
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே இன்று சிங்கள தேசம் அறிவித்துள்ள பாராளுமன்றத்தேர்தலிலே எமது தாய்தேச மக்கள் யாரை ஆதரிப்பது யாரை எதிர்ப்பது என தெரியாதவண்ணம் திக்குமுக்கடுகின்றார்கள்......இதற்கு காரணம் விடுதலைப்புலிகள் ஆயுதரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை ஈடுசெய்யப் புறப்பட்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இந்தியாவின் உளவுப் பிரிவான றோ விற்கும் விலைபோய் தனியே பிரிந்து சிதறியமையே ஆகும்...இத் தேர்தலில் இருப்பினும் தமிழ் மக்கள் அனேகமானவர்களின் தெரிவு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக இருந்தாலும் மக்களால் அவர்களை சரியாக தெரிவு முடியாமல் போகின்ற சந்தர்ப்பத்தை நேற்றய தினம் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் வாக்களித்தவர்களிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் உறுதியாக கூறமுடிகின்றது.ஏனெனில் அவர்களிடம் பெற்ற கருத்துக்களின் படி அம் மக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இலச்சனை என்ன என்பது சரியாக தெரியாமல் உள்ளது. காரணம் இன்று தமிழர் தாயகத்திலிருந்து (யாழ்ப்பாணம்)10 பேரை பாராளுமன்றம் அனுப்புவதற்காக 300 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலச்சனையை தங்கள் கட்சியின் சின்னமாக பயன்படுத்துகின்றனர். இதுவே மக்கள் மத்தியில் யார் யார் எந்தக்கட்சியில் எந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற குழப்பநிலையை தோற்றுவித்துள்ளது......நேற்றய தினம் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் வாக்களித்த ஆசிரியர் ஒருவரிடம் பெற்ற தகவலின்படி அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்தார் எனக்கூறினார் ,அவரிடம் வீட்டுச்சின்னத்துக்குத்தானே போட்டீர்கள் என நாம் கேட்டபோது அவர் இல்லை நான் உதயசூரியனுக்கு போட்டேன் என்றார்.நீங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குத்தானே வாக்களித்தீர்கள் எனக் கூறினீர்கள் ஏன் உதயசூரியனுக்கு போட்டேன் எனக்கூறுகின்றீர்கள் என வினவிய போது அவர் அளித்த பதில் ஏன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில்தானே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அமைந்திருந்தது..அதன்பின்னர் நாம் அவருக்கு சரியான தகவலை வழங்கிய போது அவர் மிகவும் வருத்தப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது.....எனவே தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்கள் சின்னம் என்ன என்பதையும் எந்தக்கட்சியில் போட்டியிடுகின்றோம் என்பதனையும் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவியுங்கள்..



No comments:
Post a Comment