*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Friday, April 23, 2010

எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) !லண்டனில் இருந்து தமிழரசன்!

தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்? இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன?சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா? இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா?அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா? தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்?சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து? பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை? தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது, இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்! தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா! இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின், வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்! நன்றி!
தமிழரசன்!





ருத்ரகுமாரன் தேர்தலில் போட்டி! நாடுகடந்த அரசாங்கத் தேர்தல் சூடு பிடிக்கிறது!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளரும் பிரபல சட்டத்தரணியுமான திரு விசுவநாதன் ருத்ரகுமாரன், அமெரிக்காவில் நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் தேசிய வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாக அங்கு இத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேர்தலானது பிராந்தியரீதியாகவும் தேசியரீதியாகவும் நடத்தப்படவுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகள் 8 பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் அதேவேளை தேசியரீதியிலும் இருவர் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிராந்தியந்திய அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக் குறிப்பி;ட்ட பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் தகமையுள்ள வாக்காளர் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களிக்கத் தகமையுள்ள அனைத்து வாக்காளர்களும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வாக்காளர் தமது பிராந்தியத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கும் தேசிய மட்டத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். அமெரிக்காவின் நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தலைப் பொறுப்பேற்று நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில (http://www.tgte-us.org/) வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பெயர் விபரங்கள் பின்வருமாறு: பிரதேச ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர் விபரம்: நியூ இங்கிலன்ட்: சுபா சுந்தரலிங்கம் நியூ யோர்க்: டாக்டர் செல்லத்துரை கே. தயாபரன், சிவஞானம் கணேசன், ஜெயபிரகாஷ் ஜெயலிங்கம் மிட் அட்லான்டிக்: பிரபாரன் பொன்னத்துரை சவுத்: டாக்டர் போல் குறொசெற் மிட் வெஸ்ற்: டாக்டர் தவே தவேந்திரராஜா நோர்த் வெஸ்ட்: சிவ சங்கரி சவுத் வெஸ்ட்: அலெக்ஸ் டொஸ் தேசிய ரீதியாக போட்டியிடும் வேட்பாளர்கள்: டாக்டர் ஜெராட் பிரான்சிஸ் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் எதிர்வரும் மே 2ம் திகதி உலகம் முழுவதும் தமிழர் வாழும் பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளது. பல்வேறு நாடுகளிலும் தற்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான காலம் முடிவடைந்து வேட்பாளர் விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் பலரும் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் தேர்தல் சகல இடங்களிலும் சூடுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




மீண்டும் மீண்டும் இந்தியா விபரீதத்தை விதைத்து வருகிறது தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது: வைகோ

பா‌ர்வ‌தி அ‌ம்மாளை குடியே‌ற்ற‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியதைக் க‌ண்டி‌த்து செ‌ன்னை எ‌ழு‌ம்பூ‌ரி‌ல் ம‌திமுக. சா‌‌ர்‌பி‌ல் இன்று நடைபெற்ற உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்தில் உரையாற்றிய வைகோ “ராஜபக்சே திருப்பதி கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது குழந்தைகள் பெங்களூரில் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா? மீண்டும் மீண்டும் விபரீதத்தை விதைத்து வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது” என்று கூறியுள்ளார்.
வைகோ, த‌‌மி‌ழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற‌ன் ஆகியோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான ம‌திமுகவினர் தவிர, த‌மி‌ழ் தே‌சிய க‌ட்‌சி, இ‌ந்து மு‌ன்ன‌ணி உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிகளை சே‌ர்‌ந்தவர்களும் ப‌ங்கே‌ற்றன‌ர்.
போராட்டத்தில் வைகோ பேசுகையி்ல, தள்ளாத வயதில் உடல் நலம் குன்றி சிகிச்சை பெறு வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை க்கு வந்தார். ஆனால் அவரை தமிழ் மண்ணில் இறங்க விடாமல் திருப்பி அனுப்பியதற்கு முதல்வர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.
இப்போது நாங்கள் கேட்கும் கேள்வி. நள்ளிரவுக்கு பிறகுதான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது தெரியும் என்றால் 10 மணிக்கே விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டதன் மர்மம் என்ன? ஐ.ஜி., டி.ஐ.ஜி., துணை கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகள் முன்கூட்டியே வந்ததன் மர்மம் என்ன?.
உங்களுக்கு தெரியாமல் போலீஸ் குவிக்கப்பட்டதா?
நானும், பழ.நெடுமாறனும், விமான நிலையத்திற்கு சென்றோம். பரபரப்பாக கூட்டத்தை கூட்டிச் செல்வது நல்லதல்ல என்பதால் சக்கர நாற்காலியை அனுப்பி நம்பிக்கைக்குரிய 2 பேரை மட்டும் அனுப்பி வைத்தோம். பார்வதி அம்மையாருக்கு உலகப்புகழ் வாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம்.
வயது முதிர்ந்த மூதாட்டியை வைத்து விடுதலைப் புலிகள் ஆதரவு தளத்தை உருவாக்க நாங்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கூறுவார் என்பதால்தான் விமான நிலையத்திற்கு நாங்கள் எல்லோரையும் அழைத்து செல்லவில்லை. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால்தான் அவரை திருப்பி அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்.
யாரையும் அழைத்து செல்லாத நாங்கள் எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். இதில் இருந்தே மத்திய அரசு அனுப்பவில்லை. தமிழக அரசுதான் அவரை திருப்பி அனுப்பி இருக்கிறது என்பது தெரிகிறது.
பன்னாட்டு விமான நிலையத்துக்கு பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் செல்லும் சாலையில் அனுமதி சீட்டுடன் சென்று கொண்டிருந்த என்னையும், பழ. நெடுமாறனையும் போலீசார் வழி மறிக்க காரணம் என்ன?.
போலீசார் என் தோள்பட்டையை பிடித்து கையை முறுக்கினர். அந்த அக்கிரமத்தை நானும் நெடுமாறனும் தட்டிக்கேட்டோம். எங்களிடம் விசிட்டர் பாஸ் இருக்கிறது. ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று கேட்டோம். ஆனாலும் எங்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.
பார்வதி அம்மையார் இந்தியாவுக்குள் வருவதற்கு தடை இருந்தால் மத்திய அரசின் கறுப்பு பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டுமே. மத்திய அரசு பரிசீலித்து தானே விசா வழங்கி இருக்கிறது. ஈவு, இரக்கம், மனிதநேயம் இருந்திருந்தால் பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறக்கி சிறிது நேரம் விமான நிலையத்தில் தங்க வைத்திருக்கலாமே?.
அவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார். 81 வயதாகி விட்டது. 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் நேசித்த கணவர் இல்லை. பிள்ளைகள் இல்லை. குடியிருந்த வீட்டையும் இடிக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து விம்மி கொண்டிருக்கிறார். அவரை திருப்பித்தான் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் கூட உங்களால் மாற்ற முடியுமே.
மத்திய உள்துறை அமைச்சரிடம் ஒரு வார்த்தை பேசியிருந்தால், திருப்பி அனுப்பப்பட்டிருக்க மாட்டார். பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன்.
இப்போது முதல்வர் சொல்கிறார். அந்த அம்மையார் விருப்பப்பட்டால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து நின்ற பிரபாகரனை ஈன்ற அந்த தாய் மடிப்பிச்சை கேட்க வேண்டுமா?.
தமிழக வரலாற்றில் இதற்கு மன்னிப்பே கிடையாது. நடந்த சம்பவத்திற்கு இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மலேசியாவில் அவர் இருக்கும் முகவரி அதிகாரிகளுக்கு தெரியும். அங்கு நேரில் சென்று நீங்கள் “எப்போதும் இந்தியாவுக்கு வரலாம்” என்று தெரிவிக்க வேண்டும். அதுதான் செய்த தவறுக்கு பிராயசித்தம் ஆகும்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசுதான் காரணம். ராஜபக்சே திருப்பதி கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது குழந்தைகள் பெங்களூரில் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா? மீண்டும் மீண்டும் விபரீதத்தை விதைத்து வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது.
எங்களைவிட லட்சக்கணக்கான வீர இளைஞர்கள் வருவார்கள். முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் செய்த தியாகம் வீண் போகாது என்றார் வைகோ.





Thursday, April 22, 2010

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர்:பாகம்: 06 : புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்

கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.
இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.
நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.
இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.
நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.
காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.
மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.
ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.
இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.
நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம் ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.
கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.
சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.
நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.
பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள் அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.
ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.
இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.
இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

1978‐ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7‐ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.
தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.
இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.
வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.
பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில் அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.

(இன்னும் வரும்…) நன்றி இனியொரு.





நாங்கள் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றோம்?

முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி முதல் தமிழீழ மக்கள் பேரவை (La Maison du Tamil Eelam) என்ற அமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை துவக்கி, இங்கு பிரான்சில் பாரளமன்றம் முன்பாக எமது போராட்டத்தை தொடர்ந்தோம்.
அதே நேரத்தில் பாராளமன்றத்திலும், ஐரோப்பிய பாரளமன்றத்திலும் எமது தேசத்தில் ஒரு மாபெரும் இனப்படுகொலையை செய்த சிறீலங்கா அரசுக்கெதிராக போர்க்குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை செய்தமைக்காக சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் கட்சிகளுடாக வலியுறுத்துகின்றேம்.

போர் குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் செயற்திட்டங்களையும் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை தமிழ் அமைப்புகள் ஊடாக செய்தோம். சிறீலங்காவுக்கெதிரான பொருளாதார தடையை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறீலங்காவுக்கான பலகோடி வருமானத்தை தேடிக்கொடுக்கும் GSP+ என்ற விசேட சலுகையை ரத்து செய்ய கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை ஆணையாளர் ஊடாக் அதற்காக ஆதாரமாக சிறீலங்காவில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை சான்றுகளாக கொண்டு சென்று வலியுறுத்தியதுடன் சர்வதேச மக்கள் நிதீமன்றம் டப்லினில் (Dublin) சிறீலங்காவுக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அமர்வுகளிலும் முழுமையான பங்களிப்பை கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 2009 யூன் மாதம் உலக்தமிழர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தில் பல நாட்டு தமிழ் அமைப்புகளுடன் நாமும் கலந்து பங்கு பற்றினோம். அதன் முதல் அமர்வும் அந்த அமைப்பின் வேலைத்திட்டங்களின் யாப்பு பாரிஸ்ல் ஓகஸ்ட் மாதம் ஐந்து கண்டங்களில் இருந்தும் மலேசியா மொறிசியஸ், அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நேர்ர்வே, சுவீடன் கொலன்டஇ Nஐர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிற்சலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தமிழ் அமைப்புக்கள; அறிவியல் ஆய்வாளர்களின் முன்னிலையில் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கவும் அதன் ஆரம்ப உறுப்பினர்களாக நாமும் இருக்கின்றோம்.

அந்த உலகத்தமிழர் அமைப்பின் ஊடாக தாயகத்தில் வாழும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நிவாரணங்களை செய்து வருகின்றோம். இந்த உலகத்தமிழர் பேரவை ஆரம்பமாகி பல செயற்திட்டங்களை கொண்டு சென்ற நாம் அதன் இரண்டாவது அமர்வு பிரித்தானியா பாராளமன்றத்தில் நடாத்தியிருந்தோம்.
அந்த அமர்வில் அமெரிக்கா, நோர்வே அரசியலவாதிகள், விசேட பார்வையாளர்களாக வந்தது மட்டுமல்லாது பலநாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்திகளையும் கூறியிருந்தனர். அதற்கு மேலாக இங்கிலாத்தின் வெளிநாட்டமைச்சமைச்சர் மிலிபிரான்ட் இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து எமது போராட்டம் நியாயமானது சிறீலங்காவில் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும் அங்கே நடைபெற்ற போர்க்குற்றங்களுக் விசாரணை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்று அங்கே பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. முற்றும் பிரான்சு மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழரின் தனித்தமிழீழ என்ற கோரிக்கை மீள்வலியுறுத்து கருத்துக்கணிப்பை தான் வரவேற்பதாகவும் கூறினர்கள்.
அந்த கருத்துக்கணிப்பை நாம் பிரான்சில் 2009 டிசெம்பர் 12, 13ம் திகதிகளில் செய்து 32000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் தனித்தமிழீழம் என்ற கோரியை ஏற்று வாக்களிப்பு மூலம் வலியுத்தினார்கள்.
இந்த கருத்துக்கணிப்பை மக்களின் தீர்ப்பை பிரான்சு நாட்டு அரசும், ஐரோப்பிய பாரளமன்றத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இன்று நாம் புலம்பெயர் நாடுகளில் பலமான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில், முள்ளிவாய்க்காலில் எமக்கு ஒரு பேரழிவு ஏற்பட்டதேயொழிய எமது தாயகத்திற்கான போராட்டம் நின்று விடவில்லை. அதனையே நாம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பலவழிகளில் செய்து வருகின்றோம்.
இன்று பிரான்சில் ஒரு தேசியக்கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் நாம் இதுவரைகாலமும் செய்த செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கம் மூலமாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம.
தமிழீழத்தை நோக்கி பயணத்தை ஒரு தேசிய கடமையாக எடுத்து சென்று கொண்டிக்கும் எம் மேல் நம்பிக்கை கொண்டு எம்மை ஆதரித்து நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும்படி அனைத்து புலம்பெயர் தமிழ்மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
தமிழீழ மக்கள் பேரவை








கண்ணீரும் கட்டுநாயக்காவும்

இந்து மாகடலின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் சர்வதேச அரங்கில் சிறிலங்காத் தீர்வுக்கு அதன் பருமனுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் உண்டு இதனால் அதன் துறைமுகங்களுக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கும் பெரும் செல்வாக்கு இருப்பதை பார்க்கலாம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் சிறிலங்காவின் ஒற்றை வான்வழிப் போக்குவரத்துப் பாதையாக இடம்பெறுகிறது கொழும்பில் குழப்பமும் அமைதியின்மையும் தோன்றுவதற்கு முன்பு பெருமளவு மேற்கு கிழக்கு உல்லாசப் பயணிகள் கட்டுநாயக்கா ஊடாக வந்து போயினர் இதனால் சிறிலங்கா பெரும் வருகையை ஈட்டியது உல்லாசப் பயணிகள் வருகை குறைந்ததோடு இன்று வருவாயும் குன்றி விட்டது. அவர்கள் மாலைதீவுகள் போன்ற அமைதிப் பூங்காக்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டன.சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான எயர் லங்கா என்றும் சிறிலங்கன் என்றும் பெயரிடப்பட்ட பயணிகள் விமான சேவையும் நோய் வாய்ப்பட்டு நிறுத்தப்படும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது உல்லாசப் பயணிகள் வருகைக் குறைவால் மாத்திரமல்லாமல் எயர் லங்கா விமானத்தில் பறப்பதில்லை என்ற உலகத் தமிழர்களின் தீர்மானமும் அதன் வீழ்ச்சிக் குறிய காரணமாக அமைகின்றது கட்டுநாயக்காவின் பயணிகள் ஏற்ற இறக்கப் புள்ளி விபரங்களின் படி இந்த நிலையத்தை மிகக் கூடுதலாகப் பயன் படுத்துபவர்களில் ஈழத் தமிழர்கள் முன்னணியில் இடம் வகிக்கின்றன பல சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிற நாட்டு விமானங்களில் ஏறித் தமது பயணங்களை மேற்கொள்கின்றனர் இவர்கள் தமது விமான சேவையைப் பயன் படுத்துவதில்லை என்பதை சிறிலங்கா அரசு நன்கு அறியும் இதனால் தமிழ்ப் பயணிகள் மீதான வெறுப்பு அதிகாரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது அரசின் விமான சேவையைப் பயன் படுத்துவதைத் தவிர்த்தாலும் தமிழர்களால் விமான நிலையப் பயன் பாட்டைத் தவிர்க்க முடியவில்லை தீவை விட்டு வெளியேறுவதற்கு அவர்களுக்கு கிடைத்த ஒரேயொரு பாதை இது தான்.விமான நிலையங்களைக் கதையின் களமாக அமைக்கும் பாரம்பரியம் அண்மைக் காலப் படைப்பாளிகள் மத்தியில் காணப்படுகிறது மிக சுவாரஸ்யமான இலக்கியங்கள் பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ளன திரைப்படங்களும் விமான நிலையங்களை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன மனித வரலாற்றின் பெரும் பகுதி விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப் படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர் தனி மனிதர்கள் தமது வாழ் விடங்களில் தமக்கே உரிய அடையாளங்களைப் பதிப்பது போல் விமான நிலையங்களை நடத்தும் நாடுகளும் தமது பிரத்தியேக அடையாளங்களையும் குணாம்சங்களையும் பதிப்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர் அனேக விமான நிலையங்களில் சுதந்திர நடமாட்டம் தங்கு தடையற்ற போக்கு வரவு காணப்படுகிறது ஒரு சிலவற்றில் அச்சமும் பீதியும் அடுத்தது என்ன நடக்கும் என்ற நடுக்கமும் இருக்கின்றன இப்படியான விமான நிலையங்களில் ஒன்று தான் கட்டுநாயக்கா.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிறிதோர் தரமான விமான நிலையத்தில் காணப்படாத தனித்துவமான அம்சம் இருப்பதை நாம் அறிவோம் சர்வதேச பயணிகள் பறப்பை மேற்கொள்ளும் கட்டு நாயக்கா விமான நிலையத்தின் ஒரு புறத்தே கீபீர், மிக் போன்ற போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இவை தமிழர் பகுதிகள் மீது குண்டு வீச்சை மேற்கொள்வதாகப் புறப்படும் போது பயணிகள் விமானங்கள் பயன்படுத்தும் ஓடு பாதையைப் பயன்படுத்துகின்றன இது வழமைக்கு மாறான செயற்பாடு போர் விமான ஓட்டிகளும் பாரமரிப்பாளர்களும் கட்டுநாயக்கா நிலையத்தில் வாழ்கின்றனர் இதனால் கட்டுநாயக்கா விமான நிலையம் ஒரு இராணுவ வலயமாகவும் இடம் பெறுகிறது தமிழீழ விடுலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானப் படை நிலைகளைத் தாக்கிய போது பயணிகள் விமான நிலையம் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டனர் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அவதானமாக இருந்தனர் இதைப் போன்ற கவனிப்பு சிறிலங்கா விமானப் படையிடம் இருந்ததில்லை அவர்கள் மனம் போல் தமிழர் குடியிருப்புக்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிக் கூடங்கள் என்பன மீது குண்டு வீச்சு நடத்தினர்;.எனவே கட்டுநாயக்கா ஈழத்தமிழனின் கண்ணீரும் குருதியும் நிறைந்த இடம் என்று கூறுவதில் தவறில்லை அரச பயங்கர வாதம் நடை முறையில் இருக்கும் விமான நிலையமாக கட்டுநாயக்கா இருக்கிறது தமிர்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அரங்கேறுகினறன காணமாற் போதல்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களிடம் பணம் பறித்தல்கள் சித்திரவதைகள் கடத்தல்கள் எனக் குற்றவியல் பட்டியல் நீண்டு செல்கிறது பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஐபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வகைக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக அமைகிறது இந்த அமைப்பில் தமிழ் இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மோப்ப நாய்கள் போல் செயற்பட்டு பணம் பறிப்பதற்குப் பொருத்தமான தமிழர்களைத் தேடிப் பிடிக்கின்றனர் இந்த வகை இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் கருணா குழு, புலனாய்வு இரட்டை முகவர்கள் சிங்களவனின் அடிவருடிகளாகவும் தமிழனைக் காட்டிக் கொடுப்பவர்களாகவும் செயற்படுகிறார்கள்.பட்ட துன்பங்கள் போதும் இனியாவது வெளியில் போய் சுகமாய் இருப்போம்;;, சொந்த பந்தங்களைச் சந்தோசப்படுத்துவம் கணவரிடம் போய்ச்சேருவம் என்றெல்லாம் பல கற்பனைகளோடு கட்டுநாயக்கா வந்தால் சோதனைகளை முடித்துக்கொண்டு;; சுமைகளை லிப்டில் போட்டுவிட்டு எமிக்கிரேசன் பதிவு செய்ததும் விமானத்தில் ஏறுவதுதான் பாக்கி என நினைத்துக் கொண்டு வலம் புறம் திரும்பினால் பாசக்கயிற்றோடு இயமதூதுவர்கள். இவர்களிடமிருந்து தப்பி வெளியேறினால் அவர்கள் மறுபிறப்புத்தான் என்று சொல்லும் அளவுக்கு கட்டுநாயக்கா கதை நீண்டு செல்கின்றது. பயங்கர வாதத்தையே அடியோடு அழித்து விட்டதாக உலகிற்கு அம்பலப்படுத்திய சிங்கள அரசு உயிரோடு தப்பிய சிலபுலிகள் வெளிநாடு ஓடுவதாக கூறிக்கொண்டு ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கைது செய்தல், கசக்கிப்பிழிதல் என கைவரிசையைக் காட்டுகிறது இதில் வெளிச்சத்திற்கு வருவது ஓரிரு சம்பவந்தான் மீதெல்லாம் மூடி மறைக்கப்படுகிறது ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கானவர்கள் கட்டுநாயக்கா கண்ணாடி அறைக்குள் தள்ளப்படுகின்றார்கள்.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதியதொரு பணம் பறிக்கும் நடைமுறை வழமைக்கு வந்துள்ளது. பல தமிழர்கள் பாதிப்படைய தொடங்கியுள்ளார்கள். இமிக்கிரேசன் முடித்துக் கொண்டு விமாத்தில் ஏறப்போகும் இடைவழியில் நடக்கும் சம்பவம். பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்ளும் பாதுகாப்பு குழு வழியால் போகும் தமிழர்களை குறிவைத்து செயற்படுகின்றனர். தமிழர்களிடம் கடவுச்சீட்டை வேண்டி திருப்பி திருப்பி பார்த்த கையோடு அவரை சந்தேக நபராக்கி விடுவார்கள். தலை அல்லது கை காட்டும் திசையை பார்த்தால் கறுப்பு கண்ணாடி அறை தெரியும் அங்கு சென்றால் அவலக்குரல்கள், கடும்மையான விசாரணை, பல இடங்களுக்கு தொடர்பு எடுத்து தகவல் கேட்பது போல் பாசங்கு, அனைத்து பொருட்களும் பரிசோணை என்ற போர்வையில் களையப்படும். களையப்பட்ட பின்னர் அவர்கள் வேறு அறைக்கு மாற்றப்படு சிலர் தடுத்து வைப்பு, சிலர் நிலை தெரியவராது, சிலர் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே விடுவிக்கப்படுவர் அவர்கள் பயபீதியில் அவசர அவசரமாக பொருட்களை எடுத்து கொண்டு விமானம் நோக்கி ஒடும் அப்பாவிகள் பாதுகாப்பு குழுவினரின் பணப்பையையும் நிரம்பி விட்டுதான் ஒடுகின்றோம் என்ற விடயம் பின்னர் தான் தெரியவருகின்றது. பல டொலர் தாள்கள் இருக்காது. பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் சோக உண்மை சம்பவங்கள். விமான நிலையத்திலும் பணம் பறிப்பு, தனி மனித சுகந்திரம், சுகந்திர நடமாட்டம் பறிக்கப்படுகின்றது.சிறிலங்காவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதோடு நின்று விடாது மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்க்குமாறு மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.




இமாச்சலப்பிரதேசத்தில் பதுங்கி இருந்த நித்யானந்தா கைது

நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செக்ஸ் லீலையை நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் என்பவர் ரகசியமாக படம் பிடித்து அம்பலமாக்கினார். நித்யானந்தாசாமியார் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதையடுத்து தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கர்நாடக போலீசார் நித்யானந்தா சாமியை தேடி வந்தனர். ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாமியார் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று சொல்லி மாயமாகி விட்டார். மடத்தின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர் எங்கு போனார் என்பது மர்மமாக இருந்தது. கடந்த 45 நாட்களாக அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் இமாச்சலபிரதேசத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கர்நாடக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இமாச்சலபிரதேச போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது சோலன் மாவட்டம் ஆர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். நித்யானந்தாவிடம் போலீசார் அங்கு வைத்தே முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். அவரை பெங்களூர் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். நித்யானந்தா கொடுக்கும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நித்யானந்தா கைது செய்யப்பட்டதால் அவரது தியான பீட சீடர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




இலங்கை வரும்படி அழைப்பு � புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!

ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான். கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம். விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம். கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.இந்த விழாவின் தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணிரத்னம்.”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி. சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!




அன்றைய இரவில் பார்வதியம்மாளுக்கு விமானத்தில் நடந்தது என்ன..?

பக்கவாதம், மறதி, உடல் சோர்வு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வியாதிகளால் பார்வதி அம்மாளுக்கு மலேசியாவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கே சென்னையில் உள்ள மருத்துவ வசதிகளை சுட்டிக்காட்டி செல்லும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.அதனால்தான் மலேசியாவில் இருக்கும் ஈழத் தமிழர்கள் சிலர், சிவாஜிலிங்கத்தின் உறவினர்களோடு பேசி, அவரைச் சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார்களாம்.. பார்வதி அம்மாளைத் தாங்கிய விமானம் சென்னை வந்திறங்கிய உடனேயே அவரை விமானத்தில் இருந்து கீழே இறங்க விடாதபடி அதிகாரிகள் கெடுபிடி செய்ய..அந்த அம்மாளின் உதவிக்காக உடன் வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண், “எதற்காக அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். “பார்வதி அம்மாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்” என்றார்களாம் விமான நிலைய அதிகாரிகள். அதோடு அதே விமானத்தில் பார்வதி அம்மாளை திருப்பியனுப்பும் முடிவை அவர்கள் சொல்ல..பயணக் களைப்பில் இருந்த அந்த மூதாட்டி, “செத்த நேரம் ஓய்வு எடுக்கணுமே?” என்றாராம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.மலேசியாவில் பார்வதி அம்மாளுக்கு வழங்கப்பட்ட விசாவின் காலக்கெடுவும் அன்றோடு முடிந்திருந்த நிலையில், அங்கே திரும்பிச் செல்வதும் சாத்தியமற்றதாக.. விமான நிலைய அதிகாரிகளிடம், “புலிகள் இயக்கத்தில் பார்வதி அம்மாள் உறுப்பினராக இல்லை என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்கெனவே விசாரித்துவிட்டது. அதன் பிறகே அங்கிருந்து வெளியே செல்ல ஆறு மாத விசா கிடைத்தது. இதற்கிடையில் மலேசிய விசாவும் கிடைத்துவிட்டது. அதனால் பார்வதி அம்மாள் வேறு எந்த நாட்டுக்குமே போக முடியாது” என்று சொல்லி மறுபடியும் அனுமதிக்காகப் போராடியிருக்கிறார் விஜயலட்சுமி.அதற்கும் அசைந்து கொடுக்காமல், பார்வதி அம்மாளை நள்ளிரவில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.பார்வதி அம்மாள் போன வேகத்தில் திரும்பி வந்ததைக் கண்ட மலேசிய அரசு அவசர கதியில் அவருக்கு ஒரு மாத கால விசாவை வழங்கியுள்ளது. அங்கு போய் இறங்கியதுமே அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது. “ஐயா.. ஐயா..” என தன் கணவர் வேலுப்பிள்ளை நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தாராம் பார்வதி அம்மாள். “சென்னைக்குப் போகலையா..? என்னை எப்போ சென்னைக்கு அழைச்சுட்டுப் போகப் போறீங்க..?” என கேட்டிருக்கிறார்.சென்னை போய் திரும்பி வந்ததே அவருக்கு முழுமையாகப் பதிவாகவில்லையாம். அதை மெதுவாக எடுத்துச் சொன்னதுமே, “எதுக்கு அனுப்புனாங்க.. அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. அவருக்கு என்ன பண்ணிட்டோம்..?” என கலங்கியிருக்கிறார்.




Wednesday, April 21, 2010

தமிழ்நாட்டு சஞ்சிகையில் வெளிவந்தவை என்னால் கூறப்படாதவை - ருத்ரகுமாரன் விளக்கம்

எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. என விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அன்பான தமிழ்நாட்டு உறவுகளே!

ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று, தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலக சமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும்.இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009ம் ஆண்டு யூன் மாதம் 16ம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் [அமெரிக்கா]

பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் [கனடா]

வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் [அமெரிக்கா]

சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் [அமெரிக்கா]

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் [அமெரிக்கா]

பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி [மலேசியா]

சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் [அமெரிக்கா]

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் [அவுஸ்திரேலியா] பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா [சுவீடன்]

பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா [பிரித்தானியா]

கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் [பிரித்தானியா]

இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2ம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை மே மாதம் 17-19 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம். விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு [post LTTE organisation] என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது. அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலக ரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கு ஊடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழ்நாட்டின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம். நன்றியுடன் விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்

தொடர்புகளுக்கு: : info@govtamileelam.org


















இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகும்

உலகில் வேறெங்கும் இப்படி நடந்திருக்காது, வரலாற்றில் கூட படித்திருக்க மாட்டோம், அப்படிப்பட்ட ஒரு ஈவிரக்கமற்ற மனிதாபிமானப் படுகொலை இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து 6 மாத கால (மருத்துவ) விசா பெற்று விமானத்தில் சென்னை வந்துள்ளார். அவரை விமானத்திலிருந்தே இறங்க விடாமல், அதிலேயே அமர வைத்து, “உங்களுக்கு தவறாக விசா வழங்கப்பட்டுள்ளது, நாங்கள் உங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது” என்று ‘மிகுந்த கரிசண’த்துடன் கூறி, அவரை அதே விமானத்தில் மீண்டும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்! இந்திய அரசிடமிருந்தோ அல்லது அதன் குடியேற்றத் துறை அதிகாரிகளிடமிருந்தோ மனிதாபிமானத்தை எதிர்பார்க்கும் அளவிற்கு நிச்சயமாகத் தமிழர்கள் முட்டாள்கல்ல. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நீடித்த அமைத்தித் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் நிலையை விளக்கிவிட்டு, அந்தத் தமிழர்களை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு ‘ரா’ முதல் ராடார் வரை இரகசியமாக அளித்து ‘இனப் படுகொலையை துரிதமாக நடத்தி முடி’ என்று ஊக்கப்படுத்திய அரசல்லவா இந்திய அரசு? எனவே, 81 வயதான ஒரு மூதாட்டியை - அவர் 3 மணி நேரம் பயணம் செய்து களைப்புற்றிருந்த நிலையிலும் - அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அதே விமானத்தில் ஏற்றி திருப்பி அனுப்ப குடியேற்றத் துறை கூறிய காரணம் என்ன என்பதைப் படிக்கும்போதுதான் வாயால் சிரிக்க முடியவில்லை. அந்தக் காரணத்தை ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உண்மையை மட்டுமே செய்தியாக்கி வெளியிடும் பாரம்பரியமிக்க, தமிழக முதல்வர் கருணாநிதியினால் மிகவும் மதிக்கப்படும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. “கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி உரிய மருத்துவ விசாவுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதைக் கண்ட குடியேற்ற அதிகாரிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்” என்று அச்செய்தியை கூறத் துவங்கியுள்ள அந்த ஆங்கில இதழ், “அதற்குக் காரணம்: அவருடைய (பார்வதியின்) பெயர் மத்திய அரசின் எச்சரிக்கை சுற்றறிக்கை பட்டியலில் இருந்துதான். இந்த பட்டியலில் உள்ள ஒருவருக்கு விசா வழங்கவேண்டுமெனில், விசா வழங்கும் அதிகாரி, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அவர் அல்லது அவளுக்கு விசா வழங்க வேண்டும். பார்வதியின் பெயர் இந்தப் பட்டியலில் இருந்தும் அவருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது” என்று குடியேற்றத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது. விசா அதிகாரிக்கு அந்தப் பட்டியலைப் பற்றி தெரியாதா? இந்தப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றது எப்படி? அதையும் குடியேற்றத்துறை வட்டாரங்கள் அந்தப் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளன. பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், பார்வதியும் 2003ஆம் ஆண்டுவரை திருச்சி இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் இலங்கைக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு (ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது) மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களை மத்திய அரசு சேர்த்துவிட்டது என்று அச்செய்தி கூறுகிறது. நமது கேள்வி இதுதான்: யார் யாரெல்லாம் இந்தியா வரக்கூடாது என்கிற தடை பட்டியலில் பார்வதி அம்மாளின் பெயரும் இருக்கிறதென்றால், அந்தப் பட்டியலை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் இந்திய அரசின் தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அந்தப் பட்டியலைக் கண்ட பிறகுதானே விசா வழங்கு அதிகாரி எந்த ஒரு நபருக்கும் விசா வழங்குவதா கூடாதா என்பதை முடிவு செய்யமுடியும்? அதுமட்டுமின்றி, விசா கோருபவரின் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும், அந்த நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அது குறித்து ஆலோசனை பெற்றுதானே விசா அளிப்பு அதிகாரி செயல்படுகிறார்? இதுதானே நடைமுறையாக இருந்துவருகிறது? பிறகு பட்டியில் இடம்பெற்றவருக்கு எப்படி விசா வழங்கப்பட்டது? பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் நமது காதில் பூ சுற்றும் காரணமே தவிர வேறில்லை. அவர் இங்கே வருவதை விரும்பாத ‘அரசியல்’தான் இதற்குக் காரணமே தவிர, பட்டியலும் இல்லை, புடலங்காயும் இல்லை. எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தபோது அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் இருந்துவிட்டாய் என்பது அல்லது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்கிற புருடா உட்பட ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாடு கடத்துவது இந்தியாவின் குடியேற்றத்துறைக்குப் புதியதல்ல. முறையோடு உரிய விசா பெற்று வந்த பல ஈழத் தமிழர்களை இப்படி நாடுகடத்தியுள்ளது இந்திய குடியேற்றத்துறை. இப்போது நடந்துள்ளதன் பின்னணியில் அரசியல் உள்ளதோ என்பதைத்தான் சந்தேக்கிக்க வேண்டி உள்ளது. காவல் துறைக்கு தெரிந்தது, முதல்வருக்கு தெரியாதா? இன்றைக்கு தமிழக சட்டப் பேரவையில் இப்பிரச்சனையின் மீது கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய பல உறுப்பினர்கள் - காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் சுதர்சனம் தவிர- அனைவரும் பார்வதி அம்மாள் திரும்ப அனுப்பப்பட்டதைக் கண்டித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்து வரச் செய்து மருத்துவ சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர். இந்த விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, “இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடப்பதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன், அந்த அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால் அந்தச் செய்தி முறையாக உரிய வகையில் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சிகிச்சை பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பார்வதி அம்மையார் சார்பாக கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது என்றும், ஆனால் அது மாநில அரசுக்குத் தெரியாது என்றும் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் கூறியதிலிருந்து ஒரு உண்மை புலனாகிறது. ஏதோ மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியாமல், குடியேற்றத்துறை அறிந்திராத நிலையில் பார்வதி அம்மையார் மருத்துவ விசா பெற்றுக் கொண்டு வந்துவிடவில்லை, அவருக்கு மருத்துவ விசா வழங்க மத்திய அரசு சம்மதமளித்தப் பின்னரே விசா வழங்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது. ஆனால், பார்வதி அம்மாளை அழைத்துச் செல்ல மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலர் வைகோவும், பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்றபோது, அவர்கள் (விமானம் வருவதற்கு முன்னரே அங்கு சென்ற நிலையில்) பெருமளவிற்கு குவிக்கப்பட்டிருந்த தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்புப் படையின் கீழ் உள்ளது, அங்கு செல்வதற்கு நாங்கள் அனுமதிச் சீட்டு பெற்றுள்ளோம், எங்களைத் தடுத்து நிறுத்த நீங்கள் யார்? என்று அவர்கள் இருவரும் கேள்வி எழுப்ப பெரும் விவாதம் நடந்துள்ளது (இதைத்தான் ‘ஒரு தகராறு நடப்பதாக’ முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்). பார்வதி அம்மாள் சென்னை வர இருப்பது தமிழக காவல் துறைக்குத் தெரிகிறது, ஆனால் காவல் துறையின் பொறுப்பை தன்னக்கத்தே வைத்துள்ள தமிழக முதல்வர் அதுகுறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறி, அவருக்கே உரித்தான பாணியில் பழைய வரலாற்றை புரட்டிப்போட்டு அலசியுள்ளார். தமிழக முதல்வரைப் போலவே, குடியேற்றத் துறைக்கும் அவரது வருகை தெரியவில்லை. விமானத்தில் பார்வதி அம்மாளைப் பார்த்ததும் அவர்களுக்கும் ஆச்சரியம்! என்னே கதை விடல்? 81 வயதான பெண்மணி, பக்கவாதம் தாக்கி முடியாத நிலையில் சிகிச்சை பெற சென்னை வருகிறார். ஆனால் மனித உரிமை பிரகடனத்தையும், மானுட அணுகுமுறையையும் மருந்துக்கும் மதிக்காத மத்திய அரசும், எதுவானாலும் அதனை தனது ஆட்சிக்கு ஏற்படும் ஆபத்தாகவே பார்க்கும் மாநில முதல்வரும் இணைந்து அரங்கேற்றிய நாடகம்தான் இந்த நள்ளிரவு மனிதாபிமான படுகொலை. மனிதாபிமானத்திற்கு எதிரான இந்திய அரசின் உண்மை முகம் ஒரு நாள் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகும். அன்றைக்கு அது துணை நின்ற இனப் படுகொலை, நடத்திவரும் பழங்குடியினப் படுகொலை, இப்படிப்பட்ட மனிதாபிமான படுகொலை ஆகிய அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அது இந்தியாவின் ஜனநாயக முகத்திரையை கிழிக்கும்.




இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லா தாய் அன்னை பூபதி

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, “திகாடுமல்லை’ என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.இதன் ஆரம்பம், “மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்’ என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று “முறிந்தபனை’ நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?“நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெற்னமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.“பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்” – என்று “முறிந்தபனை’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 – 460).இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:“திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக “உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை’ மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்’.அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி – அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி “அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது’ என்றார்.அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் – அதன்பின்னரே பேச்சுவார்த்தை’ என்றார்.அன்னையர் முன்னணியினரோ, “”எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்” என்று கேட்டனர்.பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.’அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!“தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்’ என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.– பாவை சந்திரன்தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் து}க்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது!அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது.அன்னை பூபதி கண்களை மூட தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய்!




ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள்! திரு. பாலச்சந்திரன்.

ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம்.
ஈழத்தின் இறுதி யுத்த காலத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய கடிதங்கள் நெஞ்சுக்கு நீதியாக வெளிவரும்போதுதான் அவரது கண்ணீர்த் துளிகளின் எடையை அறிந்து கொள்ள முடியும். அவர் டெல்லிக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்காவிட்டால், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்துக் காப்பாற்றியிருக்க முடியாது என்றே உலகம் இப்போதும் நம்புகின்றது. அவர், பாலு தலைமையில் கனிமொழி குழுவினரை இலங்கைக்கு அனுப்பியிருக்காவிட்டால், அந்த முள்வேலி முகாமிலிருந்து இரண்டு இலட்சம் மக்களையாவது காப்பாற்றி வேறு இடங்களுக்கு அகற்றியிருக்க முடியாது என்று ஐ.நா. கூட நம்புகின்றது.
இப்போதும் கூட, தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடிதங்கள் எழுதுவதால்தான் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தமிழில் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகள் புரிந்த தமிழக முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் சிலர் புழுதி வாரித் தூற்றுவதைச் சகிக்க முடியாமல், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்குத் தனது குடும்பப் பிரச்சினையையே தீர்க்க நேரம் போதாமல் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு யார் வருகிறார்கள்? விமான நிலையத்திலிருந்து யார் போகிறார்கள்? அங்கிருந்து யார் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் என்பதையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பக்கம் அழகிரி - ஸ்டாலின் பிரச்சினை விசுவரூபம் கொள்கிறது. மற்றொரு பக்கம் மனைவியும் துணைவியும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். யார் தலைமாட்டில்? யார் கால் மாட்டில்? என்ற பிரச்சனை இன்றுவரை சோனியாவாலும் தீர்க்க முடியாததாகவே நீடிக்கின்றது. அதற்காக ஒரு அரை நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், அங்கேயும் தலைமாடு, கால்மாடு பிரச்சினை உருவாகிவிடுகின்றது.
அரசியல் வாழ்வில், தேவைக்கும் அதிகமாகப் பணத்தைச் சம்பாதித்து, இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டாலும், தேவைக்கு அளவிற்காவது நிம்மதியைச் சம்பாதிக்க முடியாத துக்கம் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது. வாலிப காலத்தில் அதிகமாக ஆசைப்பட்டதால் வாரிசுகள் தொகை அளவுக்கு மீறிஇ இப்போது அவரைத் தொல்லைப்படுத்தி வருகின்றது. மூத்த மகன் முத்து முதல், கடைக்குட்டி கனிமொழி வரை சொத்துக்கு மட்டும் சண்டை போட்டால் பரவாயில்லை, அவர்கள் பதவிகளுக்கும் போட்டி போடுவதால் சங்கடம் அவரது தலைக்குமேல் குந்தியே உள்ளது. தமிழகத்தை ஸ்டாலினுக்கும், டெல்லியை அழகிரிக்குமாகப் பகிர்ந்தாலும் பிரச்சினை தீர்வதாக இல்லை. ஆங்கிலம் புரியாத அழகிரி, தனக்குத் தோதான இடமாகத் தமிழகத்தையே தேர்வு செய்கிறார். கனிமொழியும் தனக்கு எதுவும் இல்லையா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். மூத்த மகன் முத்து குடும்பத்துடன் ஐக்கியப்பட்டு விட்டாலும், தான் தலைவரால் ஒதுக்கப்படுவதாகப் புலம்பிக்கொண்டுதான் உள்ளார்.
செல்வம் மட்டுமல்ல, ஊடகத் துறையும், சினிமாத் துறையும் கூட இப்போது கருணாநிதியிடம் அடைக்கலமாகியுள்ள நிலையில், அசக்க முடியாத சக்தியாக உருவாகிவரும் தனது குடும்பத்தில் சகோதர யுத்தம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே பாட்டி வடை சுட்ட கதை போல், அடிக்கடி தமிழீழ விடுதலைப் போர் இன்றைய நிலையை அடைந்ததற்கு சகோதர யுத்தமே காரணம் என்று தமது வாரிசுகளுக்கு கதை சொல்லி வருகின்றார்.
இத்தனை குடும்பக் குழப்பங்களுக்கு மத்தியில் அன்றாடம் அல்லாடும் மு. கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? மன்னிக்க வேண்டும்இ சோனியாவின் அன்புக் கட்டளைக்குப் பின்னர் எம்மை எல்லாம் ஈழத் தமிழர் என்று அழைப்பதைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர் என்றே விழித்து வருகின்றார். மயிலிடம் இறகு கோருவது போல், ராஜபக்ஷவிடம் தமிழர்களுக்கான உரிமைகளைக் கேரலாம் என்பதே தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் சோனியா சிந்தனை. அதை மீறி, மகிந்தருக்கு கோபம் வரும் வகையில் நடந்து மகிந்த சிந்தனை ஊடாக, இலங்கைத் தமிழருக்காக அவர் பெற்றுக் கொடுக்க விரும்பும் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? தேசியத் தலைவர் அவர்களது தாயார் பார்வதி அம்மாளைத் தமிழகத்தில் தரை இறங்க விடுவது தனது இலட்சியப் பயணத்திற்கு இடைஞ்சலாக அமையும் என்பதை மு. கருணாநிதி அவர்கள் புரிந்து கொண்டதில் என்ன தப்பைக் காண முடியும்?
தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சோனியா சிந்தனையும், மகிந்த சிந்தனையும் சந்திக்கும் இடத்தில் இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் இடத்தில்இ பார்ர்வதி அம்மாளின் தமிழகப் பயணம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரைத் திருப்பி மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பியதுடன், சோனியா சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க டெல்லிக்குக் கடிதம் எழுதும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் பலிகளையும், அவர்களோடிருந்த மக்களையும் அழித்துவிட்டதனால், சோனியாவிற்கு இருந்த பயங்கரவாத அச்சத்தைத் தீர்க்க முன்நின்று செயற்பட்ட மு. கருணாநிதி அவர்களது தியாகத்தை சோனியா காந்தி உணராமல் விட்டுவிடுவாரா?
ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் இன அழிப்பு புரிந்தபோது, அரை நாள் உண்ணாவிரதம் இருந்து சோனியாவின் மனத்தை மாற்றிய கருணாநிதி அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் முன்னைய தீர்மானத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து வைத்தியம் செய்துகொள்ள மீண்டும் ஒரு அரை நாளை உண்ணாவிரதத்திற்காக ஒதுக்கமாட்டாரா? மு. கருணாநிதி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்திய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சதி செய்தே, தற்போதைய முதல்வர் மு. கருணாநிதிக்குத் தெரியாமல் திருமதி பார்வதி அம்மாள் அவர்களைத் தமிழகத்தில் தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என ஆத்திரப்படும், அவ்வப்போது ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஜால்ரா போட்டுத் தன்னை நிரப்பிக்கொள்ளும் கி. வீரமணி சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா?
பாவம், முத்துக்குமாரன்... தமிழக மக்களை இவர்களிடமிருந்து மீட்க முயன்று தோற்றே போய்விட்டான்.




மேதகு வே.பிரபாகரன்..திருவேங்கடம் வேலுப்பிள்ளை..இப்பொழுது பார்வதி அம்மையார்…கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகளா…?

தமிழர் நலன்கள் குறித்து இந்திய பாராளுமன்றத்திலும் பேச்சு..! தமிழக சட்டசபையிலும் பேச்சு…! பிரபாகரன், வேலுப்பிள்ளை திருவேங்கடம் தொடர்ந்து பார்வதி அம்மையார்..இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கருணா மற்றும் பார்ப்பனிய சோனியா கும்பல்..!
தி.மு.க கருணாநிதிக்கு ஜெயலலிதா என்றால் ஜென்மப்பகை..ஏன் அந்த அம்மையார் இவரின் சொத்துக்களை பறித்து விட்டாரா..? முன்பு எம்.ஜி.ஆர் என்றால் இதே போன்று கருணாநிதிக்கு ஜென்மப்பகை..எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதி என்றால் மிகப்பெரும் ஊழல் பேர்வழி..அரிசியில் ஊழல் செய்து ஏழைகள் வயிற்றில் அடித்த மாபாதகன்..தமிழக சொத்துக்களை கொள்ளை அடிப்பவர் என்றே தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும்நம்பினார்..அதுதான் உண்மையும் கூட…
இந்த மாதிரி அரசியல் முகம் இருந்ததால் கருணாநிதி இதில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழ் அறிஞர் வேடம், இலக்கியவாதி வேடம், பத்திரிக்கையாளர் வேடம், கதை எழுதும் எழுத்தாளர் வேடம் எல்லாம் போடவேண்டிய நிலை ஏற்பட்டது..எம்.ஜி.ஆர் இறக்கும் வரை..! பிறகு ஜெயலலிதா அம்மையார் வந்தார்..இவரின் அணைத்து வித வேடங்களையும் எள்ளி நகையாடினார்..ஊழலும் கேளிக்கையும் செய்ததால் இந்த அம்மையார் போன பிறகு..மீண்டு வந்த கருணாநிதி பல கோடிக்கணக்கான ரூபாய்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து அடக்கினார்..முன்பு தப்பித்துக்கொள்ள போட்ட வேடங்களை உண்மை என்று தனது தொலைகாட்சி மற்றும் சினிமா உலகில் உள்ள பதர்களிடமும், இவரை விட மோசமாக உள்ள பத்திரிக்கையாளர்களிடம் தான் ஒரு மிகப்பெரும் தமிழ் அறிஞர் என்றும்..தமிழ் காவலர் என்றும்…” கலைஞர் என்றால் கலைஞர் தான்..என்ன பேச்சு….என்ன அறிவு..தமிழில் இவரைவிட்டால் இனி வேறு யாரும் இல்லை என்று..” தனது பிழைப்புவாதிகளிடம் தனது எடுபிடிகளிடம் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பரப்பி விட்டார்.. ! இந்த மோசடிக் கும்பலும் அவ்வாறே சொல்ல..பிறகு சன் டி.வி தொடங்கி இருக்கும் அணைத்து பத்திரிக்கைகளையும் வாங்கி, அதில் எல்லாம் தமிழ் – தமிழ்நாடு – தமிழர் என்றால் இனி கலைஞர் தான்…என்று ஒரு பிம்பத்தை..பெயரை..புகழை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது…இந்த பொம்பளை ஜெயலலிதா மட்டும்..இவ்வளவும் பெரிய பிராடு, என்றும் மிகப்பெரும் மோசடிப் பேர்வழி கருணாநிதி என்றும் முன்பை விட மிகப்பெரும் ஊழல் பேர்வழிதான் இந்த கருணாநிதி என்று தொடர்ந்து கருணாநிதியை அம்பலப்படுத்தி வந்தார்.. போதாதா..இந்த போலி தமிழ் பேசும் கிழவருக்கு..இந்த அம்மையார் மீது ஜென்மப்பகை கொள்வதற்கு..! சாகப்போகும் நேரத்தில் ஒரு பெரும் தலைவர்,தமிழர் தலைவர் என்ற பெயரை தன் முன்னே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே என்று கடும் சினம் கொள்கிறார். இவையெல்லாம் தமிழகத்தில் உள்ள மக்களிடம்…! புலம் பெயர் தமிழர்கள் மற்றும் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் கருணாநிதியை தமிழர் தலைவர் தமிழ் காவலர் என்று சும்மா உச்சரிக்க கூட வாய்வரவில்லை..ஏனெனில் உண்மை என்னவென்று தெரியும் அவர்களுக்கு..அவர்கள் என்ன..மண் வெட்டி வரப்பு கட்டவா.. உலக நாடுகளுக்கு சென்றுள்ளனர்..! இவை ஒருபுறமிக்க இவரின் அருகாமையிலேயே மாவீரன் என்றால் யார்..? தமிழரின் தலைவர் என்றால் யார்..? வீரம் என்றால் என்ன..? தமிழன் தமிழ் மக்களை உலக அரங்கில் தலை நிமிர்த்தி இருக்குமாறு செய்து கொண்டிருக்கும் தேசியத் தலைவர் என்றும்..மாவீரன் என்றும்..உலகத் தமிழர்களின் லட்சிய புருஷன் என்றும் பெயர் வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் நலன் ஒன்று தான் பிரதானம்..மற்றவை ஒன்றுமல்ல என்று உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் பிரபாகரன் வேறு..! உலக தமிழ் இளைஞர்களும் தமிழ் அறிஞர்களும் பெருமிதமும் நெஞ்சார தலைவராகவும் ஏற்றுக்கொண்டு விட்டனர் மேதகு வே.பிரபாகரனைஎன்றால் மிகையாகாது..! இப்பொழுது பொருத்திப் பாருங்கள் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகள் ஏன்..? என்று..! முன்பு, சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு சில விரல் விட்டு எண்ணும் தலைவர்கள் தான் இருந்தனர்..தமிழகத்தில் பெரியார் ஒருவர் மட்டும் என்று கொள்ளலாம்..! அவ்வளவுதான்..பிறகு சில நல்ல அரசியல்வாதிகள் இருந்தனர்.. ( உ.ம் ) காமாராஜர், கக்கன் போன்றவர்கள்..பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் என்று மக்கள் நலன் அல்லது ஒரு தமிழ் நெறியோடு வாழ்க்கை நடத்துவது என்று..! தன்னுடன் அரசியல் நடத்தும் ஜெயலலிதா தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல அக புற வாழ்வில்..அப்படியிருக்க ஜெயலலிதாவையே ஜென்மப் பகையாக கருதும் பொழுது..பிரபாகரனை அதைவிட நூறு மடங்கு தன் பரம் வைரியாக கருதவே முடியும் இயல்பாக..! தமிழ் நாட்டு கருணாநிதி அப்படியா..? ஜெயலலிதா அப்படியா..? காங்கிரஸ் பெருச்சாளிகளில் யாராவது உள்ளனரா..தமிழ் நெறியோடு வாழ்பவர்கள் என்று..? கருணாநிதிக்கு அதிகாரப்பூர்வமாக மூன்று மனைவிகள்..கணக்கில் வராதவை ஏராளம்..! அக புற வாழ்வில் மோசமான முன் எடுத்துக்காட்டு..இதில் தமிழ் அறிஞர், தமிழ் தலைவர் என்று பெயர் வாங்க வேண்டும்..என்றால் எப்படி..? அவ்வளவு மோசமானவர்கள் கிடையாது தமிழர்கள்…! தான் கடினமாக உழைத்து ஏராளமான ரூபாய்களை செலவு செய்து வாங்கிய..வாங்கி விடலாம் உலக தமிழ் தலைவர் என்ற கனவை, கெடுத்து குட்டிச்சுவராக்கிய பிரபாகரன் அவரின் பெற்றோர்… அவரை உயிரினும் மேலாக நேசிக்கும் எவரும் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகளே.. இதில் இவரை தமிழ் துரோகி, இன துரோகி என்றெல்லாம் இனிமேல் குற்றம் சுமத்த தேவையில்லை..அக புற வாழ்வில் ஒரு சாதாரண அரசியல் பிழைப்புவாதி..தமிழ் பேசும் பிழைப்புவாதி, பெரும் ஊழல்காரர்..தன் நலத்திற்க்காக எதையும் செய்யும் ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி என்றே கருத வேண்டும்..!
- நன்றி: ஈழதேசம்




யாழ் மக்களே உங்களால் பதில் கூற முடியுமா : ஒரு வேண்டுகோள் !

இறுதி யுத்தம் நடைபெற்று சுமார் 25,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் கொல்லப்பட்டு, போராடிய போராளிகள் பலர் இராணுவத்தால் அம்மணமாக கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, பெண் போராளிகளின் பிறப்பு உறுப்பில் வெடிபொருட்களை உட் செலுத்தி வெடிக்க வைத்து, கர்பிணியாக இருந்த தமிழ் தாய்மாரை கொலை செய்து பிறக்காத குழந்தையைக் கூட வெளியே எடுத்து கொலை செய்து, பதுங்கு குழிகளுக்குள் இருந்த எமது உறவுகளை அப்படியே கைக் குண்டை வீசி எறிந்து கொலை செய்து, தமிழ் பெண்களை மான பந்தப் படுத்தி பாலூட்டும் மார்புகளை அறுத்தெறிந்து அவமானப் படுத்திய சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து யாழ் தமிழ் இளைஞர்கள் இயங்குவதா ?என்ன கொடுமை இது ? என்ன கலாச்சார அழிவு இது. யாழ் மக்களே விழிப்புணர்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. உலகம் முழுதும் தமிழீழ உணர்வுகள் பொங்கி எழும் இத் தருணத்தில் யாழில் வசிக்கும் சில தமிழீழ தேசத்துரோகிகள், துணை இரானுவக் குழுக்களுடனும் இராணுவத்துடனும் இணைந்து தமது கைவரிசையை காட்டத்தொடங்கி இருகின்றனர். இவர்கள் யாழ் இளைஞர்களுக்கு ஆபாசப்பட குறுந்தகடுகளையும் போதை பொருட்களையும் இலவசமாக வழங்கிவருகின்றனர் இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது போராட்டப் பாதையில் இளைஞர்கள் செல்லாதிருக்க இராணுவம் கையாளும் யுக்திகள் இவை.உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறன் 1999 மே மாதம் யாழ் சுன்னாகம் பேரூந்து நிலையத்தின் அருகே, மாணவி ஒருவரின் கையை பிடித்து இழுத்து ஆபாசமாக நடந்துகொள்ள முயன்ற சிங்கள ராணுவத்தினர் மூவரை அருகே உள்ள அரசமரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர் யாழ் மக்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் கலாச்சார விழுமியங்களையும் தங்களின் விலைபோகாத மானத்தையும் நிரூபித்தனர்.ஆனால் இன்று சில விஷமிகளின் செயலால் யாழ்நகர் கலாச்சார சீரழிவுக்கு உள்ளாகி இருப்பதை நாம் மறுத்துவிடமுடியாது . புலு பிலிம் என்று அழைக்கப்படும் ஆபாச வீடியோக்கள், போதைப் பொருட்கள் இன்று யாழில் தாராளமாகக் கிடைக்கிறது. அண்மையில் அதிர்வுச் செய்தியில், யாழ் ராணுவத்துடன் யாழ் இளைஞர்கள் அணியும் பெண் இராணுவத்தினருடன் பெண்கள் அணியும் கிரிக்கட் விளையாடினார்கள் என்று அறிந்தோம். அப் போட்டி நன்றாகத்தானே நடந்தது, ஏன் விளையாடுவதுடன் நிறுத்தி கொண்டீர்கள் ராணுவத்துடன் சென்று அன்றைய தினத்தை சிறப்பித்துவிட்டு வரவேண்டியது தானே! எம் இனத்தையே சிதைத்தவனிடம் நீங்கள் செய்ய வேண்டிய செயல் இது தானா ? உங்களுக்கு வெக்கமாக இல்லையா ? செம்மணி முதல் முள்ளிவாய்க்கால் வரைக்கும் உங்கள் அக்கா தங்கையர்களை கெடுத்து புதைகுழி தோண்டி புதைத்தவனுடன் சென்று விளையாடப்போவதா ? நமக்காக குருதி சிந்தி போராடிய போராளிகளுக்கும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் செய்யக்கூடிய நன்றிக்கடனா ! இது ? எண்ணிப்பாருங்கள் !புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், குளிரிலும் , பனியிலும் , காற்றிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உளைத்து அனுப்பும் பணத்தை இதற்கா செலவிடுவது ? நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா ??தெல்லிப்பளை யுனியன் கல்லூரி மற்றும் மகாஜனா கல்லூரி மாணவிகளில் சிலர் கல்லூரிக்கு செல்லும் போது ராணுவத்தினர் அவர்களை பார்த்து ஹாய் ! என்றுசொல்லி நையாண்டி செய்வதும் பதிலுக்கு ஒருசில மாணவிகள் ஹாய்! சொல்லுவதும் அவர்களை பார்த்து சிரித்து காதல் களியாட்டங்களில் ஈடுபடுவது எமக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது . இதனை நாம் அறிவோம்.இது தவிர மேலும் சில கல்லூரி மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பாகி போய்விட்டது . ஏன் யாழ்நகரில் தமிழ் ஆண்களே இல்லையா ? போயும் போயும் எங்கள் அக்கா தங்கைகளின் உறுப்புகளில் துப்பாக்கிகளை விட்டு உயிருடன் வைத்து சுட்டு விளையடியவனிடமா நீங்கள் உறவாட விரும்புவது ???உணர்ச்சி நரம்பு அறுந்துவிட்டதா உங்களுக்கு ? உங்களுக்கு மூளை இல்லையா ? வெறும் ஜந்துகளா நீங்கள் ? ராணுவத்தின் கைப்பொம்மைகளா நீங்கள்? போராளிகள் செய்த தியாகங்கள் நீங்கள் ராணுவத்துடன் உறவாட தானா ? எண்ணிப் பாருங்கள் மக்களே !இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க யாழ் பஸ் நிலையத்திலும், ஆரியகுளம் சந்தியிலும் , இன்னும் சில இடங்களிலும் மாலை ஆறு மணியானதும் கூட்டம் கூடுகிறது ஏன் தெரியுமா ? அங்கே சிங்கள விலை மாதுக்கள் வந்து விடுவார்கள். அவர்களுடன் விலைபேசி அவர்களை ராணுவ முகாம்களுக்குள் சென்று காமக்களியாட்டங்களை அரகேற்றி கொள்ளத்தான்.அன்பார்ந்த யாழ் மக்களே தாயாக விடுதலைக்காய் நாம் கொடுத்துகொண்டிருகிற விலைகள் உங்களுக்கு தெரியும். இத்தருணத்தில் யாழில் நடந்து வரும் சம்பவங்கள் எம்மை மிகவும் வருத்தமடைய செய்கின்றன. நாம் இதனை பிரசுரிக்கவேண்டாம் என பல நாள் நினைத்தது உண்டு. ஆனால் இது காலத்தின் கட்டாயம். நீங்கள் தான் இந்த விஷகிருமிகளை இனம்கண்டு அவர்களை சமுதாயத்தின் மீது நிறுத்தி அவர்களையும் அவர்களின் செயல்களையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் .என்றுமே சிங்களவனுடன் நக்கி பிழைக்கிறவர்கள் நாங்கள் அல்ல என்பதை வழமை போல நீங்கள் நிருபிக்கவேண்டும். அதுமட்டுமில்லாது யாழ்நகரின் கலாச்சார விழுமியங்களையும் அதன் தடையங்களையும் காக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட தயாராகுங்கள் . உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை இது எனவே அதை பேணிப் பராமரியுங்கள்.





Tuesday, April 20, 2010

"தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது" - தமிழீழ தேசியத் தலைவர்

தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது"
- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரகன் அவர்கள்

தமிழீழ தாயக பூமியைப் பல்வேறு கூறுகளாகத் துண்டாடி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தூணாக விளங்கும் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது சிங்கள - இந்திய அரசுகளின் நெடுங்கால நிகழ்ச்சித் திட்டமாகத் திகழ்கின்றது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதவடிவத்தை எடுக்கத் தொடங்கியதில் இருந்து காலத்திற்குக் காலம் இதற்கான காய்நகர்த்தல்களில் சிங்கள -இந்திய அரசுகள் ஈடுபடுகின்ற பொழுதும், இவற்றைத் தடுத்து நிறுத்தித் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் இட்டுச்செல்லும் சக்தியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களும், தீர்க்கதரினமான முடிவுகளும் அமைவதை வரலாறு அடிக்கடி நினைவூட்டிக் கொள்கின்றது.
மிகப்பெரும் அரசியல் - வாழ்வியல் நெருக்கடியை இன்று எமது தமிழீழ தாயக உறவுகள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இவற்றைப் புறந்தள்ளிவிட்டு தமிழீழ தாயகத்தை இருகூறுகளாக துண்டாடும் நிகழ்ச்சித் திட்டத்தை வி.உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையிலான நாடுகடந்த அரசமைப்புக் குழு நடைமுறைப்படுத்த முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளையும்,சஞ்சலங்களையும் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக ஈழத்தீவில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமை தமிழர்களுக்கு இருப்பது போன்று, தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் அரசை நிறுவும் உரிமை முஸ்லிம் மக்களுக்கு இருப்பதாக அண்மையில் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையான, அனைத்துத் தமிழீழ மக்களும் (இஸ்லாமிய ஈழத்தமிழர்கள் உட்பட) மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியை அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
தமிழீழ தாயகம் என்பது இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களையும் தழுவிநிற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான வரலாற்றுத் தாயகமாகும். மத ரீதியாகப் பார்க்கும் பொழுதும் மூன்று மதங்களும் தமக்கேயுரித்தான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும், வழக்குகளையும், வாழ்வுமுறைமைகளையும் கொண்டுள்ள பொழுதும், மொழியாலும், வரலாற்றுத் தாயகத்தாலும் ஒன்றுபட்ட தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் அனைவரும் திகழ்வதை எவரும் மறுக்க முடியாது. மறுதலிக்கவும் முடியாது.
தமிழீழ தேசிய விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த வீரமறவர்களில் பல இஸ்லாமிய சகோதரர்கள் இருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவர்களின் வாழ்வும், வீரமரணமும் தமிழீழம் என்ற ஒரேயொரு உன்னத இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்ததை நாம் மறந்துவிட முடியாது. இறுதியாக வன்னி மண்ணில் நிகழ்ந்தேறிய யுத்தத்தில் லெப்.கேணல் தரத்தை சேர்ந்த முஸ்லிம் வீரமறவன் ஒருவர்கூட தமிழீழ தாயக விடுதலைக்காகத் தனது இன்னுயிரை ஈகம்செய்திருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகக் கூறுபோட்டு, எமது இஸ்லாமிய சகோதரர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்தும் திட்டமொன்றை நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் முன்வைப்பதன் அர்த்தபரிமாணத்தை, சிங்கள - இந்திய அரசுகளின் கடந்தகால நடவடிக்கைகளை ஆராய்வதன் ஊடாக நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை எவ்வாறு தமிழீழதேசியத் தலைவர் அவர்கள் முறியடித்தார் என்பதை அறிந்து கொள்வது, நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் போதுமானதாக அமையும்.
காலம்: நவம்பர் 1986. தமிழகத்தைத் தமது தளமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய அந்தக் காலப்பகுதியில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகத் துண்டாடும் தீர்வு யோசனை ஒன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழீழத்தில் முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாகவும், தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்கும் உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பதாகவும் தற்போது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் வியாக்கியானம் செய்வதற்கு ஒப்பான தீர்வுத் திட்டம் ஒன்றே அது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இந்த யோசனையை அங்கீகரித்த இந்திய அரசு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க முற்பட்டது. ஆனால் அதனை அடியோடு ஏற்க மறுத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தனது தீர்க்கதரிசமான எண்ணத்தாலும், முடிவாலும் சிங்கள - இந்திய சூழ்ச்சியை முறியடித்தார்.
அதுபற்றி போரும் சமாதானமும் நூலில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகையில்:
‘‘1986 நவம்பர் மாதம் 17, 18ஆம் நாட்களில் பங்களுரில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இந்த மாநாட்டில் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்படி, கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் திட்டம் ஒன்றை அவர் தயாரித்தார். வடகிழக்கைத் தனி மாநிலமாகக் கொண்ட தமிழர் தாயகக் கோரிக்கைக்கு சாவுமணி அடிக்கும் நோக்குடன், இனத்துவ, மத வேறுபாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் இந்த நாசகாரத் திட்டத்தை ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடம் மிகவும் சூழ்ச்சித் திறனுடன் தயாரித்திருந்தது.
இத் திட்டத்தின்படி, தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவர்களுக்குமாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைகள் மூன்று பிரதேசக் கூறுகளாக மாற்றியமைக்கப்படவிருந்தன. இத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் கிழக்கிலிருந்து துண்டாடப்பட்டு ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படும். திருகோணமலை நகரமும், துறைமுகமும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிங்கள மாநிலமாக மாற்றப்படும்.
இச் சிங்கள மாநிலம் சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ்ச் செயற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இணைந்ததாக முஸ்லிம் பிரதேசம் உருவாக்கப்படும். திருகோணமலையில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் (திருகோணமலை நகரம், துறைமுகம், சிங்களக் குடியிருப்புகள் தவிர்ந்த பகுதிகள்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளும் இணைந்ததாக தமிழர் மாகாணம் உருவாக்கப்படும்.
மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட இந்த எல்லைவரையறைத் திட்டம் சிங்களவர்களுக்கே சாதகமாக அமையப் பெற்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகமும், நகரமும் அடங்கியதாக கிழக்கில் பெரியளவு பிரதேசங்களைக் கொண்ட நிலப்பரப்பை சிங்களவருக்கு தாரைவார்த்துக் கொடுக்க இத் திட்டம் வழிசெய்தது. கிழக்கில் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்பை வடக்கு மாநிலத்துடன் இணைத்து, தமிழரின் தாயகக் கோரிக்கையை நிறைவு செய்யலாம் எனவும் ஜெயவர்த்தனா சிந்தித்தார்.
மூன்று கூறுகளைக் கொண்ட தனது எல்லை வரையறைத் திட்டத்தின் விபரங்களை இந்தியத் தூதுவர் டிக்சிட்டுக்கு விளக்கிய ஜெயவர்த்தனா, கிழக்கு மாகாணத்தில் வதியும் முஸ்லிம்கள், சிங்களவரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய அமைச்சர்களான சிதம்பரமும் நட்வார் சிங்கும் ஆலோசனை கூறியதன் அடிப்படையிலேயே இப் ‘புதிய யோசனைகள்' வகுக்கப்பட்டதாகக் கூறினார்
......ஈழத் தேசிய விடுதலை முன்னணியைப் பிளவுபடுத்தி, அம் முன்னணியில் அங்கம் வகித்த விடுதலை அமைப்புகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்த றோ புலனாய்வுத் துறையினர் தீட்டிய சதித் திட்டம் படுதோல்வியில் முடிந்தது. முன்பைவிடப் பல மடங்கு பலம்பெற்ற சக்தியாக புலிகள் இயக்கம் பூதாகர வளர்ச்சிபெற்றமை ரஜீவ் அரசுக்கு ஏமாற்றத்தையும்கடுப்பையும் ஏற்படுத்தியது.
அதுமட்டுமன்றி, இலங்கையின் இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் தலைமையை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமும் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு வித்தியாசமான ஆளுமையுடைய மனிதர். கொள்கையில் உருக்கை ஒத்த உறுதி உடையவர். நெருக்குவாரத்திற்கு நெகிழ்ந்து கொடுக்கமாட்டார். அதிகாரக்கெடுபிடிகளுக்கு அடிபணியமாட்டார். இப்படியான போக்குடைய ஒரு தலைவனை எப்படியாவது தனது வழிக்கு கொண்டுவரவேண்டும் என இந்திய அரசு கருதியது.
1986 நவம்பர் நடுப்பகுதியில் நிகழவிருக்கும் பங்களுர் பேச்சுகளுக்கு முன்னராக பிரபாகரனைப் படிமானப்படுத்த இந்திய அதிகார பீடம் எண்ணியது.
.....1986 நவம்பர் 8ஆம் நாள் அதிகாலை தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளதும் ஏனைய தமிழ் அமைப்புகளதும் இரகசியத் தங்குமிடங்கள், வீடுகள், முகாம்கள், பயிற்சிப் பாசறைகள் ஆகியவற்றைச் சூறையாடி ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியதுடன், அமைப்புகளின் தலைவர்களையும் கைதுசெய்தனர்.
பிரபாகரனும் நானும் அன்றைய நாள் அதிகாலை எமது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வௌவேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு சொல்லப்பட்டோம். அங்கு பல மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்கள் இருவரையும் பல கோணத்தில் நிறுத்தி படம் எடுத்தார்கள். கைரேகையைப் பதிவு செய்தார்கள். பண்பற்ற வார்த்தைகளால்அவமானப்படுத்தினார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இம்சைபோலத் தோன்றியது.
இழிவுபடுத்தி, சிறுமைப்படுத்தி பணியவைக்கலாம் என்ற கபட நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையானது பிரபாகரனைப் பொறுத்தவரை எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியது. பிரபாகரன் கொதிப்படைந்தார். ஒரு குற்றவாளிபோல இழிவுபடுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது சுய-கௌரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாகவும் அந்நிகழ்வை அவர் கருதினார். எந்த வகையிலும் இந்திய அழுத்தத்திற்கு நெகிழ்ந்து கொடுப்பதில்லை என உறுதிபூண்டார்.
....விடுதலைப் புலிகளின் தலைமையை மிரட்டிப் பணியவைத்து இந்திய சமரச முயற்சிக்கு விட்டுக்கொடுத்து இணங்க வைக்கும் தந்திரோபாயத்துடன் மத்திய, மாநில அரசுகளால் கூட்டாகத்திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையிலேயே இப் ‘புலி நடவடிக்கை' எடுக்கப்பட்டது என்பது எமக்கு நன்கு புலனாகியது.
ஒன்பது நாட்கள் எமது வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்பு, பிரபாகரனும் நானும் பேச்சுக்களுக்காக பங்களுர் அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தியாவின் சூத்திரதார நோக்கு எமக்குப் புலப்பட்டது. 1986 நவம்பர் 17ஆம் நாள். சென்னை நகரப் புறத்திலுள்ள தாம்பரம் விமானத் தளத்திலிருந்து இந்திய வான்படை விமானம் மூலம் பிரபாகரனும் நானும் பங்களுர் கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு ராஜ்பவன் விடுதியில் எம்மைத் தங்க வைத்தார்கள். அந்த விடுதிக்கு சென்றடைய இரவு 10 மணி ஆகிவிட்டது. ஒருபுறம் பசி வயிற்றைப் பிடுங்க, களைத்துச் சோர்ந்து போய் விடுதிக்கு சென்ற எம்முடன் இரவிரவாகப்பேச்சுக்களை நடத்தும் நோக்குடன் இந்திய அரச பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு காத்து நின்றது. இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் திரு.நட்வார் சிங், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.வெங்கடேஸ்வரன், வெளியுறவு அமைச்சின் இணைச் செயலர் குல்திப் சதேவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் திரு.டிக்சிட் ஆகியோர் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தை மூன்றுகூறுகளாகப் பிரிக்கும் ஜெயவர்த்தனாவின் எல்லை வரையறைத் திட்டத்தை உடனடியாகவே இந்திய பிரதிநிதிகள் எமக்கு எடுத்து விளக்கினார்கள்.
.....கிழக்கு மாகாணத்தின் விபரமான வரைபடம் ஒன்றை எமக்கு முன்பாக விரித்து, கிழக்கு மாகாணத்தை முக்கூறுபோடும் ஜெயவர்த்தனாவின் ‘புதிய திட்டம்' பற்றி எமக்கு விபரமாக விளக்கிக் கொண்டிருந்தார் திரு.டிக்சிட். இத் திட்டமானது வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை இறுதியாக ஒன்றிணைக்க வழிவகுக்கும் என்று கூறிய அவர் இதுவொரு தற்காலிக ஒழுங்கு என்றும் இத் திட்டம் பற்றிதொடர்ந்தது பேச்சுக்களை நடத்தி முன்னேற்றம் காணலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நள்ளிரவு பூராகவும் ஜெயவர்த்தனாவின் திட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்தி, எமது பொறுமையைக் கொலை செய்துவிட்டு, களைத்துப் போய்க் கடுப்புடனிருந்த பிரபாகரனைப் பார்த்து அத் திட்டம் பற்றி அவரது கருத்துக் கேட்டார் டிக்சிட். நான் எதிர்பார்த்ததுபோலவே வெடுக்கென்றுஇசுருக்கமாகப் பதிலளித்தார் பிரபாகரன். அவரது தொனியில் ஆத்திரம் தெறித்தது. ‘‘தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப் பிரிக்க முடியாது. ஜெயவர்த்தனா அதைப் பிரித்துக் கூறுபோட நாம் அனுமதிக்கப் போவதில்லை.'' என்று உறுதிபடச் சொன்னார்.
பிரபாகரனின் அந்த வசனத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபொழுது டிக்சிட்டின் முகம் சுருங்கியது. ஜெயவர்த்தனாவின் திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் ஆபத்துகளையும் நான் டிக்சிட்டுக்கு விளக்கிக் கூறினேன். விடுதலைப் புலிகளின் தலைமையோ அன்றித் தமிழீழ மக்களோ இத் திட்டத்தை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை தெட்டத் தெளிவாக அவரிடம் எடுத்துரைத்தேன்.
தனது நிலைப்பாட்டிலிருந்து பிரபாகரன் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை நன்குணர்ந்த இந்திய தூதுவர் தனதுமுயற்சியைக் கைவிட்டு, வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரனை எம்முடன் பேசுமாறு அழைத்தார்
....ஜெயவர்த்தனா அரசு முன்வைத்துள்ள திட்டம் தமிழ்மொழி வாரியான தாயகப் பிரதேசக் கோரிக்கையை ஒரு மட்டத்திற்கு நிறைவுசெய்ய முனைவதாகக் கூறிய வெங்கடேஸ்வரன், இதனை ஒரு இடைக்காலத் தீர்வாக நாம் கருதவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த இடைக்காலத் தீர்வை நாம் ஏற்றுக் கொண்டால், ரஜீவ் காந்திக்கு அது பெரும் ராஜதந்திர சாதனையாக அமையும் என்றும் சொன்னார்.
இந்த சார்க் உச்சிமாநாடு இந்தியப் பிரதமருக்கு ஒரு வெற்றிகரமான அரங்காக மாறுவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முடிவில்இ நாம் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்கும்படியும் வேண்டினார். பிரபாகரனால் சினத்தை அடக்க முடியவில்லை. அது சொற்களாகச் சீறியது. ‘‘ரஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்தி அவரது புகழை ஓங்கச் செய்வதற்காக எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை கைவிடச் சொல்கிறீர்களா?'' பிரபாகரனின் சீற்றத்தால் வெங்கடேஸ்வரன் ஆடிப்போனார்.
எமது உணர்ச்சியை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது எனச் சமாதானம் கூறிச் சமாளித்தார். அங்கிருந்து வெங்கடேஸ்வரன் நழுவிச் சென்றதை அடுத்து, நட்வர் சிங் எம்மை அணுகினார். அவர் பேச்சைத் தொடங்குவதற்கு முன்னரே நான் குறுக்கிட்டு, சிறீலங்கா அரசின் திட்டத்திலுள்ள குறைபாடுகளை எடுத்து விளக்கி, அந்த யோசனையை எமது இயக்கமும் எமது மக்களும் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறினேன்.
''தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடி, எமது முஸ்லிம் சகோதரர்களை அந்நியப்படுத்துவதற்கு ஏறத்தாள 24 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள - இந்திய அரசுகள் எடுத்த முயற்சியை தனது உறுதியான - தீர்க்கதரிசமான எண்ணங்களாலும், முடிவுகளாலும் தமிழீழ தேசியத் தலைவர் முறியடித்ததை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
முள்ளிவாய்க்காலில் வழிந்தோடிய தமிழ்க் குருதி காய்வதற்குள் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, மாற்று அரசியல் பாதையில் தமிழீழ தேசத்தை இட்டுச் செல்ல முற்பட்ட கே.பி குழுவினர், தற்பொழுது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினராகப் பரிணமித்து, தமிழீழ தாயகத்தை, தமிழ், முஸ்லிம் அரசுகளாகத் துண்டாடும் திட்டத்தை முன்வைத்திருப்பதன் சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் எல்லோரும் விண்வெளி விஞ்ஞானிகளாக மாறவேண்டியதில்லை.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, மாவீரர்களின் சத்திய வரலாற்றின் வழியில் எமது விடுதலையை வென்றெடுப்பதே எம்முன்னுள்ள ஒரேயொரு தெரிவு என்பதைப் புரிந்து கொண்டு, மாவீரர்களின் கனவை நனவாக்குவதே நாம் அனைவரும் எடுக்கக்கூடிய சரியான முடிவாக அமையும்.
நன்றி: ஈழமுரசு