*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 3, 2010

வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் : தமிழ் இளைஞர் ஒன்றியம் – திருகோணமலை


தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய நமது அரசியல் அடிப்படைகளை தமிழர்கள் எவருக்காகவும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது. என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள்வோம்! இவ்வாறு திருமலை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய திருமலையின் தமிழ் மக்களே!
நமது எதிர்காலம் ஒரு நெருக்கடிமிகு சந்தியில் தரித்து நிற்கிறது. சந்தியின் நாலாபுறமும் நமது சுயமரியாதை, பாரம்பரியம், அரசியல் அடையாளம் எல்லாவற்றையும் சிதைத்தழிக்கும் நோக்கில் பல்வேறு வகையான சுலோகங்களுடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்.
எவ்வாறு எல்லோரது சுலோகங்களும் தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்னும் ஒரு புள்ளியில் சங்கமிக்கின்றன? இதன் திட்டமிடப்பட்ட உள் நோக்கம் (Ulterior Motive) என்ன? அவர்கள் அனைவரது நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், தமிழர்களின் தேசியத் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடித்து நமது அரசியல் பலத்தை சிதைப்பதும் அதன் மூலம் தமிழ் மக்களை வலுவானதொரு அரசியல் தலைமையற்ற சமூகமாக உருமாற்றுவதுமாகும்.
நாம் இதற்கு இடமளிக்கப் போகின்றோமா? அவர்களது சதிவலையில் சிக்குண்டு அழியப் போகின்றோமா ?
கடந்த முறை நாம் ஒன்றுபட்டு இரு பிரதிநிதித்துவங்களை பாதுகாத்தது போன்று இம்முறையும் ஒன்றுபட்டு நமது ஒற்றுமையின் பலத்தை நிரூபிப்போம்.
தமிழ் மக்களை தமது பணபலத்தின் முன்னால் விலைபேச முடியமென்று நம்பும் தீய சக்திகள் இனி ஒருபோதுமே அவ்வாறு நினைக்க முடியாதளவிற்கான பாடத்தை புகட்டவேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும். தமிழ் மக்களாகிய நாம் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய நமது அரசியல் அடிப்படைகளை எவருக்காகவும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணமிது. காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை உணர்ந்து தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள்வோம் நமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதற்கான மாபெரும் பொதுக் கூட்டம்

இடம் : திருகோணமலை கடற்கரை வளாகம் (Beach Area)

காலம் : 04 - 04 - 2010 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 4.00 மணிக்கு

''கறைபடிந்து போன பாடங்களின் முடிவிலிருந்து மக்கள் எப்போதும் புதிய வரலாற்றைப் படைப்பார்கள்''

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தமிழ் இளைஞர் ஒன்றியம் – திருகோணமலை




No comments:

Post a Comment