*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 13, 2010

திரு உருத்திரகுமாரன் அவர்களுக்கு பரமேஸ்வரனின் பகிரங்க மடல்

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது. விடயங்களை நீட்டாமல் நேரிடையாக சுருக்கமாகவே கேட்க விருப்புகிறேன்.
முக்கியமான ஒன்று இது உங்களுக்காகன விமர்சனமே அல்லது வீன்பழியே அல்ல. தமிழீழம் என்ற சொல்லுக்காக மட்டுமே உயிரையும் இழக்க புலம்பெயர்ந்த எமது உறவுகள் இன்னமும் தயாரகவே உள்ளார்கள் இதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த கடிதத்திற்கான முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.
அதற்குமுன் எனது பங்கிற்கும் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியல்ல இது என்பதையும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தடங்கள் ஏற்படுத்தும் சிந்தனைக்குறைபாடன வேலையும் இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்பும் அதே வேளையில் பல நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களின் நிலைப்பாடனதே எனதும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மக்கள் மற்றும் என் போன்ற இளையோர்களுடனான பலமான கருத்துப்பரிமாற்றத்தின்பின்பே இக்கடிதம் வரையப்படுகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முக்கியமானது நாடுகடந்த அரசின் கோட்பாடுகள் எமது தேச நலன்களுக்கு எதிராக இருப்பது. அடுத்தது தேர்தல் விதிமுறைகள்.
உதாரணம்: தமிழீழத்தில் இருநாடுகள் தேசியக்கொடி ஏற்காதது போன்றது மிக முக்கியமானது.
புலம்பெயர் மக்களிடம் நேரடி விவாதங்கள் மூலமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் இந்த முக்கியமான விடயத்தை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தன்னிச்சையாக இந்த முடிவுகள் எட்ட காரணங்களை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் அறிவித்தபடியே நடைபெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமிழினம் பேரழிவை சந்திப்பதை தவிர்க்க இயலாது போய்விடும்.
இன்று நீங்களும் சரி நாங்களும் சரி உலகிற்கு தெரிவதற்கும் உலகம் உங்களை அறிவதற்கும் காரணம் எமது தேசியத் தலைவரும் அவர் வழி வந்த விடுதலைப்புலிகளும் அவர்கள் செய்த தியாகங்களும்தான். அவ்வழிகாட்டியவர்களின் தீர்க்கமான போரட்ட சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் மாற்ற உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?.
விடுதலைப்புலிகளின் சிந்தனையும் கோட்பாடும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் விருப்பமே அன்றி தனிநபர்களுடையது அல்ல. ஆகவே அதை மற்ற வேண்டிய தேவையின் அவசியம்தான் என்ன? எமது மக்களும் மாவீரர்களும் நேசித்து நெஞ்சை நிமிர்த்தி வணங்கிய கொடியினை, எமது மக்கள் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு கண்கள் தளும்ப இந்தக்கெடியினை ஏற்றி மீண்டும் எப்போது எமது விடுதலை வீரர்கள் வணங்கப்போகிறார்களே என ஏங்கும் கொடியினை, இளையோர் கை சேர்ந்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் எழுட்சியும் வீரமும் தந்திட்ட கொடியினை, பாரில் நாம் தமிழரென எம்மை அடையாளப்படுத்திய கொடியினை, நீங்கள் மட்டும் ஏற்ற மறுத்ததன் மர்மம்தான் என்ன.
இது தீவிரவாதிகள் கொணர்ந்த கொடி ஆகவேதான் என எமக்கும் தீவிரவாதம் காட்ட நினைக்கின்றீர்களா?.அப்படி நீங்கள் எதிர்க்கவில்லையென்றால் ஏன் நாடுகடந்த அரசின் கொடி புலிக்கொடி என அறிவிக்கவில்லை. இல்லை இவற்றை தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் தீர்மானிப்பார்கள் என்றால் ஏன் முன்கூட்டியே கோட்பாடு வரையப்பட்டது. அனைத்து வரைவுகளையும் தீர்மானிக்கும் பொறுப்புக்களையும் பிரதிநிதிகளிடமே விட்டிருக்கலாமே.
தேர்தலை நடத்தும் பொறுப்பை மட்டும் வகிப்பதோடு நிறுத்தியிருக்கலாமே. சிலது மட்டும் இப்பொழுது மற்றையது பிற்பாடு என ஏன் தள்ளாட்டம். வெளிப்படையானது என்றால் தடைகளை நேரிடையாக மக்களிடம் அறிவிக்கலாமே. முஸ்லிம் மக்களை நாம் வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. அவர்களும் தமிழர்கள் போன்று அனைத்து சுதந்திரத்துடனும் எதிர்கால தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களினது விருப்பமும்.
தமிழீழத்தில் அனைத்து சமூக மக்களும் சரி நிகரான பேதத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் எமது தேசியத் தலைவரின் விருப்பமும் கூட. இதை அறியாதவர்கள் அல்லர் எமது மக்கள். அனைத்து தரப்பு மக்களின் விருப்பமும் அதுவே. விரும்பும் விரும்பாத பட்சத்தில் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படியான மிக முக்கியமான விடயங்களை மக்களுக்கு முன் நேரடி விவாதத்திற்கு விட்டிருக்கவேண்டும்.
விடயம் இப்படியிருக்க முஸ்லிம் சகோதரர்களுக்கு தனி நாடு ஆசை காட்டி எதிர்கால சந்ததியினர்க்கு பெரும் துரோகம் இழைக்கும் இந்த இகழ்ச்சியான சிந்தனையை உங்களுக்கு தந்தவர்கள் யார்?. விடாமல் மீண்டும் வேற்றுமையை தேற்றுவித்து பகைமையை உருவாக்கி தீராத போராட்டத்தையும் பேரிழப்பையும் எமக்கு ஏற்படுத்துவதுதான் உங்கள் திட்டமா?.
தேர்தலுக்கு வருவோம்...
முக்கியமானவற்றைப் மட்டும் இப்போது பார்ப்போம்.
1.தேர்தலில் நிற்பதற்கு ஆயிரம் பவுண்ஸ்கள்?!!
2.காவற்துறையின் நற்சான்றிதழ்?!!
3.அந்தந்த நாட்டில் வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!!
முதலாவது ஆயிரம் பவுண்ஸ்கள் யார் முடிவெடுத்தது. சரி ஆயிரம் பவுண்ஸ் கேட்ட நீங்கள் இளையோர்களை எப்படி எதிர்பார்ப்பீர்கள்?. ஒரு மனிதனின் சராசரி வருமானமே 800 முதல் 850 பவுண்ஸ்கள்தான். அப்படியிருக்க படித்துக்கொண்டு மிகுதிநேரத்தில் வேலைசெய்யும் ஒருவருடைய வருமானம் எவ்வளவாக இருக்கும் என நினைக்கினறீர்கள்? சரி படிக்காத இளையோர்களை எடுத்துக்கொண்டால் ஒருமாதத்திற்கு மேற்பட்ட வருமானத்தை உங்களுக்கு தந்தால் அவர்களின் அந்த மாத குடுப்பச் செலவை யார் அண்ணா ஏற்பார்? தமிழீழத்திற்காக உயிரையும் கூட கொடுப்பார்கள் ஆயிரம் பவுண்ஸ்களையா கொடுக்கமாட்டார்கள் என கேட்கின்றீர்களா?? அப்படிக் கேட்டாலே நீங்கள் யார் என்பதை மக்கள் இலகுவில் ஊகித்துக்கொள்வார்கள்.
ஆகவே நீங்கள் அப்படி கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியானால் எப்படித்தான் அரசு நடத்துவது என்கின்றீர்களா?. பிரித்தானியா ஏற்பாட்டாளர்களே கூறினார்களே இதுவரை நடந்த கூட்டங்களுக்கே 45ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் செலவாகியது என்று. சாதாரண விளக்க கூட்டமே 5ந்து நட்சத்திர விடுதியில்தானே பல பல ஆயிரம் பவுண்ஸ்கள் செலவழித்து நடந்தது அதுபோல நடத்த முடியாத?
நானே பல முறை நட்சத்திரக் கூட்டங்களுக்கு வர முயன்றும் முடியவில்லை அங்கு வருவதற்கும் பணம் தர வேண்டுமாமே பல நுறு!. அப்படியிருக்க சாதரண மக்கள் எப்படி உங்கள் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை பெற முடியும் என நினைத்தீர்கள்?. அனைவருக்கும் எப்படி உங்களுடன் கருத்துக்கள் பரிமாறியிருக்கமுடியும் அனேக நேரத்தில் உங்கள் பேச்சை ஒளிபரப்ப ஸ்கைப் கூட வேலை செய்வதில்லையாமே! அதைக்கூட முளுமையாக ஒழுங்கு செய்யத்தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி அண்ணா?
சரி பணத்திற்கு வருவோம். எனக்குத் தெரிந்து பிரித்தானியாவில் ஜநூறு பவுண்ஸ்களும் இந்தியாவில் 30 ஆயிரம் ரூபாக்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆவதற்கு தேர்தல் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் உங்களுக்கு தருவதற்காக தரவுகள் எடுக்கவில்லை எனக்கத் தெரிந்தவையே இவைகள் ஆனாலும் பொய்யில்லை. அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஆயிரம் கேட்பதேன் நானே நேரிடையாக விசாரித்தேன் காரணம் கூரினார்கள் ஒன்று பலர் போட்டிக்கு வரக்கூடாது என்பது ஒன்று முக்கியமாக அவர்கள் கூறியது பலர் என்பதன் அர்த்தம் எதிரிகளையும் துரோகிகளையும் மகிழ்வாகவே இருந்தது எச்சரிக்கையாக இருக்கின்றர்களே என்று ஆனால் இன்று பல விடயங்களில் பலமாக இருப்பது எதிரியும் துரோகிகளும்தான் அவர்களுக்கு இந்த ஆயிரம் என்பது மிக சொற்பமான தொகையே.
எதிரிகளும் துரோகிகளும் இதற்குள் இறங்குவதென்று முடிவெடுத்து விட்டாலே அவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்குமா??. அடுத்தது அவர்கள் கூரியது இந்தப்பணம் அப்படியே தமிழீழ அரசுக்குச் செல்லும் அரசின் தேவைக்குப் பயன்படும் என்று. தேர்தலில் தோற்றால் கட்டுப்பணம் போய்விடும் வென்றால் திருப்பித் தருவீர்களா? மற்றது குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் ஓட்டுப் பெற்றாலும் கட்டுப்பணம் திருப்பித்தரப்படும் என்று தெரிந்திருக்கின்றேன் தருவீர்களா?.
அரசுக்குச் இந்தப்பணம் செலவுக்கு உதவும் என்கின்றீர்கள் சரி அந்தக் செலவுக்கான கணக்குகளை கட்டுப்பணம் செலுத்தியவர்களிடமாவது காட்டுவீர்களா?. தேர்தலுக்காக அனைத்துவிடயங்களிலும் சட்டத்தை பின்பற்றும் நீங்கள் பண விடயத்தில் மட்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது எவ்விதத்தில் நியாயம்? சரி பண விடயத்தை இத்தோடு முடிப்போம். அடுத்து காவற்துறையின் சான்றிதழ். அதாவது எனக்கு எவ்விதமான வழக்கும் இல்லை நான் அப்பழுக்கற்றவன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நல்ல விடயம்தான் சான்றிதழ் கோட்பது தவறில்லைதான். ஆனால் யாரிடம் கோட்கின்றீர்கள் தெரியுமா? சென்ற வருடம் இதே மாதம் பல இலட்சம் மக்கள் கூடி போரை நிறுத்து எமது மக்களின் உயிரோடு விளையாடாதே என முழங்கிய பல இளையோர்களுக்கு இன்று வரை நீண்டுகொண்டே செல்கிறது பிரித்தானிய நீதிமன்றின் பிடியானை ஓ பரமேஸ்வரனுக்கு ஏதே கேஸ் இருக்குப் போல அதுதான மனுசன் இப்படிக்கத்துறான் என்பார்கள்.
எனக்கு பிரித்தானியாவில் ஒரு வழக்கு இருப்பதாக நிரூபித்தாலும் அவர்களுக்கு வாழ்நாழ் அடிமையாக இருப்போன். எனக்கு பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று சரி இதை விடுவோம். ஆகவே போராட்டத்தில் பங்கு பற்றி காவற்துறையோடு முரன்பட்டவர் முட்டிமோதியோர் நான் புலி என்னையும் பிடி சிறையெடு என கதறியோர் என பெரிய பட்டியலே அடங்கும் பிரித்தானியா பிரஜா உரிமை கேட்க போன இடத்திலும் இதைக்காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு.
இதில் வயது வித்தியாசங்கள் கிடையாது ஆனாலும் பெரும்பாலும் நீங்கள் அழைக்கும் இளையோர்களே. அப்படியிருக்க இவர்களுக்கு எப்படி நற்சான்றிதல் தருவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?ஆகவே தொலைநோக்குள்ள நீங்கள் எதிர்பார்ப்பது எவ்வித வீரியமான போராட்டங்களில் பங்கெடுக்காத தூர நின்று வேடிக்கை பார்தவர்களைத்தானே அன்றி போராட்டவாதிகளை அல்ல. நல்லது. ஆகவே இதிலும் குற்றச்செயல்கள் பட்டியலிட்டு தகுதி பெறும் பெறாதவை என வரையறுக்கப்படல் வேண்டும்.
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் விடுதலைக்குப் போராடி தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் அப்படியா?. அடுத்தது வாழ்வதற்கான அனுமதிப்பத்திரம் அதாவது விசா?!! நீங்கள் கூறும் காரணங்கள்.. வேறு நாடுகளில் கூட்டங்கள் நடக்கும்போது அவர்கள் கண்டிப்பாக பயணிக்க வேண்டும். ம்ம்ம் சரி இந்தியாவில் இருந்து ஜந்து பிரதிநிகளை தேர்ந்தெடுக்கப்போகின்றீர்களே அவர்களுக்கு இந்திய அரசாங்கமும் நீங்கள் கூட்டங்கள் நடத்தப்போகும் நாடுகளும் விசா தரும் என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
பிரித்தானியாவில் அனேகமானேருக்கு பிரித்தானியாவில் வசிக்கலாம் எனவும் பல பேருக்கு விசா வழங்குவது இன்னும் நிழுவையில் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை. இதற்கு தாங்கள் கூறவிரும்புவது என்ன?.அடுத்து இலங்கைப் புத்தகம் வைத்திருப்பவர்களும் ரவல் டொக்கிமெண்டு வைத்திருப்பவர்களும் நீங்கள் அழைக்கும் நாடுகளுக்கு வர முடியும் என்பதையாவது உங்களால் உறுதி செய்ய முடியுமா?
ஏனெனில் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ்சுக்கும் பிரான்ஸ்சில் இருந்து பிரிட்டனுக்கும் வரவே எவ்ளவே பேர் எனக்கு தெரிந்தே அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே அப்படி அவர்கள் வரமுடியாத பட்சத்தில் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்? இன்று தொழில் நுற்பம் வியப்புமிக்க வகையில் வளர்ந்திருக்கம் நிலையில் றூற்றுக்குமேற்பட்டவர்களை பல நாடு கடந்து ஒட்டுமொத்தமாக பல இலட்சம் பவுண்ஸ்களையும் ஈரோக்களையும் டொலர்களையும் செலவிட்டு நீங்கள் நடத்தப்போகும் கூட்டங்களுக்கு செலவழிப்பதைவிட இன்றைய தேவையுணர்ந்து பல தேவைகளுக்காக காத்திருக்கம் எமது தேச மக்களுக்காக செலவிடலாம்.
ஒரு பாரளுமன்றத்தையே கொண்டுசெல்வது எத்தகைய சிரமம் ஆனால் நீங்கள் நாடு நாடாக தமிழீழ பாரளுமன்றத்தை பல இலட்சங்கள் செலவில் கொண்டுதான் சென்றாகவேண்டுமா?. நாடுகடந்த அரசு தேவையா இல்லை என்பதல்ல எமது விவாதம். தமிழீழ அரசு நிச்சயம் தேவை அதில் எவ்விதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் சரிசெய்ய வேண்டும் என்பதே எமது அவா. ஏனெனில் எதிர்கால சந்ததியிடமும் போராட்டத்தை ஒப்படைத்து வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம் என்பதே எமது எண்ணம்.
அனைத்தையும் திறந்துவிட்டுவிட்டு என்னதான் செய்வது அப்படியெல்லாம் விடமுடியாது என்கின்றீர்களா? முடியும் நீங்கள் அறிவித்த விதிமுறைகளில் சிறப்பானது 100 கையொப்பம் மற்றும் விலாசம் பெற்றுவர வேண்டும் என்பது.100 கையொப்பத்தை 200 ஆக்குங்கள் மக்களுக்கு தெரிந்தவர்களும் வந்த மாதிரி இருக்கும். வீடுவீடாக ஏறி இறங்கி ஆதரவுகேட்டமாதிரியும் இருக்கும்.
இதுநாள்வரை வீடு வீடாக சென்றவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும். நாட்டுக்கு உழைப்பதென்றால் என்வென்றும் தெரிந்துகொண்டமாதிரியும் இருக்கும்.
இதில் துரோகிகளே எதிரிகளோ வர வாய்ப்பே இருக்காது ஏனெனில் மக்கள் இப்போது அனைவரையும் அறிந்திருக்கின்றார்கள். என்னுடைய வரிகள் உங்கள் மனதை காயப்படுத்தியிருக்கும் ஆனாலும் தவிர்க்க இயலாதது. காயங்களை தாங்க இயலாவிட்டால் போராட்டத்தில் இருக்கமுடியாது என்பது நீங்கள் உணராதது இல்லை.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்




No comments:

Post a Comment