*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, March 15, 2010

வீழ்ந்த நாடே! நீ விழிக்கவே மாட்டாயா? --. த‌மிழீழம் த‌லை நிமிராதோ?


இந்த நாடு அழிவின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அடக்கமுடியாத துயர் வந்தாலும்கூட அதைத் தூக்கி நிறுத்த திரைப்பாடல்கள் அதற்குப் போதும். மூச்சுவிட திரை நடிகரின் வாழ்க்கைப்போதும். இந்த நாட்டின் வளர்ச்சியோ, இந்த நாட்டின் முன்னேற்றமோ, இந்த நாட்டோடு வாழ்வதற்கான குறிக்கோளோ புதைந்துபோய் அதன் கடைசி கட்டத்திலே இருக்கிறது. இதை மாற்றி அமைக்கவே முடியாதா? என்ன தான் நடக்கிறது இந்த நாட்டில் என்ற எண்ணம், இந்த நாட்டைக் குறித்து சிந்திக்கும் ஒவ்வொருவரையும் எரிதழலாய் எரிய வைக்கிறது.இதயம் குத்தி கிழிக்கப்படுகிறது. நமது இயலாமையா? அல்லது எதுவும் முடியாது என்கிற பேதமையா? மூலையில் உட்கார்ந்து கொண்டு அழுவதா? முண்டி அடித்துக் கொண்டு வந்து முழக்கமிடுவதா? இல்லை எனக்கென்ன என்று இருந்துவிடுவதா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் எனக்கென்ன என்று இருந்துவிட்டால், இன்று இருக்கும் நிலைக்கு வேண்டுமானால் அது தூசுப்போல் மறைந்து போகலாம். நாளைய வரலாறு நம்மை சும்மா விடாது. வஞ்சிக்கும். நம்மை காரித் துப்பும். என்ன நாட்டில் நாம் வாழ்கிறாம். நாடு, ஒவ்வொருநாளும் விலைவாசி உயர்வு, பசி, பஞ்சம், பட்டினிச்சாவு என்று பரிதவித்துக் கொண்டு இருக்கிறது. கொலை நிகழ்வுகள் இல்லாத செய்திகளே இல்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதே? இதை எப்படி தடுக்கப்போகிறாம். அந்த எரிபொருள் ஒன்றின் விலையோடு மற்றப் பொருட்களின் விலை பின்னிப் பிணையப்பட்டிருக்கிறதே? இந்த பாரத்தை சாமானிய மக்களின் தலைகளில் எப்படி வைட்து அழுட்தப்போகிறாம்? தினந்தோறும் கடும் வெயிலிலும், கடுமையான சுமைகள் தூக்கி அன்றாட கூலி பெரும் கூலித் தொழிலாளிகளின் வாழ்வு என்ன? என்றெல்லாம் ஏராளமான சிந்தனையோடு எதிர்பார்ப்போடு இதோ, இந்த விலை உயர்வுக்காய் ஒரு பெரும் சமர் நடக்கப்போகிறது. மக்கள் போராட்ட வெள்ளத்தில் கலக்கப் போகிறார்கள் என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தார். படிப்படியாய் அமுங்கி விட்டார். அலைஅலையாய் கட்சிகள். ஆர்ப்பாட்டங்கள் என அறிக்கையிட்டது. நடுவண் அரசை கெஞ்சி கூத்தாடி சலுகைபெற இந்த ஆர்ப்பாட்டங்கள் வழிகோலியது. ஆனால் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி வந்ததே ஒரு புதிய செய்தி. பள்ளி-கல்லூரித் தேர்வா? விலைவாசி உயர்வா? வேறேதும் நமது வாழ்வியல் பிரச்சனையா? அனைத்தும் சூறாவளியாய் சுழன்றடித்து கொண்டுச் சென்றது. ஆம்! எம் இனிய தமிழகமே, நித்யானந்தா என்கின்ற ஒரு சாமியார் பாலியல் தவறு செய்துவிட்டாராம்.இதை ஒரு செய்தியாக, தினம்தினம் அவர் யாரோடெல்லாம் உறவு கொண்டார், எப்படி எண்ணெய்த் தேய்த்தார், கொண்டைப் போட்டார், உண்டார், உறங்கினார், எழுந்தார், நடந்தார், சிரித்தார் என பக்கம் பக்கமாய் செய்திகள். ஊடகங்களின் உண்மை முகம் வர்த்தகமாய் தெரிகிறது. ஊடகங்கள் தமது கடமையாக இந்த மக்களின் வாழ்வியலை, இந்த மக்களின் வசந்தகாலத்தை திட்டமிடுவதற்கு பணியாற்றுவதற்குப் பதிலாக நித்யானந்தாவின் வாழ்க்கையை வியாபாரம் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டது. மானங்கெட்ட நம் தமிழனும் அது நித்யானந்தாவின் தனி மனித வாழ்வு, அதை குறித்து நமக்கென்ன அக்கறை என்று சிந்திப்பதற்கு பதிலாக, நித்யானந்தாவோடு இவனும் இணைந்து கொண்டான். எந்த நடிகையோடெல்லாம் நித்யானந்தா இருந்தான் என்ற பட்டிமன்றம் வீதிகளிலே, உணவு சாலைகளிலே, வீட்டு நடு அறைகளிலே விவாதத்திற்கு உரிய செய்தியாக மாறிவிட்டது.இந்த நாடு போலி உணவுப் பொருட்கள், போலி ஆசிரியர்கள், போலி மருத்துவர்கள், போலி காவல்துறை அதிகாரிகள், போலி பத்திரிக்கையாளர்கள் வரிசையில் போலி சாமியார் என்கிற ஒரு பெயர் சேர்ந்து பன்னெடுங்காலமாகி விட்டதே! நமக்கு நித்யானந்தாவை யார் என்று தெரியாது. நம்மையும் அவருக்கு யார் என்று தெரியாது. ஆனால் ஒன்று சொல்கிறாம். நித்யானந்தாவின் வாழ்க்கையைக் குறித்து இந்த அளவிற்கு ஊடகங்களிலும், தெருக்களிலும் விவாதிக்கும் உங்களைப் பார்த்து நீங்களாக என்றாவது கேட்டதுண்டா? உங்களில் யார் யோக்கியன் என்று.இயேசு விவிலியத்திலே உங்களில் யார் குற்றமற்றவர் அவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னாரே, நித்யானந்தம் மீது கல்லை எறிவதற்கு முன்னால் தான் குற்றமற்றவன் என்று யாராவது சிந்தித்தீர்களா? ஆக, நமக்குள் மற்றவர்கள் குறித்து பேசுவது என்பது ஒரு சுகமான நடைமுறையாகிவிட்டது. மற்றவரின் வாழ்வு என்பது நமது விமர்சனத்திற்குரிய செய்தியாகி விட்டது. இந்த நாட்டில் எத்தனை அநியாயங்கள், எத்தனை அடக்குமுறைகள், எத்தனை வகையான ஊழல்கள், எவ்வளவு கேடு நிறைந்த அனுகுமுறைகள் அதெல்லாம் நம் கண்களுக்கு மூடி மறைக்கப்படுகிறது. ஆனால் ஒரு நடிகையின் மணவிலக்கு செய்தியாகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை ஆயிரக்கணக்கான நம் தமிழ்ப் பெண்களின் வாழ்வு விலக்கி வைக்கப்படுகிறது என்ற செய்தியைக் குறித்து என்றாவது நாம் விவாதித்து இருக்கிறாமோ? ஒவ்வொரு முறையும் இந்த அரசு நெருக்கடிக்குள்ளாகும்போதெல்லாம் நாட்டிற்கு பேராபத்து நிகழ்ந்துவிட்டது என்று கூச்சல்போட தொடங்கி விடுகிறது. உடனடியாக நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும், பத்திரிக்கையாளர் முன்னிலையிலும் ஏதோ இந்த நாட்டை இவர்கள்தான் கட்டிப்பிடித்து காப்பாற்றுவதைப் போன்று படிப்படியாய் அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.முதலில் இவர்களிடமிருந்து இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவது என்பதுதான் நமக்கான முதல் கேள்வியாக இருக்கிறது. இந்த நாட்டின் கனிமங்களையும், இந்த நாட்டின் செல்வங்களையும், அந்நியனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என திட்டமிட்டு தீர்த்துக்கட்டும் இவர்களிடமிருந்து இந்த மக்களை எப்படி காப்பாற்றுவது? அந்த நிலத்தை எப்படி காப்பாற்றுவது? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இவர்கள் நாட்டை காப்பாற்றப் போகிறார்களாம். நமக்கு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. மக்களை திசைதிருப்ப எத்தனை விதமாக வேஷங்கள். ஒவ்வொரு முறையும் மக்களை நினைவு மாற்றி அழைத்துச் செல்ல எப்படிப்பட்ட நடிப்புகள். அவை அனைத்தும் இந்த நாட்டின் தன்மையை, இந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்பை இந்த நாட்டின் அடித்தளமான மக்களை சீர்குலைப்பதாகத்தான் இருக்கிறதே தவிர, இதில் ஏற்றம் பெறுவதற்கு எவ்விதத்திலும் வழி இல்லை.கடந்த ஆண்டு இந்த நேரமெல்லாம் தமிழீழத்தின் மேல் வீசப்பட்ட அநியாய குண்டு வீச்சு, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டப் போதுக்கூட இங்கே நடிகர்கள் கூடி கொட்டமடித்த உண்ணரநிலைப் போராட்டத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது. இவர்களின் வாழ்வு எதைநோக்கி செல்கிறது என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் அநீதிக்கான வீழ்ச்சி என்பது விரைவில் இருக்கும். உண்மையிலேயே நமக்கெல்லாம் வருத்தம் ஒன்றே ஒன்றுதான். நித்யானந்தா ஊடகத்திலே வந்தவுடன், தமிழ்நாடே எழுந்து நின்று எதிரொலித்ததே? அப்படியானால் இந்த ஊடகத்தின் ஆற்றல், அதன் அளப்பரியா பங்களிப்பு இந்த மக்களிடம் எவ்வளவு உன்னதமானது என்பதை ஊடகத்தின் முதலாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஊடகத்தை நடிகைகளின் நாய் குட்டிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காகவும், நடிகர்கள் மறுமணம் செய்து கொள்வதை வண்ணப்படங்களில் செய்தி வெளியிடுவதற்காகவும், மக்களின் வாழ்வைவிட பரபரப்பும் கிளுகிளுப்புமான செய்திகளை முன்னுக்குப்பின் முரண்பட்டு வரைந்து வைப்பவையாகவும் செயல்படுகிறதே? என்றாவது அவர்கள் சிந்தித்தார்களா? நாம் செய்வது அளவிட முடியாத வரலாற்றுப் பிழை என.இன்றைய செய்தி, நாளைய வரலாறு என முழக்கம் வைத்துக் கொண்டு திமுகழகத்தின் பத்திரிக்கை வருகிறதே. அதில் தமிழகத்தின் செய்தி, தமிழ்நாட்டில் வாழும் அடிப்படையற்ற மாந்தர்களின் செய்தி, அவர்களுக்கான உரிமை, அவர்களின் வாழ்வு, அவர்களின் வளம், அவர்களின் எதிர்பார்ப்பு, ஏக்கங்கள் என்று எண்ண முடியாத தேவைகள் இருக்கிறதே? இதைக் குறித்த பதிவுகள் ஏதேனும் இருக்கிதா? இதுதானே வரலாறு. இந்த மக்களோடு இணைந்த நிகழ்வுகளும், இந்த மக்களோடு இணைந்த நடைமுறையும், அவர்களின் ஒவ்வொரு அசைவும், அவர்களின் அசைவிலே வெளிப்படும் மகிழ்வும் துயரும் கொண்டதுதானே வரலாறு. இதுதானே செய்தியாக இருக்க வேண்டும். இந்த செய்தி எங்கே? இப்படிப்பட்ட செய்திகளை நமது ஊடகங்கள் திட்டமிட்டு மறுதலிப்பது ஏன்? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நமது ஊடகங்கள் ஏற்க மறுப்பது ஏன்? இந்த அநியாயங்களை மக்களிடம் கொண்டு செல்ல தயங்குவது ஏன்? ஒவ்வொன்றிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆக, ஊடக தர்மம் என்பது லாபத்திலே புதைந்து போய்விட்டது. ஊடகம் என்பது தமது வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்கான களமாகி விட்டது. ஊடகம், இந்த மாந்தக்குலத்தை மாற்றி அமைக்கும் ஆற்றலாக இருந்தும்கூட, அதற்கான அடிப்படை தன்மைகள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. ஊடகத்தின் கை, கால்கள் செயலிழந்து விட்டது. அது வாய்பேச முடியாத ஊமையாகி விட்டது. ஊடகத்தை சக்கர நாற்காலியில் அமரவைத்து, அதன் முதலாளிகள் தள்ளிக் கொண்டு போகிறார்கள். அவர்களின் மூளை என்னப் பேசுகிறதோ, அதைத்தான் அவர்கள் கையிலிருக்கும் ஊடகம் பேசும். இதுதான் இந்த மக்களை தோற்கடித்தது. இதுதான் இந்த மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய்தது. இப்படிப்பட்ட அநீதியான தர்மங்கள்தான் இந்த மக்களின் வரலாற்றை சிதைத்துப்போட்டது. அவர்களுக்கான தேவைகளை முடக்கி வைத்தது. மக்களுக்கு திரைப்பட கிளுகிளுப்புகளும், குத்துப் பாடல்களும், கவர்ச்சி படங்களும் இந்த மக்களுக்கு போதும் என்கின்ற ஒரு வரையறையை திட்டமிட்டு அவைகளே முடிவுசெய்தது. இதுதான் நமது தமிழர்களின் வாழ்வு என்பதை பதிவு செய்கிறது. நாளைய சந்ததி தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்வை வாசிக்கும்போது அந்த மக்கள் இவ்வளவு கேவலமாகவா வாழ்ந்தார்கள் என்று நம்மை திட்டி தீர்ப்பதற்கு இந்த ஊடகங்களே காரணமாகி விட்டது.தமிழீழத்திலே குண்டுகளை வீசி, அங்கு வாழ்ந்த தமிழர்களின் அங்கங்களை துண்டாடிய இந்தியா, இப்போது அங்கு வாழும் மக்களுக்கு செயற்கை கால்களை பொருத்த திட்டமிட்டிருக்கிறதாம். செயற்கை கால்களை மட்டுமல்ல, முடிந்தால் செயற்கை மூளைகளையும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பொருத்தச் சொல்லுங்கள். அதிலே அவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல், நடக்கும் அநியாயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு சோனியாஜி வாழ்க என்று சொல்லட்டும். கருனாநிதிஜி வாழ்க என்று சொல்லட்டும். அந்த மூளையில் இப்படிப்பட்ட செய்திகளை மட்டுமே பதிவு செய்து வையுங்கள். இது தொடர்ந்து அவர்கள் அநீதி செய்ய அற்புதமாக துணைப் புரியும். வருத்தமாக இருக்கிறது. வீழ்ந்த நாடே! நீ விழிக்கவே மாட்டாயா? என்று கேட்கத் தோன்றுகிறது.





No comments:

Post a Comment