*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Tuesday, April 6, 2010

நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைப்போம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழ முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர்கள்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட சூழலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. எமது போராட்டத்தின் இறுக்கமான கால கட்டத்தில் எமது மக்களுடன் மக்களாக வாழ்ந்து எமது மாணவர்களுடன் மாணவர்களாக வாழ்ந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்து அதற்காக அச்சுறுத்தல்களின் மத்தியில் செயற்பட்ட மாணவப் பிரதிநிதிகளான நாம் இந்த விடயத்தை அன்புக்குரிய எமது மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தி நிற்கிறோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்க அல்லது சிதைக்க நினைப்பவர்களை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்து அவர்களது சுயத்தை திணிக்க நினைக்கும் மனநிலையுனடய உள்ள சிங்கள இனவாதிகளைப்போலவே கருத வேண்டியுள்ளது.
தமிழ் தேசியம் என்பது சமரசங்களுக்கு அப்பால் பட்டது. விட்டுக் கொடுக்க முடியாதது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் உள்ளவரை தமிழ் தேசியம் என்பது இருக்கும். தேர்தல் காலத்திற்காக மட்டும் தேவைப்படுவதல்ல தமிழ் தேசியம். தமிழ் தேசியத்திற்காக அதன்படி அதற்காக வாழ்ந்திருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக உள்ளவேளை அதை சிதைக்க நினைக்கும் தடைசெய்ய நினைக்கும் அரசைபப்போல அந்த அணியின் பக்கம் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் கண்டு மிகுந்த அதிருப்தி அடைகிறோம். மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளாக நாம் இருந்த கடந்த முக்கியமான வருடங்களில் தமிழ் தேசியத்திற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகளை வெறும் மேலொட்டமான உணர்ச்சி வசனங்களால் நகர்த்த முடியாது. அதை அறிவு பூர்வமாக வரலாற்று அனுபவத்துடன்தான் நகர்த்த முடியும். அதற்கான முழுமையான தந்திரேபாயங்களுடனும் நிதானத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது.
எனவே எமது அன்புக்குரிய மக்களே! மாணவர்களே!
இன்றைய காலச் சூழல் என்பது உலகின் போக்கிற்கேற்ப ஒத்திசைந்து அதன் பரிமானங்களை விளங்கிக் கொண்டு சாணக்கியமாகவும் சாமர்த்தியமாகவும் பயணிக்க வேண்டிய சூழல் ஆகும். எமது போராட்டத்தை தனியே இந்திய தேசத்தின் அனுசரணையுடன் இலங்கை அரசு ஓய்வுக்கு கொண்டு வந்தது எனக் கருதுவது அபத்ததமானது. பல நாடுகளின் கூட்டிணைவே எமது போராட்டத்தை இலக்கை அடைய முடியாத இக்கட்டுக்கு தள்ளியிருந்தது. இந்த பிண்ணணிகளை சரியாக விளங்கிக் கொள்ளும் எந்த சராசரி மனிதனாலும் இன்று எமது இலக்கை அடைவதற்கான ஒரே வழி சாத்வீகமான சாணக்கியமே என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இன்று அந்த சாணக்கிய அணுகுமுறையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பின்பற்றி வருவது கண்டே இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் அதனை தடைசெய்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றனர். உண்மையில் யதார்த்தத்துக்கு முரணாக தற்போதைய நிலையில் அடையப்பட முடியாத இலக்குகளை முன்வைத்து தமிழர்களின் அரசியல் பலத்தையும் சிதைக்க காரணமாகவுள்ள அனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தத்தமது தலைமைத்துவ பிரத்தியேக நலன்களை முன்னிறுத்தியும் வேறு நிகழ்சி நிரல்களின் அடிப்படையிலும் செயற்படும் இவர்கள் எமது இனத்தின் மீது வீழும் மொத்த சாபத்துக்கும் காரணமானவர்களாக இருப்பார்கள். முள்ளிவாய்க்காலிலும் தமிழீழத்தின் ஏனைய இடங்கிளலும் ஏன் சாகிறோம் எனத் தெரியாது செத்த எமது மழழைகளின் ஆத்மா இவர்களை மன்னி;க்காது. மீண்டும் தேர்தலுக்காக உணர்ச்p அரசியல் பேசி விட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் உணர்ச்சியின் விளிம்புக்கு கொண்டு வந்து பின்னர் தேர்தல் முடிந்த கையோடு பிற தேசத்துக்கு வேட்பாளர்கள் சென்று விட பாவம் அப்பாவி மாணவர்கள் இனவாத சிந்தனைகளுக்கு பலியாக வேண்டும். இது தான் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நடந்து நாம் 3000 க்கும் மேற்பட்ட இளம் சமூகத்தை இழக்க வேண்டிய நிலைக்கு காரணமாக இருந்தது. இதனை சிந்தனையில் கொண்டு சாணக்கியமான முறையில் எமது இலக்கை அடைய எத்தனிப்பதே புத்திசாலித்தனமானது.
கடந்த காலங்களில் மிகவும் நெருக்கடியான நேரத்தில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நின்று கொண்டு நாம் எமது மாணவ சோதரர்களின் உயிரைக் காப்பாற்றவும் எமது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சுமுகமாக முன்னெடுத்து இன்று 3000 பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறவும் களமும் தளமும் அமைத்த மாணவ தலைவர்கள் எனும் அடிப்டையில் நாம் இந்த விடயத்தை வலியுறுத்த விரும்புகின்றோம். எமது தேசத்தின் குரலாக ஒலித்த மறைந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை நாம் எமது விடுதலைப் பாதைக்கான தத்துவாசிரியனாக வரித்துக் கொண்டோம். இன்று அவர் இல்லாத சூழலில் அவரது சிந்தனைத் தளத்தின் அடிப்படையில் உலகின் போக்கு நிலைக்கேற்ப கூட்டமைப்பு எமது பிரச்சனையை அணுகுவதாக நாம் எண்ணுகின்றோம். இதனாலேயே இதுவரை அமைதிகாத்த நாம் இந்த இறுதித் தருணத்தில் இந்த அவசர வேண்டுகையை எமது மக்கள் முன் வைக்கின்றோம்.
நன்றி,
2006 க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு பின் இன்றைய பன்மைத்துவ தேர்தலுக்கான சூழல் உருவாகும் வரை மாணவர் ஒன்றியத்தை வழி நடத்திய பிரதிநிதிகள்




No comments:

Post a Comment