*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்தது தான் ஏனோ? இந்தியா - பெரிய தேசம்; சிறிய இதயம் : குகதாசன் - கனடா

உயர்ந்த கோயிற் கோபுரங்கள், தாழ்ந்த உள்ளங்கள்! காந்தி தேசம், கருணையற்ற இராஜாங்கம்!! அன்னை இந்திரா தேசமே!!! இது தான் உன் தாய்மையா? ஓ! பாரத மாதாவே!!! உன் மைந்தர்கள் இராஜதந்திரிகளா? இல்லை இராட்சதர்களா? - ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட சிகிச்சை அளிப்பது தான் தர்மம்.
வந்து தங்கிப் போக இது தர்மசாலை இல்லை என்கிறார் சுவாமி.
ஆம், இந்த நாராயண சிவசங்கர் சுவாமிகள் தான் முள்ளிவாய்க்காலில் நர மாமிசத்தை உண்டு, தமிழ் மக்களின் இரத்தத்தையும் குடித்தனரா?
இந்த அன்னை பிரபாகரனைப் பெற்றது தான் குற்றமா? அவரைத்தான் கொன்று விட்டோம் என்கிறீர்களே! அப்படியானால் இன்னுமேன் அச்சம்?
கிறிஸ்தவர்களிற்கு ஜெருசலெம் மீது ஒரு பக்தி! இஸ்லாமியர்களிற்கு மக்கா மீது ஒரு மதிப்பு!! ஈழ இந்துக்களிற்கு இந்தியா மீது ஒரு அபிமானம்!!!
ஏகபத்தினி விரதனின் இராமேஸ்வரமும், சிவசக்தி “பார்வதிக்” கயிலையும், திரிபுரசுந்தரி சீர்காழியும், நான்மறைக் கூடல் மதுரை மீனாட்சியும், ஐங்கரனின் அருள்மிகு ஆலயங்களும், ஆறுமுகத்தானின் ஏழு படை வீடுகளும், அட்ட பாலகரின் அணையாத தீபங்களும், எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆலய மணிகளும், நவக்கிரகங்களிற்கும் கோவில் கொண்ட மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்ததது தான் ஏனோ?
இப்போது புரிகிறது நீ சிறீலங்கா நமோ நமோ தாயிலும் கொடியவள் என்று. அன்று அவள் விடுவித்தாள் இன்று நீ துரத்துகிறாயா?
ஆம் சிங்களம் பங்காளிப் பகையாளி இந்தியா தான் நிஜமான நிரந்தரப் பகையாளியா?
நிரூபன் சென் சொன்னார் பருத்தித்துறையில் நின்று அன்று இராம கிருஷ்ணரும், விவேகானந்தரும், காந்தியும், நேதாஜியும் பகவத்சிங்கும் பிறந்த மண் பாரத மண் என்று.
எங்கள் நேதாஜி பிரபாகரன் தான். காந்தி தேசத்தால் ஒழிந்த தலைவன் தான் தமிழ்ப் பகவத்சிங்.
சிறீலங்காவில் ஒரு சிங்கள ஒன்லி இந்து சமுத்திரத்தில் இந்தியா ஒன்லிப் பொலிசியா? ராஜீவ் காந்தியைப் பார்த்து ஜே ஆர் சொன்னார் நீ ஆசியாவின் பொலிஸ்காரனாய் இரு என்று.
நீ இராட்சதியாய் மாறியது எப்போது? காஞ்சியும் திருப்பதியும் பழனியும் இன்னுமாக எத்தனையோ திருத்தலங்களும், புண்ணிய நதிகளும் இமயமாய் உயர்ந்த பல்வேறு மலைக் கோயில்களும்
தரிசிக்க மட்டுந் தானா? இவைகள் எல்லாம் வெறும் கல்லும் மண்ணுமாகியது எப்போது? சிறிய ஈழம் வளரந்திருந்த போராட்டம், பெரிய இந்தியா சிறிய இதயம்.
சிறிய பிரதேசம், அதிக பிணங்கள் ஆறு முன்னே அடுத்த காயம்
முடிவாக இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்.




No comments:

Post a Comment