*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, March 27, 2010

பாராளும‌ன்ற‌த் தேர்த‌லும் த‌மிழ் ம‌க்க‌ளின் குழ‌ப்ப‌நிலையும்...


எம‌து அன்பிற்கும் ம‌திப்பிற்கும் உரிய‌ த‌மிழீழ‌ ம‌க்க‌ளே இன்று சிங்க‌ள‌ தேச‌ம் அறிவித்துள்ள‌ பாராளும‌ன்ற‌த்தேர்த‌லிலே எம‌து தாய்தேச‌ ம‌க்க‌ள் யாரை ஆத‌ரிப்ப‌து யாரை எதிர்ப்ப‌து என‌ தெரியாத‌வ‌ண்ண‌ம் திக்குமுக்க‌டுகின்றார்க‌ள்......இத‌ற்கு கார‌ண‌ம் விடுத‌லைப்புலிக‌ள் ஆயுத‌ரீதியாக‌ தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் ஏற்ப‌ட்ட‌ வெற்றிட‌த்தை ஈடுசெய்ய‌ப் புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ ஆட்சியாள‌ர்களுக்கும் இந்தியாவின் உள‌வுப் பிரிவான‌ றோ விற்கும் விலைபோய் த‌னியே பிரிந்து சித‌றிய‌மையே ஆகும்...இத் தேர்தலில் இருப்பினும் த‌மிழ் ம‌க்க‌ள் அனேக‌மான‌வ‌ர்க‌ளின் தெரிவு த‌மிழ்த்தேசிய‌க்கூட்ட‌மைப்பாக‌ இருந்தாலும் ம‌க்க‌ளால் அவ‌ர்க‌ளை ச‌ரியாக‌ தெரிவு முடியாம‌ல் போகின்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை நேற்ற‌ய‌ தின‌ம் இட‌ம்பெற்ற‌ த‌பால் மூல‌ வாக்க‌ளிப்பில் வாக்க‌ளித்த‌வ‌ர்க‌ளிட‌ம் பெற்ற‌ த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் உறுதியாக‌ கூற‌முடிகின்ற‌து.ஏனெனில் அவ‌ர்க‌ளிட‌ம் பெற்ற‌ க‌ருத்துக்க‌ளின் ப‌டி அம் மக்க‌ளுக்கு த‌மிழ்த்தேசிய‌க்கூட்ட‌மைப்பின் இல‌ச்ச‌னை என்ன‌ என்ப‌து ச‌ரியாக‌ தெரியாம‌ல் உள்ள‌து. கார‌ண‌ம் இன்று த‌மிழ‌ர் தாய‌க‌த்திலிருந்து (யாழ்ப்பாண‌ம்)10 பேரை பாராளும‌ன்ற‌ம் அனுப்புவ‌த‌ற்காக 300 இற்கும் மேற்ப‌ட்ட‌ வேட்பாள‌ர்க‌ள் ம‌க்க‌ளின் தெரிவுக்காக‌ காத்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு இல‌ச்ச‌னையை த‌ங்க‌ள் க‌ட்சியின் சின்ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர். இதுவே ம‌க்க‌ள் ம‌த்தியில் யார் யார் எந்த‌க்க‌ட்சியில் எந்த‌ சின்ன‌த்தில் தேர்த‌லில் போட்டியிடுகின்றார் என்ற‌ குழ‌ப்ப‌நிலையை தோற்றுவித்துள்ள‌து......நேற்ற‌ய‌ தின‌ம் இட‌ம்பெற்ற‌ த‌பால் மூல‌ வாக்க‌ளிப்பில் வாக்க‌ளித்த‌ ஆசிரிய‌ர் ஒருவ‌ரிட‌ம் பெற்ற‌ த‌க‌வ‌லின்ப‌டி அவ‌ர் த‌மிழ்த்தேசிய‌க்கூட்ட‌மைப்பிற்கு வாக்க‌ளித்தார் என‌க்கூறினார் ,அவ‌ரிட‌ம் வீட்டுச்சின்ன‌த்துக்குத்தானே போட்டீர்க‌ள் என‌ நாம் கேட்ட‌போது அவ‌ர் இல்லை நான் உத‌ய‌சூரிய‌னுக்கு போட்டேன் என்றார்.நீங்க‌ள் த‌மிழ்த்தேசிய‌க்கூட்ட‌மைப்பிற்குத்தானே வாக்க‌ளித்தீர்க‌ள் என‌க் கூறினீர்க‌ள் ஏன் உத‌ய‌சூரிய‌னுக்கு போட்டேன் எனக்கூறுகின்றீர்க‌ள் என‌ வின‌விய‌ போது அவர் அளித்த‌ ப‌தில் ஏன் த‌மிழ்த்தேசிய‌க்கூட்ட‌மைப்பு உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில்தானே தேர்த‌லில் போட்டியிடுகின்றன‌ர் என‌ அமைந்திருந்த‌து..அத‌ன்பின்ன‌ர் நாம் அவருக்கு ச‌ரியான‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌ போது அவர் மிக‌வும் வ‌ருத்தப்ப‌ட்ட‌தை அறிய‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து.....என‌வே தேர்த‌லில் போட்டியிடுகின்ற வேட்பாள‌ர்க‌ள் த‌ங்க‌ள் சின்ன‌ம் என்ன‌ என்ப‌தையும் எந்தக்க‌ட்சியில் போட்டியிடுகின்றோம் என்ப‌த‌னையும் மக்க‌ளுக்குத் தெளிவாக‌த் தெரிவியுங்க‌ள்..





த‌மிழீழ‌த்தின‌தும் த‌மிழ்ம‌க்க‌ளின‌தும் நிலை..நித‌ர்ச‌ன‌ம்.

த‌மிழீழ‌த்தின‌தும் த‌மிழ்ம‌க்க‌ளின‌தும் நிலை.....உண‌ர்ந்திடுமா த‌மிழின‌ம்...திருந்திடுமா த‌மிழின‌ம்...?






மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!



மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.
போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இறுதி நாட்களில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியிருந்தாலும், அங்கிருந்து தப்பி வெளியேறியவர்கள் வெளியிட்டுவரும் தகவல்களின்படி, பலிகொள்ளப்பட்ட தமிழர்களின் தொகை ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்களில் ஒரு உறுப்பினர்கூடத் தப்பியிருக்கவில்லை என்பதால், இது குறித்த உண்மை விபரங்கள் வெளிவரக் கால தாமதம் ஆகலாம்.
இருப்பினும், யுத்தம் முடியும்வரை மவுனத்தைக் கடைப்பிடித்த மேற்குலகுக்கு, யுத்தத்திற்குப் பின்னரான சிங்கள அரசின் அணுகுமுறை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. யுத்த முனையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வும், எதிர்கால நம்பிக்கையுடனான புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்ற மேற்குலகின் வற்புறுத்தல்கள் சிங்கள அரசால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிங்கள அரசு மீதான மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்தில், இந்த அழுத்தங்களை இந்திய – சீன – ரஷ்ய ஆதரவுகளுடன் முறியடித்த சிறிலங்கா அரசு தற்போது, ஐ.நா. ஊடான யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.
ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்குப் பின்பலமாக நின்ற இந்தியா, மேற்குலகின் மனிதாபிமான அணுகு முறைகளுக்கும் தடை போட்டுத் தனது சிங்களக் கூட்டாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் ஈழத் தமிழர்களது பகை நாடாகக் கருத வேண்டிய நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனால், ஈழத் தமிழர்கள் தமக்கான நீதிக்காக மேற்குலகின் பக்கம் சாயவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவின் தென் திசைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயம் கொண்டது என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளது. இதனால்த்தான், தனது இறுதித் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் களத்தில் இறக்கியுள்ளது. ஈழத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளையும், சிங்கள தேசத்தின் மேலாதிக்க சிந்தனையும் இந்தியாவின் மிரட்டல் அரசியலுக்கு இலங்கைத் தீவு களமாகியது. ஈழத் தமிழர்கள் ஊடான இந்தியாவின் இலங்கைப் பிரவேசம் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பால் தடம் மாறியது. இந்தியாவின் எதிர்பார்ப்பை விடுதலைப் புலிகள் நிர்மூலம் ஆக்கியதால், அதன் மிரட்டல் அரசியல் சரணாகதி அரசியலாக மாற்றம் பெற்றது. அதனை சிங்கள தேசம் அழகாகக் கையாண்டு, முள்ளிவாய்க்கால் வரை இந்தியாவின் துணையோடு ஈழத் தமிழர்கள் மீது அத்தனை கொடூரங்களையும் நடாத்தி முடித்தது. தற்போது, சிங்கள அரசு இந்தியா மீது மிரட்டல் அரசியலை ஆரம்பித்துள்ளது. அது இந்தியாவை தற்போது ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியா விரித்த சதி வலையில் இந்தியாவையே சிங்கள தேசம் சிக்க வைத்துள்ளது. தற்போது சீனாவை வைத்து இந்தியாவை மிரட்டும் அரசியலை சிங்கள தேசம் ஆரம்பித்துள்ளது.
இந்தியாவை மீறி தெற்காசியாவில் எதுவுமே சாத்தியமில்லை என்ற காலம் காலாவதியாகி, இலங்கைத் தீவிற்கான தமிழீழ நுழைவாயிலையும் இந்தியா இழந்து தடுமாறுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடத்தைப் பிடித்தால், அவர்கள் மூலமான காய் நகர்த்தல்கள் ஊடாகத் தன்னை இலங்கைத் தீவில் நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியா கணக்குப் போடுகின்றது. இதற்குச் சமாந்தரமாக கிழக்கின் முதல்வராக மகிந்தாவால் முடி சூட்டப்பட்ட பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் வலை விரிக்கப்படுகின்றது. ஆனாலும், கிழக்கு தமிழர்களது கரங்களை விட்டு நழுவிச் செல்லும் நிலையை அடைந்து விட்டதால், அது எதிர்பார்த்தபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் கூட வடக்குடன் இந்தியக் கனவு முடிவுக்கு வரப் போகின்றது.
தற்போது, சிங்கள அரசு மேற்கொள்ளும் இராணுவக் குடியிருப்புக்கள், சிங்கள வர்த்தகர்களது யாழ். முற்றுகை, வர்த்தக வளாகங்கள் என்ற போர்வையிலான சிங்களத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்கள் என்று வடக்கு சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் சென்று கொண்டுள்ளது. இது வட பகுதித் தமிழர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பதுடன், அவர்களது மொத்த கோபமும் இந்தியா மீது திரும்பும் நிலையில், தற்போது தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியும் சிங்கள ஆக்கிரமிப்பு வர்த்தகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தமிழீழத்தின் அகிம்சைப் போராட்டத்தின் வடிவமாகப் பூசிக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னத்தின் சிதைப்பு தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது.
சிங்கள தேசத்தினதும் அதன் காடையர் கூட்டத்தினாலும் ஈழத் தமிழர்களின் போராட்டகால நினைவு சின்னங்களும், கலாச்சார அடையாளங்களும் திட்டமிட்டுத் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு வருவது புலம்பெயர் தேசத்துத் தமிழர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. சிங்கள தேசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் சோகங்களால் சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் நீதி கோரிப் போராட வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளனர்.
சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழக்கூடிய அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது. இது சாத்தியமல்ல என்று தத்துவம் பேசுபவர்கள் இஸ்ரயேலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதிலிருந்து எதிர்கால நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் போராட மறுத்தாலோ, தயங்கினாலோ சிங்கள ஆக்கிரமிப்புக்குள் நாம் எமது தேசத்தை இழந்துவிடுவது மட்டுமல்ல, எமக்கான அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
சிங்கள தேசத்திற்கு எதிராகவோ, ஒற்றைச் சிங்களவனுக்கு எதிராகவோ நாம் கருத்துக் கூறாவிட்டாலும் கூட, நாம் தமிழர்களாக வாழ முற்பட்டால் அவர்களது தாக்குதல்களுக்கு இரையாகுவோம் என்பதே தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபி இடிப்பு எமக்கு உணர்த்தும் செய்தியாகும். எமக்கான மீட்பர்களை வெளியே தேடுவதை நிறுத்தி, எமக்குள்ளேயே வாழும் மீட்பர்கள் வழியில் பயணிப்பது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய சார்பு நிலைப்பாடும் புலம்பெயர் தமிழீழ மக்களின் சுதந்திரத் தமிழீழ நிலைப்பாடும் ஒரே புள்ளியில் சந்திப்பதற்கான சாத்தியம் அற்றே காணப்படுகின்றது. இந்தியச் சிறைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்து, தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தமிழர் சக்திகளுடன் இணைந்து பயணிப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இப்போதுள்ள ஒரே வழி. இதை உணர்ந்து கொள்ளத் தவறினால், தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முகவரியற்றுப் போய்விடும்.





அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!!


ஈழத்தமிழர்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டமானது, சமகால அரசியல் இராணுவ புறநிலைகளை கருத்திற்கொண்டு, மீண்டும் அரசியல் வழியிலான விடுதலைப் போராட்டமாக வீரியமடைகின்ற காலகட்டத்தில் இருக்கின்றது. அரசியல் ரீதியான விடுதலை போராட்டமாக முன்னெடுத்து செல்லவேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமைகளிடம் உண்டு.

இந்தவேளையில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பில் சில விடயங்களை ஆராய்வது பொருத்தமானது என கருதி நிகழ்கால அரசியல் திட்டங்களில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகளை ஆராய்கிறது இப்பத்தி.
அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதற்கான கைங்கரியத்தில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.
வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார்.
உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.
இதேபோன்று வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டதான செய்தி ஒரு ஊடகவியலாளரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
இவற்றின் தொடர்ச்சியாக சிலநாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.
இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறான அழித்தொழிப்புக்கள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரசால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.
போர்க்காலத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இடம்பெற்றபோதும் அதனை அரசியல் ரீதியாக வெளியுலகிற்கு கொண்டுவந்து நீதி கேட்ககூடிய சூழல் இருக்கவில்லை. அவ்வாறு நீதி கேட்போரின் உயிருக்கு உத்தரவாதமான சூழல் இருந்திருக்கவில்லை. இப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றபோதும் தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை சர்வதேச சமூகத்திற்கும் கொண்டுசெல்லக்கூடிய சர்வதேச புறநிலைகள் உருவாகியுள்ளமை முக்கியமானது.
இப்போது இலங்கைத்தீவில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறிக்கொள்ளும் தலைமைகள் சில விடயங்களில் தமது உறுதியான செயற்பாட்டை காட்டிக்கொள்வதன் மூலமே இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவருவதுடன் இவற்றை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
மூன்று சகாப்தங்களாக தொடர்ந்த ஆயுதபோராட்டம் தற்போது அரசியல் போராட்டமாக மாறியுள்ளநிலையில் ஆயுதபோராட்ட காலத்தில் வித்தாகிப்போன விடுதலை வீரர்களின் அடையாளங்களும் சின்னங்களும் தமிழர்களின் அடையாளங்களே என்பதையும் தமிழர் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.
தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஆனந்தசங்கரி அவர்கள் மீது பல்வேறுவிதமான விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இவ்விடயத்தில் முதலாவதாக கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டதை கவனிக்கவேண்டும்.
இங்கு அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக்கொண்டிருப்பதால் மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. ஆனால் செயலில் காட்டிக்கொண்டிருப்பதற்கு இது இராணுவ ரீதியான விடுதலைப் போராட்டத்திற்கான காலமல்ல. இது அரசியல் ரீதியான போருக்கான காலம். இங்கு அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிடாமல் தவிர்த்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டமுடியாது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமையாக செயற்படும் இரா. சம்பந்தன் அவர்கள் தமது செயற்பாடுகள் பற்றிய சுயவிமர்சனங்களை செய்யவேண்டும். தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரின் சாவு நிகழ்வின்போதும் தமிழர்களை எதிர்காலத்தில் வழிநடத்தப்போகும் தலைவராக இரா. சம்பந்தன் அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதுவும் மிகவும் நெருடலான விடயமாகவே இப்போதும் இருக்கின்றது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது என்று கூறியதோடு தன்னை மட்டுப்படுத்திக்கொண்டதையும் மீட்டிப்பார்க்கவேண்டும்.
அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களது போராட்டம் பற்றியும் அதன் தொடர்ச்சி எவ்வாறு முன்கொண்டு செல்லப்படவேண்டும் என்பதிலான ஒரு முதிர்ச்சி நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழீழத்திற்கான விடுதலை போராட்டமானது தனியே தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. ஏறக்குறைய இருபத்தைந்துக்கு மேற்பட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டமாகும். 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழீழ தாயக மக்களால் தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இவ்விடுதலை போராட்டம் வீரியம் பெற்றிருந்தது.
எனவே அழிக்கப்படுபவை தனியே விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்லங்களோ அல்லது தனியே விடுதலைப்புலிகளின் அடையாளங்களோ இல்லை. அவை அனைத்தும் தமிழர்களின் பொது அடையாளங்கள் ஆகும். அவை தேசிய அடையாளங்களாக பாதுகாக்கப்படவேண்டும்.
இப்போது அரசியல் ரீதியில் தமிழர்களது விடுதலையை வென்றெடுக்கப்போகும் தலைமைகளும் விடுதலைக்கான போரை அடக்கி வாசித்தும் அது ஏதோ மறைத்து கதைக்கப்படவேண்டிய விடயமாகவும் மாற்றிவிடுவதும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அதனைவிடுத்து தமிழர்களது இன்றைய அரசியல் ரீதியான போராட்டத்தை தலைமைதாங்கி செல்லவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் சில உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்போதுதான் செயலில் வீரர்களான ஒரு தலைமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும்





"உங்களின் அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளை விலை பேசுவது" நியாயமா........?


தமிழ்த் தேசியத்துக்கான அரசியல் என்பதை விடுத்து சுயநல அரசியல்போக்குடன் சிந்திக்கத் தலைப்பட்டதன் விளைவு இந்தத் தேர்தலின் அறுவடையாகக் கிடைக்கப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியில் உள்ள 31 ஆசனங்களுக்காக நடக்கப் போகும் தேர்தலின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது. தமிழரின் பலத்தைச் சிதைக்க நினைக்கும் சக்திகளுக்குத் துணைபோகும் வகையிலான தேர்தலாகவே இது அமைந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றுபட்ட சக்தியாக தமிழரின் பலத்தை வெளிப்படுத்துவர் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்கனவே மண் அள்ளிப் போடப்பட்டு விட்டது. இதற்குக் காரணம் யார் என்று இப்போது பிரேத பரிசோதனை செய்து கொண்டிருப்பதில் பலன் இல்லை. ஏனென்றால் யாருமே தமது தவறுகளை ஒப்புக்கொள்ளும் நிலையிலோ அல்லது திருத்திக் கொள்ளும் நிலையிலோ இல்லை.
அது ஒருபுறத்தில் இருக்க, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் தமிழ்த் தேசிய சக்திகள் தமது அரசியல் இலாபத்துக்காக எதையும் பேசலாம்-எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டன என்பதை அவதானிக்க முடிகிறது.
அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் அண்மைக்காலமாக இணையத்தளங்கள் ஏதாவதொரு சார்பு நிலைக்குள் சிக்கிக் கொண்டு பிரசாரம் என்ற ரீதியில் சேற்றை வாரும் காரியங்களில் இறங்கியுள்ளன.
தாம் சார்ந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பது என்பது ஒரு புறத்திலும்- தாம் சாராத அமைப்பைக் கேவலப்படுத்துவது என்பது மற்றொரு புறத்திலுமாக இந்தப் பிரசார சுழலுக்கு ஊடகங்கள் பலவும் சிக்கியிருக்கின்றன.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழரின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள், புனர்வாழ்வு என்று எத்தனையோ பிரசார வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவை எவற்றிலும் கவனமோ கருத்தோ கொள்ளாமல்- எதிர்த்தரப்பைக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த மாவீரர்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். யாரையும் பெயர் குறித்து விமர்சிப்பது எமது நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய முயற்சிகளை நிறுத்த வைப்பதற்காக சில சம்பவங்களை வெளிப்படுத்துவது அவசியமானது.
ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை கேவலப்படுத்துவதற்காகவும் தனது வித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் புலிகள் இயக்கம் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது என்று கூறியிருக்கிறார். ஒரு குழு அவரது கோரிக்கையை நிராகரிக்க இன்னொரு குழுவின் மூலம் தான் சாதித்துக் கொண்டதாக பிரசாரம் செய்து- தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்கிறார். அவரே வன்னியில் தான் மூன்று தசாப்தங்களாகப் போருக்குள் வாழ்ந்ததை சாதனை என்று கூறிக் கொள்வதையும் காணமுடிகிறது.. 30 வருடங்கள் தாயகத்தில் வழ்ந்தது சாதனை என்றால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வன்னியில் வாழ்ந்த 3 இலட்சம் பேரும் அதற்குத் தகுதியானவர்கள் தான்.
தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு ஆளும்கட்சியோடு சேர்ந்து போட்டியிடும் கனகரட்ணம் எம்.பி கூட அப்படித்தான் இருந்தவர். அப்படிப் பார்த்தால் பல மாதங்கள் சிறையில் இருந்த கனகரட்ணம் இவரை விடவும் ஒரு படி மேல் அல்லவா இருக்க வேண்டும்.
இன்னொரு வேட்பாளர் மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜன் குடும்பத்தினருக்காக யாழ்ப்பாண மக்கள் வழங்கிய உதவிகளைக் கையளித்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்த முயன்றுள்ளார். அரசியல் நலனுக்காக நிமலராஜனின் மனைவியும், அவரது குழந்தைகளும், தாயாரும் தானா அந்த வேட்பாளருக்குக் கிடைத்தனர்? இதுவா அரசியல் பிரசாரம்?
இப்படியான புகைப்படங்களை வெளியிட்டுப் பிரசாரம் செய்வதென்றால் டக்ளஸ் தேவானந்தா போன்றாருக்கு எத்தனை ஆயிரம் புகைப்படங்கள் கிடைக்கும்? அவர்களே அதைச் செய்யாத போது தமிழ்த் தேசியத்தின் பெயரில் அரசியல் நடத்த முனையும் இவர்கள் இதைச் செய்ய நினைப்பது தவறான அரசியல் முன்னுதாரணமாகி விடப் போகிறது. சில முக்கிய தலைவர்களின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் புலிகளைக் கேவலப்படுத்தவும்- அவர்களின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சிக்கவும் பலரும் துணிந்து விட்டனர். புலிகள் இயக்கம் தோல்வி காண்பதற்கு முன்னரோ அல்லது அவர்கள் தோல்வி கண்ட போதோ வாயை மூடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது புலிகள் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் செய்தது- செய்யப் போவதெல்லாம் சரியென்று; பிரசாரம் செய்கின்றனர். புலிகள் செய்ததெல்லாம் சரி என்பது எம் வாதமல்ல. ஆனால் புலிகளின் தவறுகளை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தத் துணிந்து விட்டதே இவர்களின் தவறு என்பதைத் தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி இப்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் கைகளில் வந்திருப்பது உண்மை. ஆனால் இதற்கு முன்னர் தமிழரின் பாதுகாப்பு- மற்றும் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது புலிகளே. அவர்களின் ஆயுதங்கள் தான் தமிழினத்தை இதுவரை அழியாமல் பாதுகாத்தது என்பது உண்மை.
தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் இப்போதுள்ள அளவாயினும் எஞ்சியிருப்பதற்கு அவர்களின் ஆயுதபலமே காரணமாக இருந்தது. இதையெல்லாம் மறந்து விட்டு புலிகளின் அழிவின் மீதும் சமாதிகளின் மீதும் தமது அரசியல் கதிரைகளுக்கு அடித்தளம் போட முனைவது சுத்த அயோக்கியத்தனம்.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தமிழ்மக்களின் முன்பாக தமது கொள்கை நிலைப்பாட்டை விளக்கி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு முனைய வேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியல் வழியாகவும் இருக்கும். சேற்றை வாரி இறைப்பதன் மூலமோ அல்லது வரலாற்றுப் புரட்டுகளின் மூலமோ- குறுக்குவழிகளின் மூலமோ நாடாளுமன்றக் கதிரைகளை அடைய முனையாதீர்கள். தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்த முடிவெடுத்து விட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
*நாம் மோதப் போவது - மோத வேண்டியது எமக்குள் அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல. கர்ணன் கவச குண்டலங்களை இழந்து நின்றது போன்ற நிலையில் எமது பலமான புலிகளின் ஆயுதபலத்தை இழந்து நிற்கிறேம். இந்தத் தருணத்தில் எமது கண்களுக்கு முன்னே தெரிய வேண்டியது பொது எதிரியே.
இது போர்க்களம் அல்ல - அரசியல் களம். எமக்கு நாமே சேற்றை வாரும் போது அடையப் போவது தோல்வியே. அந்தத் தோல்வி எதிரியைத் தலைநிமிரச் செய்யும். எம்மைத் தலைகுனிய வைத்து விடும்.





யுத்தம் முடியவில்லை; அது புதுவடிவம் பெற்றுள்ளது!


நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.
பச்சைக் கண்களின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் சிங்கமும் – புலியும் சண்டையிட்டன என்பதுதான் தெரியும். ஆனால் யார் யாரோ நலன்களுக்காகவெல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் இரத்த வாய்க்கால் ஆனது. பச்சைக் கண்களால் பார்க்கும் அரசியற் கண்ணற்றோரின் பார்வையில் யுத்தம் முடிவடைந்து விட்டது எனும் கூற்றே ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் அதன் முழுப் பரிமாணத்துடனான யுத்தம் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.
இந்து சமுத்திரத்தில் துலாவெனக் காட்சியளிக்கும் இலங்கைத்தீவில் இதுவரை காலமும் நுனித் துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித் துலாவுக்கு மாறியுள்ள இடமாற்றம்தான் யுத்தத்தில் ஏற்பட்டுள்ளது. நிகழ்ந்து முடிந்தது சமர். தொடர்கிறது யுத்தம். அந்த யுத்தம் தனது ஐந்தொகைக் கணக்கை நிறைவு செய்ய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும். அந்த ஐந்தொகை தமிழருக்கு சாதகமாய் முடியுமென வரலாற்றுப் பதிவேடு கட்டியம் கூறுகிறது.
துறைமுகங்கள், விமானநிலையங்கள், கேந்திரக் கதவுகள் என்பனவற்றை பொருளாதார ஓடைக்குள்ளால் இலங்கைத்தீவில் திறக்க முனைவதன் மூலம் ஒரு புதிய வல்லரசின் எழுச்சி இந்து சமுத்திரத்தில் உதயமாகியுள்ளது. அதனைத் தடுக்க முயலும் வல்லரசுகளுக்கும் எழுச்சிபெறும் வல்லரசுக்கும் இடையிலான போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிங்கம் – புலி வடிவில் அரங்கேறி தமிழரின் இரத்தாறு ஓடியது.
புலிக் கொடியை வீழ்த்துவதன் மூலம் மேற்படி ஆதிக்க அரசுகள் தமது போராட்டத்தை சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் செய்யலாம் என ஒரு கணக்குப் போட்டன. அப்படி வல்லரசுகளிடையேயான பல வகைத் திரைமறைவுப் போராட்டங்களின் பின் பல சமரசங்கள் அந்த வல்லரசுகளிடையே இடம் பெற்றிருப்பது உண்மைதான். இப்படி ஒரு எண்ணத்தின் பின்னணியில் அரசமைத்துள்ள சிங்கக் கொடியின் நிழலில் சமரசம் காணலாம் என சிங்கக் கொடிக்கு பல வல்லரசுகள் காற்றூதின. புலிக்கொடி சாய்ந்தது சிங்கக் கொடி பறந்தது. ஆனால் சிங்கக் கொடியின் அதிகாரத் துலாக்கோல் இரத்தச் சகதியில் நிலைதடம் மாறி அங்கிங்காய் அலையத் தொடங்கியது. இதனால் முள்ளிவாய்கால் இரத்தாறு யுத்தத்தின் முடிவாய் அன்றி வல்லரசுகளின் நிலையெடுப்பாய் உருமாறியது. இது வரலாற்றின் தவிர்க்க முடியாத விதியென முரண்பாடு பற்றிய வரலாற்றியல் கூறுகிறது.
சிங்கக் கொடி வல்லரசுகளிடையே சமரசத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு பதிலாக அதன் இயல்பான முரண்பாட்டு வளர்ச்சியின் நிமித்தம் சிங்கக் கொடியின் செங்கோல் ஒரு தொகுதி வல்லரசுகளுக்கு எதிரான மறுதொகுதி வல்லரசுகளின் பக்கம் சாயத்தொடங்கியது. தமிழ் மக்களின் மண்டை ஓடுகளை அதிகாரத்திற்கான வாக்குகளாக எண்ணும் படலம் ஆரம்பமானபோது மேற்படி வல்லரசுகளின் நிலையெடுப்புக்கள் திரைக்கு பின்னால் நிகழ்ந்தன. ஆனால் அரசியல் வெளிச்சத்தில் திரைக்குப் பின்னால் நின்ற உருவங்கள் அணிதிரள்வது தெரிந்தது.
இனவாதம் தாரை தம்பட்டம் முழங்க மண்டை ஓட்டுச் சிம்மாசனத்தின் மீது ராஜபக்சவுக்கு மீள் முடி தரித்தது. முடிதரிக்கும் சிங்கள மன்னன் முதலில் கடல் கடந்த உலாப் புறப்படுவது இந்தியாவுக்குத்தான். ஆனால் இம்முறை அதற்கு மாறாக மன்னன் ரஷ்சியா சென்று முடிக்குரிய பட்டம் சூடிவந்துள்ளார். இது இந்தியாவில் இருந்து தாம் விலக்கிச் செல்வதாகவும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்த ஓர் அரசியல் ஓலையாகவே உள்ளது.
மன்னனின் கொடி சீனா பக்கம் சாய்கிறதே ஆயினும் முதலாவது உலாவை சீனாவில் ஆரம்பிப்பதன் மூலம் இந்திய அமெரிக்க அரசுகளை ஆத்திரப்படுத்தக் கூடாது என சிங்கள இராஜ தந்திரம் எண்ணியுள்ளது. ஆதலால் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு புறம்பான தனது செயற்பாட்டை கோடி காட்டும் வகையில் தன் திசை மாறும் பயணத்தை ஒரு வகை இடைக் கோட்டுக்குள்ளால் போகக் கூடிய இடைவெளி ரஷ்சியாவுக்கான பயணமாகவே அமைய முடிந்தது. ஏனெனில் ரஷ்சியா இந்தியாவின் பாரம்பரிய நண்பன். அதேவேளை அது திசைமாறலை வெளிப்படுத்தக் கூடிய புள்ளியாகவும் ரஷ்சியாவின் இன்றைய சர்வதேச ஸ்தானம் உள்ளது. இவற்றைக் கவனித்தே உலாவரும் முதல் நாடாய் ரஷ்சியா தேர்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் அரசியல் இராஜதந்திரப் பரிபாசையானது அரசியல் வடுவாய் இந்திய அமெரிக்க அரசுகளின் அடிவயிற்றில் சுடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி வேட்பாளராய் நின்ற சரத் பொன்சேகா இராணுவச் சட்டத்தின் கீழ் நடுநிசியில் கைதுசெய்யப்பட்டதும் மறுநாள் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் பொன்சேகாவின் இல்லம் சென்று அவரின் மனைவிக்கு ஆறுதல் கூறினர் என்பது ஒரு புறமும் சீனத் தூதரகம் தன் இருக்கையில் இருந்தபடி றகனின் கண்களை விழிப்பாக்கிக் கொண்து என்பது மறுபுறமும் நடந்தேறிய மேடை நாடகங்கள் ஆயின. இப்போது திரைக்குப் பின்னால் அன்றி மேடையில் பாத்திரங்கள் உலாவின.
முள்ளிவாய்க்காலில் பறக்கத் தொங்கிய சிங்கக் கொடியின் பட்டொளிக்காக வல்லரசுகள் நிலையெடுக்கத் தொடங்கின. ஆதலால் முள்ளிவாய்க்கால் இரத்தாற்றின் வீச்சு யுத்தத்தின் முடிவாக அன்றி அது ஒரு சமரின் முடிவாய் நின்று வெடிக்கப் போகும் ஒரு பெரும் யுத்ததிற்கான வல்லரசுகளின் நிலையெடுப்பாய் மாறியுள்ளது. களம் முள்ளிவாய்க்காலில் இருந்து இப்போது கொழும்புக்கு மாறியுள்ளது. களமாற்றம் நிகழ்ந்து யுத்தம் மேலும் அளவுமாற்றத்திற்கு போய்விட்டது. இந்நிலையில் நிலையெத்துள்ள வல்லரசுகள் இப்போது முதற்கட்டமாய் குத்துச்சண்டை வீரர்களின் பாணியில் இலக்குகளை அவதானிக்ககின்றன.
அடுத்து அவை அடியெடுப்புகளை மேற்கொள்ளும். அடியெடுப்புக்கள் முன்நோக்கியும் பின்நோக்கியும் பக்கவாட்டுக்கும் இடம்பெற நரம்புகள் புடைப்பேறி செவ்வண்ணம் ஆகும். நரம்புகள் செவ்வண்ணமாய் புடைப்பெடுக்க சில மாதங்கள் தேவைப்படும். செவ்வண்ண நரம்புகள் யுத்தத்திற்கான வீதிப்படம் ஒன்றை வரைந்தெடுக்கும். இவ்வீதிவழியே அடியெடுப்புக்கள் புதுவேகம் பெற்று நெஞ்சோடு நெஞ்சாய் மல்யுத்த வீரர்கள் மோதும் போது கல்லும் கல்லும் உரசி தீப்பற்ற சில ஆண்டுகளாகும்.
தீக்குச்சி உரசலுக்காய் காய்ந்து வரண்ட விறகுக் குவியலென இனவாத வரலாற்றில் தீவு மொறுமொறுத்து இருக்கின்றது. பிராந்திய ரீதியான அனைத்து முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறை வடிவில் முறுக்கேறியுள்ளன. கருத்தரித்த முரண்பாடுகள் வலியெடுக்கத் தொடங்கிவிட்டன. வரலாறு சமுத்திரம் கொள்ளாத் துரோகங்களை காட்சிப்படுத்தத் தொடங்கிவிட்டது. அரசியல் இப்போது ஒழிவு மறைவற்ற நிர்வாண கோலத்தில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. அது தான் அணிந்திருந்த பண்பாடு, நாகரீகம், ஒழுக்கம், வெட்கம், கௌரவம், தர்மம், நீதி, சட்ட ஒழுங்கு என்ற ஆடை ஆபரணங்கள் என்ற அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு லங்காபுரி அரசியல் நிர்வாண கோலத்தில் நத்தனமாடத் தொடங்கியுள்ளது.
கையில் தீக்குச்சியுடன் அரசியல் நிர்வாண கோலத்தில் நர்த்தனமாடும் லங்கா ராணி தான் வளர்த்தெடுத்த வெடிமருந்துக்கிடங்கின்மீது தீக்குச்சியை வீசுவதற்கான நிலையெடுப்பு உச்சம் பெற சில ஆண்டுகள் ஆகும் என வரலாறு பறையறைகிறது. அப்போது நிகழவல்ல ஊழிப் பெருநடனத்தில் ஈழத்தழிழர்கள் விளக்கேந்தி நிற்பர் என்று இன்னொரு முழக்கத்தையும் பறை முழங்கத் தவறவில்லை.
1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக் கலகம் பற்றிய தனது நூலை நிறைவு செய்கையில் சிங்களவரான அதன் ஆசிரியர் தாஸி வித்தாஸி ஒரு கேள்வியை எழுப்புவதோடு அந் நூலை முடிக்கிறார். அதாவது தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனத்தவரும் ‘பிரியும் நிலைக்கு வந்துவிட்டோமா?’ என்பதே அந்தக் கேள்வியாகும். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ‘ஆம்’ பிரியப்போகின்றோம் என்ற ஆணையை தெளிவாக வழங்கியுள்ளனர். தமிழ் மக்களும் நாம் பிரிவதுதான் விதியென்று தமது ஆணையையும் அவர்கள் வழங்கியுள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இனப்பகைமையை அகற்றுவதற்கு பதிலாக ஜனாதிபதி இனப்பகைமையை கவசமாக அணிந்து தேர்தல் அரங்கில் காட்சியளித்தார். பகைமையை அகற்றுவதற்கு பதிலாக பகையை அகற்றவல்ல பாதையை அகற்றினார். இனவாத சேற்றை அகற்றுவதற்கு பதிலாக சேறு வெளியேறவல்ல பாதையை அகற்றினார். ஆதலால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கும் இந்த உலகிற்கும் ஒரு செய்தியை தமது வாக்குச் சீட்டு வாயிலாய்க் கூறினார். அதாவது ‘நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ உங்களுடன் இணைய நாங்கள் மாட்டோம் என்று தமிழரைப் பிரித்து வைப்பதாகவே அவர்களின் ஆணையிருந்தது. தமிழ் மக்களின் ஆணையும் அப்படித்தான்.
பி.ஏச்.பாமர் எனும் பிரித்தானிய பேராசிரியர் ஒருவர் 1961 ஆம் ஆண்டு எழுதிய நூலிற்கு இலங்கை: இரண்டுபட்ட நாடு என்ற தலைப்பையே கொடுத்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையாகவே இலங்கை இரண்டுபட்டுத்தான் உள்ளது. Breake up of Sri Lanka என்ற தலைப்பிலான பேராசியர் ஏ.ஜே.வில்சனின் நூலும் (1988) இலங்கை இரண்டுபட்டுவிட்டது என்ற செய்தியையே தெளிவாகச் சொல்லியுள்ளது. அந்த வகையில் தேர்தல் முடிவும் இலங்கை இரண்டுபட்டுள்ளது என்ற ஆணையை தெளிவாகக் காட்டுவதுடன் அதன் காலப்பிரசவத்திற்காக வரலாற்றின் அடி மடி நோகத் தொடங்கிவிட்டது என்பதையே இன்றைய தென் இலங்கை நிலைமைகள் கோடி காட்டத் தொடங்கியுள்ளன.
நுனித்துலாவில் எரிந்த பந்தம் முள்ளிவாய்க்காலில் எழுந்த விசையால் அடித்துலாவிற்கு மாறியுள்ளது. தீப்பற்றியுள்ள அடித்துலா சமுத்திரம் தழுவிய வல்லரச போட்டியின் விளைவாய் அது நடு நெம்புகோலுடன் இரண்டாய் உடையும் நாள் ஒன்று வரும். அடித்துலா நுனித் துலா என வல்லரசுகள் அணிவகுப்பர். யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இதுவே வரலாற்று அகராதி சொல்லி வைக்கும் அரசியல் அர்த்தமாகும்.
மாண்டுபோன எம்மக்களின் பெயரால் மூளையால் சிந்தித்து இதயத்தால் முடிவெடுப்போம். வரலாறு எம்பக்கம் நாளை விடியும். விடியுமளவும் கையில் விளக்கெடுப்போம். சூரியன் உதிப்பதை யார் தடுப்பர்?
வெடிப்பை மேலெழுந்தவாரியாய்ப் பார்ப்போர் அதைப் பூசிமெழுகிவிடலாமென நினைக்கின்றனர். ஆனால் அத்திவாரமே தளர்ந்துள்ளதென்பதால் இனியும் பூசிமெழுக எடுக்கும் எந்த முயற்சியும் பயனளிக்க போவதில்லை. தீவு இரு பாளங்களாய் பிளவுபட்டுள்ளது என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உச்சியில் அடித்தாற்போல் பறையறைந்திருக்கின்றன. ‘தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே இட்டு நிரப்பிட முடியாத அதாள பாதள பிளவு இருக்கின்றது’ என்று இலங்கைக்கான இந்தியாவின் உயர்தானிகராய் இருந்தவரான திரு.ஜே.என்.டிக்சிற் ’Assignment Colombo’ என்ற நூலில் எழுதியுள்ளவையும் இங்கு நினைவில் நிறுத்தத்தக்கவை.
இலங்கைத்தீவில் மையங்கொண்டுள்ள உள்நாட்டு வெளிநாட்டு முரண்பாடுகள் அவைகளுக்கிடையே ஏற்படக்கூடிய அமுக்க விசைகளும் இலங்கைத் துலாவை அதன் நடுநெம்புகோலுடன் முறிக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இதைத்தான் இலங்கையின் அரசியல் கருத்தரித்திருக்கிறது. தமிழர்களிடம் சிந்த இனியும் இரத்தம் இல்லை. ஆனால் மேற்படி கருக்கொண்டுள்ள முரண்பாடுகளை சரிவரக் கையாண்டால் தமிழரை ஒரு துளி இரத்தமும் சிந்தவிடாது வரலாறு அவர்களுக்கு விடிவெள்ளியைக் காட்சியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.





நித்துவும் சித்துவும் -தங்கபாண்டியன்


நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.சுவாமி நித்யானந்தா அதுபோல் மயக்கம் கொடுத்தவர்களில் ஒருவர். எழுத்தாளர்கள், நடிகர்கள், மெத்தப்படித்தவர்கள், அதிகாரிகள் என எல்லா சூப்பர்மேன்களும் சுவாமி நித்துவின் கால்களில் விழுந்துள்ளனர். அது மட்டுமா? கட்டுக்கட்டாக பணமும் செக்-புக்கில் கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன், கதைகளைப் பார்த்துக் கொண்டும் அது பற்றி பேசிக்கொண்டும் இருந்தவர்கள் தானே இவர்கள். பிறகேன் விழிப்படையவில்லை?மயக்கங்கள் இரண்டு விதத்தில் பிடித்துக் கொள்கின்றன. ஒன்று ஆராயாமல் நம்புவது, மற்றொன்று தான் நம்புவதைத் தவிர மற்றது எல்லாம் தவறு என நினைப்பது, ஆகவே ஒவ்வொருவரும் தான் அனுபவப்படும் வரை சிந்திப்பதில்லை.தங்களின் அறிவு, வயது பற்றிய எந்த நினைப்புமின்றி, நித்யானந்தா என்ற 30 வயது இளைஞனிடம் விழுந்து சரணாகதி அடைந்ததை எண்ணி யாரும் வெட்கப்படவில்லை. சுவாமி நித்யானந்தா ஆன்மீகப் புத்தகங்களை அதிகமாகப் படித்து அதை எளிமையாக கதை கதையாகச் சொல்வதில் தனித்திறமை பெற்றவர் அவ்வளவுதான். ஆனால் அவரை ஏதோ அவதாரமாகவும் சகலஜாலங்களும் செய்யக்கூடிய சக்திபடைத்தவர் என்றும் இன்னும் ஒருபடி மேலே போய் அவரைக் கடவுள் என்றே எண்ணினர்.காவி, விபூதி, கொஞ்சம் மதத் தத்துவ தத்துப்பித்துகள் தெரிந்தால் போதும் ஆயிரக்கணக்கில் இளிச்சவாயர்கள் கிடைப்பார்கள் என்பது எல்லா ஆனந்தாக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் தனது செயலை நியாயப்படுத்தி நடிகையுடன் ஆத்மபரிசோதனை செய்ததாகச் சொல்லும் தைரியத்தை நித்யானந்தாவுக்குக் கொடுக்கிறது. ஆத்ம பரிசோதனை செய்ததை ஏன் வீடியோ வெளியான பின் சொல்கிறார். அதை அவரே சி.டி போட்டு பக்தர்களுக்கு காட்டவேண்டியது தானே. அந்த ஆத்மபரிசோதனையை படம் பிடித்து வெளியிட்ட சீடர் ஏன் இன்னும் தலைமறைவாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லாம் யாருக்கும் இன்னும் எழாது என நம்புகிறார் சுவாமி நித்து. அவரது சீட கோடிகளோ கோடிகளோடு வரிசையில் நிற்கின்றனர்.சுவாமி நித்து, நடிகையை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் அவர் மனசாட்சிக்காவது அஞ்சுபவர் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாமியார் அடுத்தடுத்து சித்துவேலைகளில் இறங்குகிறார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் மனிதன் கூட இல்லை. பிறகெப்படி மாமனிதன் ஆவது? உண்மையச் சொன்னா அவர் ஒரு நித்திய பிராடு.அவர் மட்டுமில்லை அவரைப் போல் பலர் ஆடம்பரம், படோபடம், வெளிநாடுகளில் கணக்கிலடங்கா சொத்துக்கள், அடியாட்கள் சகிதம் வலம் வருவதை அருவருப்பாக நினைப்பதில்லை. நாம் தான் இவர்களிடம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிகொடுத்துவிட்டு அசடு வழிந்து நிற்கிறோம்.

“யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்நானே சொன்னாலும்உனது புத்திக்கும் பொது அறிவுக்கும்பொருந்தாத எதையும் நம்பாதே” : புத்தர்.





சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை!

15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன்.ஏ-9 சாலை திறக்கப்பட்ட பின் யாழ்ப்பாணம் செல்வது எளிதாகி உள்ளது. சாலையும் மோசம் இல்லை. அரசு பஸ்கள் தவிர, தனியார் பேருந்துகளும் போகின்றன. அப்படி ஒரு பேருந்தில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது, வன்னியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டேன். இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள். ஒரு கணம் பதறிப்போனேன். என்னுடன் வந்திருந்த கலாநிதி ரவீந்திரன் என்னைவிட 'டென்ஷன்' ஆனார். நான் ஒரு பேராசிரியர் எனவும், இரண்டு நாட்கள் மட்டும் யாழ் நகரைச் சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் விளக்கினார். அந்த அதிகாரி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, மேலதிகாரியிடம் சென்று ஏதோ பேசி வந்து, போய் வருமாறு அனுமதித்தார்.அதிகாலை. ''முல்லைத் தீவு மாவட்டத்துக்குள் நுழைந்துவிட்டோம். இது கிளிநொச்சி. இது ஆனையிறவு. இங்குதான் புலிகள் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தினர், இது சாவகச்சேரி, நெல்லியடி'' என ரவீந்திரன் சொல்லிக்கொண்டு வந்தார். சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன. ஒரு கட்டடத்திலும் கூரை இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவ சென்ட்ரிகள். கடைகள், ஹோட்டல்கள்கூட ராணுவத்தாலேயே நடத்தப்படுகின்றன. முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள், இந்திய அரசு உதவியுள்ள தகர ஷீட்களில் குடிசைகள் அமைத்துத் தங்கியுள்ளனர். வீடுகளுக்குச் செல்லவில்லை. வீடுகள் இருந்தால்தானே. அஸ்திவாரம் தவிர, பிற எல்லாம் ராணுவத்தினரால் பெயர்த்தெடுத்துச் செல்லப்பட்டு, சிங்களப் பகுதிகளில் விற்பதாக அறிந்தேன். கூரையற்ற பள்ளிகளில் குழந்தைகளும் ஆசிரியர்களும் வெயிலில் அமர்ந்திருப்பது வேதனையான காட்சி. நிறைய டூரிஸ்ட்டுகள் வருகிறார்கள். பெரும்பாலானோர் சிங்களர்கள். யாழ்ப்பாணத்துக்குச் சென்று வர அரசு ஊக்குவிக்கிறது எனவும், உதவித்தொகை வழங்குகிறது எனவும் சிலர் கூறினர். பொதுவாகச் சிங்களர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் உடையவர்கள். நாகத் தீவில் உள்ள புத்த கோயிலுக்கு போர்க் காலத்தில் போக இயலாதவர்கள் பெருந்திரளாக இப்போது வருகின்றனர். தீவுக்குச் செல்லும் லாஞ்ச்சுகளுக்கு நிற்கும் வரிசையைப் பார்த்துத்தான் ஊருக்குச் செல்லாமலேயே திரும்பி வந்ததைச் சொன்னார் பூபால சிங்கம் புத்தக நிலைய உரிமையாளர் ஸ்ரீதர் சிங்.யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் ஒரு சிறிய புத்த கோயில் உண்டு. போரின்போது தமிழ் ஆயுதப் போராளிகள் அதை இடித்துத் தரை மட்டமாக்கி இருந்தனர். அது இப்போது புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்குகிறது. யாழ்ப்பாண நகருக்குள் குறிப்பாக, புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலைச் சுற்றி ஏராளமான தற்காலிகக் கடைகளைச் சிங்களர்கள் அமைத்துள்ளனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்த இடத்தில், புலிகள் அமைத்துள்ள நினைவுச் சின்னத்தைச் சுற்றி ஏராளமான சிங்களக் கடைகள் இருப்பது ஒரு வேதனைக் காட்சி. புலிகள் அமைத்த கிட்டு பூங்காவும் இன்று பராமரிப்பு அற்றுக்கிடக்கிறது.பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் பெயரில் கோட்டைக்கு அருகில் விளையாட்டு மைதானம் ஒன்றை அரசு கட்டியிருந்தது. புலிகளின் ஆட்சிக் காலத்தில் அந்தப் பெயர் நீக்கப் பட்டு இருந்தது. இன்று மீண்டும் அந்தப் பெயர் சூட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோப்பாயில் உள்ள மாவீரர் கல்லறை உடைக்கப்பட்டதாகக் கொழும்பில் கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தபோது, கோப்பாய் கல்வியியல் கல்லூரி அதிபர் யோகநாதன் அழைத்துச் சென்றார். கல்லறைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. ஆனால், எந்தப் பராமரிப்பும் இல்லாமல் புற்பூண்டுகள் முளைத்துக்கிடந்தன. அலங்காரமாக அமைக்கப்பட்டு இருந்த பீடங்கள் மட்டும் நொறுக்கப்பட்டு இருந்தன.நான் சென்றிருந்தபோது கீரி மலையில் திருவிழா. தமிழர்கள் அங்கு உள்ள குளத்தில் புனித நீராட மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், சிங்களர்கள் கடலுக்குள்ளும் சென்று குளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருவர் வேதனையோடு சொன்னார். சாலை விதிகளை மீறும் சிங்களர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும், தமிழர்கள் என்றால் அபராதம் விதிப்பதாகவும் இன்னொருவர் கூறினார்.ஆனாலும், இந்த வேதனைகளை அவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை. எந்த எதிர்ப்புகளையும் அவர்கள் காட்டுவதற்கு இப்போது சாத்தியம் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளிலேயே பெரிய இழப்பு இதுதான். 30 ஆண்டுகளில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளனர். வெறுங்கையோடு நிற்கின்றனர். 'உரிமையாவது... கத்தரிக்காயாவது. எங்கள் காணிகளுக்குத் திரும்பி கமம் (விவசாயம்) செய்ய அனுமதித்தால் போதும்' என்றார் முள்வேலி முகாமில் உள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த பரந்தாமன். மூன்று லட்சம் பேர் இருந்த முள்வேலி முகாம்களில் இப்போது 80 ஆயிரம் பேர் உள்ளனர். வாரம் ஒன்றுக்கு ஒரு ஜாடி அரிசி, மாவு, பருப்பு, கொஞ்சம் எண்ணெய் தருகின்றனர். வேறு எதுவும் இல்லை. அரிசியைப் பொங்கி, பருப்பைக் கடைந்து சாப்பிட வேண்டியதுதான். கடும் வெப்பம். பெரிய அளவில் முகாம்களுக்குள் அம்மை நோய் உள்ளதென ஒருவர் சொன்னார்.முகாம்களில் இருந்து வெளியே அனுப்பப்பட்டவர்களின் நிலை இன்னும் மோசம். தூர் வாரப்படாத கிணறுகள், சாகுபடி செய்ய இயலாத நிலங்கள். சுதந்திரமாக இருக்க முடிவது ஒன்றே ஆறுதல்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காத்தான் குடி, அக்கறைப்பற்று முதலான இடங்களுக்கும், புனித இடம் என அறிவிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகிற தீகவாபிக்கும் சென்றேன். பழைய புத்த விகார் ஒன்று புதுப்பிக்கப்பட்டு அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் இருந்து உரிமையா ளர்கள் அகற்றப்பட்டுள்ளனர்.புத்தளத்திலும் அருகில் உள்ள ஆலங்குடாவிலும் 20 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள 80 ஆயிரம் முஸ்லிம்களின் நிலை இன்னும் வேதனையானது. இன்று நிலைமை ஓரளவு சீரானபோதும் ஊருக்குத் திரும்புவதா, வேண்டாமா என்கிற திகைப்பில் அவர்கள் உள்ளனர். இந்த 20 ஆண்டுகளில் ஒரு குடும்பம் மூன்று குடும்பங்களாகி உள்ளன. திரும்பிச் சென்றால், அவர்களுக்குஇருக்கப் போவது ஒரு வீடு இருந்தவெற்றிடம்தான். அதையும்கூட இப்போது அவர்களால் அடையாளம் காண்பது கடினம்.




Friday, March 26, 2010

'சிங்கள' யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த அசாதாரண காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது.அருகே நின்று நல்லூர் கந்தனை வழிபட்டுக்கொண்டிருந்த பலர் சிங்களவர்கள்.அதில் பெரும்பாலானவர்கள் - பௌத்த விகாரை ஒன்றுக்குச் செல்லும் பாணியில் கைகளில் மலர் தட்டுக்களுடன் வந்திருந்தார்கள்.பௌத்த பிக்குகளையும் இந்தக் கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் என்று சொல்வதை விட கோவில் சுற்று வட்டாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். படங்களிலும், செய்திகளிலும் மட்டுமே அவர்களால் பார்க்கக் கூடியதாக இருந்த நல்லூர் கோவிலுக்கு நேரில் வரக்கிடைத்த பிரமிப்பை அவர்களுடைய முகங்களில் காண முடிகின்றது.
கனவாக மட்டுமே இருந்ததை நேரில் பார்த்த பெருமிதத்தையும் அவர்களிடம் காண முடிந்தது.நல்லூர் சுற்று வட்டாரங்களில் தற்போது சிங்கள மக்களுடைய நடமாட்டமே அதிகளவுக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.தேர்தலில் வாக்கு வேட்டைக்காக வந்த சிங்கள அரசியல்வாதிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றது. யாழ்ப்பாணம் வரும் சிங்களவர்கள் எல்லோருமே தமது விஜயத்தின் முதலாவது கட்டமாக நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தரிசிக்க அல்லது பார்வையிட வருவார்கள். அதனால் நல்லூர் சுற்று வட்டாரங்களில் நின்றுகொண்டால் தினசரி யாழ்ப்பாணத்துக்கு எவ்வளவு சிங்களவர்கள் வந்து செல்கின்றார்கள் என்பதை ஓரளவுக்குக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். ஏ-9 பாதை திறக்கப்பட்டு சுதந்திரமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வந்து செல்பவர்களில் சிங்கள மக்கள் தான் அதிகம் என்பதை யாழ்ப்பாணம் சென்ற போதுதான் காணக்கூடியதாக இருந்தது. தென் பகுதியிலிருந்து குறைந்த பட்சம் 25 பஸ்களிலாவது சிங்களவர்கள் நாளாந்தம் குடாநாட்டுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட ஹைஎஸ் வான்கள், பஜிரோக்கள் போன்றவற்றிலும் சிங்களவர்கள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கின்றார்கள். தென் பகுதியிலுள்ள அரசியல் தொடர்புடைய வட்டாரங்களும், பௌத்த மத சார்பான அமைப்புக்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணப் பயணத்துக்காக ஆட்களைத் திரட்டுகின்றனர். உடனடியாகவே சிங்களவர்கள் இந்தக் குழுக்களில் இணைந்துகொள்வதுடன், விருப்பத்துடன் யாழ்ப்பாணம் வருவதாகவும் அவ்வாறு சென்றுவந்த ஒருவர் தெரிவித்தார். நல்லுர் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகும் இவர்களுடைய யாழ்ப்பாணப் பயணம், யாழ் நகரிலுள்ள நாகவிகாரை, நயினாதீவு, தென்மராட்சி என விரிவடைந்துகொண்டு செல்லும்.
குடாநாட்டிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் இவர்கள் செல்கின்றார்கள். இதனைவிட கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் இவர்களுடைய கவனத்துக்குரிய முக்கிய இடமாக உள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தங்கு விடுதிகள் அனைத்துமே 'ஹவுஸ் ஃபுல்"லாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் பாடசாலைகளிலும், சிலர் துரையப்பா விளையாட்டரங்கிலும் கூட தங்கியிருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீடுகளுக்கு பலத்த கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. சமையல் பாத்திரங்களுடன் அரிசி, பருப்பு, உப்பு, கருவாடு என எல்லாவற்றையுமே கொண்டுவரும் இவர்கள் தாம் தங்கியிருக்கும் இடங்களில் அடுப்புமூட்டி சொந்தமாகச் சமைத்துத்தான் சாப்பிடுவார்கள். சாப்பாட்டுக் கடைகளில் போய் சாப்பிடுபவர்களைக் காண முடியாது. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களுடைய வருகை அதிகரித்திருப்பதற்குச் சமாந்தரமாக சிங்கள வர்த்தகர்களும் பெருமளவுக்குக் கடை விரித்துள்ளார்கள். வீட்டுத் தளபாடங்களிலிருந்து, சிறிய சிறிய பொருட்கள் வரையில் சந்தையில் நிறைந்துள்ளன. சிறிய ரக தோடம்பழம் குவிந்துகிடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் தினசரி ஒன்பது லட்சம் ரூபாவுக்கு இந்தத் தோடம்பழம் விற்பனையாகின்றது. சிங்களவர்களின் அதிகரித்த வருகையுடன் யாழ்ப்பாணப் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் பல மாறுதல்கள் திடீரென உருவாகத் தொடங்கியுள்ளது. யாழ். நகரின் மத்தியிலுள்ள வீதியோரக் கடைகளில் விலைப் பட்டியல் அறிவித்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக வீதியோரங்களில் தோடம்பழங்களைக் குவித்து வைத்திருப்பவர்கள் சிங்கள மொழியில் மட்டுமே விலைகளைக் குறித்துவைத்துள்ளார்கள். யாழ். நகரிலும், நல்லூர் கோவிலை அடுத்துள்ள பகுதிகளிலும் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் இதனால் ஒரு புதிய போட்டி உருவாகியிருக்கின்றது. சிங்கள மொழி தெரிந்தால் தான் அவர்களால் தமது வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும். அதனால் சிங்களம் தெரிந்த பணியாளர்களைப் பலரும் தேடத் தொடங்கியுள்ளார்கள்... யாழ்ப்பாண சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மையைக் கொண்டவர்கள். இதனால் சிங்களவர்களின் அதிகரித்த வருகையால் ஏற்படும் திடீர்ப் பொருளாதார வாய்ப்புக்கள் சமூகத்தில் ஆரோக்கியமற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது. இதனையிட்டு சமூகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சிங்களவர்களின் அதிகரித்த வருகையையிட்டு யாழ்ப்பாணத் தமிழர்கள் பாதகமான ஒரு மனநிலையை வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் சிங்கள மகாவித்தியாலயம் ஒன்று ஏற்கனவே இயங்கியது. 1977 வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் பெருமளவுக்குக் கல்வி கற்றுள்ளார்கள். ஆனால், தற்போது அதிகரிக்கும் சிங்களவர்களின் வருகையின் பின்னால் உள்ள அரசியல் தான் தமிழர்களின் இதயங்களைத் தாக்குகின்றது. போரின் மூலமாகத் தாம் வெற்றி கொண்ட தமிழர்களின் தலைநகரையும் அந்த நகரத்து மக்களையும் பார்வையிடுகின்றோம் என சிங்களவர்களின் மனதில் காணப்படும் ஒருவித இறுமாப்புத் தான் தமிழர்களின் இதயங்களைப் பிளப்பதாக இருக்கின்றது. அதாவது போர் வெற்றியின் அடுத்த கட்டமாகத் தான் அவர்களுடைய இந்த யாழ்ப்பாண விஜயங்கள் அமைந்துள்ளன.





'வடக்கும் தம்மிடம் இருந்து பறிபோய் விடுமோ...?' - தமிழர்கள் அஞ்சுகிறார்கள் என்கிறார் இந்திய எழுத்தாளர்


சிறிலங்காவில் ஏப்ரல் 8ஆம் நாள் இடம்பெறுவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் வாக்குகளைக் கவருவதற்கான போட்டி குறிப்பாகத் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் புதுவேகம் கண்டிருக்கிறது.
இந்தப் புறநிலையில், நீண்ட பல வருடங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு நோக்கியும் வன்னிப் பெருநிலப்பரப்பு நோக்கியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருப்பதானது பதற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.இவ்வாறு Indian Express ஊடகத்தில் எழுதியுள்ளார் பி.கே.பாலசந்தின். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.
பி.கே.பாலசந்தின் தொடர்ந்து எழுதியுள்ளதாவது: சிறிலங்காவினது அரச படையினருக்கென வன்னிப் பகுதியில் நிரந்தரப் படைத் தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுள் பலமான கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. “இவ்வாறாக நிரந்தர முகாம்களை அமைக்கும் செயற்பாட்டின் ஒர் அங்கமாக ஏற்கனவேயுள்ள படை முகாம்கள் படையினருக்கான வீட்டுத் திட்டங்களாக மாற்றப்படுகின்றன. இதன் காரணமாக வடக்கினது சனத் தொகையில் சிங்களவர்களது எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கும்" என யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். “வன்னிப் பகுதியில் மட்டும் தற்போது 40,000 துருப்புக்கள் நிலை கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படையினருடன் அவர்களது குடும்பங்களும் இணைந்து கொள்வார்கள்.
இராணுவத்தினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டவுடன், சிங்களப் பாடசாலைகள் மற்றும் புத்த கோவில்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் வன்னியில் மேற்கொள்ளப்படும். இவற்றின் காரணமாக, வன்னிப் பெருநிலப்பரப்பின் இன- கலாச்சார ரீதியான பரம்பலில் பாரிய மாற்றங்கள் தோன்றும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்த போரின் விளைவாக - தமிழர்களே தனித்துவமான வாழ்ந்து வந்த வன்னிப் பெருநிலப்பரப்பு தனது வனப்பையும் சுயத்தையும் இழந்து நிற்பதாகத் தமிழ்த் தேசியவாதிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக இடம் பெற்ற உக்கிர மோதல்களின் விளைவாக, இப்பகுதிகளில் எஞ்சியிருந்த மக்களும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். கொக்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கான 4,000 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் குறிப்பிட்டதாக சுடரொளி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இவ்வாறாக, கொக்காவில் பகுதியில் குடியமர்த்தப்படவிருக்கும் 4000 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 8000 மாணவர்களுக்கெனச் சிங்களப் பாடசாலைகள் அமைக்கப்படும் நிலை தோன்றும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இது போல - ஆனையிறவுக்கு அண்மையாக - பளை மற்றும் இயக்கச்சிப் பகுதியிலும் படையினருக்கான வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட இருப்பதாக சிறீதரன் கூறுகிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பௌத்த கோவில்கள் மழைக் காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.
வன்னியின் மேற்குப் பகுதியில் மன்னாரின் மாதோட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அண்மையில் புதிய பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் குடாநாட்டுக்கு வருகை தரும் சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தங்களின் வியாபாரத் தளங்களைத் தற்காலிகமாக நிறுவி வருகிறார்கள். “இவ்வாறாக சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டில் நிரந்தரமாக நிலைகொண்டு விடுவார்கள். மாநகர மற்றும் நகரசபைகள் எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாதமையினால், சட்ட விரோதமாக நிலைகொள்ளும் இவர்களை எங்களால் எதுவும் செய்யமுடியாது போகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சுற்றாடலிலும் சிங்கள வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். கோவில் திருவிழா நாட்களில் மாத்திரமே இப்பகுதிகளில் வியாபாரச் செயற்பாடுகளை அனுமதிப்பதே வழமையாக இருந்து வருகிறது.
சிங்கள வியாரிகளின் இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது" என அவர் ஆதங்கப்பட்டுக் கொண்டார். 'சிறிலங்காவில் வாழும் அனைத்துச் சமூகங்களுக்கும் இந்தத் தீவு சொந்தமானது. ஆதலினால், நாட்டினது தென் பகுதியில் சிறுபான்மைத் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து எவ்வாறு நட்புடன் வாழுகிறார்களோ அதே போல தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டினது வடக்குப் பகுதிகளில் சிங்களவர்களும் தமிழர்களுடன் இணைந்து வாழுவதற்கு வழி செய்யப்பட வேண்டும்’ என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.
தமிழ் ஆயுதக் குழுக்கள் முளைவிடுவதற்கு முன்னர் நாட்டினது வடக்கில் சிங்களவர்களும் வாழ்ந்து வந்ததை அரச தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள். வன்னிப் பகுதியில் படை முகாம்கள் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, புதிதாக எந்தப் படைத் தளங்களும் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து எழக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே வன்னியில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கிறார்கள் என அவர் வலியுறுத்தினார்.





வடக்கில் காளான்களாக முளைக்கும் விகாரைகள்!


யாழ்ப்பாணக் குடாநாட்டில் பௌத்த விகாரைகள் காளான்கள் போல தோன்ற ஆரம்பித்துவிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டதாக Indian Express தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எழுதியுள்ள பி.கே.பாலசந்திரன், வன்னியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தின் மாதோட்டப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் புதிய பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சிங்கள வர்த்தகர்கள் குடாநாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வியாபார நிலையங்களை அமைத்து வருவதால் அவர்கள் குடாநாட்டில் நிரந்தரமாக நிலைகொண்டு விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சுற்றாடலில் திருவிழா நாட்களிலேயே தற்காலிக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது வழக்கமாக இருக்கின்ற போதிலும், தற்போது சிங்கள வர்த்தகர்கள் இக்கோவிலின் சுற்றாடல் பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
சிங்கள வியாரிகளின் இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகளை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு இங்கே எவருக்கு அதிகாரம் இருக்கிறது என அச்சட்டத்தரணி கவலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்





Thursday, March 25, 2010

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்‐ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் : பகுதி 2



70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.
மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.
இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.
எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான்
இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.
அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.
அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.
கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.
இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.
எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த
இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.
இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.
துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான்
தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.
அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.
எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.
இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.
இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர்
அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.
என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.
இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப்
பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.
காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.
இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.
இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.
இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.
இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.
இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.
இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.
மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.
துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.
அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.
அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.
இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.
மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.
அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.
அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……நன்றி இனிஒரு





வன்னியில் தாய்லாந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியது ?



சிறிலங்காப் படையினரின் இறுதிக்கட்ட தமிழின அழிப்பு போர் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினரும் உதவியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிறிலங்காப் படையினர் வன்னியில் மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு பன்னாடுகள் சில உதவியளித்திருந்தன. இதில் சில நாடுகள் நேரில் பங்கேற்றும் இருந்தன என்பது தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது, தாய்லாந்து வான்படையினரும் மிகைஒலி தாக்குதல் வான்கலங்களை அனுப்பி, தமிழின அழிப்பிற்கு உதவியுள்ளளதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, இஸ்ரோல் உள்ளிட்ட பல நாடுகள் உதவியுள்ளதுடன் வன்படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு தாய்லாந்து வான்படையினர் முழுமையான பங்களிப்பினை வழங்கியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியில் தாக்குதல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்திய தாய்லாந்து வான்கலங்கள், தற்போது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.





உண்மையின் தரிசனம் : காணொலி

தமிழ் மக்களின் தாயக சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றது. பல உதாரணங்களுடன் உண்மையின் தரிசனம் விளக்குகின்றது




கஜேந்திரகுமார் அணி அடுத்தகட்ட அரசியலுக்கான தொடக்கமா?-முத்துக்குமார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே.”ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பியிருக்க முடியாது. அதற்கு அந்த ஆற்றல் இல்லை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையுமே புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அவர் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாளர் அல்லர். ஆனாலும் ஒரு ஆய்வாளன் என்ற வகையில் அவர் தெரிவித்த கருத்தினை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.வரலாறு முன்னே செல்லும் போது முன்னே செல்லும் அமைப்புகள் தான் தேவை. தற்போதைய தமிழரசுக் கட்சி என்பது 50 களின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 60 களின் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் அன்றே மங்கத் தொடங்கியிருந்தது. 70களின் தேவை முற்றாக வித்தியாசப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றம் பெற்றது. அது அக்காலத் தேவையின் ஒரு கட்டத்தை முடித்து வைத்தது. அதன் வெளிப்பாடுதான் வட்டுக் கோட்டைத் தீர்மானமாகும்.80 களில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடைமுறையில் கொண்டுச் செல்ல ஆயுத இயக்கங்கள் தேவைப்பட்டன. விடுதலை இயக்கங்கள் அந்தத் தேவையை பூர்த்தி செய்தன. இந்தியா தன் தேவையிலிருந்து விடுதலை இயக்கங்களுக்கு பின்தள வசதிகளைச் செய்து கொடுத்தது. தமிழ்த் தேசிய அரசியலும் இலங்கை மட்டத்திலிருந்து பிராந்திய மட்டத்திற்கு வளர்ந்து சென்றது.90 களில் அரசியல் தேவை வேறாக இருந்தது. தமிழ்தேசிய அரசியலை தனது தேவையின் மட்டத்திற்கு ஒடுக்க நினைத்த இந்தியாவை மீறி அதனைக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. புலிகளின் ஏக இயக்கக் கொள்கையும் இறுக்கமான இராணுவ நிர்வாகக் கட்டமைப்பும் அந்த அடிப்படையிலேயே தவிர்க்க முடியாததாகியது. இந்த இரண்டும் இல்லாமல் அந்த காலகட்ட வரலாற்றினை நகர்த்தியிருக்கலாம் எனக் கூற முடியாது.தற்போது தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்தபின்னர் புதியவகையான அரசியல் தேவைப்படுகின்றது. 40 களை நகர்த்த தமிழ்க் காங்கிரசும் 50 களை நகர்த்த தமிழரசுக் கட்சியும் 80 களை நகர்த்த விடுதலை இயக்கங்களும் 90 களை நகர்த்த விடுதலைப் புலிகளும் தேவைப்பட்டது போல 2010 களின் அரசியலை நடாத்த புதிய அரசியலும், புதிய அரசியல் இயக்கமும் தேவைப்படுகின்றது. 50 களை நகர்த்த உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சி இதனை ஒருபோதும் மேற்கொள்ளமுடியாது. இதுவே யதார்த்தமாகும்.இன்றைய காலகட்டம் என்பது சர்வதேச அரசியலை வெற்றிகொள்ள வேண்டிய காலகட்டம். நவீன அரசியல் முறைமையில் சர்வதேச அரசியலே ஒரு தேசிய போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். புலி எதிர்ப்புச் சக்திகளினால் புலிக்காய்ச்சல் காரணமாக எல்லாம் பூச்சியத்திற்கு வந்துவிட்டது எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. சாதாரண மக்கள் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றிகளைப் பார்த்தபடியால் புலி எதிர்ப்புச் சக்திகளைப்போல நினைக்க முற்படுகின்றனர். ஆனால் உண்மைநிலை அவ்வாறானதல்ல.தமிழ்த்தேசிய அரசியல் இன்று சர்வதேச மட்டத்திற்கு வந்திருக்கின்றது. அங்கு பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளேக்கும், பிரித்தனியாவின் வெளிநாட்டமைச்சர் மில்லிபாண்டும் தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றி கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு தமிழ் அமைப்பு நடாத்தும் மாநாட்டில் மில்லிபாண்ட் பங்குபற்றுகின்றார். பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுன் மாநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகின்றார். சர்வதேச ஊடகங்கள் தமிழ்த் தேசிய அரசியல் பற்றி கருத்து தெரிவிக்கின்றன. மனித உரிமை நிறுவனங்கள் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகவும், அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றன.இவையெல்லாம் தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்தையே வெளிக்காட்டுகின்றது. புலிக்காய்ச்சல் உள்ளவர்கள் எதைத்தான் கூறினாலும் புலிகளின் விலை போகாத, தியாகம் நிறைந்த தொடர்ச்சியான போராட்டமே இதற்கு காரணமாகும். ஆனால் போராட்டத்தின் வளர்ச்சி சர்வதேச மட்டத்திற்கு வந்தபின்னர் சர்வதேச அரசியலை நடாத்தியிருக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு இராணுவ ரீதியாக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பே தவிர சர்வதேச அரசியலை நடாத்துவதற்கென உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல. அதனால் தான் புலிகளினால் முன்னேற முடியவில்லை.ஒரு கட்டத்தினை நகர்த்திக்கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தினால் கட்டம் வேறொன்றிற்குச் செல்லும் போது அதனை நகர்த்த முடியாது. இதுதான் வரலாற்று நியதி. செல்வநாயகத்தின் கட்டத்தினை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினால் நகர்த்த முடியவில்லை. பிரபாகரனின் கட்டத்தினை செல்வநாயகத்தினால் நகர்த்த முடியவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..சர்வதேச அரசியலை நகர்த்தும் போது இராணுவச் செயற்பாட்டினை விட அரசியல் செயற்பாடே முன்னிலையில் நிற்கும். எனவே இராணுவச் செயற்பாட்டிற்குரிய அணுகுமுறை இங்கு உதவப்போவதில்லை. நெகிழ்ச்சியான அரசியல் செயற்பாட்டிற்குரிய கட்டமைப்பு வடிவங்களே இங்கு தேவை. கூடிய வரை அதிகமான தரப்புகளை உள்வாங்கக்கூடியதாக கட்டமைப்புக்கள் நெகிழ்ச்சியான வகையில் விரிவாக்கப்படல் வேண்டும்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை மூன்று பெரும் சக்திகள் உள்வாங்கப்படக் கூடிய சக்திகளாக உள்ளனர். தாயக சக்திகள், சேமிப்புச் சக்திகள், துணைச்சக்திகள் என்பவையே அவை மூன்றுமாகும். அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக நின்றுகொண்டு அணுகுமுறைகளில் நெகிழ்ச்சித் தன்மையை பேணும்போதே இச்சக்திகளை அணிதிரட்டக் கூடியதாக இருக்கும்.இங்கு தாயகசக்திகள் என்போர் தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தென் இலங்கையில் வாழும், வட கிழக்கு வம்சாவழியினரும் புலம்பெயர் நாடுகளில் வாழும் வட கிழக்கு வம்சாவழியினரும் ஆவர்.சேமிப்பு சக்திகள் என்போர் இலங்கையில் வாழும் மலையக மக்கள் உட்பட தமிழகம், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மேற்குலகம் என உலகெங்கும் பரந்து வாழும் தமிழக வம்சாவழி தமிழ் மக்களாவர்.தாயக தமிழ் மக்களையும், உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித் தமிழ் மக்களையும் இணைத்து உலகத்தமிழர் என்ற அடையாள அரசியலையும் கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கவேண்டும்.நட்புச்சக்திகள் என்போர் முஸ்லிம் மக்கள், தென் இலங்கையில் வாழும் சிங்கள, முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர். இம் மூன்று சக்திகளையும் இணைத்த பரந்த கூட்டணி ஒன்று இன்று தேவை. மாற்று அணி இந்த பரந்த கூட்டணியை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.இதற்கு முதல் நிபந்தனையாக சர்வதேச ரீதியாக செயற்படும் புலிகள் அமைப்பினர் தமது பழைய அரசியலை கைவிட்டு புதிய அரசியலுக்கு வரவேண்டும். பழைய மாதிரியான கட்டமைப்பினையும் அணுகு முறையினையும் கொண்டு புதிய அரசியலை நகர்த்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதனை புரிந்து கொள்ளாவிடின் அவர்கள் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவுவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.இரண்டாவது இராஜதந்திர அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். இது மூலோபாயத்தில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளாது அணுகு முறைகளில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதை வேண்டிநிற்கின்றது. அதே நேரம் இது தொழில்சார் நிபுணத்துவத்தை வேண்டிநிற்கின்ற அரசியலாகும். எனவே இதில் தேர்ச்சியைப் பெறுவதற்கு தேசிய சக்திகள் முயலுதல் வேண்டும்.முதலாளித்துவ ஜனநாயகம் பிரிவினையை அங்கீகரிப்பதில்லை. ஆனால் அவ் ஜனநாயகம் பெரும்பான்மை ஜனநாயகமாக மாறக்கூடாது என்பதற்காக உச்ச வகையிலான அதிகாரப் பங்கீட்டினை அங்கீகரிக்கின்றது. எனவே தேசிய சக்திகள் இரு தேசக் கோட்பாடு என்பதற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் போது சர்வதேச அரசியலை நகர்த்துவது இலகுவானதாக இருக்கும்.தற்போது உருவாகியுள்ள மாற்று அணி இன்றைய காலகட்ட அரசியலை முன்னெடுக்க போதுமானது எனக் கூறிவிட முடியாது. தேர்தல் காலத்தில் அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டதால் அதன் மீது பெரிய தவறுகளையும் எம்மால் சுமத்த முடியாது. ஒரு தொடக்கம் என்ற வகையில் அதன் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் அது தொடர்ந்தும் முன்னேற வேண்டும்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தற்போதைய காலகட்ட அரசியலை முன்கொண்டு செல்லமுடியாது. தொடர்ந்தும் அதில் தங்கியிருப்பது தமிழ்த் தேசிய எதிர் அரசியலை வலுப்படுத்தும் நிலைக்கே நிலைமையை கொண்டு செல்லும். எனவே மாற்று அணியின் உருவாக்கம் ஒரு வரலாற்றுக் கட்டாயமே. ஆனால் தொடக்கம் மட்டும் போதுமானதல்ல. புதிய அரசியலின் தேவைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள தற்போதே அவர்கள் தயாராக வேண்டும்.




நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்:எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பத



மே 31 – ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக.
வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம். எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது.
நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது. ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு… எங்கே ஐயா?
மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்றுபாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன?சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு?
நம்புங்கள் நல்லூர்கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம்.
மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள், சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது? சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா?
எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம். ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்?
ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.





Wednesday, March 24, 2010

தலைவர் பிரபாகரனை வெறுக்கவில்லையாம் : பிரியங்கா!


தலைவர் பிரபாகரனை வெறுக்கவில்லையாம் ஆனால் தண்டனை கிடைக்கவில்லையே என்று கவலையாம் - பிரியங்கா!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.
“விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?”
“பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.”
“சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?”
“அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பயணம். என் வாழ்வில் நடந்த அந்தப் பயங்கரம் குறித்த தகவல் பெறவும், அமைதி வேண்டியும்
அவரைச் சந்தித்தேன்.”
“வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த சம்பவம் எது?”
“என் தந்தை கொல்லப்பட்ட கொடிய நிகழ்வு என்னை அதிகமாக பாதித்தது. அப்போது கடும் கோபம் அடைந்தேன். அது என்னிடம் சில ஆண்டுகள் வரை தொடர்ந்தது. நான் மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகமும் கூட கொந்தளிப்பாக இருந்தது. எனக்கு அப்போது இளம் வயது என்பதால் ஆவேசம் இருந்திருக்கலாம். ஆனால், படிப்படியாக என்னை நானே பக்குவப்படுத்தி, ஆறுதல் பெற்றுக்கொண்டேன்.”
சகோதரி பிரியங்கா உங்களது கருத்து மிகவும் சரியானதே. உங்கள் தந்தை மரணத்தை அடுத்து நீங்கள் கோபப்படுவது நியாயமானது தான். ஆனால் அதனை யார் செய்தார்களோ….? எங்களை பொறுத்தவரை அது ஒரு வதம்.
அதர்மத்தின் வழிநின்று மக்களிற்கு அநீதி இழைத்த அரக்கர்களை கடவுள் அவதாரமாக கூறப்படுபவர் வதம் செய்து இந்த ஜகத்தை காத்தருளியதை குறிக்கும் முகமாக ஆண்டுதோறும் நீங்கள் தீபாவளி நவராத்திரி போன்ற பண்டிகைகளை விழாக்களை கொண்டாடுகிறீர்கள் அல்லவா…?
அது போன்றே ஈழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து எமது மக்களை வேட்டையாடியும் எமது மக்களிற்கு காவலாக இருந்த போராட்ட அமைப்புகளை சிதைத்தும் வழிக்கு வந்தவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எமக்கு எதிராக கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்த்த உங்கள் தந்தை இராசீவ் காந்தி எம்மைப் பொறுத்த வரையில் வதம் செய்யப்பட வேண்டிய அரக்கனே.
உங்களிற்கு சகல அதிகாரங்களும் உள்ளதால் குற்றத்துடன் தொடர்புடையவராக கருதி சிறையிலடைக்கப்பட்டடிருக்கும் நளினியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டீர்கள்…. அதிலும் தவறில்லை. அந்த ஒற்றை உயிருக்காக (நியாத்தின் படி தர்மத்தை காப்பதற்கு வதம் செய்யப்பட்ட இராசீவ் காந்தியின் உயிர்) உங்கள் பாட்டியின் பெயர் கொண்ட(இந்திரா-11) ராடர்கள் வழிகாட்ட தமிழினத்தையே விரட்டி விரட்டி கொன்று குவித்தீர்களே...
முள்ளிவாய்காலில் உயிருடனும் குற்றுயிருடனும் எஞ்சியிருந்தவர்கள் உங்கள் ஆசீர்வாதத்துடன்தானே இராணுவ கவசவாகனங்களால் ஏற்றி மிதித்து கொல்லப்பட்டு பதுங்கு குழிக்குள் வைத்தே கதை முடிக்கப்பட்டது.
இதற்கு நாம் யாரிடம் சென்று விளக்கம் கேட்பது…? நியாயம் கேட்பது....? உங்களைதான் நெருங்க முடியுமா…? உங்கள் குடும்பத்;தவர்கள் வரும்போது தமிழகத்தில் இருக்கும் எங்களது சொந்தங்கள் முகாமில் சிறைவைக்கப்படுகின்ற போது எப்படி எங்களால் உங்களை நெருங்கி நியாயம் கேட்க முடியும்?
நீங்கள் ஆத்திரப்பட்டீர்கள்… பதிலுக்கு நாங்களும் ஆத்திரப்படுவதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? அவ்வாறு நாங்கள் ஆத்திரப்பட்டால் என்னாகும்…? உங்களால் தாங்க முடியுமா..?
ஒற்றை உயிருக்காக பிரியங்கா கவலையும் ஆத்திரமும் அடையும் போது ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து எமது தேசத்தையும் இழந்து நிற்கின்ற நாம் என்ன செய்ய வேண்டும்… சிந்தியுங்கள் உறவுகளே…
தமிழனாக உணர்ந்ததனால் ஏற்பட்ட தார்மீக கோபத்தினால்தான் எமக்கொரு தலைவன் கிடைத்தான். அவ்வாறே பல்லாயிரம் போராளிகள் தலைவன் பின்னால் அணிதிரண்டனர். சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்வின்றி போராடவேண்டியது காலத்தின் கட்;டாயமாகும். ஒவ்வொரு தமிழனதும் நெஞ்சங்கள் தீப்பிளம்பாக கொதித்து கொண்டே இருக்க வேண்டும்.
முள்ளிவாய்கால்வரை படுகொலை செய்யப்பட்ட எமது மக்களது இரத்தப்பலி சும்மா விடாது. ‘நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை’ என்று தனது உண்மையான மனவெளிப்பாட்டில் கூறியிருந்தாரோ… அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இவ்வாறு கூறினாரோ… தெரியாது ஆனால் கடைசிவரை உலகத்தவரால் கைவிடப்பட்ட நிலையில் சிங்களத்தின் கொடும் கரங்களிற்குள் சிக்குப்பட்டு இந்;தியாவின் நலனுக்கா கொல்லப்பட்ட எமது மக்களது சாவிற்கு நிச்சயமாக இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.





த‌லைநிமிர்வு : த‌லைவ‌னும் த‌மிழீழ போராட்ட‌மும்..பாக‌ம் 02..

த‌லைநிமிர்வு : த‌லைவ‌னும் த‌மிழீழ போராட்ட‌மும்....இத‌ன் தொட‌ர்ச்சி ஒவ்வொரு வார‌மும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் என்ப‌தை எம‌து வாச‌க‌ர்க‌ளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.






"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு"


"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு"
வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் பதினேழு ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால்ää தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது" என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம்ää சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும்ää வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர்ää தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில்ää துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவரää பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால்ää கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலää ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம். சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.