*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 5, 2010

தேசியம்; தன்னாட்சிஉரிமை; இருதேசம் ஒருநாடு; சுயநிர்ணயம்; தாயகம் – சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

தமிழ்த் தேசியம்; தன்னாட்சி உரிமை; இரு தேசம் ஒரு நாடு; சுயநிர்ணயம்; தாயகம் – நீங்கள் சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது – யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்....
நீங்கள் சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. அதுவும் உங்கள் உணர்ச்சிக்குரலில் கேட்கும்போது நரம்புகள் புடைக்கின்றது. புது வெள்ளம் பாய்கிறது. உணர்ச்சி பூக்கிறது. உங்களின் இந்த ரீங்காரமெல்லாம் எத்தனையாம் நாள்வரை சித்திரை ஏழாம்நாள்வரை என்று நினைக்கும் போது எங்கள் நாடி நரம்புகளெல்லாம் சோர்வடைந்து விடுகின்றது.
முள்ளி வாய்க்காலில் சிங்களன் எம்தமிழ்ப் பிள்ளைகளை கிள்ளி எடுத்து மகிழ்ந்தான். நாற்பது நாசகாரிகள் சேர்ந்து எங்கள் விடுதலைப் பெருவிருட்சத்தை அறுத்து வீழ்த்தினார்கள். இதைக்கண்டு உங்களில் எத்தனை பேர் கொதித்துப் போனீர்கள். தியாகத் தமிழன் முத்துக்குமரன் தீமூட்டி உயிர் நீத்தான்.
உங்களில் எத்தனை பேர் சுண்டுவிரலையேனும் அறுக்க ஆயத்தமானீர்கள். நீங்கள் சொர்க்கம் அனுபவித்துக் கொண்டிருந்த நாடுகளிலாவது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கலாம்தானே. ஏன் உங்களால் முடியவில்லை. ஒரு நேரம் உணவை வெறுக்க முடியாத நீங்களெல்லாம் தாயகம் தன்னாட்சி என்றெல்லாம் வாய்கிழிய கத்திவிட்டு அடுத்த ஐந்து வருடம் பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கிவிடத் துடிக்கிறீர்கள்.
பாராளுமன்ற கதிரை எதற்காக?? தம்பி தங்கை மாமன் மச்சான் என்போருக்கு அசைலம் வாங்குவதற்கா? எம்.பிக்களின் கோட்டாவில் பஜிரோ வாங்குவதற்கா? ஒன்றுவிட்ட பெரியப்பன் ஒன்றுவிட்ட சித்தப்பன் மக்களிற்கு கவர்மேந்து வேலை கேட்பதற்கா?
முள்ளிவாய்காலில் மூண்ட நெருப்பு அணைந்துவிட்டதென்று யார் சொன்னது
நெஞ்சில் வேட்கையும் உடலில் வெடிகுண்டும் பொருத்திய
வேங்கைள் வேறுநாட்டிலிருந்து வந்துவிடவில்லை
தாய் மண்ணில்தான் தோன்றினார்கள்.
இன்னும் வேங்கைகள் எழுவார்கள்
அடக்குமுறை தொடர அடங்காவேங்கைகள் எழுவார்கள்.
முருகண்டியான் வேண்டுமானால் சிங்களனிடம் அடைக்கலம் கோரியிருக்கலாம்.
அத்தியடிக்குத்தியனிடம் விடுதலைக் கவிஞர் வேண்டுமானால் விடுதலை கோரியிருக்கலாம்.
உலைக்களம் தண்ணீர் வற்றி பழஞ்சோறாய் போயிருக்கலாம்.
நெருப்பு நிலவுகள் இன்னும் உள்ளார்கள்.
இது புயலடிக்கும் தேசம்
இது புயலுக்கு முந்தியதும் சூறாவளிக்கு பிந்தியதுமான அமைதி
அமைதியை யாரும் அடைக்கலமென்று எணணிவிடாதீர்கள்.
இப்போது தமிழ்த் தேசியம் – தன்னாட்சி உரிமை – இரு தேசம் ஒரு நாடு – சுயநிர்ணயம் தாயகம் எனற கோஷத்துடன் வரும் உங்களுக்கு எனது இறுதியானதும் உறுதியானதுமான கோரிக்கை.
எவனொருவன் பின்வரும் கோரிக்கைகளை அடுத்துவரும் 4 நாட்களுக்குள் நிறைவேற்றுகிறானோ அவனுக்கே தமிழர்களது வாக்குக்கள்.
உடைத்து வீழ்த்தப்பட்டிருக்கும் தியாகதீபம் திலீபனது தூபியை தங்கள் உயிரை துச்சமென மதித்து தூக்கி நிறுத்தி அதன் முன்னைய தோற்றத்தில் அமைத்தல்.
எதிரிகளால் துவம்சம் செய்யப்பட்டிருக்கும் மாவீரர் மயானங்களை குறைந்தது சிரமதான அடிப்படையிலாவது துப்புரவாக்கி ஒரேயொரு தீபமாவது ஏற்றி ஒரோயொரு பூவாவது தூவி வழிபடுங்கள்.
மேற்கண்டவற்றில் எதையேனும் உங்களால் நிறைவேற்ற முடிந்தால் உங்களுக்கு தன்மானத் தமிழனின் வாக்குகள் நிச்சயம்.
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்





No comments:

Post a Comment