*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, March 15, 2010

தேசிய தலைவர் வாழும் வரலாறு


இந்த உலகம் ஒரு தனிமனிதனையும், ஒரு சமூகத்தையும் சார்ந்தே இயங்குகிறது. நிகழ்கால வரலாற்றில் ஒரு மாபெரும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது தேசிய தலைவர் அவர்கள். அவர் குறித்து விவாதிக்கும்போது மாவீரர், ஆற்றல் வாய்ந்தவர், அர்ப்பணிப்பாளர், எதிர்கொண்டு நிற்பவர் என்றெல்லாம் பல்வேறு வாழ்த்து முழக்கங்கள் நம்மிடையே உதிக்கின்றன.
ஆனால் அவைகளையெல்லாம் கடந்து, அவர் மகத்தான பொதுநலவாதி, பொதுவுடைமை தத்துவத்தை தமது உயிர்மூச்சாய் எண்ணியவர், சரிநிகர் வாழ்வை தமது மண்ணிலே படைக்க, மாறா லட்சியம் கொண்டவர், எல்லோருக்கும் எல்லாம் இருக்க வேண்டும், இல்லாமை என்பது அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற அடிப்படை கோட்பாட்டை தமது வாழ்வாய் கடைபிடித்தவர் என்று சொல்வதைவிட, வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இன்று இலங்கையிலே நடைபெற்று வரும் தேர்தல் மோதல்கள் நம்மிடையே ஒரு கலக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழீழத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகள், நமக்குள் இனம்புரியா ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மாவீரர்களின் கல்லறைகள் மானங்கெட்ட மகிந்தாவின் ஏவளாளிகளால் கொத்தி வீசப்படுகிறது. தமிழீழப் பகுதி எங்கும் சிங்கள கலாச்சார சின்னங்களை தோற்றுவித்து, தமிழ் தேசிய அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கே தமிழன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளமோ, தமிழினம் என்று ஒன்று இங்கே இருந்தது என்பதற்கான எந்தவித வாழ்வியல் தடையங்களும் இருக்கக்கூடாது என்பதிலே சிங்கள பேரினவாத மகிந்தா அரசு மட்டில்லா ஆர்வம் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை.
எந்தஒரு இயக்கமானாலும் அது தமது லட்சியத்தை அடையும்வரை ஓயாது என்பது. நாம் கொண்ட லட்சியம் தெளிவானது, நீதியுள்ளது, தேவையுள்ளது. ஆகவே இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவது கிடையாது. ஆனால் இடையே அங்கே அரசியல் நடத்தும் சில தலைவர்கள், தமது பதவிக்கான போட்டியில் தமிழினத்தை அடகு வைக்கவும், அவமானப்படுத்தவும் முயற்சிப்பது நம்மை மேலும் மேலும் கவலைக்குள்ளாக்குகிறது. 25.9.1987 அன்று நமது தேசியத் தலைவர் விடுத்த ஒரு அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறினார். இன்று பரவலாக பிரிந்திருக்கும் பிற இயக்கங்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்று இணைய வேண்டும்" என்பது அந்த அறிக்கையின் மையக் கருவாக இருந்தது.
மேலும் அவர் கூறும் போது, அன்றும் சரி, இன்றும் சரி, இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியில் இயங்குகிறது என்பதை நாம் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். தமிழீழ லட்சியத்தை கைவிட்டு, தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அந்நிய அரசு சக்தி ஒன்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் துரோகத் தலைமைகளை தூக்கி எறிந்துவிட்டு, புலிகளோடு வந்து சேருங்கள். புலிகளாக மாறுங்கள், புலிகளின் லட்சிய போராட்டத்தில் அணிதிரளுங்கள். நீங்கள் எந்த லட்சியத்திற்காக இந்த அமைப்புகளிடம் சேர்ந்தீர்களோ, அந்த லட்சியப் பாதையில் எமது இயக்கம் வீரநடை போடுகிறது.
ஆகவே தமிழீழ லட்சிய பற்றுடைய போராளிகள் யாவரையும் நாம் அரவணைத்துக் கொள்ள தயார்" என இந்த அறிக்கையின் சாராம்சம் எடுத்தியம்பியது. இந்த அறிக்கையைப் படித்த பலர், தேசிய தலைவரைக் குறித்த தொலைநோக்குத் திட்டத்தை அவரின் லட்சியத் தெளிவைக் கண்டு மகிழ்ந்தனர். சிலர் வியப்புற்றனர். பலர் அவரை வாழ்த்தினர். இந்த அறிக்கையின் பின்னணியில் ஏராளமானோர் புலிகளுடன் சேர்வதற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டனர். ஆக, அடிப்படையிலேயே ஒரே லட்சியத்திற்காக, ஒரே அணியாக திரள்வதுதான் வெற்றிக்கான சரியான பாதையாக அமையும் என்பதை தேசியத் தலைவர் தொலைநோக்கோடு புரிந்திருந்தார்.
தமிழின துரோகிகளையும், எதிரிகளையும்கூட அவர் இருகரம் நீட்டி வரவேற்றார். காரணம், அவருக்கு தனிமனித தேவைகள் எதுவும் இல்லை. அங்கு பொதுமை ஒன்றே. அந்த தேவை நமது தேசத்திற்கான தேவையாக இருந்தது. இந்த தேவைக்காக அவர் யாரையும் புறக்கணிக்கக்கூடாது என்பதிலே தெளிவுடையவராக இருந்தார். தாம் கொண்ட தெளிவை வெளிப்படுத்தினார். அதை தமது வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது தமிழீழத்திலே 87ல் இருந்த அதே துரோகப் போக்குகள் தொடர்கின்றன. சிங்கள பேரினவாத அரசில் பதவிக்காக தமது சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்குள் போட்டிகள் அதிகரித்து விட்டன.
எம்மினத்தைக் காட்டிக் கொடுப்பதில் நீ முதலா? நான் முதலா? என்று அவர்களின் வாழ்வு தமது சொந்த நலனுக்கான வாழ்வாக அமைந்துவிட்டது. கேவலம், பதவி சுகத்திற்காக, பணத்திற்காக சொந்த இன மக்களை அடகு வைக்கத் துணிந்த இந்த அயோக்கியர்களின் வாழ்வு ஒரு தொடரல்ல, இது நிகழப்போகும் அழிவின் ஆரம்பம் என்பதை வரலாறு இவர்களுக்கு எடுத்து சொல்லும். இன்று தமிழகத்தில் பொதுவுடைமை பேசும் கட்சிகள் தேசிய தலைவரை விரல்நீட்டி, பாசிஸ்ட் என்று அழைப்பதும், இனவெறி கொண்டவர் என்று கூறுவதுமான கொடுஞ்சிந்தனை இவர்களுக்கு தோன்ற காரணம், தேசிய தலைவர் குறித்த சரியான பார்வை இவர்களுக்குள் இல்லாததும், அவரைக் குறித்த வாசிப்புத் தன்மை இவர்களில் இடம் பெறாததும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
1972ம் ஆண்டில் ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இலங்கையிலே கொண்டு வர, இலங்கையில் செயல்படும் இடதுசாரிகளின் சிந்தனையே பெரும் காரணமாக இருந்தது என்பது நமக்கு வரலாறு சொல்லி தெரிகிறது. தமிழர்களுக்கு விரோதமான, தமிழினத்தை ஒடுக்கிப்போடும் கொடுமையான இந்தச்சட்டத்தை இடதுசாரியின் பழம்பெரும் தலைவர் கொள்வின் ஆர்.டி.சில்வாதான் இயற்றினார் என்பது அப்பட்டமான உண்மையாக இருக்கும்போது, இவர்கள் தேசிய தலைவரை பாசிஸ்ட் என்று அழைப்பது நமக்கு விளங்காத புதிராக இருக்கிறது. சிறீமாவோ ஆட்சியிலே ஆட்சியின் சுகத்தை சுவைத்துக் கொண்டே ஒரு தேசிய இனத்தை ஒடுக்குவதற்கான சட்டம் இயற்றிய இந்த இடதுசாரிகள், மார்க்சியத்திலிருந்து வெட்டி எறியப்பட்ட வீணான சருகுகள் என்பதை பல நிகழ்வுகள் நமக்கு புரிய வைத்திருக்கிறது.
ஆனால் தேசிய தலைவரின் தொலைநோக்கு, பொதுநலச் சிந்தனை, பொதுமைப் பண்பு குறித்து அறியும்போது நம்மிடையே வியப்பு மட்டுமல்ல, விண் உயரத்திற்கு அவர் மாமனிதராக நமக்குத் தெரிகிறார். 1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4, 5 தேதிகளில் இந்து நாளிதழுக்கான நேர்க்காணலில் கீழ்க்கண்டவாறு கேள்வி பதில்கள் அமைகின்றன.
கேள்வி : எதிர்கால தமிழீழத்தில், ''ஒரு கட்சி ஆட்சிதான் இருக்கும். சர்வாதிகாரம் தலைதூக்கும்" என்றெல்லாம் கூறி உங்களது இயக்கத்தை ஆதரிக்கலாமா என்று ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தேசிய தலைவர் : ''எமது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து எமது அரசு அமையும். மக்களுக்கு விருப்பமான கட்சியை அவர்கள் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்தது. போராட்டத்தில் பங்கு கொள்ளாதவர்களே இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். விடுதலைப்போராட்டத்தில் தீவிரப் பங்களிப்பு எதுவும் செய்யாது, அதே நேரத்தில் களத்தில் விலகி நின்றுகொண்டு, தலைமைப் பதவியை அடையக் கனவு காணும் சிலரின் மனிதிலேயே இந்த அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளன".
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சித்தாந்தம் என்ன?
தேசிய தலைவர் : சோசலிசமும்-தமிழீழமும். இவை குறிக்கோள், அடிப்படைக் கோட்பாடு.
கேள்வி : தமிழீழ விடுதலைப் புலிகள், டெலோ இரண்டும் தேசியவாதக் கோட்பாட்டில் இயங்கும் கட்சிகள் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் இரண்டும்தான் சோசலிச சித்தாந்தத்தில் பிறந்தவை என்றும் வேறுபாடு உள்ளதே?
தேசிய தலைவர் : சித்தாந்த ரீதியில் எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால், நடைமுறையில்தான் அதன் வேறுபாடுகளைப் புரிந்துக் கொள்ள முடியும். சோசலிசம் என்பது இன்று பல ரகங்களைக் கொண்டதாக இருக்கிறது. சோசலிசத்திற்கு ஒருவர் அளிக்கும் விளக்கத்திலிருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் தன்மையிலிருந்தும் அதன் வேறுபாடுகள் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இன்று எல்லோரும் தம்மை ஒரு சோசலிசவாதி என்றே கூறிக்கொள்கிறார்கள். ஜெயவர்த்தனா கூட ஒரு காலத்தில் அப்படிக் கூறிக்கொண்டு, இடதுசாரி நூல்களை விற்று வாழ்க்கையை நடத்தியவர்தான். ஆக, சோசலிசம் பேசுகிற ஒருவர் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான், தன்மை வெளியாகும்.
எமது மக்களின் விருப்பங்களையும், நலன்களையும் முழுமையாகப் பேணும் ஓர் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கட்டியமைப்பதே எமது லட்சியம். எமது கலாச்சாரம், எமது பாரம்பரியம், எமது வரலாறு ஆகியவற்றுக்கு உகந்ததாக அந்தச் சமுதாய அமைப்பு அமைய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு கனவு உண்டு. அதனைச் செயல்படுத்தவே சிந்திக்கிறோம், போராடுகிறோம். எங்கள் சமுதாயத்திட்டத்தில் பெருமுதலாளிகள் இருக்கமாட்டார்கள். நடுத்தர வர்க்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பர். மலையகத் தமிழர் பற்றியும் கிழக்கு மாகாணம் குறித்தும் தேசிய தலைவர் குறிப்பிடுகையில், தமிழ் தேசியம் என்று நாம் குறிப்பிடும்போது வடக்கு-கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்துவரும் பாட்டாளி மக்களையும் நாங்கள் குறிக்கிறோம். எங்களது தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழர், இஸ்லாமிய, கிறிஸ்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவர்களும், மதச்சார்பு அற்றோருமான தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும்போது, தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான அமைப்பை குறிக்கிறோம்.
இந்த கேள்வி பதிலை மறுமுறையும் வாசியுங்கள். தமது மக்கள்மீது தேசிய தலைவர் கொண்டிருந்த அளப்பறியாப் பற்று, பொதுவுடைமை வாழ்வின்மீது அவரின் தீவிர ஈடுபாடு, மக்களை மகிழ்வோடும், மனநிறைவோடும் வாழ வைக்க வேண்டும் என்கிற தொடர் சிந்தனை இதில் பளிச்சிடுவதை புரிந்து கொள்ள முடியும். 1987 இந்த நிகழ்வு முடிந்தது. இன்று 2010. சற்றேறக்குறைய 23 ஆண்டுகள் கழித்தும் ஒரு தேசியத் தலைவனின் நேர்க்காணல் நிகழ் காலத்தை எடுத்தியம்புகிறது என்றால் அதுதான் அந்த தலைவனின் ஆத்மபலம். மக்கள்மேல் கொண்ட அக்கறை. நமது தேசிய தலைவர் இடதுசாரியம் பேசும் போலி பொதுவுடைமைவாதி அல்ல. மாறாக மக்கள்மேல் அக்கறைக் கொண்ட லெனின், ஸ்டாலின், மாவோ, ஜூலியஸ் பூசிக், ஹோசிமின் போன்ற மாபெரும் மார்க்சிய ஆசான்களின் தடத்தை பின்தொடர்ந்த வாழும் வரலாறு.





No comments:

Post a Comment