*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, March 16, 2010

போரில் வென்றவர்களின் பொய்கள்.....


ஈராக் போரில் பிரிட்டனின் பங்கு குறித்து விசாரணை செய்வதற்காகக் கடந்த வருட நடுப்பகுதியில் பிரதமர் கோர்டோன் பிறவுண் இராஜதந்திரியும் சிரேஷ்ட சிவில் சேவை அதிகாரியுமான சேர்.ஜோன் சில்கொட் தலைமையில் நியமித்த குழு அதன் அமர்வுகளை நடத்திவருகிறது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் நேற்று முன்தினம் அந்தக் குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். சுமார் 6 மணித்தியாலங்களாக விசாரணைக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதில்கள் ஈராக் விவகாரத்தில் இழைத்திருக்கக் கூடிய தவறுகளை மறைப்பதற்காக தாராளமாக மழுப்பல்களையும் உருட்டுப்பிரட்டுகளையும் செய்வதற்குத் தயாராயிருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. ஈராக் போருக்கு சுமார் 45 ஆயிரம் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பியமைக்காக பிளயர் முகங்கொடுக்கின்ற முதலாவது உத்தியோகபூர்வ விசாரணை இதுவேயாகும். முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் முழு உலகையும் ஆபத்திற்குள்ளாக்கக் கூடிய பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததாகக் கூறிக் கொண்டு சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் அந்த நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷûம் பிளயரும் தங்களது படைகளை அனுப்பினார்கள். உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதாகக் கூறப்பட்ட அந்தப் பேரழிவு ஆயுதங்களில் எந்தவொன்றையும் இன்றுவரை ஆக்கிரமிப்புப் படைகள் கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முழு உலகிற்கும் பொய்யைக் கூறிய புஷ்ஷûம் பிளயரும் இன்று வரை அதற்காக மன்னிப்புக் கோரவோ, பச்சாதாபப்படவோ இல்லை. அவர்கள் இருவருமே இன்று பதவிகளில் இல்லாவிட்டாலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தத் தவறுவதில்லை. சதாம் ஹுசெய்னை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியமைக்காக புதிய புதிய காரணங்களைக் கூறுவதற்கும் தயங்குவதில்லை. கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றை அளித்த பிளயர் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று தெரிந்திருந்தால் கூட ஆக்கிரமிப்புக்கு தான் உத்தரவிட்டிருப்பார் என்று கூறியிருந்தார். ஈராக் மீதான ஆக்கிரமிப்பை "நியாயப்படுத்துவதற்கு வேறுபட்ட விளக்கங்களைத் தான் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றாலும் சதாம் ஹுசெய்னை அதிகாரத்தில் இருந்து விரட்டியது சரியான செயலே என இன்னமும் நினைப்பதாகவும் பிளயர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். பேரழிவு ஆயுதங்கள் விடயத்தில் உலகிற்கு பொய் கூறியமை அம்பலமாகிப் பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் புஷ்ஷûடன் சேர்ந்து ஈராக்கில் தான் செய்திருக்கக் கூடிய அடாவடித்தனங்களை நியாயப்படுத்துவதற்குத் தொடர்ந்து எவ்வளவு பொய்யையும் புரட்டையும் கூறுவதற்கு அவர் தயாராயிருக்கிறார். சில்கொட் விசாரணைக் குழு முன்னிலையில் நேற்று முன் தினம் பிளயர் சாட்சியமளிக்கையில், 2001 செப்டெம்பர் 11 அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சதாம் ஹுசெய்ன் விரட்டியடிக்கப்பட வேண்டும் அல்லது நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தியதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்க நகரங்கள் மீது அல் கயெடா நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய பாதுகாப்பு நிலைவரத்தை முற்றுமுழுவதுமாக மாற்றியமைத்து விட்டன. ஈராக் போன்ற போக்கிரி அரசொன்றிடமிருந்து பேரழிவு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகுமேயானால் அவர்கள் வாஷிங்டனிலும் நியூயோர்க்கிலும் கொன்றதைவிடவும் கூடுதலான மக்களை அழிப்பார்கள் என்று அஞ்சப்பட்டது. ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னணியில் எந்தவிதமான சதியோ, ஏமாற்று மோசடியோ இல்லை என்றும் பிளயர் இப்போது கூறியிருக்கிறார். அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களுடன் ஈராக்கிற்கு தொடர்பிருப்பதாக ஒருபோதுமே நிரூபிக்கப்படவில்லை. ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதற்குத் தீர்மானிப்பதற்கு முன்னதாக புஷ்ஷோ, பிளயரோ அல் கயெடா ஈராக் தொடர்புகள் பற்றிப் பேசியதுமில்லை. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்தார் என்பதை மாத்திரமே தங்களது படையெடுப்புக்கான காரணமாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். பேரழிவு ஆயுதங்கள் சதாம் ஹுசெய்னிடம் இருக்கவில்லை என்பது உலகிற்குத் தெரியவந்த நாள் முதல் புதிய காரணங்களை அவர்கள் கூற ஆரம்பித்தனர். கூறிய ஒரு பொய்யை மறைக்கக் கடந்த 7 வருடகாலத்திலும் புஷ்ஷûம் பிளயரும் தொடர்ச்சியாக எத்தனை பொய்களைச் சொன்னார்கள் என்று எண்ணவும் முடியவில்லை. போரில் வெற்றி பெற்றவனிடம் "நீ உண்மை பேசினாயா என்று கேட்கப்படமாட்டாது என்று ஹிட்லர் ஒரு தடவை கூறியிருந்தான். ஈராக்கை ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்ட புஷ்ஷûம் பிளயரும் தொடர்ந்து பொய்களையும் புரட்டுகளையும் கூறிக்கொண்டிருக்கின்றபோதிலும், சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. போரில் வென்றவர்களின் விளக்கங்கள் உண்மையாகிவிட முடியாது என்றாலும் உலகம் அதை சகித்துக்கொண்டிருக்கிறதே. அதுதான் பெரிய மனவேதனை!





No comments:

Post a Comment