*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 17, 2010

புதல்வர் அழகிரியை தமிழ்நாட்டு அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டு புதல்வி கனிமொழியை அமைச்சராக்க கருணாநிதி திட்டம்

இந்தியாவின் மத்திய அரசு அமைச்சரும் முதல்வர் கருணாநிதியின் புதல்வருமான மு.க.அழகிரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விரையில் தமிழ்நாடு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அழகிரியின் தொடர் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மே மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதல்வர் கருணாநிதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. திட்டக் கமி~ன் கூட்டத்திற்காக அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரி விவகாரம் தொடர்பாகவும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்க இந்தப் பயணத்தை முதல்வர் பயன்படுத்தவுள்ளதாக சென்னையிலிருந்து கிடைக்கும செய்திகள் தெரிவிக்கின்றன.. மே 6ம் தேதி மாலை டெல்லிக்கு கருணாநிதி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் அவர் முதலில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுவார். அதன் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணர்நிதி சந்திக்கவுள்ளார். திமுகவில் தற்போது வாரிசுப் போர் உக்கிரமடைந்துள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டத்திற்கு உயருவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.இவ்வாறு அழகிரி- ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் முதல்வர் கருணாநிதி தவித்து வருகிறார் எனவும் முதல்வர் அலுவலகச் செய்திகள் கசிந்துள்ளன.இந்த நிலையில் அவர் சோனியாவிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது.அதன்படி மு.க.அழகிரியை மீண்டும் மாநில அரசியலுக்குக் கொண்டு வருவது. ஆவர் தற்போது வகிக்கும் அமைச்சர் பதவியில் கனிமொழியை அமர வைப்பது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னதாகவே இந்த ஆண்டு இறுதியில் நடத்துவது என்பது குறித்து சோனியாவுடன் கருணாநிதி ஆலோசிக்கவுள்ளதாக சென்னையில் கசிந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன..இந்திய மத்திய அரசுத் தேர்தல் முடிந்து அமைச்சரவை உருவாக்கத்தின்போதே கனிமொழிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரிக்கு அமைச்சர் பதவியை கேட்டதால் கனிமொழிக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது அழகிரி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினால் அவருடைய பதவியை கனிமொழிக்குத் தர காங்கிரஸ் கட்சிக்க எவ்வித சிரமங்களும் இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ளது. ஆனால் தற்போது திமுகவில் நிலவும் பூசல் காரணமாக முன்னதாகவே தேர்தலை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல்வர் விரும்புவதாக தெரிகிறது. இதுகுறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தை அறிய கருணாநிதி ஆவலாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.முன்கூட்டிய தேர்தலுக்கு சோனியா ஒப்புக் கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி பல முக்கியமான விவகாரங்களின் பின்னணியில் முதல்வர் டெல்லிக்குச் செல்லவிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment