*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Thursday, April 15, 2010

பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்:

பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டது தமிழ் நெற் ஆசிரிய குழுமத்தின் வன்மமும் வக்கிரமும்.
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது. ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என்ற என்ற திடமான நம்பிக்கையில் இன்போ தமிழ் குழுமம் தமிழ் நெற் ஆசிரியர் பீடத்திடம் உரிமையோடு வேண்டுவது:
தமிழ் ஊடகத்துறை என்றும் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் அழிவுபூர்வமானதாக இருக்கக் கூடாது! ஆனால் தமிழ் நெற்…..?
நாடு கடந்த தமிழீழ அரசமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மீது தொடர்ச்சியாக சேறடிக்கும் வேலை ஒன்றையே தனது தொழிலாக அது மேற்கொண்டு விட்டது போல் தெரிகிறது. ஆனால் ஒரு வித்தியாசம் அவர்களை இன்னமும் தமிழினத் துரோகிகள் என அழைக்காத குறை ஒன்றுதான் பாக்கி.
தொடக்கத்தில் அது ஒரு வயதான பாட்டியின் புரிந்து கொள்ள முடியாத தொண தொணப்புப் போன்று வட்டுக் கோட்டைத் தீர்மானங்களின் மீள் வாக்கெடுப்பின் சிறப்புகளை உயர்வாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேவையைக் குறைவாகவும் மதிப்பிட்டும் இருந்தது.
ஆனால் புலம் பெயர் தமிழரிடையே அதன் பிரச்சாரத்துக்கு உரிய வரவேற்புக் கிடைக்காத காரலத்தால் நாடு கடந்த அரசு ஒரு குறுகிய 45 பாகை அரசியல் என்றும் சர்வதேச முதலாளித்துவங்களின் கைப் பொம்மை எனவும் பரிகசித்தது. இவை எல்லாம் எதிர்பார்த்த பலன்கள் தராத கையறு நிலையில் அது தனது விசமத்தனமான பிரச்சாரத்தை முடிவின்றித் தொடருகிறது. இந்த ஆசிரியர் பீடத்தின் அதிமேதாவிலாச சிந்தனையில் சிக்குண்டிருக்கும் சில அறிவிஜீவிகள் தாமே தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் புதிய தலைமை என்ற வறட்டுச் சிந்தனாவாதத்தில் மூழ்கித்தவிக்கின்றனர்.
இந்த மேதாவித்தன முட்டாள்களின் தவறான சிந்தனைப் போக்கை பின்பற்றும் புலிகளின் சில அதிகார பூர்வ ஊடகங்களும் தொடர்ச்சியாக தமிழ் நெற் இணையத்தளத்தின் மதியுரைஞர் என தன்னைத்தானே எண்ணிக்கொள்ளும் மாய மனிதரின் வழிகாட்டலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை அவரின் உயர்ந்த தியாகத்தை விலைபேசத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியே சங்கதி உட்பட சில பிழைப்புவாத ஊடங்களில் நாடுகடந்த அரசு சார்ந்தும் அதன் செயற்குழுவின் அறிக்கைகள் செயற்பாடுகள் சார்ந்தும் வெளிவந்த வக்கிரமான அறிக்கைகளும் வசைபாடல்களுமாகும். இதைத்தான் எனது மூதாதையர் சொல்வார்கள் பிள்ளியையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலென்று….
உலகின் புகழ் பெற்ற பிரபலங்களும் கல்விமான்களும் ஆலோசனைக் குழுவில் இணைந்து விபரமாக விளக்கமாக ஆராய்ந்து நாடு கடந்த தமிழீழ அரசை விதந்து உரை செய்தமையானது ஒரு உலக அதிசயத்தையே ஏற்படுத்தி விட்டது. நாடு கடந்த தமிழீழ அரசின் சாத்தியப்பாடும் அதற்கு உலக அளவில் கிடைக்கப் பெற்ற வரவேற்பும் கொழும்பு மற்றும் புது டில்லி அரசுகளை கடுமையாக எதிர்க்க வைத்துள்ளன. இதுவே தமிழ் மக்கள் தமது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள புதிய ஆயுதத்தின் வலுவையும் அரசியல் சாத்தியப் பாட்டின் கனதியையும் உறுதிப்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இலங்கை இந்திய அரசுகள் உடனடியாக ஏதாயினும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டன. அதனால் அவர்களின் பயங்களின் வெளிப்பாடு ஊடகங்களை நிறைக்கத் தொடங்கின. இத்தகைய திடீர் திருப்பங்கள் தமது ஆசைகளுக்கு எதிராக அமைவதை தமிழ் நெற் போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே வேளையில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற் பாட்டாளர்களுக்கு எதிராக பொது மக்கள் கருத்தைத் திருப்பவும் இவர்களால் முடியவில்லை.
எப்படியிருப்பினும் தமிழ் நெற் ஆசிரிய குழுவின் கல்வித் திறனையும் நிபுணத்துவத்தையும் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
எனவே தான் அவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் உள்ளங்களிலும் மிகப் பெரிதாக உள்ளது. தமிழ் நெற் இந்த உண்மையை உணர்ந்து எமக்கிடையே உள்ள கருத்து வேறு பாடுகளையும் முரண் பாடுகளையும் பரஸ்பரமாக தீர்ப்பது அவசரமும் அவசியமும் என ஏற்று தமிழீழத்தின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என்பதே எமது பெரு விருப்பாக உள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசை தாம் தொடக்க முதலே ஆதரித்ததாகவும் ஆனால் சில காரணங்களால் முடியாது எனவும் தமிழ் நெற் கூறுகிறது. எவருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
அது இப்போது கூறும் காரணம் தேர்தல் முறை சரியில்லை என்பதாகும். ஆனால் என்ன குறை?
ஏன் கண்டிக்கிறது?

குறிப்பான காரணம் என்ன?

அதன் இசைவுக்கு அமைவாக இல்லை என்பதற்காகவா?

அவ்வாறு இல்லை என்றால்…..?
தமிழ் நெற் ஆசிரிய குழு நேரடியாகத் தேர்தலில் பங்கு பற்றி பொது மக்களின் ஆதரவுடன் தான் விரும்பிய படி செய்வதைச் செய்யலாமே?
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த அல்லது அவர்களின் பரம்பரையைக் கொண்டுள்ளதை ஆதாரப் படுத்தும் எவரும் தேர்தலில் பங்கு பெற முடியும். தேர்தல் முறையானது வெளிப்படைத் தன்மையும் ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் அமைவாக நடைபெறுகிறது.
சிறீ லங்காவின் ஜனநாயக விழுமியங்களல்ல மாறாக மேற்கத்தைய சட்டப் பதங்களின் முழுமையான அர்த்தம் கொண்ட தேர்தலை நடத்தத் திடசங்கற்பம் கொண்ட தேர்தல் 2010 மே இரண்டாம் திகதி நடைபெறப்போகும் தேர்தலாகும். இதில் எவராவது தடுக்கப் பட்டாலோ அல்லது பாரபட்சத்துக்கு ஆளாக்கப் பட்டாலோ அவர் பகிரங்கமாக குற்ற வாளிகளை உலக சமூகத்தின் முன் நிறுத்தி நியாயம் பெற முடியும்.
எதனைச் செய்யவேண்டுமோ அதனைச் செய்யாது இந்தப் படித்த எழுதும் கூட்டம் வீணான சொற் போரில் ஈடுபட்டு ஏற்கனவே வரலாறு காணாத வகையில் புண்பட்டு நொந்து போயிருக்கும் மக்களை மேலும்; குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

தனது வலுவிழந்து காணும் வாதப் போரை நியாயப் படுத்த ஐ.நா. சீனா போன்ற சர்வ தேசசக்திகளைப் பற்றி நிறையக் கூறி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசு முற்றிலும் ஈழத் தமிழரையும் அவர்களின் விடுதலை தொடர்பானதுமான விடையமாகும். நிச்சயமாக எமக்கு மற்றவர்களின் ஆதரவு தேவையானது.
பிச்சை எடுப்பவனுக்கு வேறு தெரிவு கிடையாது.
ஆயினும் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
இது முற்றிலும் எமது விடையம் அல்லாது வேறு எவருடையதும் அல்ல.
எமக்கு தவறான வழிகாட்டலைச் செய்யவோ நல்லன அல்லாதன செய்யவோ வேறு எவருக்கும் உரிமை கிடையாது.
இது எம்மை எதிர்க்கும் எம்மவருக்கும் வெளியாருக்கும் பொருந்தும் விடையமாகும்.
இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கும் எவருக்கும் எம்மோடு சேர்ந்து பங்காற்ற உரிமை இருக்கும்.
எவராலும் விளங்கிக் கொள்ள முடியாத வாதம் ஒன்று முன்வைக்கப் பட்டுள்ளது. அது இப்படியாக உள்ளது.
' ஈழ மக்களுக்கு இரு தெரிவுகள் உள்ளன. ஒன்றில் உலகெங்கிலும் அரசுகளுக்கு எதிராகப் போராடும் ஒடுக்கப் பட்ட மக்களுடன் கரம் கோப்பது, அல்லது ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் முதலாளித்துவ குடியேற்ற வாதத்துக்குள் பங்காளி முறையில் தமிழீழத்தின் தேசிய நலன்களை பெறுவது அல்லது இரண்டு முறைகளையும் கடைப்பிடித்து பூகோள இயங்கியலில் இருந்து வழிகாட்டலைப் பெறுவது." பட்டவர்த்தனமான இத்தகைய பார்வையானது கள நிலைகள் பற்றிய மிகவும் இலகு படுத்தப்பட்டதும் அர்த்தமற்றதுமான ஒன்றாகவே இருக்கிறது.
இதுபோன்றே தொடர்பற்ற பல வாதங்கள் மூலம் வாசகரைக் குளப்பத்தில் ஆழ்த்தி முடிவில்லாத மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதை ஒருவர் அவதானிக்க முடியும். அவர்களின் வாதங்களைப் படிக்கும் எவரும் நாடு கடந்த தமிழீழம் என்பது அவர்களின் கருத்தாக்கத்தில் இருந்து உருவாகவில்லை என்பதால் அது உருவாகாது போவதைக் காண விரும்புகின்றனரோ என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது உள்ளது. இந்நிலையானது
யூலிஸ் சீசரின் மரணச் சடங்கின்போது முற்ரிக் அந்தனி ஆற்றிய உரையின் புகழ் பெற்ற தொடக்க வரிகளை நினைவு படுத்துகிறது.
அவன் சொன்னான்,
'நான் சீசரை நல்லடக்கம் செய்ய வந்தேனேயன்றிச் சீசரின் புகழ் பாட வரவில்லை" என்று. ஆனால் அவனது பேச்சு நிறைவுற்ற போது அவன் நேர்மாறான பலனையே ஏற்படுத்தினான். ஓன்று பட்டால் அனைவரும் வாழ்வோம் அன்றேல் பிரிந்தால் அனைவரும் மாழ்வோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் ஏற்கனவே எமது உறவுகளின் எண்ணற்ற சடலங்களைக் கண்ட பின்னரும் ஒரு இனமாக ஒன்றுபட வேண்டிய அறிவை படிக்க முடியாது தவிக்கிறோம்.
நிச்சயமாக தமிழ் நெற் ஆசிரிய குழுவின் அறிவாற்றல் இந்த பொன் மொழி புகட்டும் பாடத்தைப் புரிந்து கை யோடு கை சேர்த்து ஆக்க பூர்வமாக உழைக்க முன்வர வேண்டும்.
இன்போ தமிழ் குழுமம்






No comments:

Post a Comment