*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, March 13, 2010

மனித உலகும் அசுர உலகும் விண்வெளியில் நேரடி மோதல்?


புதிய ஆய்வுத் தகவல் ஒன்று சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் தமது சுற்றுவட்டப் பாதையி்ன் கலகம் காரணமாக இந்தக் கணத்தில் இருந்து இன்னமும் எவ்வளவு காலத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளக் கூடும் என்ற பல ஆச்சரியமான முடிவுகளைத் தந்துள்ளது. 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவானதாக நம்பப்படும் நமது சூரியக் குடும்பத்தின் மையசக்தியான சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக மாறி (அதாவது Redgiant நட்சத்திரமாக விரிவடைந்து) பூமி உட்பட உள் வட்டப் பாதையிலுள்ள புதன்,செவ்வாய்,வெள்ளி ஆகிய கிரகங்களையும் விழுங்கி விடும் என்பது ஏற்கனேவே வானவியலாளர்களுக்குத் தெரிந்த விடயம்.
அதற்குள் நம் பூமி அழிவதற்கு வாய்ப்பிருக்கின்றதா என்ற ஆவலுடைய ஜக் லாக்சர் மற்றும் மைக்கல் கஸ்டினௌவ் ஆகிய இரு விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை அடிப்படையில் (General theory of relativity) பாரிஸ் நகரிலுள்ள விண்வெளி ஆய்வகத்தில் இந்த 5 பில்லியன் வருடங்களில் இக்கிரகங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆராய்ந்துள்ளனர்.
இவ்வாய்வு சூப்பர் கம்பியூட்டர்களின் துணையுடன் எண்கணித சிமுலேசன் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வெளியான முக்கிய தகவல் நாம் வாழும் பூமியுடன் வெள்ளிக் கிரகம் அல்லது செவ்வாய்க் கிரகம் மோதுவதற்கான வாய்ப்புக்கள் சில மில்லியன் வருடங்களில் உள்ளது என்பதாகும்.
அதாவது இன்னும் 3.34 மில்லியன் வருடங்களிற்குப் பின் பூமிக்கு 794 Km அண்மையில் வரும் செவ்வாய்க் கிரகம் பூமியுடன் உரசிப் பார்க்காமல் விடாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் புதன் கிரகத்தை மையமாகக் கொண்டு செய்த இந்த ஆய்வில் ஏனைய கிரகங்கள் தமது சுற்றுப்பாதையில் வரும் 2501 சந்தர்ப்பங்கள் புதனின் ஒர்பிட்டில்(orbit) 0.38 mm அளவேயுடைய மிகச்சிறிய நகர்வை ஏற்படுத்தும் என்று உறுதி படக் கூறுகின்றனர்.
அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை இச்சந்தர்ப்பங்கள் சூரிய குடும்பத்தையே தலைகீழாக்கப் போகின்றன.
விரிவாகச் சொன்னால் இதில் 25 சந்தர்ப்பங்களில் சூரியனின் ஈர்ப்பு விசையால் கிரகங்களுக்கிடையே ஏற்படும் மோதல்களில் சூரியனின் உள்வட்டப் பாதையிலுள்ள நிலக் கிரகங்களான (Terrestrial rocky planets) செவ்வாய், பூமி, வெள்ளி என்பன நிலை குலைந்து விடும்.
5 சந்தர்ப்பங்களில் சூரியன்,பூமி,புதன்,வெள்ளி அல்லது செவ்வாய் என்பன இரு வழிகளில் மோதிக்கொள்ளும்.
இறுதியாக மொத்த எண்ணிக்கையில் காற் பங்கு(25%) சந்தர்ப்பங்கள் பூமியைத் துண்டு துண்டாகச் சிதறச் செய்கின்ற மோதல்களை உருவாக்குவதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.எனினும் அஞ்சுமளவுக்கு இவை விரைவில் நடைபெறப் போவதில்லை என்பதுடன் 3.5 பில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை 2500 இற்கு 1 வீதமே இச்சந்தர்ப்பங்கள் அமையும் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கிரகமான புதனின் சுற்றுவட்டப்பாதையின் சமச்சீரற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு கலிபோர்னியாப் பல்கலைக் கழக விஞ்ஞானியான கிரெகரி 'மிகச்சிறிய பையனான புதன் தனது ஒழுங்கீனத்தால் எல்லாப் பெரியவர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளுமாறு பண்ணுறான்' என நகைச்சுவையாகக் கூறியிருக்கின்றார்.சரி! இனி தலைப்பிற்கு வருவோம். அது என்ன அசுர உலகு என்று கேட்கிறீர்களா? கரடுமுரடான மேற்பரப்பாலும் எரிமலைகளாலும் புராதன காலத்தில் கிரேக்கர்களால் மட்டுமன்றி இன்றைய விஞ்ஞானிகளாலும் அசுரர்களின் கிரகம் என்று அழைக்கப்படும் பூமியின் சகோதரியே அவள்.
இன்னமும் தெரியவில்லையா? சந்திரனுக்கு அடுத்ததாக வானில் பிரகாசமாகத் தெரியும் பொருள். ஏதோ ஒரு நட்சத்திரமல்ல. அது விடிவெள்ளியோ மாலை வெள்ளியோ நீங்கள் பார்க்கும் நேரத்தைப் பொறுத்தது.





No comments:

Post a Comment