*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது : வி. ருத்ரகுமாரன் செவ்வி

ஆயுதப் போராட்டம் என்பதோ... வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது. ஈழத் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளின் சட்ட திட்டத்தை மதித்து செயல்படுவோம். சட்டவிரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.''
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி இந்திய வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் இதழுக்கு விசுவநாதன் ருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கியுள்ள சில நிமிட செவ்வியின் வடிவம்:-
கேள்வி : தேர்தல் பணி எப்படிப் போகிறது?
பதில் : இந்தத் தேர்தலில் உலகெங்கும் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் போட்டி போடலாம். அனைவருமே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கேற்ற முறையில் தேர்தல் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி : யார் நிஜமான வாக்காளர்கள் என்பது எப்படித் தெரியும்... இந்தத் தேர்தலிலும் கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருக்கிறதே?
பதில் : ஈழத்தமிழர்கள் அனைவருமே வாக்காளர்கள்தான். இதில் ஈழத் தலைவர்கள் அனைவருமே போட்டியிடப் போவதில்லை. ஆகவே, போட்டியிடாத தலைவர்கள் இந்த தேர்தலை முறைப்படி நடத்த உதவுவார்கள். அடையாள அட்டை காண்பித்தே வாக்குகளைப் போடமுடியும். எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு அல்ல. அந்தந்த ஊரில் நாங்கள் நியமிக்கும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். அனைத்துமே நியாயமான முறையில் நடத்தப்படும்.
கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
பதில் : ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது? ஆனால், ஆயுதப் போராட்டம் என்பதோ... வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது. ஈழத் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளின் சட்ட திட்டத்தை மதித்து செயல்படுவோம். சட்டவிரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.
கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசு எத்தகையதாக அமையும்?
பதில் : நடக்கிற தேர்தலில் இளைஞர்களையும், பெண்களையும் அதிக அளவு போட்டியிடக் கோரி வலியுறுத்துவோம். ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை எடுக்கிற அரசாகவும், மதச்சார்பு அற்றதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்.





No comments:

Post a Comment