருகின்றது.
அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்? நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது. அது மட்டுமன்றி நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக இது சாத்தியமற்றது என்ற நிதர்சனத்தையும் உறுதிப் படுத்தியது. 1977 இன் பின்னான எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்வுடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தேர்தல்களை அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட ஒரு தந்திரோபாயமாகவே கருதியிருந்தனர்.
கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை.
தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம். தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள். இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை. எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும்.
முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை - அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை - முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும்.
இரண்டாவது விடயம். நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும்.
இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்து நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும். தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவே, புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.




இலங்கை என்ற "பெருந்தேசியவாதத்துக்குள் அடிமையாக்கும் தமிழ்த் தேசியவாதம்"

தடுமாறிக் கொண்டிருக்கும் தேசியவாதமும் பிரதேசவாதமும்.......?
இந்த மாதம் 8 ந் திகதி நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையப் போகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்- அளும்கட்சி மிகவும் பலமானதொரு நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளோ பிரிந்து நின்று கோசம் போடுவதைத் தவிர பெரிதாக எதையும் சாதிக்கும் நிலையில் இல்லை. வழக்கம் போலவே தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு சார்பாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கான போட்டியில் குதித்திப்பதில் ஆச்சரியம் இல்லை. அதேவேளை தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படப் போகின்ற மாற்றங்கள் எப்படிப்பட்டதாக அமையும் என்ற கேள்வியும் இப்போதே எழத் தொடங்கி விட்டன.
இந்தத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று மோதுவதும் அதிகளவிலான சுயேட்சைக் குழுக்கள் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் களமிறங்கியிருப்பதும் முக்கியமான விடயங்கள். பணத்துக்காகவே சுயேட்சைகள் அதிகளவில் களமிறங்கியிருப்பதாகப் பரவலான குற்றசாட்டுகள் சுமத்தப்படுகின்றன. குறிப்பாக ஆளும்கட்சியின் கைப்பொம்மைகளாகவே பெரும்பாலான சுயேட்சைகள் களமிறங்கியிருப்பது கண்கூடு. இதற்கென பல இலட்சம் ரூபா கைமாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதில் எவ்வளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்ட சுயேட்சைகளுக்கே வெளிச்சம். யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றில் தலைமை வேட்பாளர் தாம் பணத்துக்காக களம் இறங்கவில்லை என்று கூறியிருக்கிறார். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சுயேட்சைகளாகக் களமிறங்கியுள்ள பல பிரபலங்களுக்கும் தமது ‘உயரம்’ என்ன என்பது தெரியாதிருப்பது தான் வேடிக்கை. நான்கு பேருக்குத் தெரியும் என்பதற்காக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடும் அளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
தம்மை சமூகத்தின் வழிகாட்சிகளாக நினைத்துக் கொள்ளும் இவர்கள்- வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தாம் தமிழ்ச் சமூகத்துக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அரசியல் தெளிவு கூட இல்லாதிருக்கின்றனர். சுயேட்சைகளாகப் போட்டியிட்டு ஆசனத்தைக் கைப்பற்றும் அளவுக்கு தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் யாரும் இல்லை. அதைத் தெரிந்திருந்தும் போட்டியில் குதித்துள்ளவர்கள் மீது பணத்துக்காக விலை போனவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுவது இயல்பானதே.
அதேவேளை இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல்கட்சிகள் மத்தியில் காணப்படும் பிளவுகள் ஒரு பிறழ்வு நிலையை நோக்கித் தள்ளிச் சென்றிப்பதையும் அவதானிக்க முடிகிறது. தமிழ் தேசியம் பேசிய கட்சிகளே ஒன்றுபட்டு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையி;ல் மூன்று அணிகளாகப் பிளவுபட்டுப் போயுள்ளது. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றோர் தனி அணியாக உள்ளனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- கூட்டணி சேர்ந்திருப்பது இடதுசாரி அணி ஒன்றுடன். இன்னொரு பக்கம் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் ஒரு அணி போட்டியிடுகிறது. மற்றொரு அணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக நின்கிறது. தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் தமிழ்க் காங்கிரஸ் எதற்காக திருமலையிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டும் நிற்கிறது? இதுவா தமிழ்த் தேசியம் என்று கேள்வி எழுப்புகிறது கூட்டமைப்பு.
அதேவேளை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்தி விடும் என்று கூறியிருப்பது தான் வேடிக்கை. ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழருக்கு ஏற்பட்ட பேரழிவுகளுக்குக் காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியொரு நியாயம் கற்பித்திருப்பது வேடிக்கை. தமிழ்த் தேசியம் பேசிய சக்திகள் இப்போது மெல்ல மெல்ல பிரதேசவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காயவும் முற்படுகின்றன இதை தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.
இதற்கிடையே பிரதேச வாதம் பேசிய சக்திகளின் நிலையும் மாறத் தொடங்கி விட்டது. கிழக்கில் முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்தத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடுகிறது. வடக்கில் ஆசனங்களை வெல்ல முடியுமா என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறதா அல்லது வாக்குகளைப் பிரிக்க நினைக்கிறதா என்பதெல்லாம் ஒருபுறத்தில் இருக்கட்டும். ஆனால் இதனூடாக சந்திரகாந்தனின் கட்சி சொல்ல வருகின்ற செய்தியே முக்கியமானது. தமது கட்சி பிராந்தியக் கட்சி அல்ல என்பதை அந்தக் கட்சி வெளிப்படுத்த விரும்புகிறது. முன்னதாக கிழக்கு மக்களின் தனித்துவக் கட்சி என்றும் கிழக்கு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே என்றும் கூறப்பட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போது வடக்கிலும் கால் வைத்திருப்பது பிரதேசவாதம் தோல்வி காண்பதை வெளிப்படுத்துகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சீரழிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கி வளர்த்து விட்டதே பிரதேசவாதம். அதற்கு பிரதான காரணமாக இருந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். ஆனால் அதே கட்சி இப்போது வடக்கிலும் தனது செல்வாக்கைப் பரிசோதிக்க முனைகிறது என்றால் வடக்கு,கிழக்கு என்று தமிழ்த் தேசிய வாதத்தை நோக்கி நகர விரும்புகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்க பிரதேசவாதத்துக்குள்ளேயும், தமிழ்த் தேசியவாதத்துக்குள்ளேயும் நின்று அரசியல் நடத்திக் கொண்டிருந்த இன்னொரு தரப்பு- இலங்கை என்று பெருந்தேசியவாதம் பேசத் தொடங்கியுள்ளது. முன்னர் தமிழ்த் தேசியத்தையும் பின்னர் கிழக்குப் பிரதேசவாதத்தை வலியுறுத்திய கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பெருந்தேசியவாதத்தை வலியுறுத்த ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியவாதம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி கதிராமன், சதாசிவம் கனகரத்தினம் ஆகியோரும் அதே பெருந்தேசியவாதத்துக்குள் மூழ்கிப் போயுள்ளனர். இன்னொரு புறத்தில் வடக்கு,கிழக்கு என்ற கோட்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருந்த ஈபிடிபி இப்போது ஆளும்கட்சியின் கூட்டணியாக மாறியிருக்கிறது, வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடும் நிலைக்கும் அது வந்துவிட்டது. மொத்தத்தில் தமிழ் அரசியல்கட்சிகளின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்த் தேசியவாதம் இப்போது பிரதேசவாதம் பேச முற்படுகிறது. பிரதேசவாதம் பேசியோர் தமிழ்த் தேசியவாதம் நோக்கிப் பயணிக்க முற்படுகின்றனர். பிரதேசவாத, தமிழ்த் தேசியவாத அரசியல் நடத்தியோர் இலங்கை என்ற பெருந்தேசியவாதத்துக்கு அடிமையாகியுள்ளனர். இப்படியான பல பிறழ்வுகள் இப்போது தமிழ்மக்களின் அரசியலில் நிகழ்ந்துள்ளன. இந்தப் பிறழ்வுகள் தமிழ் மக்களின் நலனுக்காக நடந்தவையல்ல. தமிழ் அரசியல் தலைமைகளின் நலனுக்காக இடம்பெற்ற பிறழ்வுகளே




Thursday, April 1, 2010

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் (வீடியோ இணைப்பு)



தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.1990 ஆம் ஆண்டில் கொக்காவில் ¨C மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் ¡°கடற்காற்று¡± எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட ¡°வன்னிவிக்கிரம¡± நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ¡°ஆகாய- கடல்வெளி¡±ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட ¡°மின்னல்¡± நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட ¡°யாழ்தேவி¡± நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ¡°முன்னேறிப்பாய்தல்¡± முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த ¡°சூரியக்கதிர்¡± நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்டஓயாதஅலைகள்¨01"நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ¡°ஜெயசிக்குறு¡± நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ¡°ஓயாத அலைகள் ¨ 02¡ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.தொடர்ந்து ¡°ஓயாத அலைகள் ¨03¡ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட ¡°தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.






"முத்துவேலர் மகனே¨! "உமது துரோகத்தை" வரலாறு நிச்சயம் குறித்துக் கொள்ளும்...........?

19 ஆண்டுகளாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் இருக்கிறார் நளினி. முருகனுக்கும் நளினிக்கும் பிறந்த அரித்திரா புலத்து நாடொன்றில் பெற்றோர் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார். ராஜீவின் கொலை சோனியாவுக்கும் அவரது அரசியல் வாரிசுகளுக்கும் அதிகாரத்தைக் கொண்டு வந்து சேர்த்தது போல அரித்திராவுக்குக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. சில நேரங்களில் குழந்தை தாயைப் பார்க்கவே அனுமதிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு முறையும் கடுமையான நீதிமன்ற போராட்டங்களுக்குப் பின்னரே உயர்ந்த மதிற்சுவர்களுக்குள் அவர்கள் சந்த்தித்துக் கொண்டார்கள். சில நேரங்களில் நளினியின் மீது கருணை காட்டுவது போன்ற பாவனையை எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்ற இயற்பெயரைக் கொண்ட இத்தாலி நாட்டவரான சோனியாகாந்தியின் குடும்பத்தினர் வெளிப்படுத்தி வந்தனர். ப்ரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்து மனம் விட்டுப் பேசியதாக ஊடகங்கள் கதறின. ஆனால் அந்தச் சந்திப்பு நடந்த சில மாதங்களில் துவங்கியது வன்னி மீதான இன அழிப்புப் போர். இப்போது போர் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிற நிலையில் வடக்கில் சில ஆயிரம் மக்களை குடியேற்றும் போது இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. ப்ரியங்கா , நளினியை வேலூரில் சந்தித்தபின்பு வன்னியில் இருந்த நான்கு லட்சம் மக்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கிறார்களே அவர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள்? நளினியின் இந்தச் சந்திப்புக்கும் போர் வெறி பிடித்த சோனியா ஈழ மக்களிடம் காட்டிய கருணைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? இதுதான் காந்தி வாரிசுகளின் கருணையா என்றெல்லாம் கேட்பதற்கு கேள்விகள் இருந்தாலும் இந்தக் கேள்வியை அங்கிருந்து தொடங்குவதை விட நமது முதுகிலிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.
ராஜீவ் கொலையில் தண்டனைக்குள்ளாகி 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி 2007ம் ஆண்டு தன்னை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். அப்போது போர் இல்லை. தமிழர்களை காப்பாற்றக் கோரி யாரும் கருணாநிதியிடம் கெஞ்சவும் இல்லை. ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அக்கோரிக்கையை நிராகரித்தது. தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட அந்த கோரிக்கை நிமித்தம் 2008ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் நளினி. 2008‍ம், போய் 2009-ம் போய் இப்போது 2010-ம் வந்து விட்டது இடையில் ஓடிக் கழிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி காட்டிய கருணையைத்தான் நாம் எல்லோரும் பார்த்தோமே! முடிந்த அளவு உதவி செய்யாமல் போனது மட்டுமல்ல விடுதலைக்காக போராடிய போராளிகளையும் செத்து விழுந்து பாடையில் போன ஈழ மக்களையும் அல்லவா இந்த மனிதர் இழிவு செய்தார். இந்தக் காயங்களை எங்கே ஆற்றுவது எப்படிப் போக்குவது என்று ஒரு இனமே தவித்து நின்றபோது, கருணா சொன்னார் “நான் உள்ளுக்குள் அழுகிறேன். எனது மௌனவலி யாருக்குத் தெரியும்?” என்றார். இதோ கருணாவின் மௌனவலியைப் புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது.
இப்போது யாரும் போர் நிறுத்தம் கேட்கவில்லை, மக்களைக் காப்பாற்றக் கேட்கவில்லை. பதவியை விட்டு கீழே இறங்குங்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒரே கோரிக்கைதான் ஆயுள் கைதியாக 19 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரு பெண்ணை விடுதலை செய்யுங்கள் என்கிறோம். கருணை வழியும் தாயுள்ளமே, திராவிடத்தின் திரு உளமே ஒரு தாயை விடுதலை செய் என்கிறோம். நான் மட்டுமல்ல மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சக்திகள் என எல்லோருமே இணைந்து கவிஞர் தாமரையின் முன் முயற்சியில் ஒரு மனுவும் தயாரித்து 'கருணை உள்ளம்' கருணாநிதியிடம் நேரடியாகவே கொடுக்கப்பட்டது.
நளினி தன்னை விடுவிக்கக் கோரி கொடுத்த மனுவும் நளினியை விடுவிக்கக் கோரி கவிஞர் தாமரை கொடுத்த மனுவுக்குமிடையில கழிந்த இந்த இரண்டாண்டுகாலத்தில் மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்தது இந்தியாவும் இலங்கையும் அதற்கு மௌனமாக துணைபோனார் கருணாநிதி. போருக்கு ஆதரவான மௌனம் ஒரு பக்கம் இருந்தாலும், நளினியின் விடுதலையில் கருணாநிதி கட்டிய மௌனம் அதை விட தந்திரமானது. 2008 -ல் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கினார். கிளிநொச்சியில் தொடங்கி அவர்கள் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் விழிம்புக்கே ஓடினார்கள் என்கிற பராசக்தி வசனம் போல முள்ளிவாய்க்கால் வரை இரண்டு வருடமாக மக்கள் ஓடியது போல நளினியையும் இரண்டு வருடமாக ஓட விட்டார் கருணாநிதி. ஒரு தனி நபரின் வாழ்க்கை தொடர்பான வழக்கு இது ஆகவே இதில் கால தாமதம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் சொல்ல கடைசியில் செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசின் நிலையைக் கண்டித்த நீதிமன்றம் சிறை ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் இடத்தில் இருக்கும் கருணாநிதி வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு மூன்று மணி நேரம் நளினியை விசாரித்து அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடமும் கொடுத்து விட்டது. வழக்கை விரைந்து முடிக்கும் முன்னறிவிப்போடு கூடிய ‍ உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்ப‌ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக ஆய்வுக் குழுவின் குரலில் நளினி விடுதலையை புறந்தள்ளியிருக்கிறார் கருணாநிதி. செய்கிற அயோக்கியத் தனங்கள் எதையும் தன் குரலில் செய்ய மாட்டார் கருணா. அதுதான் அவரது அரசியல் தந்திரம். நானே அடிமை ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று பெரியாரின் குரலில் பேசி பொறுப்பைத் தட்டிக் கழித்தது போல ஆய்வுக் குழுவின் குரலில் தீர்ப்பை எழுதி விட்டு இங்கே தப்பித்துக் கொள்கிறார் கருணா. சரி நளினியை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக இந்தக் குழு சொல்லியிருக்கும் காரணங்கள் என்ன?
காரணம் -1 நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
காரணம் -2 நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
காரணம் -3 நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம்.
காரணம்- 4 நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
காரணம்-5 ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
காரணம்- 6 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
காரணம்- 7 இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.
காரணம்- 8 அவரைப் பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.
ஒரு ஆயுள் தண்டனைக்கைதி 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின் விடுதலை செய்யப்படலாம் என்கிற விதிப்பதி அரசு அறத்தின் படியல்ல நீதியின் படி நடந்திருந்தால் கூட நளினி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை செய்யப்ப‌ட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் கருணை வழியும் தேசத்தின் குடிமக்கள் அல்லவா? அதனால்தான் அநீதியாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் விடுதலையை மறுத்து எட்டு காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். ஒரு கொலைச்சதியில் சிக்கி நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவிக்கும் ஒரு பெண் தன் குழந்தையிடம் வாழ விரும்புவதைக் கூட அனுமதிக்காத கருணை.... அதில் நான்காவது காரணத்தைப் பாருங்கள் நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடுமாம். மூன்றாயிரம் சீக்கிய மக்களைக் கொன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லரும், சஜ்ஜன்குமாரும் சுதந்திரமாக உலவுகிறார்கள். நீண்டகாலமாக சீக்கிய மக்கள் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள் இந்தியாவிடம். ஆனால் இன்று வரை மௌனமே சீக்கியர்களுக்கு பதில். ஜெகதீஸ்டைட்லருக்கும், சஜ்ஜனுக்கும் எம்.பி சீட். ஆகா மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான் அப்படி......... கருணாதான் திராவிடத் திருமகன் ஆயிற்றே நீதி வழுவா நெறி கொண்ட மன்னன் அல்லவா? 'கருணாநிதி குற்றவாளிகளைத் தண்டிப்பார், குற்றவாளிகளை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கல்லவா கெட்டு விடும் என்று அதனால் நீதியாகத்தானே நடப்பார், நளினியின் விஷயத்திலும் அதுதான் நடந்தது' என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது. தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்...... தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிண‌னை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள். இந்தக் குற்றவாளிகள் எல்லாம் வெளியே வந்தபின்பு கெடாத சட்டம் ஒழுங்கு, நளினி என்ற பெண் வெளிவருவதால் கெட்டு விடப்போகிறாதா? ஒரு வேளை ந‌ளினி மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ குற்ற‌ச்சாட்டு உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் கூட‌, அவ‌ருக்குப் பின்புல‌மாக‌ இருந்த‌தாக‌ இவ‌ர்க‌ள் சொல்கிற‌ விடுதலைப் புலிக‌ள் இய‌க்க‌ம் த‌ற்போது அழிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில், ந‌ளினியின் க‌ண‌வ‌ர் அவ‌ருட‌ன் வெளிவ‌ராத‌ நிலையில், ந‌ளினி என்ற‌ அப‌லைப் பெண் எந்த‌வித‌த்தில் பொதும‌க்க‌ளின் அமைதிக்கு ஆப‌த்தான‌வ‌ர்? ஒரு வேளை க‌ருணாநிதி தான் மிக‌வும் போற்றும் க‌ண்ண‌கி போல், நளினியும் த‌ன‌க்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதிக்காக‌ இந்த‌த் த‌மிழ்நாட்டை அழித்துவிட்டால், த‌ன‌து ம‌க‌ன்க‌ளும், பேர‌ன்க‌ளும் எந்த‌ நாட்டை ஆள்வ‌து என்று யோசிக்கிறாரோ?
த‌னியொரு அபலைப் பெண்ணிடம் இருந்து த‌மிழ‌கத்தின் ச‌ட்ட‌ ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், கல்லக்குடி வீரர், தள‌பதி, அஞ்சாநெஞ்ச‌ன் உள்ளிட்ட‌ ப‌ட்ட‌ங்க‌ளை சும‌ந்து கொண்டு, க‌ண‌க்க‌ற்ற‌ அதிகார‌ங்க‌ளுட‌ன், ஆள் அம்பு சேனையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் நீங்களும் உங்க‌ள‌து மகன்க‌ளும் 23ம் புலிகேசியின் வாரிசுகளாக‌த்தான் உண‌ர‌ப்ப‌டுவீர்க‌ள்!
நளினி விடுதலையை தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சு.சாமி, சோனியா, என எல்லோரும் வெளிப்படையாகவே எதிர்க்கிறார்கள். கருணாநிதியும் எதிர்க்கிறார் என்பது நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தயவுடன் நடக்கும் தனது ஆட்சியைக் காப்பாற்ற கருணாநிதி எந்த அளவிற்கும் கீழிறங்கி குனிந்து வளைந்து கொடுப்பார் என்பதை கடந்த நான்காண்டுகளாகப் பார்த்து வரும் நமக்கு நளினி வழக்கு மேலும் ஒரு உதாரணம். எப்போதும் குனிந்தபடியே இருந்தால் பின்னாடி இருப்பது முதுகெலும்பல்ல என்பதை தமிழக மக்கள் குறித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, வரலாறு நிச்சயம் குறித்துக் கொள்ளும்.




தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் (பாகம் : 3)

நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.
ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.
இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.
இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும் ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.
என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.
சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!
நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.
அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு
வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.
இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.
பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.
இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.
நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.
மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.
இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.
இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.
எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.
பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.
ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.
அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.
இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.
அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.
ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.
இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.
இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.
உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.
இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.
துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.
இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.
மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சிறு விபரக் குறிப்பு, இந்தியா சென்றிருந்த பற்குணத்தின் மீழ் வருகை, தமிழீழ விடுத்லைப் புலிகளின் ஆரம்பக் குறிப்புகள், சில தாக்குதல் சம்பங்கள் போன்றன பகுதி நான்கில் வரும்…




நாங்கள் இனி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்காக எப்பொழுதும் நான் தயாராக இருக்கிறேன் குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக தர்மலிங்கம் சித்தார்தனுட

தம்பி இப்படி ஏன் செய்தான் என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் புளோட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மே 17 இற்கு பிறகு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கூறுகிறார். ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட சூழலில் இன்றைய காலச் சூழலின் தேவையை உணர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்களை தீர்க்க உன்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட தீர்வை நோக்கி நகர இணைந்து செயறபட தயாராக உள்ளதாகக்குறிப்படும் சித்தார்த்தனை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்திந்து இந்த உரையாடலை நிகழ்த்தினேன்.
தீபச்செல்வன் : தமிழ் மக்களின அரசியலில் ஒன்றிணைவது என்பது மிக முக்கியமான விடயமாயிருக்கிறது. ஆரம்ப காலம் முதல் மிக முக்கிமான விடயமாக இருந்த பொழுதும் மே 17 இன் பின்னர் அதற்கான பல அவசயங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடர்ந்தும் ஒன்றினைதல் நிறைவேறாமலிருக்கிறது. நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இம்முறை பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகள் வந்திருந்தன. முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நான் உரையாடும் பொழுது நீங்கள் இறுதி வரை இணைவதாக குறிப்பிட்ட பொழுதும் பின்னர் இணையவில்லை என்று குறிப்பிட்டார். நீங்கள் ஏன் அவ்வாறு இணைந்து போட்டியிடவில்லை?

சித்தார்த்தன் : மே 17 எமது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் அரசியலைப் பொறுத்தவரை மே 17 க்கு முன்னர், மே 17இற்கு பின்னர் என இரண்டு பிரிவுகளாக பிரித்து பார்க்க வேணடி உள்ளது. அதற்கு முன்பு நடந்தவற்றை இப்பொழுது அப்படியே விட்டு விட்டு இனி நடக்க வேண்டியவற்றைப் பார்க்க வேண்டும். இந்த யுத்த்தில் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டடு லட்சக் கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். இதனால் இந்தப் போராட்டத்தை தொடங்கிய எல்லோருக்குமே ஒன்றுபட வேண்டிய கடப்பாடு இருப்பதை நான் பல தடைவ கேட்டிருக்கிறேன். இதற்காக எல்லாவற்றையும் விட்டு நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த இடத்தில் அவர்களிடம் நான் ஒன்றை குறிப்பிட்டேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் தென்பகுதியில் ஒத்துள்கொள்ளாத தன்மை உள்ளது. அதனால் இந்தப் பெயரை நாம் மாற்ற வேண்டும் என்று கேட்டேன். இனி ஈழம் என்ற கோரிக்கை சாத்தியப்படாது. ஓன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைதான் நாங்கள் எல்லோரும் கேட்கிறோம். அதை நாங்கள் ஒன்றிணைந்து கேட்க வேண்டும். கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்த பொழுது அது தெற்கில் வேறு அர்த்த்தை கொடுத்து இறுதிவரை சரத்பொன்சேகாதான் ஜனாதிபதி என்ற நிலையிருந்து பின்னர் இறுதியில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மகிந்த ஜனாதிபதியானார். தெற்கை எதிர்கொள்ள சமாளிக்க இந்த மாற்றயங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது. சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தம்.

தீபச்செல்வன் : இந்த தேர்தலின் பிறகு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நீங்கள் இணைந்து செறய்படுவீர்களா?

சித்தார்த்தன் : தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம். இந்திய நிருபாமா எங்களை சந்திக்கும் பொழுது ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு தீர்வுகளை முன் வைக்கிறீர்கள். அதை விடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து நியாமான தீர்வைnhன்றை முன்வைத்தால் நாங்கள் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்றித் தருவோம் என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு நாங்கள் இந்தத் தேர்தலில் இணைய முடியாத நிலையிருப்பதை சொல்லிய அதேவேளை தேர்தலின் பிறகு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்று சொன்னோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக ஒரு தீர்வை நோக்கிச செல்லும் அதேவேளை இப்பொழுது தேவைப்படுபவற்றை ஆரம்ப கட்டமாக செய்ய இணைந்து செயற்பட தயராக உள்ளோம்.

தீபச்செல்வன் : அவசரகாலச்சட்டம் முதல் இன அழிப்பு, யுத்தம், வன்முறை என்று எல்லாமே நடந்தேறிக் கொண்டிருந்தபொழுது நீங்கள் அரசாங்கத்தில் இணைந்திருந்தீர்கள் அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து இருந்தீர்கள். ஆதரவளித்தீர்கள். இவற்றை தடுக்க ஏன் உங்களால் முடியாமல் இருந்தது? சித்தார்த்தன்நான் 2001 இற்கு பிறகு பாராளமன்றத்தில் இருக்கவில்லை. நான் அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் பொழுது நாங்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தோம். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது. இரண்டுமே ஒரே நிலைப்பாடுதான். இரண்டுமே ஒன்றுதான். நாங்கள் மகிந்தவை ஆதரிக்கும் பொழுதே இதை மிகத் தெளிவாக சொல்லியிருந்தோம். இவர்கள் இரண்டு பேருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவோ தீர்க்கவோ மாட்டார்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் நான் மகிந்த ராஜபக்ஷவைக் கேட்டிருந்தேன் ஏன் இந்த மக்களை தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று? அப்பொழுது பலருமே சொன்னார்கள் இந்த மக்களை பல வருடங்களுக்கு தடுத்து வைத்திருப்பார்கள் என்று. மகிந்த எங்கள் கட்சியிடம் ஆறு மாதங்களுக்குள் அவர்கள் குடியிருத்தப்படுவார்கள் என்று சொன்னார். அடுத்து 12 ஆயிரம் சிறுவர்களை தடுத்து வைத்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னோம். 87கள் உட்பட ஜே.வி.பி போராட்டத்தில் சிறைவைக்கப்பட்ட சிறுவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுபோல அவர்களையும் விடுவிக்க வேண்டும். இவர்களை தடுத்து வைப்பதில் ஞாயமில்லை என்று சொன்னோம். சோன்னோம் என்பதை விட அவர்களை விடுதலை செய் என்பதை நாங்கள் ஒரு கோரிக்கையாக வைத்Nhதம். அவர்களை படிப்படியாக நாங்கள் விடுதலை செய்வோம் என்று மகிந்தா குறிப்பிட்டார். இதில் இன்னொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். புலம்பெயர் தமிழர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை; சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம். இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால்தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம். உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தேர்தலின் பிறகும் நாங்கள் இதற்காக அழுத்தங்களைக் கொடுப்போம்.

தீபச்செல்வன் : இப்படி அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் பொழுது எதை உங்களால் சாதிக்க முடிந்தது?

சித்தார்த்தன் : 1990ஆம் ஆண்டு நாங்கள் எப்படி நாங்கள் அரசாங்கத்துடன் சேர வேண்டி வந்தது என்று குறிப்பிட வேண்டும். 90 இல் முள்ளி வாய்க்காலைப் போலத்தான் வவுனியா இருந்தது. தாண்டிக் குளத்திற்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இந்திய இராணுவக் காலமான அப்பொழுது நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலத்தியே இருந்தோம். கொழும்பிலும் மலை நாட்டிலும் என்று எங்கள் பாதுகாப்பிற்காக பிரிந்திருந்தோம். அப்பொழுது வவுனியா அச்சமான சூழலுடன் இருந்தது. நாங்கள் ஓமந்தைக்குச் சென்று வெள்ளைக்கொடி காட்டி மக்களை கூட்டி வந்தோம். நாங்கள் அன்று இதில் ஒதுங்கி இருந்திருந்தால் இது ஒரு தமிழ் பகுதி இல்லாமல் போயிருக்கும். அம்பாறையாக அல்லது திருகோணமலையாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. வன்னியில் இன்று மக்கள் வாழ்வதாக இருந்தால் இராணுவத்தின் மத்தியில்தான் வாழ வேண்டும். அதுபோலத்தன் வவுனியா மக்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டது. அதற்காக இந்த மக்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவதா? நூங்களும் அப்படித்தான். விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சினைகளும் பிறகு இருக்கவில்லை. எங்களை விட மிக அதிகமாக இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் அழிவுதான் போராட்;டம் என்று பார்க்க வில்லை. எமது மக்களின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. அரசைப் பொறுத்தவரை எங்கு எதிர்க்க வேண்டுமே அங்கு எதிர்த்துதான் இருக்கிறோம். வவுனியாவில் இராணுவ முகாங்களை அமைத்து அதைச் சுற்றி மக்களை குடியமர்த்த இராணுவம் இடமளிக்காத பொழுது அதை எதிர்த்து அங்கு மக்களை குடியமர்த்தியிருக்கிறோம். நாங்கள் இல்லா விட்டால் இங்கு பல குடியிருப்புகள் இல்லாமல் போயிருக்கும். எங்கள் மக்கள் வாழ வேண்டும். வாழத்தானே நாங்கள் போராட்டம் தொடங்கியிருந்தோம். அரசாங்கத்தத்துடன் சேர்ந்திருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள் ஆனாலும் நாங்கள் சரியாகத்தான் பயணிகிக்கிறோம் என நினைக்கிறோம். அப்பொழுது நாங்கள் சந்திரிகாவுடன் கதைச்சு செய்ய வேண்டியதைச் செய்தோம். இப்பொழுது ஒரு விடயமாக இருந்தால் மகிந்தவுடன் கதைச்சு அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் விரும்பியோ விரும்பாமலே மகிந்ததான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

தீபச்செல்வன் : இந்தத் தேர்தலில் சுயாட்சி, ஜனநாயகம், அபிவிருத்தி என்பவற்றை உங்கள் நோக்குகளாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். யுத்தம் முடிந்த சூழலில் ஜனநாயகம் உன்மையிலே ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட முடியுமா? நீங்கள் குறிப்பிடும் சுயாட்சி என்பது எத்தகையது?

சித்தார்த்தன் : அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு நீண்டகாலமாக தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமக்கு இதுவரை எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. எனவே அதை எங்கள் நோக்கில் ஒன்றாக கொள்கிறோம். யுத்தம் முடிந்த பிறகு ஓரளவு ஜனநாயக் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் வெளியில் செல்லும் இடங்ககளில் பார்ததிருக்கிறேன். முக்கள் முன்பை விட பேசுவதற்கு துணிகின்றார்கள். ஆனால் முழுமையான உன்மையான ஜனநாயகம் ஒன்றை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். சுயாட்சி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரபரவலாக்கத்தை பெற்றுக்கொள்ளுவதைக் குறிக்கிறது. அதனையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். தீபச்செல்வன் :
வடக்கு கிழக்கு இணைப்பை கை விடுவது அல்லது அது பற்றி பேசுவது என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியமான நிலைப்பாடுகளாக மாறியிருக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன? சித்தார்த்தன்வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அதை யாரும் மறுக்க முடியாது. அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. நிர்வாக ரீதியாக பிரித்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக நீமின்ற ஆனை முலம் பிரித்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி வடக்கில் இருந்து குரல்கள் வருவதைவிட கிழக்கில் இருந்தே இனி வர வேண்டும். சில முஸ்லீம் மக்கள் இதை மறுக்கலாம். கடந்த காலச் செயற்பாடுகள் இதில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன. அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எனவே வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பாக வடக்கில் இருந்து நிறைய குரல்கள் வந்து விட்டன இனி கிழக்கிலிருந்தே அதற்கான குரல்கள் வர வேண்டும். நாங்கள் இருசாராரும் இணைந்து குரல் கொடுப்பதன் மூலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று நம்புகிறேன்.

தீபச்செல்வன் : விடுதலைப் புலிகள் இருக்கும் பொழுது நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு அவசியம் எனக் கூறப்பட்டது. இப்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் ஆயுதங்களை நீங்கள் கையளிக்கலாம் அல்லவா? கிழக்கில் யுத்த்தின் பின்னர் உருவாகிய நிலமைகளைப்போல வடக்கில் ஏற்படால் தவிhக்க இது உதவலாம். ஆதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் நீங்கள் வலியுறுத்தலாம் அல்லவா?

சித்தார்த்தன் : நீங்கள் சொல்லுவதை நாங்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் இப்பொழுது எந்த ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. எங்கள் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் யாரும் திரிவதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் இப்பொழுது வெளியில் எந்த ஆயுதங்களுடனும் செல்வதில்லை. காவல்துறையினர் இங்கு பாதுகாப்பில் பணி புரிகிறார்கள். அவர்களைத் தவிர எனக்கு எந்த ஆயுதப் பாதுகாப்பும் இல்லை. ஏனென்னறால் ஆயுதச் சூழலற்ற ஜனநாயகச் சூழலே எங்களுக்கு தேவைப்படுகின்றது. அதை நான் வலியுறுத்துகிறேன்.

தீபச்செல்வன் : தேர்தல் பிரசாரங்களின் பொழுது உங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் சில தமிழ் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என உங்கள் வேட்பாளர்கள் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. எதற்காக அப்படி சொல்லுகிறீர்கள்?

சித்தார்த்தன் : தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியால் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகித்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்.

நேர்காணல் : குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக தீபச்செல்வன்





வீணைத் தலைவருக்கு யாழிலிருந்து திறந்தமடல்


என்றுமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகள் களைகட்டியிருக்கும் இந்த வேளையில் இருபடுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் அரசுடன் துணைபோகும் ஆயுதக்குழுக்கள்பற்றி மக்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கருத்துக்களை தங்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.
1. சனாதிபதித்தேர்தலின் பின்னர் நீங்கள் விட்ட அறிக்கையில் உங்கள் பெரும்பாலான ஆதரவாளர்கள் நீங்கள் தனித்து போட்டியிடுவதனையே விரும்புவதாகவும் அதுதொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இரண்டுமுறை அறிக்கை விட்டீர்களே பின்னர் ஏன் மகிந்தவின் கண்டிப்பான உத்தரவுக்கு இணங்கி போனீர்கள்? நீங்கள் தனித்து போட்டியிட்டால் 2-4 ஆசனங்கள்வரை பெறக்கூடியதாக இருக்குமென்று சனாதிபதிக்கு சொன்னபோது 4 சீற்றுவேணுமோ ஒரு அமைச்சு வேணுமோ? என அவர் திருப்பிகேட்டதாகவும் அறிகிறோம் உண்மையா? சொர்க்கமே என்றாலும் ஒரு அமைச்சை போலவருமா? அதுசரி இணங்கி போனால்தானே உங்கள் சகாக்களின் (உறுப்பினர்களினதும் அவர்கள் குடும்பத்தினதும்) வயிற்றுபிளைப்பாவது சங்கடமில்லாமல் போகும். இல்லாவிடின் அவர்கள் பழையபடி (இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்)கடத்தல், கப்பம்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் பின்னர் கட்சியின் மரியாதை போய்விடுமென்று சொன்னீர்களாம் உண்மையா? இப்போ சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் விடயம் வெளியில் தெரியவரப்போகிறதே என்ன செய்வதாக உத்தேசம் 3கோடி கேட்டார்களாம் நான்கு கோடி கொடுத்தாவது விசயத்தை மறைத்துவிடப்பாருங்கள். இல்லாவிடின் ஒரு சீற்றும் இல்லாமல் போய்விடும்.
2. மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்தீர்களோ இல்லையோ உங்கள் பிரச்சார பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் எல்லா வீட்டு மதில்களிலும் இடம்பிடித்துள்ளன. உங்கள் கட்சியின் வேட்பாளர்களின் பிரசுரங்களையே (மகிந்தரால் நேரடியாக உங்களுக்கெதிராக நிறுத்தப்பட்டோரின்) கிழித்தெறிந்துவிட்டும் அதற்கு மேலாகவும் ஒட்டுகின்றீர்களே யாரின் மனதில் இடம்பிடிக்க.
கோப்பாய் பகுதியில் உங்கள் அட்டகாசம் தாங்கமுடியவில்லையே! கரவெட்டிப்பகுதியில் ஆயிரத்திற்கு மேல் ஒட்டினீர்களே ஒரு பிரசுரமாவது ஒழுங்காக கிழிக்காமல்; இருக்கிறதா? ஒருமுறை போய்பாருங்கோ கரும்புலி மில்லரை பெற்ற மண்ணப்பா அங்கேயும் உங்கள் அவல் அவியுமா? அங்கே மற்றவர்களின் பிரசுரங்கள் அப்படியே இருக்கிறதே. மற்ற இடங்களில் கிழிக்கவில்லையே என சந்தோசப்படாதீர்கள் 35000 மாவீரர்களில் 10000மேற்பட்டவர்கள் யாழ்பாண மண்ணிலே உருவானவர்கள் அவர்கள் ஒவொருவரினதும் உற்றார் உறவினர்களே இங்கே இருக்கின்றார்கள் ஒவொருவரின் ஆள்மனமும் குமுறிகொண்டுதானிருக்கின்றது.
உயிர்ப் பயத்திலேயே எனையோர் கிழிக்காமல் இருக்கிறார்கள் நீங்கள் 2006-2009 இடையான காலப்பகுதியில் இராணுவத்துடன் சேர்ந்து 2500-3000 வரையினான இளைஞர்களை கடத்திகொலை செய்தீர்களே உங்களுக்கு ஞாபகமிருக்காது. என்ன அழகாக வர்ணம் பூசப்பட்ட மதில்களை உங்கள் கூலிப்பட்டாளங்கள் அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், வீட்டுவாசலால் புறப்படும்போதே இந்த தாடிக்கேடிகளின் முகத்திலா முழித்து செல்வதென்று எதிர்வீட்டு பாலா அண்ண அடிக்கடி எங்கள் சுவரைபார்த்து சினப்பதுவும், காலைவிடிந்தவுடன் கோயில்களில் சிவபுராணமோ திருப்பள்ளியெழுச்சியோதான் படிப்பதுண்டு.
ஆனால் உங்கள் கதாபிரசங்கத்தைதான் விடிந்தவுடன் கேட்கும் அழுகுரல் போல ஓலமிடுகின்றீர்களே இதனால் எதிர்ப்புக்கள்தான்கூடும். நீங்கள் நல்லது செய்தால் விளம்பரம் தேவையில்லை மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள் உலகத்திலே தமிழர்களுக்கென்று ஒருவர் இருக்கின்றார் அவர் பிரச்சாரம் செய்வதுமில்லை பிரசுரம் வெளியிடுவதுமில்லை கதைப்பதில்லை விளம்பரமில்லை செயல்மட்டுமே செய்தார்.
ஆனால் ஒவொரு தமிழரும் ஆழ்மனதில்; வைத்து பூசிக்கின்றார்கள் எதற்கென்று சிந்தித்து பார்த்ததில்லையா? அதில் ஒரு ஐந்து வீதமாவது நல்லவராக இருக்க முயற்சிக்கலாமே. பாடசாலை மாணவனை கடத்தி கப்பம் கேட்கிறாராம் உங்கள் தென்மராட்சி அமைப்பாளர் வடமராட்சி அமைப்பாளரோ வவுனியாவிலிருந்து சகோதரியை அழைத்து சில பெண்களுடன்சேர்ந்து வீடுவீடாக கதவு தட்டுகினமாம். முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து நியமனம் தருவதான பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லுகினமாம்.
3. பாசையூர் பிரதேசத்தில் உங்கள் கட்சி அமைப்பாளரின் இலக்கத்தை சொல்லியே உங்களுக்கு பிரச்சாரம் நடக்கிறதாம் என்ன வங்குரோத்து நிலமை நினைக்கவே கவலையா இருக்கு. உங்கள் சனாதிபதியின் பிரசுரத்திற்கு மேலாகவே உங்கள் பிரசுரங்கள் ஒட்டப்படுகிறது. அவளவு வெறுப்போ அவரில என்னப்பா செய்யிறது பிள்ளையானபோல தனிய சின்னத்தில கேட்கலாமெண்டா விடுறாங்களில்லை கேட்டா அமைச்சும் போயிடும் இவளவு காலமும் கனவு கண்ட முதலமைச்சு ஆசையும் போய்விடும் என்ன செய்யிறது கண்டத்தில சனிபோல கவனமா இருங்கோ.
4. அச்சுவேலி கூட்டதிலையும் ஆக்களை காணேல்ல உங்கடை சகாக்கள்தான் அரைவாசிப்பேர் வந்தினம் இப்ப கொஞ்சம் பாதுகாப்பும் கூட்டியாச்சுபோல அவங்கட வாகனம்தான் கனக்க நிண்டது. கொஞ்சப்பேர் தொண்டர் ஆசிரியருக்கும் பட்டதாரி ஆசிரியருக்கும் நியமனத்துக்காக எல்லா கூட்டத்துக்கும் வரச்சொல்லுறாங்களெண்டு அலுத்து கொள்ளுதுகள். 1999ஆம் ஆண்டு சிறீதர் தியட்டரில வைத்து சமுத்தி நியமனம் கொடுத்தபோது மத்தியில் கூட்டாட்சி என்று நீங்கள் சொல்லிமுடிய மாநிலத்தில சுயாட்சியெண்டு அவையள் திருப்பி சொல்லோணுமெண்டு நீங்கள் வற்புறுத்த எல்லாரும் அமைதியாயிருக்க உங்களுக்கு விருப்பமில்ல போல எண்டு நீங்க சொன்னது ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன்.
5. கடந்த சனாதிபதி தேர்தலில் நல்லூர் கோவிலில் மகிந்தவுடன் நீங்கள் வந்தபோது வேட்டிஅவிழ்ந்துபோனதும் ஞாபகம் இருக்கோ ஆனால் பக்கத்திலநிண்ட அம்மா (யாழ்மேயர்)அடிக்கடி சொல்லி திரியிறாவாம். திரும்பவும் உங்கட தலைவர் ஏப்பிரல் முதலாம் திகதி வாறாராம் வேட்டியை கவனமா கட்டுங்கோ ஏப்பிரல் முதலாம் திகதி(முட்டாள்கள் தினம்) தமிழர்களை முட்டாளாக்க மீண்டுமொருமுறை யாழ் வாறார் கவனம் கபில்நாத் விடயம் தொடர்பாயும் காதோடகாதா சமாளிச்சிடுங்கோ. அவரையும் அங்கஜன் இராமநாதன்தானாம் வரவேற்க போறார் உங்கடபாடு கஸ்டம்தான்.
6. உங்களை பற்றி நிறைய நம்பிக்கை எங்களுக்கிருக்கு நாங்கள் அங்க இருந்து ஒவ்வொருநாளும் செத்துகொண்டும் பசிவேதனையிலும் தவித்தபோது இந்தியாவிலேகூட மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினார்கள் தீக்குளித்தார்கள் ஆனால் ஒரே இரத்த உறவுகள் இங்கே கொதிப்படையகூடாது என்பதற்காக கேழிக்கை இசைநிகழ்ச்சிகளையும,; விளையாட்டுபோட்டிகளையும் அடுத்தடுத்து நடாத்தி மக்கள் மனங்களை காத்தவரல்லவா?
7. கடந்த தேர்தலில் நீங்கள் அச்சடித்த பிரசுரங்களை பத்திரிகையில் வைத்து விநியோகிக்க மறுத்த உங்கள் ஆதரவு பத்திரிகையான வலம்புரியையே நடுவீதியில் வைத்து உங்கள் சகாக்கள் கொழுத்தினார்களே அப்போதைய உங்கள் பத்திரிகை தர்மத்தையும் பார்த்தனாங்கள்தானே.
8. அரச உடைமைகள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாதாம் ஆனால் திருகோணமலை தொழில்நுட்பக்கல்லூரி வாகனம் முழுவதும் வெற்றிலைச்சின்ன சுவரொட்டியோட திரியுது தெரியுமோ உங்களுக்கு தெரியாது மக்களுக்கு புரியும்.
9. எல்லோரும் ஓடிப்போனபோது நாங்கள்தான் நிண்டம் எண்டு சொல்லுறிங்களே 2002ஆம் ஆண்டிலிருந்து சிலஆண்டுகள் எங்க போனிங்கள் வடமராட்சி அலுவலகத்தை மக்கள் தாக்கி அழித்தபோது ஓடிப்போய் நெல்லியடி பொலீஸ் நிலயத்தில் உங்கடைஆக்கள் தஞ்சம் கோரியதும் பின்னர் கம்போடியாவுக்கு ஓடிப்போனதும் மக்களுக்கு தெரியாதெண்டு நீங்கள் நினைச்சல் நாமென்னசெய்ய.
10. இருமாதங்களுக்குமுன்னர் நீங்கள் கட்சிக்குள் முறுகுப்பட்டு இராஜனாமாச்செய்வதாகவும் மக்கள் இதை விரும்பாமல் ஆர்ப்பாட்டம் தெய்வதாகவும் உங்கள் கூலியாட்களே முதல்நாளே டிப்போவிற்கு மிரட்டியதும் தனியார் வாகனங்களை மறித்து தாக்கியதையும் நாமறிவோம். முன்னர் இந்திய அரசியல் பாணியில் நீங்கள் இராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்து ஊர்வலம் வந்ததையும் நெல்லியடியில் மக்கள் பஸ்ஸிற்கு காந்துநிற்க நீங்கள் கையசைத்து சென்றீர்களே யாராவது ஒருவர் உங்களுக்கு கையசைத்தார்களா எத்தனைபேர் இந்த தொலைவாங்களால ஒன்டும் செய்யயேலா என திட்டியதையும் நீங்கள் அறியமாட்டிங்களே.
11. இறுதியாக ஒன்று எலெக்சன் முடிவு வரும் வழமைபோல பீ.பி.சி உங்களை பேட்டி காணும் தோல்விக்கான காரணம் கேட்பார்கள் நீங்கள் இதில் எதையும் சொல்லிப்போடாதேங்கோ வழமைபோல மக்கள் மீண்டுமொருமுறை தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளார்கள் என்ற உங்கள் பதிலையே சொல்லுங்கோ அப்ப இப்போதைக்கு வாறன் வாறகிழமை ஒருக்கா சந்திப்பம் இன்னும் கனக்க இருக்கு போட்டு வரட்டோ





Wednesday, March 31, 2010

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார்

அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் கொடுக்கப்பட்டுள்ளது.முன்ஜாமீன் மறுப்புபிரபல சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தப்படத்தை எடுத்த அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன், நித்யானந்தா மீது சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.இதன் அடிப்படையில், நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இவ்வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.இந்நிலையில், அமெரிக்காவிலும் நித்யானந்தா சாமியார் மீது `செக்ஸ்' புகார் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் பகுதியை சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் என்ற முன்னாள் சீடர், அம்மாகாண அட்டர்னி ஜெனரல் ஜெர்ரி பிரவுனிடம் இந்த புகாரை அளித்துள்ளார்.சுவாமி நித்ய பிரபா என்று அழைக்கப்பட்டு வந்த இவர், தனது புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-காவலுக்கு நிற்க சொன்னார்அமெரிக்காவில் பல இடங்களில் நித்யானந்தாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. அங்கு வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார். ஒருமுறை, கலிபோர்னியா மாகாணம் நார்வாக் பகுதியில் உள்ள சனாதன் தர்மா கோவிலில் 2 நாட்கள் பயிற்சி முகாமுக்கு நித்யானந்தா வந்திருந்தார்.அப்போது, அவரை தனியறையில் ஒரு பெண் சந்தித்தார். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார்.கஞ்சா விதைமேலும், இந்து மத நம்பிக்கைகளை நித்யானந்தா தவறாக பயன்படுத்தினார். ஆசிரமத்தில் இருப்பவர்களை அவர் அடிக்கவும் செய்வார். எனது வங்கிக்கணக்கில் இருந்து 4 லட்சம் டாலர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான் 2007-ம் ஆண்டு ஜுன் மாதம், ஒரு வார கால தியான பயிற்சிக்காக தங்கி இருந்தேன். அந்த தியான வகுப்பின்போது, நான் மயக்க நிலையில் இருந்தேன். ஏதோ மருந்து காரணமாக, நான் உணர்வை இழந்தது போல இருந்தது.அந்த தியான வகுப்பின்போது, நித்யானந்தா, யாகம் வளர்த்தார். பக்தர்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை வெட்டி, தீயில் போடுமாறு சொன்னார். மேலும், அவர் அந்த தீயில் கஞ்சா விதை போல தோன்றிய ஏதோ ஒன்றை போட்டார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தகவல் அளிக்க அழைப்புஇதற்கிடையே, நித்யானந்தா மீதான புகார்களை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, சி.ஐ.டி.யின் போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியதாவது:-பாதிக்கப்பட்டவர்கள், என்னை சந்தித்து சாட்சியம் அளிக்கலாம். அவர்களை பற்றிய விவரங்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் அளிக்க வருபவர்களின் போக்குவரத்து செலவுகளை சி.ஐ.டி. பிரிவே ஏற்றுக்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.




உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா


உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம்தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவை\யே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.
காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30..அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசிரியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணிலாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.
கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.என்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள் காலை 10.00 சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00 மணி சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதைஅலட்சியப்படுத்துகிறார்.கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!
1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?“ஆம்
எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!”