*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Wednesday, April 14, 2010

பேரம் பேசும் சக்தியாக "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" உருவெடுத்துள்ள நிலையில்.....

பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளுக்கு பாடம் கற்பித்துள்ள பொதுத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தமுறை 14 ஆசனங்களைப் பெறும் நிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்திருப்பது குறிப்பிடத்;தக்கதொரு விடயமே. ஆனால் இந்த இரண்டு தேர்தல்களும் இடம்பெற்ற அரசியல்சூழல், காலம் மற்றும் இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கூட்டமைப்பைத் தோற்கடிக்க முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இடம்பெற்ற முயற்சிகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது இதை அவர்களுக்குப் பெரியதொரு தோல்வியாகக் கருதமுடியாது. 2004 பொதுத்தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் நின்று அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். அதன் விளைவாக 22 ஆசனங்களோடு அசுர பலம்பெற முடிந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளும், வெளியே இருந்து கூட்டமைப்பைத் தோற்கடிக்க மேற்கொண்ட முயற்சிகளும் அதற்குக் கிடைக்க வேண்டிய ஆசனங்களைக் குறைத்து விட்டிருப்பது உண்மை. இந்தக் கட்டத்தில் இனிமேல் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளது. ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது கிடைத்துள்ள ஆணையைக் கொண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்குக் என்ன செய்யப் போகிறது என்பது முதலாவது கேள்வி. இதில் அரசாங்கத்தின் நகர்வுகளும் போக்குகளும் முக்கியமாக இருக்கப் போகிறது. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படி அணுகப் போகிறது என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும். ஆனால் அரசாங்கத்தின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லாது போனால் சர்வதேச ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கு கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவும் சரி,அல்லது பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவின் போது எடுத்த முடிவுகளும் சரி கூட்டமைபின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஆறாவது ஆசனத்தைப் பறிகொடுத்ததற்கு தமிழ்க் காங்கிரஸ் பிரிந்து போனதே காரணம். பிரிந்துபோன தமிழ்க் காங்கிரசும் உருப்படவில்லை. பிளவு ஏற்படக் காரணமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலாபம் கிடைக்கவும் இல்லை. இந்த இலாபத்தை அனுபவித்தது என்னவோ ஈபிடிபி தான். வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்பு நெகிழவுப் போக்கைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாக தமிழ்க் காங்கிரஸ் பிரிந்து போவதற்கு நியாயமான காரணம் ஒன்று கிடைத்திருக்காது. சவால்களை இராஜதந்திர ரீதியாக அணுகுகின்ற போக்கில் தம்மை மிதவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டமைப்பின் தலைவர்கள் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. விடயமாக இருக்கப் போகிறது. தமிழரின் உரிமைகள் குறித்து பேரம் பேசும்சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ள நிலையில் அது சரியான வழியில நடக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காகவே குறைந்தளவு மக்களாவது அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பம். இதில் தமது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். தவறினால் அதற்கான தண்டனையை தமிழ் மக்கள் கொடுக்கவே முனைவார்கள். அதற்கு வசதியாக அடுத்தடுத்து தேர்தல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ஏனைய தமிழ்க் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவதே உச்ச ஜனநாயகம் என்ற சித்தாந்தங்களைக் கொஞ்சக்காலம் தூக்கியெறிந்து விட்டு தமிழரின் தேசிய பலத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபட முனைய வேண்டும். அதுவே தமிழரின் இருப்புக்குச் சவால் விடும் சக்திகளை சமாளிக்க உதவும்




No comments:

Post a Comment