*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, March 22, 2010

எண்ணற்ற மக்களின் சத்துச் சாறுதான் தலைவன்...இந்த 22 - ம் நூற்றாண்டின் நிகரில்லா ஒரே தலைவன் பிரபாகரன்..!

ஏன் ..? புலம் பெயர் மக்கள் மற்றும் ஈழ மண்ணின் மக்கள், பிரபாகரன் மீது இவ்வளவு நம்பிக்கையை வைத்துள்ளனர்..தமிழை, தமிழ் இனத்தை, தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் ஏன் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்..நான்காம் கட்ட ஈழ போரின் இறுதியில், ஏன் சுமார் ஒரு இருபது தமிழ் இளைஞர்கள் தீக்குளிக்க வேண்டும்..? மணிக் முகாம்களில், முள்வேலி முகாம்களில், தமிழகத்தில் உள்ள பன்றித் தொழுவ முகாம்களில் உள்ள மக்களும், அவர்களின் வாரிசுகளான இலங்கையை ஒருமுறை கூட பார்த்திராத புதிய தலைமுறை ஏன் ..? நமது இனத்தின் பிரதிநிதியாக, நம்மை காக்கும் ரட்சகனாக பிரபாகரனை ஏற்றுக் கொள்கின்றனர்..பிரபாகரன் அப்படி என்ன செய்தார்...இம்மக்களுக்கு..?
உலக ஒழுக்கலாறுகளை, மக்களின் அபிலாசைகளை, பலமாக கேலியும் கிண்டலும் செய்து வரும் போலி உருவ, வயல்வெளி பொம்மைகள் தான் உலகத்தில் பவனி வருகின்றனர் தலைவர்களாக..! இந்த நூற்றாண்டின் மக்கள் தலைவன் கற்பனைக்கு எட்டாத மாபெரும் குறியீடு.. கார்ப்பரேட்கள் உலகை வலம் வரும் காலத்தில், மக்களாவது, ஒழுக்கமாவது, பொதுநலமாவது...எல்லோருமே ஒரு விதத்தில் தன் நலம் சார்ந்து தான் இயங்குவார்கள் என்ற விமர்சனமற்ற கார்ப்பரேட்களின் கருத்தை வலிய தன் மண்டையில் சுமந்து திரியும் இன்றைய உலகில்...மக்களின் தலைவன் யார்..? எண்ணற்ற மக்களின் சத்துச் சாறுதான் மக்கள் தலைவன்..வரலாற்றில் தனி மனிதர்கள் பாத்திரம் என்ன..? ஒருமுறை கூறினார் முசோலினி..." இந்த கிராம்சியின் மூளையை ஒரு இருபது வருடங்களுக்கு இயங்க விடாமல் நிறுத்த வேண்டும்...இல்லையேல் வரலாற்றின் போக்கை திசை திருப்பும் நிகழ்ச்சியை உருவாக்கிவிடுவார் இந்த கிராம்சி..என்ற தனி மனிதர் " என்றார். இத்தாலி நாட்டின் முசோலினியின் அரசியல் துவக்க காலத்தில் கிராம்சியும், முசோலினியும் ஒன்றாக " முன்னேறுக " என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்களாக பணியாற்றிய காலம்..கிராம்சி இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆகிறார்...முசோலினி இத்தாலி நாட்டின் பாசிஸ்டாக வலம் வருகிறார்..முசோலினி அதிபராக இருக்கும் பொழுது உதித்த வார்த்தைகள் இது...! வரலாற்றில் மக்கள் தலைவர்கள் தனி மனிதர்கள் அல்ல..புலம் பெயர் மக்கள் ஏன் ..? ஈழ மக்கள் ஏன் ..? பிரபாகரன் மீது இன்றும் அளவிற்கறிய மதிப்பும் ஒப்பற்ற தலைவன் என்றும் நம்புகின்றனர்..பிரபாகரன் கொல்லப்பட்டார்..போரில், நேரடியாக தொலைக்காட்சியில் படம் பிடித்து காட்டி விட்டார்கள் பிரபாகரனின் சடலத்தை..(தலைவர் போன்று வடிவமைக்கப்பட்ட உருவத்தை)இன்று வரை சத்தியம் செய்து கூறுகின்றனர் இரண்டு அரசுகள்..இலங்கை அரசும்..உலகின் மிகப்பெரும் ஜனநாயக அரசான இந்தியாவும்..என்றாலும் ஈழ மக்கள் ஏன் நம்ப மறுக்கின்றனர்..? ஈழமக்களின் நெஞ்சை கொள்ளை கொண்டவரா பிரபாகரன்..!(ஆம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ளவர் தான் பிரபாகரன்)ரசியாவில், கம்யூனிஸ்ட் புரட்சி உருவாகும் காலமே கிடையாது..மக்கள் தலைவர் லெனின் தோன்றினார்..ரசியாவின் வளர்ச்சிப்போக்கை ஒரு தனி மனிதர் தீர்மானித்தார். அதன் மூலம் உலக வரலாறு சுமார் ஒரு அறுபது ஆண்டு காலம் அவரின் போக்கை எதிர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறது இன்றுவரை..லெனின் தனி மனிதர் தான்..! இவையெல்லாம் அந்தக்காலம் என்றே வைத்துக்கொள்வோம். கம்ப்யூட்டர் காலத்தில், விரல் நுனியில் உலகை வைத்திருக்கும் இந்த கார்ப்பரேட்கள் ஏன் அஞ்சி நடுங்கினர் பிரபாகரனைப் பார்த்து..? உலகின் வளர்ச்சிப்பாதையை ( கார்ப்பரேட்களின் வருங்கால உலகம் எப்படி என்றால், வெறும் எண்களை பயன்படுத்துவது, புல் முதல் புள்ளைபிடிப்பவன் வரை..) எங்கே.. இந்த தனி மனிதர், தங்களின் வருங்கால உலகை மாற்றி விடுவார் என்ற குலை நடுக்கம்..! நம் வாழும் காலத்தில், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவன் பிரபாகரன். வரலாற்றில் தனி மனிதர் பாத்திரம் என்றால் என்ன..? மக்கள் தான் அனைத்தும், மக்கள் தான் வரலாற்றில் சிறப்பு பாத்திரம் ஏற்க முடியும் என்று பொத்தாம் பொதுவாக கூறுவதை தவிர்த்து, தனி மனிதர் எவ்வாறு உலகை மாற்றி அமைக்க முடியும் என்பதை பிராபாகரனின் வாழ்க்கை மூலம் அறிந்து கொள்ள முடியும்..! நான்காம் கட்ட ஈழப் போர் உலகிற்கு உரக்க சொல்வது இதுதான்..!




No comments:

Post a Comment