*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 3, 2010

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது உணருமா உலகத்தமிழினம்......?

“ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்டுரையைப் படித்தேன். ஆக்கத்தின் மூலம் எங்கிருந்தோ தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில குறிப்புக்கள். ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கு உரிமையுண்டு. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை எழுத வேண்டும். அத்தோடு, எது சரி, எது பிழை என்பதைக் கண்டறியக்கூடிய திறமையும் இருத்தல் அவசியம். பக்கப்பாடு இருக்கலாகாது.
அன்றய காலகட்டத்த்கில் புலிகள் உருவாகி போராட்டத்தில் இறங்கிய பொழுது தாயகத்தின் அரசியல்வாதிகள் திரு அமிர்தலிங்கம் உட்பட, தங்களுக்கென்று இயக்கங்களை உருவாக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு, புலிகளைத்தவிர எனய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குளுக்களாக மாறினார்கள். ஒரு சில இந்தியாவின் தோள் ஒட்டுக்குழுவாக இயங்கிவருகின்றது. இவர்களைப்பற்றி யாராவது விவாதிக்கின்றார்களா? இல்லையே.
ஆனால், இன்றோ அதே தமிழினம் தேசியக் கூட்டமைப்புக்கு மாறாகச் செயல்படத்தொடங்கியுள்ளது. புலம் பெயர்ந்த மக்கள் தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் அமைப்பினை ஆழமாக் பிளவு படுத்தி ஆனந்தம் காண அவா? காரணம் என்ன......? தமிழ் மக்கள் அன்றய காலத்திலிருந்து ஒற்றுமை எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாதவர்களா?
எமக்கு போட்டி, பொறாமை, அடக்குமுறை என்பன பிறப்பிலேயே வேரூண்டிவிட்டது. ஒற்றுமையின் ஆரம்பம் குடும்பம் வசிக்கும் மனை. அதாவது குடும்பத்தினில் ஒற்றுமை நிலவ வேண்டும். குடும்ப ஒற்றுமையின் பலம், கிராம ஒற்றுமைக்கு விஸ்தரிக்கப்படும். கிராம ஒற்றுமையின் எடுத்துக் காட்டு, நகரத்திற்கும், நகர ஒற்றுமையின் எடுத்துக்காட்டு நாட்டின் ஒற்றுமையையும் விஸ்தரிக்கும்.
ஒற்றுமை, இதன் விளக்கம்:பெயர்ச்சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். ஒற்றுமைக்கு ஆங்கிலக்கருத்து ஒன்றும் உண்டு. உருவ ஒற்றுமை. பல்கலைக்கழக அகரமுதலியில் ஒற்றுமைக்கு, பல அர்த்தங்களுண்டு. இயக்க நிலை ஒற்றுமை, நீரியல் ஒற்றுமை, சாயல் தோற்ற ஒற்றுமை, கருத்து இணக்கம், கருத்து ஒருமிப்பு, கருத்து ஒருமைப்பாடு, பொதுவான இசைவு, கருத்தொன்றிப்பு, இப்படி பல, பல அர்த்தங்கள்.
ஒருமைப்பாடு, இதன் விளக்கம்:
பெயர்ச் சொல்; ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஐக்கியம். மற்றய விளக்கம்- கூட்டு ஒருமைப்பாடு, கூட்டுப் பொறுப்புணர்வு, பல்லின ஒருமைப்பாடு, கலப்பின திருமணம், congruent;- முழுதொத்த, முழு ஒற்றுமையுள்ள, முற்றிசைவான, பொருத்தம், முழுதும் பொருத்தமான, ஒத்திருக்கின்ற, consensus;- கருத்து ஒருமைப்பாடு. சமுதாய தளத்தைப் பார்த்தால், தமிழ்ச் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அழிப்பதற்குத்தான் முயற்சிக்கின்றார்கள். காலத்துக்கேற்றவாறு, சிந்தனையுடனும், சாணக்கியத்துடனும், அரசியல் தந்திரத்துடனும் செயல் படுகின்றார்கள். இன்று தனித்தமிழீழம் என்று போராடின இளைஞர்கள் எல்லோரும் சிறையில் துன்புறுத்தப்படுகின்றார்கள். வீறு கொண்ட அரசியல் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். புலிகளின் அரசியல் அங்கத்தவர்களும், உடகவியலாளர்களும் சிறையில். ஒரு சிலர் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், யோகி போன்றவர்கள் தேர்தலில் நிற்பதற்கு ஆயத்தம் செய்தார்கள், தேர்தல் ஆணையரால் மறுக்கப்பட்டது. இன்றய காலகட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்றால், அவர்கள்: TNA பாராளுமன்ற அங்கத்தவர்கள்தான். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அல்ல. காலத்துக்கேற்றவாறு உறுதியான, ஆக்கபூர்வமான, ஆக்க வளம்கொண்ட, கொள்கைகளை கடைப் பிடிக்கின்றார்கள். நடக்கும் தேர்தலில் நூறு விழுக்காடு த.தே.கூ வெற்றி பெறச் செய்வது, ஈழ மக்களின் மாத்திரமல்ல, புலம் பெயர்ந்த மக்களின் கடமையும் கூட .
பல கட்சிகளின் அங்கத்தவர்களை பாராளுமன்றத்திர்கு அனுப்புவதன் பலம் என்ன?உண்மை என்னவெனில் சில துயரச் சம்பவங்கள் சுழலும் சக்கரம் போல எமது வாழ்க்கையில் காணக்கூடியதாக இருக்கின்றது. “ நடந்தது நடந்துபோச்சு”! அப்படியல்ல, இனிமேலாவது நடக்காமல் இருக்கவேண்டுமல்லவா?
நடக்கப் போவதை நிர்ணயிப்பது எப்படி?நடந்தவைகள், நடந்துகொண்டிருப்பவை, இவைகளில் நடந்த பிழைகள், சறுக்குகள், குட்டிக் கரணங்கள், துரோகத்தனங்கள், மோசடிகள், ராணுவ புதைகுழிகள், இவையெல்லாவற்றையும் அடையாளங்கண்டு, ஆராய்ந்து, முன்னெடுக்கப்போகும், நடக்கப் போகும் நிகழ்வுகளில் இப்படிப்பட்ட வரலாற்றுப்பிழைகள், சுழலும் சக்கரம் போல, தமிழ் மக்களைச் சுற்றி வந்து ஏப்பம் போடாமல் எமது அரசியல் பிரமுகர்கள் இருக்கவேண்டுமென்பது எமது ஆதங்கம். இக்குறிக்கோளோடு த.தே.கூ செயல் படுகிறார்களென்பது எமது அபிப்பிராயம்.
பத்து லட்சம் மலயகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்திற்கு வாக்களித்தவர்தான் எமது திரு G.G.Ponnampalam. அவர் வழியில் உதித்தவர்தான் திரு கஜெந்திரன் பொன்னம்பலம். தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கென்று சில தமிழ்த் துரோகிகள் உதிப்பார்கள். இன்றய காலகட்டத்தினில், திரு சிவாஜிலிங்கம், கஜெந்திரன் பொன்னம்பலம், செல்வரஜா கஜெந்திரன், பத்மினி சிதம்பரனாதன், TNA ல் இருந்து பிரிந்து சென்று போட்டி இடுவது, 21ம் நூற்றாண்டினில் தமிழர் இடும் மாபெரும் துரோகத்தனம். பத்மினி சிதம்பரநாதன் அரசியலுக்கு வந்து எதனைச் சாதிக்கவிருக்கின்றார்.
தமிழ் மக்கள் அன்று இட்ட தவறுகள்:
முதலாவது தவறு: 1833ம் ஆண்டு யாழை இலங்கையோடு இணைத்தபோது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
இரண்டாவது தவறு: 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தபொழுது, யாழின் தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
மூன்றாவது தவறு: பத்து லட்சம் மலயக மக்களின் குடியுரிமையை இலங்கை பறித்தபொழுது, கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
நான்காவது தவறு: 1956ம் ஆண்டு சிங்கள மசோதாவிற்கு கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
ஐந்தாவது தவறு: 1972ம் ஆண்டு குடியரசாக்கிய பொழுது கைகட்டி, வாய்பொத்தி நின்றது.
இதன் பிற்பாடு எமது அரசியல்வாதிகள் சுழலும் சக்கரம் போல செய்த தவறுகள் பல பல- எண்ணுக் கணக்கற்றவை.
ஆனால் திரு கோடீஸ்வரன் 1969 ஆண்டு சிங்களத்திற்கு எதிராக Privy Councilலில் வாதாடி வழக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் பிரதி பலிப்பு 1972ம் ஆண்டின் குடியரசும், கொடிய அரசியல் அமைப்பும்.
மேலே கூறியவை ஒரு சில உதாரணங்கள். இன்று வட கிழக்கில் எத்தனை மக்கள் வாழ்கின்றார்கள்?
நாட்டுப் பற்றுடையவர்கள் இன்றும் நாட்டில். மற்றயவர்கள் புலம் பெயர்ந்த மண்ணில். ஈழ மக்களையும், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிகத் தங்குமிடத்திலும் வதியும் மக்களையும் காரணம் காட்டி, புலம் பெயர்ந்த மக்கள் களியாட்டமும், பணச்சேகரிப்பும், இன்று புலம் பெயர் தமிழ் மக்களின் கலாச்சாரமாகிவிட்டது. முள்ளிவாய்க்காலில் 50,000 மக்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கூடப் பூர்த்தியாகவில்லை, ஆனால், புலம் பெயர்ந்த மக்களோ, மனோரமா என்ன, ஆட்டமென்ன, பாட்டென்ன, ஐயகோ, என்செய்வேன் பராபரமே. எல்லாமே நடப்பது கனவா? நாடக மேடையா? குழப்பமாக இருக்கின்றது.
ஆகவே, த.தே.கூ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கவில்லை,
ஈழம் வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் தான் களத்தில் நிற்கின்றார்கள். தேர்தலில் நிற்கும் த.தே.கூ அங்கத்தவர்கள் மிகவும் துணிச்சல் படைத்தவர்கள். சாணக்கியமும், சாளுக்கியமும், அரசியல் தந்திரத்துடனும், விவேகத்துடனும், துணிச்சலுடனும் தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு . புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் ஆதரவினை அளிப்பது தான் மிகவும் சாலச் சிறந்ததும், தார்மீகக் கடமையும் கூட .....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
சிந்தனை அற்ற செயல் முட்டாள்தனம் செயலற்ற சிந்தனை சோம்பேறித்தனம்.”





1 comment:

  1. இது ஒன்றும் இன்பொதமிழின் கட்டுரை அல்ல யாழ் இணையத்தில் சாண்டில்யன் என்பவரால் இவரின் புலி எதிர்ப்பை இங்கு சென்று பார்க்கலாம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=70590&st=0&gopid=578707&#entry578707

    ReplyDelete