*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, March 23, 2010

கூட்டாட்சியை நிராகரித்துள்ள சிங்களத் தலைமைகள்


எந்தவொரு முதன்மை கட்சியும் கூட்டாட்சியை வலியுறுத்தவில்லை
சிறிலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் 8ஆம் நாள் பொதுத்தேர்தல் இடம்பெற இருக்கிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழ்பேசும் மக்கள் கோரிவரும் கூட்டாட்சி முறைமை கொண்டுவரப்படும் என நாட்டின் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் வாக்குறுதியளிக்கவில்லை. நோர்மையாகக் கூறுவதானால், நடந்துமுடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போது பெரும்பாலான தமிழர்களின் வாக்குகளைத் தனதாக்கிய ஜெனரல் சரத் பொன்சேகா கூட கூட்டாட்சியினை நிராகரித்திருக்கிறார். சிறிலங்காவில் கூட்டாட்சியினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து முனைப்புக்களையும் தோற்கடிப்போம் என சரத்பொன்சேகாவினது கட்சியான சனநாயகத் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. சிறிலங்காவின் ஒன்றிணைந்த தன்மையினை உறுதிப்படுத்தும் நாட்டினது தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்தும் பேணப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து அதிகாரங்களையும் அது பயன்படுத்தும் என பொன்சேகாவினது கட்சியின் தேர்தல் அறிக்கை உறுதியளித்திருக்கிறது. முன்னாள் இராணுவத் தளபதியின் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனதா விமுக்திப் பெரமுன என்ற ஜே.வி.பி தமிழ் எதிர்ப்புக் கொள்கையினைக் கொண்டிருப்பது இங்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியானது போரின் பின்னான அரசியல் தீர்வு தொடர்பாக தனது அறிக்கையில் உறுதியாக எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால், தமிழ் வாக்காளர்களைக் கவரும் வகையில், தான் ஆட்சிக்கு வந்தால் யாழ் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லாமல் செய்யப்பட்டு அங்கு துரித கதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதியளித்திருக்கிறது. பலாலி விமானத்தளம் சர்வதேச தரத்துக்குத் தரமுயர்த்தப்படும் எனவும் கட்சி அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். நாட்டினது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை எட்டும் முகமாக 13ஆவது சட்டத் திருத்தத்திற்கு அமைவாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அப்பாலும் செல்வதற்குத் தாங்கள் தயார் என மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூறுகிறது. இருப்பினும், காவல்துறை மற்றும் காணி ஆகிய முக்கியமான அம்சங்களில் மாகாண அரசுகளுடன் அதிகாரம் பகிரப்படாது என குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், நாட்டினது இனப்பிணக்கிற்குச் சுயாட்சி வழியமைந்த தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என நாட்டினது தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. ‘தமிழர்களது தாயகமான ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலமைந்த தீர்வு முன்வைக்கப்படவேண்டும்’ என சிறிலங்காவின் தமிழ் அரசியல் கட்சிகளுள் முதன்மையானதாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாதிட்டு வருகிறது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிவருகிறது. 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதோடு குறித்த சில அதிகாரங்கள் மத்தியிலும் இருக்கவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் சனநாயகக் கட்சி கூறுகிறது.
இதேவாளை ‘ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே சட்டம்’: சிறிலங்கா அதிபர்
அனைத்து இன மக்களும் எந்தவிதப் பாகுபாடுமின்றி சமத்துவத்துடன் ஒன்றாக வாழும் ஒரு தேசமாக சிறிலங்கா உதயமாகி இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேசம் மற்றும் ஒரே சட்டம் என்பவற்றை உறுதிப்படுத்துவதே எனது முழுமுதல் இலக்கு என குடியரசுத் தலைவர் ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார். நுவரெலியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார். இந்தத் தீவினது அனைத்து இன மக்களும் எந்தவிதமான பாகுபாடோ பாரபட்சமோ இன்றி வாழக்கூடிய நிலை தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்ட ராஜபக்ச அபிவிருத்திசார் செயற்பாடுகளின் பலாபலன்கள் நகரப்புற மக்களுக்கு மாத்திரமின்றி கிராமப்புற மக்களுக்கும் சமமாகக் கிடைப்பதைத் தனது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார். “நமது நாட்டுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை வெற்றியுடன் முறியடிப்பதற்காக, நாட்டினது இளம் சந்ததிக்கு ஒளிமயமான எதிர்காலத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு முதலீடாக பலம்மிக்க அரசினை உருவாக்குவதற்கு எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்” என ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்தார். மலையக மக்கள் தனியான ஒரு சமூகமல்ல, அவர்களும் சிறிலங்காவினரே என குடியரசுத் தலைவர் ராஜபக்ச சுட்டிக்காட்டினார். மலையகச் சிறார்கள் தொடர்ந்தும் தேயிலைத் தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடியாது என்றும் தங்களது சிறந்த எதிர்காலத்திற்காக அவர்கள் உயர் கல்விகளைக் கற்கவேண்டும் என்றும் வேண்டினார். அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் தமிழில் உரை நிகழ்த்திய ராஜபக்ச, ஒற்றையாட்சியின் கீழ், ஒரே விதமான சட்டத்தின் பிரகாரம் நாட்டின் அனைத்து இன மக்களும் சமமாக நடாத்தப்படும் வகையில் ஒரு தேசத்தினைக் கட்டியெழுப்புவதே தனது இலக்கு என வலியுறுத்தினார்.





No comments:

Post a Comment