*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Saturday, April 17, 2010

வன்னியில் பாரிய சிறீலங்கா இராணுவத் தளம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக அங்கு மீளவும் குடியமர்த்தப்படாத நிலையில்இராணுவமோ வன்னியின் பல பாகங்களிலும் பாரிய ராணுவத் தளங்களை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.வன்னி மல்லாவியிலுள்ள பாலி நாகர் மாத்தையா வித்தியாலயத்துக்கு முன்பாக மிகப்பெரிய ராணுவத் தளத்தை அமைப்பதில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள சாலைகளில் பல அடுக்குப் பாதுகாப்பையும் அவர்கள் போட்டுள்ளனர்.இதேபோன்ற ராணுவத்தளங்களை அமைப்பதில் பூநகரி மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ராணுவத்தினர் மும்முரமாக உள்ளனர். வெகுசில மக்கள் ஏற்கனவே வன்னியில் குடியமர்த்தப்பட்டுள்ளபோதும் அவர்களுக்கு ராணுவத்தினர் பல தொல்லைகளைக் கொடுத்துவருகின்றனர்.இளம் பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கும் வலுக்கட்டாயமாக இரவுநேரத்தில் ராணுவத்தினர் உட்புகுந்து அட்டகாசம் செய்வதாக வன்னியிலிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. இதனால் இளம் பெண்கள் ஒன்றாகக் கூடி பாதுகாப்பான இடங்களில் தமது இரவுகளைக் கழிக்கின்ற அச்சமான சூழல் நிலவுகிறது.இதேவேளை அவர்கள் மக்களை இரவில் சுதந்திரமாக நடமாடத் தடையும் விதித்துள்ளனர். அங்குள்ள மக்கள் தினமும் தமது தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுதிரிய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது முறைப்பாடுகளை உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்தால் மேலும் தொல்லைகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.மேலும், எமது விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட தூபிகள், நினைவு மாடங்கள் என அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவதிலும் ராணுவத்தினர் குறியாக உள்ளனர்




No comments:

Post a Comment