பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வருவது குறித்து தமிழக அரசுக்கு எந்தவித தகவலும் இல்லை. விமான நிலையத்தில் ரகசியமாக அவருக்கு ஒரு சிலர் மட்டுமே வரவேற்பு அளிக்க சென்ற நிலை ஏற்பட்டதை பார்க்கும்போது, அந்தோ தமிழகமே என்று நினைக்கத் தோன்றுகிறது.பார்வதி அம்மாள் வருவது குறித்து மத்திய அரசிடம் மட்டுமே செய்தி தொடர்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் எனக்கு தகவல் கிடைத்து விமான நிலைய அதிகாரிகளை விசாரித்தபோது, அவர் மலேசியாவுக்கு திருப்பு அனுப்பட்டது தெரிய வந்தது.மீண்டும் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற அவரது சார்பில் அறிவிப்பு வெளியானால், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்த தயார். தேவைப்பட்டால் மத்திய அரசின் விளக்கத்தைப் பெற்று அவையில் தெரிவிக்கவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Monday, April 19, 2010
பிரபாகரன் தாயாருக்கு தமிழகத்தில் சிகிச்சை: நடவடிக்கை எடுப்பதாக கலைஞர் அறிவிப்பு

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment