*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, March 16, 2010

தமிழர்களின் தேசம் சிங்களவர்களின் தேசம், இதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடு: கனேடிய தமிழ் காங்கிரஸ்



தமிழர்ளின் தேசம் சிங்களவர்களின் தேசம் என இரண்டு தனியான தேசங்களை கொண்ட ஒரு நாடு என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்போடு தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் ஊடகங்கள் தவறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அர்த்தப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டார்.
நான்கு அடிப்படையான விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாகவும், தனியான தமிழர்களுக்கான தாயகம் தனித்துவமான தேசிய இனம் சுயநிர்ணய உரிமை மற்றும் மற்றும் இலங்கைத்தீவில் வாழும் அனைவருக்குமான குடியுரிமை என்பவையே அவையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்கான தீர்வானது அமெரிக்காவுக்கும் பியூட்டே றைசோ (Puerto Rico) க்கும் இடையில் உள்ளது போன்றதாக, அதாவது ஒரு பாஸ்போட் ஆனால் இரண்டு தேசங்கள் இருக்கும். ஒரு நாடாகவும், இரண்டு தேசங்களாகவும் அது இருக்கும் எனவும் விளக்கமளித்தார்.
மலையகத்தில் குடியுரிமையின்றி உள்ள தமிழ் மக்களும் தமிழர்களின் தேசத்தில் குடியுரிமையை பெறுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்





No comments:

Post a Comment