*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, March 22, 2010

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மடல்.: கஜேந்திரன் குழுவினரின் அதிகரித்துவரும் அட்டகாசங்கள்


கஜேந்திரன் குழுவினரின் அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்ஈழம் பெற்றுத்தருவோம் என பத்திரிகைகளில் அறிக்கை விடும் கஜேந்திரன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசாங்க படைகளுடனும் டக்ளஸ் குழுவுடனும் இணைந்து செய்து வரும் அட்டகாசங்களால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இராணுவ பாதுகாப்புடனும் டக்ளசின் ஆசிர்வாதத்துடனும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரன் குழுவினர் டக்ளஸ் வெல்லுவதை பற்றி பரவாயில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றனர்.வெள்ளைவானில் வரும் கஜேந்திரன் குழுவினர் நள்ளிரவு வேளையில் கூட சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கூட்டமைப்பு துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ள இடங்களில் அதை கிழித்து விட்டு தங்களின் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.இலங்கை அரசின் பூரண ஆதரவுடனேயே கஜேந்திரன் குழுவினர் தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் மீது இலங்கை அரசாங்கம் முன்னர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றதுடன் பல கோடி ரூபாய்களை கஜேந்திரன் குழுவுக்கு மகிந்த ராசபக்ச அரசு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் பேசிக்கொள்கின்றனர்.கஜேந்திரனும் பத்மினியும் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மகிந்த, கோதபாயா, டக்ளஸ் ஆகியோரை சந்தித்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கூட்டமைப்பை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்றும் உங்களுக்கு எதிராக செயற்படமாட்டோம் என கஜேந்திரன் டக்ளசுக்கு உறுதி கூறியதாகவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் குழுவுக்கு டக்ளசுடனும், மகிந்த ராசபக்ச அரசுடனும் இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது. இதை ஊடகங்களில் வெளியிடுவதால் எமக்கு அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் வரலாம் என்பதுடன் சட்டபிரச்சினை காரணமாகவும் இதை தற்போது வெளியிடாமல் இருக்கிறோம். இதுபற்றி எம்முடன் தொடர்பு கொண்டால் முழுவிபரங்களையும் நாங்கள் தருவோம்.


யாழ்ப்பாணத்திலிருந்து சி.பரம்சோதி





No comments:

Post a Comment