*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Thursday, April 8, 2010

குண்டுகளால் தரை மட்டமாக்கப்பட்டு நாசமாகி கைவிடப்பட்டு உள்ள நகரில் ஒரேயொரு புதிய கட்டிடம் மேற்கிளம்பியுள்ளது

விடுதலைப் புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சிக்கு விஜயம் செய்தோர் ஒரு விடயத்தினை அவதானித்திருக்கக் கூடும். குண்டுகளால் தரை மட்டமாக்கப்பட்டு நாசமாகி கைவிடப்பட்டுள்ள அந்த நகரில் ஒரேயொரு புதிய கட்டிடம் மேற்கிளம்பியுள்ளது எவருடைய கண்களுக்கும் தட்டுப்படாமல் போகாது.
அது ஒரு வெள்ளையடிக்கப்பட்ட பௌத்த விகாரை.
நாங்கள் நினைக்கிறோம். இது எங்களுக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் அங்கு படையினரைத் தவிர வேறெவருமில்லை. பொதுமக்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள் என்றார் அப்பகுதிக்கு விஜயம் செய்த ஒருவர். விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட அவ்விகாரையை கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் ‐ பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களால் கட்டமைக்கப்பட்ட ‐ இராணுவம் மறுசீரமைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஓரு புராதனப் பிரதேசம் என்று இராணுவத்தின் தலைமைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க ரைம்ஸ்க்குத் தெரிவித்தார்.
அவரின் இந்தக் கூற்றுடன் தமிழ் தொல் பொருளியலாளரும், வரலாற்றாய்வாளரும், அரசியலாளரும் உடன்பட மறுக்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு மேலாகவே அப்பிரதேசத்தில் சிறுபான்மை இனத்தினராகிய தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறு அங்கு எதுவுமே எப்போதும் இருந்ததில்லை என்கிறார் ஓய்வு பெற்ற தமிழ் வரலாறு மற்றும் இலக்கியப் பேராசிரியரான கார்த்திகேசு சிவத்தம்பி.
சுதந்திரமான ஆய்வு ஒன்றில்லாமல் அப்பிரதேசத்தில் பூர்வகுடிகள் யார் என்பதைக் கண்டறிய முடியாது. ஆனால் இராணுவத்தினர் அப்பிரதேசத்திற்குச் செல்வதை கட்டுப்படுத்தும் போது அது இப்போதைக்குச் சாத்தியமில்லை.
பௌத்த பிரதேசங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்வது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சிங்கள் மக்களைக் குடியேற்றி இப்பிரதேசத்தில் இன ரீதியான தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இது என பல தமிழ் சமூகத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் சிங்கள மக்களின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சியிலிருக்கும் கூட்டரசாங்கத்தை பலப்படுத்தும். இது வியாழக்கிழமை நடைபெறும் தேர்தலில் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கும்.
அரசாங்கம் பௌத்தவிகாரைகளையும் படையினருக்காக நிரந்தர கட்டிடங்களையும் உருவாக்கி வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்கள் இப்பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து இப்பிரதேசம் சிங்கள மக்களுக்குச் சொந்தமானது எனக் காட்ட முனைகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். போரின் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் மக்களும் குடியேற்றப்படுவதற்கு முன்பாகவே, வடக்கில் 40 ஆயிரம் படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வீடமைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது களத்தில் இருக்கும் படையினருக்காகவே அன்றி அவர்களது குடும்பத்தினருக்காக அல்லவென்று மறுத்த படையினர், முன்னைய இராணுவ முகாம்களையே தாம் குடியிருப்பு முகாம்களாக மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நாங்கள் மக்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம் . அத்தோடு புலிகள் மீளெழும்பி வராதிருப்பதையும் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஸாரின் ஆட்சிக்காலத்தில் சர்ச்சைகளுடன் உருவான தொல்பொருளியலாய்வு ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட கடந்த 26 வருட உள்நாட்டு யுத்தத்துடன் சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. உள்நாட்டு யுத்தத்துடன் சேர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது.1815 இல் பிரிட்டிஸ் நாட்டை முழுமையாகக் கையகப்படுத்திய போது அதனது புராதன வரலாறு குறித்த தெளிவிருக்கவில்லை. ஆனால் விரைவிலேயே கிறிஸ்துவுக்குப் பின் 500 அளவில் பௌத்த பிக்கு ஒருவரால் எழுதப்பட்ட புராணக்கட்டு;க்கதையான மகாவம்சத்தை அது தழுவிக் கொண்டது. இது வடஇந்தியாவிலிருந்து கி.மு 500 அளவில் ஆரிய இளவரசனான விஜயன் வந்திறங்கியதைக் குறிப்பிடுகிறது. அதற்குப் பின்னர் 200 வருடங்கள் வரையிலும் கூட தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கவில்லை என்றும் அது கூறுகிறது. இந்த மகாவம்சம் இன்னமும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. இந்த மகாவம்சம் தான் சிங்கள சோவனிசத்திற்கு ஆதாரமாகவுமுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கி.மு 500க்கு முன்னராகவே மக்கள் வாழ்ந்திருந்ததாகவும் அவை தென்னிந்தியாவிகன் பல அகழ்வாராய்வுடன் ஒப்பிடக்கூடியதாகவுள்ளதாகவும் அதன்படி மிக முந்திய காலத்திலேயே குடியேற்றங்கள் இடம் பெற்றிருக்கலாம் எனவும் கருதவும் இடமுண்டு.மோதல் ஆரம்பித்த பிற்பாடு அகழ்வாய்வுகள் பலவந்தமாக நிறுத்தப்பட்டன. பல தமிழ் தொல்பொருளாய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். போர் முடிவடைந்ததும் தொலிபொருளாய்வு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் புராதன வரலாறு குறித்த விவாதத்தை மீண்டும் தொடக்கி விட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கில் எங்களால் எதுவும் செய்யமுடியாமலிருந்தது என்றார் அரசாங்க தொல்பொருள் திணைக்களத் தலைவரான செனரத் திஸநாயக்கா. எங்களது மூதாதையர் இங்கு எப்படி வாழ்ந்தார்கள். அவர்களுடைய கலாசாரம் எப்படி இருந்தது. பொருளாதாரம் சமூகப்பின்னணி எவ்வாறு இருந்தது. வாழ்நிலைமையும் மதமும் எவ்வாறு இருந்தன என்பதை நாம் கண்டறியலாம் என்றார் அவர்.தனது திணைக்களம் கடந்த வருடம் 60 பழமையான களங்களைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றுள் ஆறு இதுவரை கண்டறியப்படாதிருந்தவை. கி.மு 300இலிருந்து கி.பி ஆயிரம் வரைக்குமானவை என்றும் அவர் தெரிவித்தார். இப்புதிய அகழ்வாய்வக்களங்கள் ஏன் சிங்கள பௌத்த கலாசாரம் செழிப்படைந்ததற்குப் பின்னரான காலத்தைக் கொண்டவையாக இருக்கின்றன என தமிழ.; கல்வியியலாளர் சிலர் கேள்வியெழுப்பகின்றனர். இன்னும் சிலரோ தமிழ் தொல்பொருளியலாளர் இதனுள் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதேவேளை வெளிநாட்டு நிபுணர்கள் அல்லது ஐநாவைச் சேர்ந்தவர்கள் இது புறநிலையாக மேற்கொள்ளப்படுகிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர். தொல்பொருள் திணைக்களம் அரசாங்கத்தின் கையாளாகவே செயற்படுகிறது என்கிறார் தமிழின் முன்னணி அறிஞர் ஒருவர். அவர் தான் பழிவாங்கப்படலாம் என்பதால் தனது அடையாளத்தை தெரிவிக்க விரும்பவில்லை. இவை சிங்கள தொல்பொருளாய்வுக்களமாகவே இனங்காணப்படும். பௌத்த விகாரைகள் உருவாக்கப்படும். பின்னர் சிங்கள மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் இழந்த நிலமாகவே இது அடையாளம் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். போர் முடிவடைந்த பிறகு உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் வந்து வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்களே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இனரீதியாகவோ மத ரீதியாகவோ தொல்பொருள் ஆய்வுக்களங்கள் அடையாளம் காணப்படுவதில்லை அரசாங்க தொல்பொருளாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. அவருக்குத் தெரியும் எல்லா சமூகத்தினரையும் இணைத்துச் செல்வதற்கு எனச் சொல்கிறார் தொல்பொருளாய்வுக்கு நிதி வழங்கும் கலாசார மத்திய நிலையத்தின்பணிப்பாளர் சுதர்சன் செனிவிரத்ன. தொல்பொருளாய்வு அரசியல் நோக்கிற்குப் பயன்படுத்தப்படுவதையும் செனிவிரத்ன ஏற்றுக் கொண்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் ஜாதிக ஹெல உருமய இதில் முன்னணி வகிக்கிறது.இம்மாத ஆரம்பத்தில் செனகலைச் சேர்ந்த அமெரிக்க பொப் பாடகரான அகோனுக்கு விஸா வழங்க மறுத்திருந்தது இதைப் புரிய உதவும். பௌத்த சுருவத்திற்கு முன்னால் நீச்சலடையில் பெண்கள் ஆடுவதாக அவருடைய செக்ஸ்ஸி பிச என்ற அல்பத்தில் ஒரு காட்சி வருகிறது. இதனால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் அர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையின் அரசமைப்பு பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், அதனை ஆதரிக்க வேண்டும் எனவும் கூறுகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதே வாதத்தை ஜாதிக ஹெல உருமய மகிந்த ராஜபக்சவிடம் தமது 29 அம்சக் கோரிக்கையை முன்வைத்த போது வலியுறுத்தியிருந்தது. அதில் ஒன்று வடக்கில் இருந்த பௌத்த தலங்களை புனருத்தாரணம் செய்யவேண்டும் என்பது.
ஜனாதிபதி உடனடியாகவே அதனை ஏற்றுக் கொண்டார் என்கிறார் ஜாதிக ஹெலஉருமயவின் சிரேஸ்ட உறுப்பினரான உதய கம்மன்பில. இராணுவமும் தொல்பொருள் திணைக்களமும் ஏற்கெனவே பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உருமய நேரடியாகவே தொல்பொருளாய்வில் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஜாதிக ஹெல உருமயவின் கோட்பாட்டாளரும், சூழலியல் அமைச்சருமான சம்பிக ரணவக்கவின் அனுமதி தொல்பொருள் அகழ்வாராய்வை மேற்கொள்ள அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்பொருளாய்வு என்பது இலங்கையில் எப்போதும் அரசியல் சார்ந்தது என்கிறார் வெளிநாட்டில் வதியும் தமிழ் வரலாற்றாய்வாளர் ஒருவர். இவரும் கூட அச்சம் காரணமாகத் தன்பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்டார். இன்றும் கூட அது மாறவில்லை.
டைம்ஸ் ‐ தமிழாக்கம் GTN




No comments:

Post a Comment