*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, March 16, 2010

இன்னும் தமிழன் உறங்குகிறான் அவன் எதையோ எண்ணி மயங்குகிறான், ஆனால் உலகினில் சிங்களவன் ஓங்குகிறான்


உணருமா தமிழினம்.......

அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும், முதலுமான ஆயுதம்
யேர்மெனியில் எமது மனித நேயச் செயற்பாட்டாளர்கள் கைது ஜரோப்பியத் தமிழினம் இதுவரை எதுவும் செய்யவில்லை. தூங்கிக்கிடக்கிறது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்களவன் ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தை சிதைத்து சின்னபின்னமாக்குகின்றான் அதற்கு தமிழினம் துணைபோகின்றது.
ஒன்றுபட்டு நிற்கவேண்டிய தமிழினம் ஒருவரை ஒருவர் வசைபாடி சேறுபூசி உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டி தம்மைதாமே இழிவுபடுத்தி வருகிறது. போதாக்குறைக்கு கைதாகி சிறையில் இருப்பவனையும், களத்தில் போராடி மடிந்தவனையும் வசைபாடி காலத்தைக்களிக்கிறது.

முள்ளிவாய்க்காலில் மூண்டதீ ஈழத்தமிழினத்தின் ஆத்மாவையே அழித்து நெஞ்சைவிட்டு அகலாதா துயரைக்கொடுத்திருக்கிறது துடுப்பில்லாப் படகாய் ஈழத்தமிழினம், அந்தத் தமிழினத்தின் அவலத்தை உலகுக்கு சொல்லவந்த ஊடஙங்களின் உள்ளகப்போர் இன்று சந்திக்கு வந்து சிங்களம் கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது.
உண்மை நடுநிலைமை ஊடகத் தர்மம் பேசுபவர்களெல்லாம் ஒருவரை ஒருவர் வசைபாடி ஆய்வு மறுஆய்வு,எனவும் கறுப்பு வெள்ளை என எனவும் திக்கொன்று திசை ஒன்றாய் எழுதியும் பேசியும் வந்தோரெல்லாம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற போராய்வு தத்துவத்தை கையிலெடுத்து. ஒன்றாய் நிற்பதுவும்
ஒருபக்கம் தலைவன், மாவீரர் திரு உருவம் மறுபக்கம் இந்திய சினிமா வேசிகளின் கண் கவரும் கவர்ச்சிப்படங்களை பிரசுரித்தபடி தமிழ்த் தேசியம் பேசுவதும், சாமிமார் கூட்டமும் சல்லாபிக்கும் வேசிகள் கூட்டமும் உறுண்டு புரளும் உல்லாடக் காட்சியை ஊடகங்களில் உலாவர வைப்பதுமாய் இருக்க,
மறுபுறம் முள்ளிவாய்க்கால் மரணம் எம் மனதை விட்டு இன்னும் மறையவில்லை என சொல்லியபடி சாமியும் தாசியும் கட்டிப்பிடித்த செய்தியை பத்து நூறு என பார்த்து மகிழும் விடுப்புத் தமிழினமும்,
தனிநபர் விருப்பு வெறுப்புக்களுக்காய் ஒன்றுபட முடியுமென்றால் அல்லல்பட்டு துன்பப்பட்டு சிதறுண்டு நிற்கதியாய் நிற்கும் தமிழினத்தை காப்பாற்ற ஏன் உங்களால் முடியவில்லை......
கொண்டலட்சியம் குண்றிடாதெங்கள் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டு கேட்கின்றோம் வெந்துகொண்டிருக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள் ஒன்றுபடுங்கள் என்றே கேட்கின்றோம். ஒன்றுபட்டான் தமிழன் என்று சிங்களம் அதிரட்டும்.
ஜனநாயகப் பண்பில் விமர்சனம் ஆரோக்கியமானது ஆனால் அது தனிமனிதப் பழிவாங்கல்களாக அமைக்கூடாது என்பதே அது எடுத்துரைக்கும் தத்துவமாகும். எம்மை விமர்சியுங்கள் அது எம்மை திருத்துவதாகவும் வழிகாட்டுவதாகவும் கற்றுக்கொள்வதற்கானதாக அவ் விமர்சனங்கள் அமையட்டும்.....
ஒன்றுபட்ட சிங்களத்தின் சாட்சி இது
ஐ.நா.வே சிறிலங்கா விவகாரத்தில் தலையிடாதே': நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்
சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு வல்லுனர்கள் குழுவினை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கி மூனின் முனைப்புக்கு புலம்பெயர் சிங்களவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 12ம் நாள் பெருந்தொகையான புலம்பெயர்ந்த சிறிலங்காவைச் சேர்ந்தோரால் நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நாவின் தலைமைப் பணிமனையின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை அவர்கள் நடாத்தினார்கள்.
நியூயோர்க்கிலுள்ள சிறிலங்கா அமைப்புக்களின் கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த எதிர்ப்புப் பேரணியில்,
‘ஐ.நா.வே சிறிலங்கா விவகாரத்தில் தலையிடாதே’,
‘வேண்டுமென்றே இலக்குவைக்கும் அணுகுமுறையினைக் கைக்கொள்ளாதே’,
அழைக்காத ஆலோசனை சிறிலங்காவுக்குத் தேவையில்லை’ போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள்.
ஐ.நா சபையின் தலைமையகத்திற்கு எதிராகவுள்ள Dag Hammarskjold பூங்காவில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகத்தார்கள். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் சர்வதேச ஊடகங்களும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதியொருவர் ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினது அலுவலகத்தினைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றைக் கையளித்ததோடு ஐ.நா அலுவலர்களுடனும் கலந்துரையாடியதைக் காணமுடிந்தது.
சிறிலங்காவின் தேசியக் கொடியுடனும், பதாதைகளுடனும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த சிறிலங்காவினர் அங்கு வழமையாக வந்துசெல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளதும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகளதும் கவனத்தினைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இனி ...... நாம் சிந்தித்தால்....
பிரபாகரன் வழி நில்லு........
அனைவரும் ஒன்றிணைந்தால் தான்- தமிழ்மக்களின் வலிமையை சிங்கள தேசம் தெரிந்து கொள்ளும். சர்வதேசமும் புரிந்து கொள்ளும்.
வன்னியில் தமிழ்மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்த விடப்பட்ட இனஅழிப்புப் போர் முடிந்து சில மாதங்கள் தான் ஆகப் போகிறது. ஆனால் அதற்குள் இந்த இனஅழிப்புப் போரின் கொடூரங்ளை நாம் மறந்து போகத் துணிந்து விட்டோமா?
எமது இனத்தின் எதிர்காலத்தையே சிதைத்து- எமது உறவுகளை ஓடஓடத் துரத்தி- ஒன்று மில்லாதவர்களாக்கி- முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைக்கும் சிங்களதேசத்தை நாம் மன்னிக்கவும் தயாராகி விட்டோமா?
ஆயிரக்கணக்கான உறவுகளை பூவாகவும்- பிஞ்சாகவும்- காயாகவும்- கனியாகவும் கொன்று போட்டவர்களோடு நாம் சமரசத்துக்கும் தயாராகி விட்டோமா?
ஏன் இத்தனை சந்தேகம்- இத்தனை கேள்விகள்? எல்வாவற்றுக்கும் ஒரு காரணம் உள்ளது.
போர் உச்சமாக நடந்து கொண்டிருந்த போது புலம்பெயர் சமூகமே, வன்னியில் இருந்த மக்களுக்கு ஆதரவாக நின்றது.
அவலக்குரல் எழுப்பியவர்களுக்காக- ஐ.நாவின் முன்றலிலும், நியூயோர்க் தெருக்களிலும், ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களிலும் போராட்டகளை நடத்தியது.
எமது மக்களைக் காப்பாற்றுங்கள் என்று அவலக்குரல் எழுப்பி- மேற்குலகின் மௌனத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
எனினும் உலகத்தின் எதிர்ப்பையும் -உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் கண்டனங்களையும் கணக்கில் எடுக்காத சிங்களதேசம் வன்னியை தனது இராணுவ வல்லாண்மை மூலம் விழுங்கி விட்டது.
போர் முடிந்து போனதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது போன சோகம் அனைவரையும் ஆட்டிப் படைப்பது உண்மை. ஆனால் அதற்காக எமது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறுவதை அனுமதிக்க முடியாது.
வன்னியில் கொடூரங்களைப் புரிந்து இனஅழிப்பில் ஈடுபட்ட மகிந்தவையும் அவரது அரசாங்கத்தையும் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரும் போராட்டங்கள் அப்படியே நிற்கின்றன.
துமிமக்களை அவலத்துக்குள் தள்ளிய மகிந்த இன்று- ஒரு வெற்றி வீரனான உலகம் முழுவதும் வலம் வருகிறார்.
அவரது இனப்படுகொலைகளை நாம் சரியாக அம்பலப்படுத்த முடியாது போனதால்- அதற்கான முயற்சியில் இறங்காததால் தான் அவரால் இந்த கௌரவங்களைப் பெறமுடிகிறது.
மகிந்தவின் அரசாங்கத்தினால் எதிர்காலத்தையே தொலைத்து விட்டு வாழும் எமது மக்களின் அவலங்கள் முடிவற்றுத் தொடர்கின்றன.
வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மக்களை காப்பாற்றுங்கள் என்று ஓங்கிக்குரல் கொடுத்த புலம்பெயர் மக்களாகிய நாம் இப்போது மௌனமாகி விட்டோம்.
புலிகள் இயக்கம் இருந்தவரைக்கும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்றிருந்தோம். அவர்களின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. எதிர்காலமே கேள்விக்குறியாக மாற்றப்பட்டிருக்கும் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கு இன்னும் அதிகமாகவே வந்திருக்கிறது.
இடம்பெயரந்த மக்களைப் பாதுகாத்தலும் தமிழ்மக்களின் உரிமைகளை மீட்டலும் இன்று மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது. இந்தக் கட்டத்தில் தான் புலம்பெயர் சமூகம் இன்னும் இன்னும் வீறுடன் எழ வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் உள்ள தார்மீக நியாயங்களையும், தாயகத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளையும் சர்வதேசத்துக்குச் சொல்லும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
சிங்களப் பேரினவாதம் எப்படியெல்லாம் தமிழ் இனத்தின் உரிமைகளை விழுங்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது.
ஆனால், கடந்தகால கசப்பான வரலாற்றை மறந்து விட்டு சிங்களதேசத்துடன் கைகுலுக்கி ஒன்றாக வாழலாம் என்கிறார்கள்.
இனிமேல் பிரிவினைக்கே இடமில்லை என்கிறார்கள். தமிழ் இனவாதம் புலிகளோடு செத்துவிட்டதாக கூறுகிறார்கள்.
சிங்கள இனவாதத்தின் கொடூரங்களை மறந்து போனவர்கள் தான் இப்படியெல்லாம் கூறத் தொடங்கியுள்ளனர்.
இனக்கலவரங்களின் போது தமிழர்களை தென்னிலங்கைத் தெருக்களில் ஓடஓட விரட்டி வெட்டியது யார்?
எரியும் நெருப்பில் தூக்கிப் போட்டு குதூகலித்தது யார்?
இதெல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு மறந்து போய்விட்டது.
1958இல், 1977இல், 1983இல் நடந்த இனக்கலவரங்களின் வரலாறு இன்னமும் தமிழ்மக்களின் மனங்களில் இருந்து மறைந்து போகவில்லை.

சிங்களப் பேரினவாதம் மூட்டிய தீயில் இருந்து பிரசவமானது தான் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம்.
அமைதிவழியில் உரிமைகளைக் கேட்ட தமிழ்த் தலைமைகள் அடித்து உதைக்கப்பட்டதும் - ஒப்பந்தங்களின் பெயரால் ஏமாற்றப்பட்டதும் தான் தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டியது.
இந்த வரலாற்றை மறந்து விட்டு சிங்களத்தின் கால்களுக்குள் சிறைப்பட்டு வாழ்வதற்கு சில தலைமைகள் தயாராகி விட்டன.
கறுப்பு ஐ{லையில் நிகழ்ந்த கொடூரங்களை மறந்து விட்டு- ஒன்றுபட்டு வாழ்தல் பற்றிக் கனவு காண்பது முடிந்த காரியமா?
மனிதஉரிமைகளை குழி தோண்டிப் புதைத்தவர்களை கோபுரத்தில் ஏற்றிக் கொண்டாடுவதே சிங்கள அரசின் மரபு.
போரை முடிவுக்குக் கொண்டு வருவது தமது கையில் இல்லை என்று கூறி எம்மைக் கைவிட்ட மேற்குலகின் மனச்சாட்சியை உலுப்புவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.
போர்க்குற்றவாளி ஒருவரை இராஜதந்திரியாக ஏற்கக் கூடாதென்று சுட்டிக் காட்ட வேண்டியதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் தமிழ்மக்களின் கடமை.
எமது உறவுகளை ஓடஓட விரட்டியவருக்கு- கொன்று குவித்தவருக்கு நாம் கொடுக்கும் சரியான நீதியாக இது அமைய வேண்டும்.
நாம் வலுவானவர்கள் என்பதை சிங்கள தேசத்துக்கு உணர்த்த இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் தமிழ்மக்களின் உரிமைப்போர் முடிந்து விட்டதாக யாரும் தப்புக்கணக்குப் போட்டு விடக்கூடாது.
அப்படிப்பட்ட தவறான புரிதலுக்கு நாமே பொறுப்பாளிகளாகி விடவும் கூடாது.
தாயகத்தில் உள்ள மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு இப்போது தான் எமக்கு அதிகமாக இருகிறது. ஒன்றுபட்டு நாம் சிங்கள தேசத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
போர் முடிந்து விட்டது. போருக்கு அப்பால் தமிழ்மக்களின் உரிமைகளை வெல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது எமது கடமை.
அதற்காக புலம்பெயர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான்- தமிழ்மக்களின் வலிமையை சிங்கள தேசம் தெரிந்து கொள்ளும். சர்வதேசமும் புரிந்து கொள்ளும்.
வாருங்கள் வடம் பிடிப்போம். உரிமைக்குத் தோள் கொடுப்போம்.




No comments:

Post a Comment