*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

மகிந்தவின் புதல்வர்கள் சென்னை ஊடாக இந்தியா செல்வதாக வெளியான தகவல்களை அடுத்து சென்னை விமான நிலையம் பெரும் பரபரபபு

இந்தியாவில் பிரபல்யமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இரு புதல்வர்களும் சென்னை விமான நிலையம் ஊடாக இந்தியா செல்லப் போவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இன்று சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்பிற்குள்ளானது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர்கள் இருவர் சென்னை விமான நிலையத்திற்கு செல்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் முழு அளவில் தயாராக இருந்தனர். நாம் தமிழர் இயக்கம், பெரியார் திராவிடக் கழகத்தின் நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக ஜனாதிபதியின் புதல்வர்கள் இருவரும் சென்னை விமானநிலையத்தை அடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதிநேரத்தில் அவர்கள் வெளியில் வரவில்லை. ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்ட 50 காவற்துறை அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் வருவது தொடர்பான தகவலை அறிந்த பெரியார் திராவிட கழக போராளிகள் விமான நிலையத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 15 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் பிந்திக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் சென்னை விமானநிலையத்தின் உறுப்பினர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு மற்றுமொரு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.
எனினும் இரவு 8 மணியளவில் இவர்கள் மீளவும் சென்னை விமானநிலையத்திற்கு வரலாம் என மற்றுமொரு தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த போராளிகள் குவிந்திருந்தனர். எனினும் அவர்கள் சென்னை விமானநிலையத்தின் உள்ளக விமான சேவை மூலம் டெல்ல சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று பெங்களுரில் சென்னை பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதன் பிரதம விருந்தினராக தலாய்லாமா கலந்து கொள்கின்றார். பஞ்சாப் அணியில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இதனிடையே ஐபிஎல்லில் பினாமிகள் பேரில் பெருமளவு பணம் கட்டுப்பணமாக செலுத்தப்பட்டiமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருன்ற நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது புதல்வர்களும் இதில் பெருமளவு நிதியினை முதலீடு செய்திருக்கலாம் என்ற ஊகங்களும் இன்று ஊடக வட்டாரங்களில் எழுந்துள்ளன.. இது தொடர்பான தகவல்கள் அடுத்து வரும் நாட்களில் வெளிவரலாம் என என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் ஊடாக பெருமளவு பணம் முதலீடு செய்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




No comments:

Post a Comment