*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 12, 2010

பொன்சேகா தரப்போகும் தலையிடி!

சவாலுக்கே இடமில்லாத பெரு வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பு இந்தப் பொதுத் தேர்தலில் ஈட்டியுள்ளது என்பது சந் தேகத்துக்குரியதல்ல. இன்னும் சுமார் பத்து ஆசனங்களை எதிர்த் தரப்பில் இருந்து சுருட்டிக் கொண்டால் இந்த நாட்டின் அரசியல் தலைவிதி யைத் தம்மிஷ்டப்படி மாற்றியமைக்கக் கூடிய வகையில் அரசமைப்பைத் தன் எண்ணப்படி நிலைநிறுத்தத்தக்க விதத் தில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான் மையை அவர் பெற்றுக்கொண்டு விடுவார் என்பதிலும் ஐயமில்லை. அப்படி எதிரணியிலிருந்து தேவையான எண்ணிக்கை எம்.பிக்களை வாரி எடுப்பதும் அவருக்கு அப்படியொன்றும் சிரம மான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதும் கூட உறுதி.இப்படி ஒருபுறம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய பலமும், நாட்டின் அதிகாரக் கட்டமைப்பையே தன் விருப்பப் படி மாற்றி அமைக்கக்கூடிய விதத்தில் நாடாளுமன்றப் பல மும் ஒருங்கே பெற்று அசைக்க முடியாத தலைவராக உரு வெடுத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அசைக் கக்கூடிய தேர்தல் முடிவொன்றும் இப்போது வெளிவந்திருப் பது பலராலும் கவனிக்கப்படாமல் உள்ளமை வியப்புக்குரியதே.அது கொழும்பு மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுதான். அங்கு ஜனநாயகத் தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற எம்.பியா கியிருப்பது பற்றிய தேர்தல் முடிவுதான் அது. இந்தப் பொதுத் தேர்தலில் தமக்காக ஒரு சொல் கூட வாய் திறந்து பிரசாரம் செய்யக்கூடிய வாய்ப்பு ஜெனரல் பொன் சேகாவுக்குக் கிடைக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பிரதான வேட்பாள ராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டி யிட்டு, ஆளும் தரப்பினர் வயிற்றில் கடைசிவரை புளியைக் கரைத்த பொன்சேகா, அந்தத் தேர்தல் முடிந்து இரண்டு வாரங் களுக்குள்ளேயே கைது செய்யப்பட்டு இராணுவச் சிறைக் குள்ளே அடைக்கப்பட்டு அடக்கப்பட்டு விட்டார். இராணுவச் சிறைக்குள் "படுத்துக்கொண்டே' இந்தத் தேர்தலில் தலைநகரில் சுமார் ஒரு லட்சத்தை நெருங்கும் அளவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தேறியிருக்கின்றார் தெரிவாகியிருக்கின்றார் பொன்சேகா. ஆளும் தரப்பு இத்தகைய பெரு வெற்றியை அமோக வெற்றியை ஈட்டியிருக்கையில் நான்கு, ஐந்து சக உறுப்பினர் களோடு ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றுக்கு வந்து அப்படி என்ன பெரிதாகக் "கிழித்து'விடுவார் என்று கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால் ஜெனரல் பொன்சேகாவை நாடாளுமன்றுக்கு வர அனுமதிப்பதுதான் ஆளும் தரப்புக்கு பெரும் சிக்கலாகி விடும் விவகாரமாகும். ஜெனரல் பொன்சேகா நடாளுமன்றத் துக்கு வர அனுமதிக்கப்பட்டு, எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்து, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக உரையாற்ற அனுமதிக்கப்படு வாராயின் அதன் விளைவு ஆட்சிப் பீடத்தில் இருப்போருக் குப் பெரும் விபரீதமாகிவிடும் என்பது வெளிப்படையானது. தனக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ ரது அதிகாரபீடமும் எடுத்த கெடுபிடி நடவடிக்கைகளால் கடும் ஆத்திரத்தில் மனக் குமைச்சலில் இருக்கின்றார் ஜெனரல் பொன்சேகா என்பதும் தெரிந்த அம்சம்தான். கடந்த வருடம் முற்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப் பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக அர சுப் படைகள் மேற்கொண்ட இறுதி யுத்தத்தின் போது கட்ட விழந்த பல சம்பவங்களுக்கு சாட்சியமாக உறுதியளிக்கப் படக்கூடிய சாட்சியாக இருப்பவர் அப்போதைய இராணுவத் தளபதியான ஜெனரல் பொன்சேகா. யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அவரிடம் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் அம் பலமாவதற்கு ஒரு மேடை பகிரங்கக் களம் ஜெனரல் பொன் சேகாவுக்குக் கிடைக்குமானால், அவர் பல உண்மைகளைப் பிய்த்து உதறி அம்பலப்படுத்தி விடுவார் என ஆளும் தரப்பிலும் அஞ்சப்படுகின்றது எனக் கருதப்படுகின்றது. யுத்தகால விடயங்களை அம்பலப்படுத்தத் தயங்கமாட் டேன் என்று ஜெனரல் பொன்சேகா பகிரங்கமாகக் குறிப்பிட்டு சிலமணி நேரத்துக்குள் இராணுவப் பிரிவினரால் குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட அவர், அன்று முதல் இன்று வரை பகிரங்கமாக வாய் திறக்க முடியாத நிலையில் இராணு வச் சிறைக்குள் முடக்கப்பட்டிருப்பதன் பின்னணி இதுதான் என்றும் கருதப்படுகின்றது. இவ்விடயத்தில் அவர் வாய் திறக்க வாய்ப்பளிக்கப்படுமாயின் அது சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றம் வரை பல விடயங்களை எதிரொலிக்கச் செய்யும் என்பதும் நம்பக்கூடியதே. இறுதி யுத்தகால நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச யுத்தக் குற்றவிசாரணை மன்றத்தின் பிடிக்குள் சிக்கலாம் என்ற அச்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இலங்கை ஆட்சிப்பீடம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றமைக்காக ஜென ரல் சரத் பொன்சேகா இலகுவாக வந்து நாடாளுமன்றத்தில் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகக் கக்கிவிட்டுச் செல் வதற்கு அனுமதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகா இப்போதுவரை சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெறும் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் மட்டும்தான். குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்ற வாளியல்ல. அப்படி சந்தேக நபர் ஒருவர் தேர்தலில் வென் றால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப் படாத வரையில் அவர் நாடாளுமன்றம் செல்வதைத் தடுப் பதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. எனினும், எண்பதுகளின் முற்பகுதியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலைக்குற்றவாளியாகக் காணப் பட்டு, பின்னர் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டிமணி (செல் வராசா யோகச்சந்திரன்), அப்போதைய வட்டுக்கோட்டைத் தொகுதி எம்.பியான திருநாவுக்கரசு காலமானபோது அந்த இடத்துக்கு ஓர் எம்.பியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி யால் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் நாடாளுமன்றம் சென்று எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்ய இறுதிவரை வாய்ப் பளிக்கப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், பொன்சேகா நாடாளுமன்றம் சென்று அங்கு வாய் திறக்க அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்ப்பது சாத்தியமற்றதே.




No comments:

Post a Comment