*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 5, 2010

தலைமைப் பதவிக்காய் சகோத யுத்தம் ஆரம்பம்

தி.மு.க.வின் அடுத்த தலைமைப் பதவி சகோதர்களின் சர்ச்சை முற்றுகிறது தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைமைத்துவம் தொடர்பான மோதல் நேற்று வியாழக்கிழமையும் தொடர்ந்தது.கட்சியின் தலைவராக தனது தந்தையான மு.கருணாநிதியை தவிர வேறு எவரையும் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கருணாநிதியின் இரண்டாவது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று கூறியுள்ளார். தமிழ் சஞ்சிகைக்கு நான் விரும்பியிருந்ததை தெரிவித்திருந்தேன். ஜனநாயக ரீதியிலேயே தலைவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற கருணாநிதியின் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக ரீதியில் தெரிவாகும் தலைவரையே நான் ஏற்றுக் கொள்வேன். எனது பிரக்ஞையின் பிரகாரமே நான் பேசினேன். நான் விரும்பியது எதுவாயினும் அது பற்றிப் பேசுவதற்கான உரிமை எனக்கு உள்ளது என்று கூறியிருக்கும் அழகிரி, ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெற்றால் (கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல்) நானும் போட்டியிடுவேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, "கருணாநிதி உயிருடன் இருக்கும் போது இவை எல்லாவற்றையும் பற்றி ஏன் கதைக்க வேண்டிய தேவை உள்ளது? என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டு பயணத்தின் பின் புதன்கிழமை இரவு அவர் நாடு திரும்பியிருந்தார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மதுரை தொகுதிக்கு செல்வதற்கு முன்னர் நிருபர்களிடம் இக்கருத்துக்களை அழகிரி தெரிவித்துள்ளார்.தி.மு.க. வின் அடுத்த தலைமைத்துவப் போட்டி தொடர்பான சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்த கருணாநிதி, கட்சியின் தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம் கட்சிக்கே உள்ளதாகவும் தன்னால் கூட தெரிவு செய்ய முடியாது என்றும் கூறியிருந்தார். கடந்த வாரம் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, கட்சியை வழிநடத்திச் செல்லும் ஆற்றலுடைய ஒரேயொரு தலைவர் கருணாநிதி மட்டுமே என்று பேட்டியொன்றில் அழகிரி கூறியிருந்தார்.கடந்த வருடம் கருணாநிதியின் மூன்றாவது மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.அத்துடன் தேசிய அரசியலுக்குள் அழகிரி உள்ளீர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருந்தது. இவற்றையடுத்து கட்சியின் அடுத்த தலைமைத்துவம் தொடர்பான போட்டிக்கு இணக்கம் காணப்பட்டதாக தென்பட்டது. ஆனால், அழகிரி பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் தலைமைத்துவம் தொடர்பான சண்டை நீடிப்பதற்கான அறிகுறியாக தோன்றுகிறது. தனது தந்தையை மட்டுமே கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்று அழகிரி பேட்டியில் தெரிவித்திருந்தமை தொடர்பாக புதன்கிழமை கருணாநிதியிடம் கருத்துக் கேட்டபோது, "எனது ஓய்வுக் காலம் எந்த வருடம் ஆரம்பமாகிறது என்பது தொடர்பாக எனக்கே தெரியாது என்று கலைஞர் கூறியிருந்தார். கடந்த வருடம் முள்ளந்தண்டில் பாரிய சத்திர சிகிச்சை கருணாநிதிக்கு மேற்கொள்ளப்பட்டது.அதன் பின் அவர் சக்கர நாற்காலியிலேயே இருந்து வருகிறார். எதிர்வரும் ஜூனில் இடம்பெறவுள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் பின்னர் தான் அரசியலிலிருந்து வெளியேறப் போவதாக கருணாநிதி அறிவித்திருந்தார். கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் வழிப் பேரப் பிள்ளைகளாக கலாநிதி,தயாநிதி சகோதரர்களுக்கு சொந்தமான தமிழ் தினசரியானது 2007 இல் கருத்துக் கணிப்பீடொன்றை பிரசுரித்திருந்தது. தமிழக முதலமைச்சரின் அரசியல் வாரிசாக அழகிரியிலும் பார்க்க ஸ்டாலின் முன்னணியில் நிற்பதாக அக்கருத்து கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது அரசியல் வாரிசு சண்டையை அதிகரிக்கச் செய்தது. மத்திய அமைச்சராக அழகிரி பதவியேற்ற மறுநாள் துணை முதல்வராக ஸ்டாலின் பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆனால், தமிழகத்தில் தி.மு.க.வினர் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு முக்கிய கருவியாக அழகிரி இருப்பதாக கூறப்பட்டது. தென்தமிழகம் அ.தி.மு.க.வின் கோட்டையென ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அப்பகுதியிலுள்ள சகல தொகுதிகளிலும் தனது கட்சி வெற்றி பெறுவதை அழகிரி உறுதிப்படுத்தியிருந்தார்.




No comments:

Post a Comment